search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடி பஸ்  நிலையத்தில் தள்ளுவண்டிகள் ஆக்கிரமிப்பு
    X

    திட்டக்குடி பஸ் நிலையத்தில் தள்ளுவண்டிகள் ஆக்கிரமித்துள்ளதை படத்தில் காணலாம்

    திட்டக்குடி பஸ் நிலையத்தில் தள்ளுவண்டிகள் ஆக்கிரமிப்பு

    • பஸ் நிலையம் முழுவதும் தள்ளு வண்டிகளில் வியாபாரம் செய்து வருகின்றனர்.
    • வாக்குவாதத்தில் ஈடுபட்டு சில நேரம் கைக்கலப்பாக மாறுவது வழக்கமாக உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அண்ணா பஸ்நிலையத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வரும் பஸ்கள் பஸ் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல கோடிக்கணக்கில் செலவு செய்து பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பஸ் நிலையம் முழு வதும் 150 -க்கும் மேற்பட்ட தள்ளு வண்டிகளில் காய்கறிகள், பழ வகைகள் உள்ளிட்டவை பஸ் நிலையம் முழுவதும் தள்ளு வண்டிகளில் வியாபாரம் செய்து வருகின்றனர். பஸ் நிலையம் அருகில் காய்கறி மார்க்கெட் உள்ளது.தள்ளு வண்டியில் போட்டி போட்டுக் கொண்டு பஸ் நிலையம் முழுவதையும் தள்ளுவண்டி வியாபாரிகள் தங்கள் வசம் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் அரசு பஸ் ஓட்டுனர்கள் மற்றும் தனியார் பஸ் ஓட்டுனர்கள், திட்டக்குடி பகுதியை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறு குரு விவசாயிகள், வணிகர்கள் பல தரப்பினரும் திட்டக்குடி பஸ்நிலையம் உள்பகுதியில் செல்ல முடியாமல் அன்றாடம் தள்ளுவண்டிகாரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சில நேரம் கைக்கலப்பாக மாறுவது வழக்கமாக உள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் பலமுறை திட்டக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. போலீசார் மாலை நேரத்தில் 15 அல்லது 30 நிமிடங்கள் மட்டுமே பஸ் நிலையத்திற்கு வருகை தந்து விட்டு சென்று விடுவார்கள். இதனால் எந்த பலனும் இல்லை. போலீசார் மாலை 5 மணி முதல் 7 மணி வரை பேருந்து நிலையத்தில் பணியில் இருந்தால் மட்டும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க வாய்ப்பு உள்ளது. மேலும் மாலை நேரங்க ளில் அரசு பள்ளி மாணவ, மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாண வர்கள் அதிக அளவில் பஸ் நிலையத்திற்கு வருகை தருவ தால் மாணவிகள், மாண வர்கள் நின்று பஸ் ஏற முடியாத சூழ்நிலை அன்றாட காட்சி பொருளாக உள்ளது. பஸ்நிலையத்தில் அன்றாடம் பயணிக்கும் பெண்களிடம் பையில் உள்ள பொருட்கள் திருடுவது அவர்கள் போலீசில் புகார் அளிப்பது தொடக்கதையாக உள்ளது. எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பஸ் நிலையத்தில் தினந்தோறும் குறைந்தது மாலை நேரத்தில் 3 மணி நேரம் போலீசார் பணியில் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்து நிலைய த்தில் உள்ள தள்ளுவண்டி அகற்றி வேறு மாற்று இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×