என் மலர்
கடலூர்
- 2 பேர் திடீரென்று சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஒரு சிலர் எங்கள் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதை மீட்டு தர கோரியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் 2 பேர் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தனர். பின்னர் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டையை கையில் வைத்துக் கொண்டு திடீரென்று சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் பண்ருட்டி ஆண்டிக்குப்பம் சேர்ந்தவர்கள் முருகேசன், பழனி ஆகியோர் தனது நிலத்தில் கூட்டு பட்டா நீக்க கோரியும், ஒரு சிலர் எங்கள் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதை மீட்டு தர கோரியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.மேலும் இத்தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அங்கிருந்த போலீசார் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரியிடம் மனு அளித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற நடவடிக்கையில் யாரும் ஈடுபடக்கூடாது என தெரிவித்தனர்.
- கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 60 வயது முதியவர் ஒருவர் நேரில் வந்தார்.
- பிலஞ்சம் தராத காரணத்தினால் வீடு இல்லை என கூறியதை கண்டித்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இக்கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தீர்வு காண வந்து சென்றனர்.
அதன்படி இன்று காலை கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 60 வயது முதியவர் ஒருவர் நேரில் வந்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக முதியவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பண்ருட்டி கீழ்மாம்பட்டு சேர்ந்தவர் சிகாமணி (வயது 65) என தெரிய வந்தது. இவருக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு வந்துள்ளதாக கூறியதாகவும், தற்போது வீடு கட்ட தொடங்கிய பின் 50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.இதன் காரணமாக லஞ்சம் தராத காரணத்தினால் வீடு இல்லை என கூறியதை கண்டித்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து முதியவர் சிகாமணியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- பார்த்திபனுக்கும் இவரது பெற்றோருக்கும் இடையில் தகராறு ஏற்படு வந்தது.
- வேலைக்காக தனது நண்பரை பார்த்து வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற பார்த்திபன் இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
கடலூர்:
சிதம்பரம் அருகே சம்பந்தக்கார தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் பார்த்திபன் (வயது 27). பட்டதாரி. இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். இதனால் பார்த்திபனுக்கும் இவரது பெற்றோருக்கும் இடையில் தகராறு ஏற்படு வந்தது.
இந்நிலையில் நேற்று வேலைக்காக தனது நண்பரை பார்த்து வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற பார்த்திபன் இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பார்த்திபனின் பெற்றோர் பார்த்திபனை உறவினர் மற்றும் நண்பர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் பார்த்திபன் கிடைக்கவில்லை.
இது குறித்து பார்த்திபனின் தாய் அன்பரசி சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து பார்த்திபனை தேடிவருகின்றனர்.
கடலூர்:
பண்ருட்டிநகரம் மற்றும் புறநகரில்கடலூர்எஸ்.பி சக்தி கணேஷ்., உத்தரவின்படி, டிஎஸ்பி சபியுல்லா,இன்ஸ்பெக்டர் நந்தகுமார்ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக தொடர் வழக்கு களில்தொடர்பு டையவர்கள், குற்றவாளிகள், தலைமறைவானவர்கள், பிடிவாரன்ட்உள்ள வர்களை பிடிக்கும் பணியில்ஈடுபட்டனர்.
பண்ருட்டியில் பழைய , அடி தடி, கொலைமுயற்சி, தொடர் குற்றங்களில் ஈடுபட்டு சிறையில்இருந்து வெளி வந்து தலைமறைவான குணசேகரன், பத்மநாபன், விஸ்வநாதன்என 3பேரை போலீசார் பிடித்தனர். தொடர்ந்துநடந்த ரவுடி வேட்டையில் மேலும் 2 ரவுடிகள் செல்வமணி, மணப்பாக்கம் விஸ்வநாதன்சிக்கினர்.இவர்கள் 5 பேரும்சிறையில் அடைக்கப்பட்டனர்.
- காய்கறி மார்க்கெட் வளாகத்தில் குடிநீர் வினியோகத்திற்காக நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது.
- பழுதின் காரணமாக இரும்புக் குழாய் உடைந்து தொட்டியிலுருந்து தண்ணீர் கொட்ட தொடங்கியது.
கடலூர்:
விருத்தாசலம் காட்டுக்கூடலூர் ரோட்டில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் வளாகத்தில் குடிநீர் வினியோகத்திற்காக நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட இந்த நீர்த்தேக்க தொட்டியிலிருந்து பங்களா தெரு, புதுப்பேட்டை, காட்டுகூடலூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த நீர் தேக்க தொட்டியின் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இன்று காலை குடிநீர் விநியோகம் செய்ய நீர்த்தேக்க தொட்டியை திறக்க முற்படும்போது ஏற்பட்ட பழுதின் காரணமாக இரும்புக் குழாய் உடைந்து தொட்டியிலுருந்து தண்ணீர் கொட்ட தொடங்கியது. அதிர்ச்சியடைந்த நகராட்சி ஊழியர்கள் குழாயை சரி செய்ய முற்பட்டனர். ஆனால் மேலும் அந்த இரும்பு குழாய் உடைந்து தண்ணீர் அதிகமாக வெளியேறத் தொடங்கியது. இதனால் ஏற்பட்ட திடீர் நீர்பெருக்கம் காரணமாக மார்க்கெட் வளாகம் முழுவதும் தண்ணீர் ஓட தொடங்கியது. காய்கறி வியாபாரிகள் விற்பனைக்காக வைத்திருந்த காய்கறிகள் தண்ணீரில் மிதக்க தொடங்கின.
அதிர்ச்சி அடைந்த காய்கறி வியாபாரிகள் தங்களது காய்கறிகளை வேறு இடத்தில் எடுத்து வைக்க முயற்சி செய்வதற்குள் நீர் அதிவேகமாக வெள்ளம் போல ஓட தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீர்த்தேக்க தொட்டியிலிருந்த நீர் காலியாகும் வரை சாலையில் வீணாக ஓடிக்கொண்டிருந்தது. இதனால் தினசரி மார்க்கெட் வளாகம் மற்றும் காட்டுக்கூடலூர் சாலையில் தண்ணீர் வெள்ளம் போல தேங்கி நின்றது.
- லோகநாதன், தமிழ்ச்செல்வி என்பவருக்கு கடந்த 27 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
- லோகநாதன் தனது மனைவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் அடுத்த பாலூர் நடுக்காலனியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 30). இவருக்கும் தமிழ்ச்செல்வி (வயது 24) என்பவருக்கும் கடந்த 27 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் புதிதாக திருமணமான லோகநாதன் தமிழ்ச்செல்வி கடலூர் அடுத்த பாலூர் பகுதியில் ஒன்றாக வசித்து வந்தனர். திருமணமான புதுப்பெண் தமிழ்ச்செல்வி வீட்டில் இருந்து வந்த நிலையில் சம்பவத்தன்று திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சிடைந்த லோகநாதன் தனது மனைவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து லோகநாதன் கொடுத்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்ற னர். திருமணமாகி 27 நாளில் புதுப்பெண் திடீர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
- மழையில்லா ததால் ஏரிக்கு நீர்வரத்து அடியோடு நின்றது. எனவே ஏரியின் நீர்மட்டம் இன்று 44.60 அடியாக உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும் இந்த ஏரிக்கு இந்த ஆண்டு மேட்டூர் அணை தண்ணீர் முன்னதாகவே வந்ததால் நிரம்பியது. அதனைத்தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கடந்த 2 வாரத்துக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. எனவே ஏரிக்கு வடவாறு வழியாக வரும் தண்ணீர் அணைத்தும் அப்படியே திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் விளைநி லங்களுக்குள் புகுந்ததால் விவசாயிகள் கவலைய டைந்தனர். ஏரியின் பாது காப்பு கருதி கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஏரியின் நீர்ம ட்டம் வேகமாக குறைந்தது.
தற்போது மழையில்லா ததால் ஏரிக்கு நீர்வரத்து அடியோடு நின்றது. எனவே ஏரியின் நீர்மட்டம் இன்று 44.60 அடியாக உள்ளது. சென்னை மாநகர குடிநீருக்கு மட்டும் 65 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும் இந்த ஏரிக்கு இந்த ஆண்டு மேட்டூர் அணை தண்ணீர் முன்னதாகவே வந்ததால் நிரம்பியது.
அதனைத்தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கடந்த 2 வாரத்துக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. எனவே ஏரிக்கு வடவாறு வழியாக வரும் தண்ணீர் அணைத்தும் அப்படியே திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் விளைநி லங்களுக்குள் புகுந்ததால் விவசாயிகள் கவலைய டைந்தனர். ஏரியின் பாது காப்பு கருதி கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஏரியின் நீர்ம ட்டம் வேகமாக குறைந்தது. தற்போது மழையில்லா ததால் ஏரிக்கு நீர்வரத்து அடியோடு நின்றது. எனவே ஏரியின் நீர்மட்டம் இன்று 44.60 அடியாக உள்ளது. சென்னை மாநகர குடிநீருக்கு மட்டும் 65 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
- வரலாற்று ஆர்வலர் மோகன கண்ணன் ஆகியோர் மேற்புற களஆய்வு மேற்கொண்ட னர்.
- சுடு மண்ணாலான விநாயகர் சிற்ப பொம்மை கண்டறியப்பட்டது.
கடலூர்:
பண்ருட்டி அருகே உள்ள எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றங் கரையில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர் மோகன கண்ணன் ஆகியோர் மேற்புற களஆய்வு மேற்கொண்ட னர். அப்போது சுடுமண்ணாலான விநாயகர் சிற்ப பொம்மையை கண்டறிந்தனர். இதைக் குறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறியதாவது:-
கடந்த சில வருடங்களா கவே பண்ருட்டி பகுதியில் இருக்கிற ஊர்கள் மற்றும் தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதிகளிலும் களஆய்வு மேற்கொண்டு அங்கே கிடைக்கின்ற தொல்பொருட்களை ஆவணப்படுத்தி வருகிறேன். நேற்றைய தினம் எனதிரி மங்கலம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டபோது சுடு மண்ணாலான விநாயகர் சிற்ப பொம்மை கண்டறியப்பட்டது. இந்த விநாயகர் சிற்பத்தின் உயரம் 15 செ.மீ, அகலம் 7 செ.மீ சுடுமண் விநாயகர் பொம்மை இரண்டு கரங்களுடன் காணப்படுகிறது.
தலையில் கரண்ட மகுடமும், இரு காதுகளிலும் ஓட்டையும், துதிக்கை நீண்டும் உள்ளது, இரு கைகளில் உள்ள தோள்களிலும் காப்பு அணிந்துள்ளார், விநாயகர் குழந்தையைப் போன்று பீடத்தின் மீது அமர்ந்துள்ளார். இதற்கு முன்பு பண்ருட்டி பகுதி தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதிகளில் சுடுமண்ணாலான உருவ பொம்மைகள் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் சுடுமண்ணாலான தெய்வ உருவ பொம்மை கிடைத்தது இதுவே முதல் முறையாகும். சுடுமண் விநாயகரின் சிற்ப அமைதியை பார்க்கும் போது இது சோழர்காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவர் கூறும்போது, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக மண்ணுக்கடியில் இருந்து இச்சுடுமண் சிற்பம் வெளியே வந்திருக்கலாம் என்றார்.
- போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அனைத்து தரப்பு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.
- மாடுகளை மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
கடலூர்:
கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் பன்றிகள், ஆடுகள் மற்றும் மாடுகள் அதிக அளவில் வெளியில் சுற்றுவதால் அடிக்கடி வாகன விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அனைத்து தரப்பு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சாலை மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் கால்நடைகள் மற்றும் பன்றிகளை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் இன்று மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் ஆகியோர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாநகராட் சிக்குட்பட்ட 45 வார்டு பகுதிகளில் தெருக்களில் கட்டி இருக்கும் மற்றும் சுற்றுத் திரியும் பன்றிகள், ஆடுகள் மற்றும் மாடுகளை அவற்றின் உரிமையாளர்கள் உடனடியாக பிடித்து செல்ல வேண்டும். அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் தெருக்களில் கட்டியிருக்கும் மற்றும் சுற்றித்திரியும் பன்றிகள், ஆடுகள் மற்றும் மாடுகளை மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் உரிமை யாளர்கள் மீது காவல்துறை மூலம் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருகின்றது. ஆகையால் கால்நடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
- இஸ்லாமிய இயக்கங்களின் நிர்வாகிகள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
- வல்துறையின் அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு, இஸ்லாமிய ஐக்கிய ஜமாத், சிதம்பரம் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு மற்றும் கட்சிகள், இஸ்லாமிய இயக்கங்களின் நிர்வாகிகள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டம் வடலூரில் வசித்து வரும் நஸ்ருதீன் என்பவர் மீது தொடர் பொய் வழக்கு வடலூர் போலீசார் பதிவு செய்து வருகின்றனர். இதனை விசாரணை நடத்தி காவல் நிலைய அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முஸ்லிம் சமூகத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடக்கும் காவல்துறையின் அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.
- கல்லூரி மாணவி தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
- பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் அடுத்த வெங்கடாம்புரம் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று தனது நண்பரை பார்ப்பதற்காக வடலூர் பகுதிக்கு 17 வயது கல்லூரி மாணவி செல்வதாக தனது பெற்றோர்களிடம் தெரிவித்து விட்டு சென்றார். இந்த நிலையில் கல்லூரி மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மாயமான மாணவியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து வடலூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மாயமான கல்லூரி மாணவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- வீட்டை விட்டு வெளியே சென்று வருவதாக கூறி விட்டுச் சென்றார்
- புகாரை பெற்றுக் கொண்ட விருத்தா சலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவரது மகள் சிவப்பிரியா (வயது 24). இவர் கடந்த 24-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்று வருவதாக கூறி விட்டுச் சென்றார் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது பற்றி விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் தாய் உமா மகேஸ்வரி புகார் அளித்தார். அதில் விருத்தா சலத்தை அடுத்த எருமனூரை சேர்ந்த அஜித்குமார் என்ற வாலிபர் தனது மகளை கடத்திச் சென்று விட்டதாகவும், அவரிடம் இருந்து தனது மகளை மீட்டுக் கொடுக்குமாறும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட விருத்தா சலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






