கடலூரில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

கடலூரில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூரில்  தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது
Published on

கடலூர்:

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் போலீசார் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திருப்பாதிரிப்புலியூர் புதுநகர் மாரியம்மன் கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது, வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அந்த வாலிபரை பிடித்து வந்து போலீஸ் நிலையத்தில் விசாரித்த போது கடலூர் எம்.புதூர் சேர்ந்த சூர்யா (வயது 20) என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com