என் மலர்
கடலூர்
- சிதம்பரம் நகர போலீசார் ரோந்து பணி மேற்கொண்ட போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மறைத்து வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது,
- லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்கள் கைதுசெய்தனர்,
கடலூர்:
சிதம்பரம் நகர போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சிதம்பரம் பேருந்து நிலையம், பூதக்கேணி, ஈபி இறக்கம் என பல்வேறு முக்கிய பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டு சம்பவ இடங்களில் சந்தேகத்திற்கு இடமான நபர்களை விசாரணை செய்தபோது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மறைத்து வைத்து விற்பனை செய்து உள்ளார்கள். விசாரணையில் சிதம்பரம் பாரதிநகர் சி.கொத்தங்குடி பகுதியை சேர்ந்த அரிகிருஷ்ணன் மகன் ஐயப்பன் (வயது37) , பூதகேணி பகுதியை சேர்ந்த அப்துல்மஜீத் மகன் அன்வர்தீன் (63), அதே பகுதியில் உள்ள திருவள்ளுவர் தெருவில் வசித்து வரும் ராமன் மகன் நாகசுந்தரம் (65) ஆகியோரை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மொத்தம் 5 லாட்டரி சீட்டுகள்,2 பில் புக், ரொக்கம் ரூ. 2100 பறிமுதல் செய்தனர்.
- மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் நேற்று இரவு கொலை நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
- கொலை செய்து விட்டு தப்பிய மர்மக்கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மந்தாரக்குப்பம்:
குறிஞ்சிப்பாடி சுப்புராய நகரை சேர்ந்த முருகன் மகன் சுந்தரமூர்த்தி (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவியும், 10 வயது மகனும் உள்ளனர். இவர் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளி அருகே ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.
இவர் நேற்று இரவு வழக்கம் போல ஸ்டூடியோவை முடிவிட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது குறிஞ்சிப்பாடி டாஸ்மாக் அருகில் வந்தபோது மர்மக் கும்பல் சுந்தரமூர்த்தியை வழிமறித்து சுற்றிவளைத்தனர். மர்மக்கும்பல் வைத்திருந்த கத்தியால் சுந்தரமூர்த்திைய சரமாறியாக வெட்டினர். கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
இதில் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த சுந்தரமூர்த்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துபோனார். இது குறித்து அங்கிருந்த குடிமகன்கள் குறிஞ்சிப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னகுமார் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி, முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், முன்விரோதம் காரணமாக சுந்தரமூர்த்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கொலை செய்து விட்டு தப்பிய மர்மக்கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் நேற்று இரவு கொலை நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
- மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு மளிகை கடையிலும் திருட முற்சித்துள்ளது தெரியவந்துள்ளது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில மாதங்களாக கோவில்கள் கடைகள் மற்றும் வீடுகளில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் ஆகிவற்றை தொடர்ந்து மர்ம நபர்கள் திருடி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகிலும் பெண் போலீஸ் வீட்டிலும் லட்சக்கணக்கான மதிப்பில் நகை மற்றும் பணத்தை திருடி சென்றனர்.
கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டு சம்பவத்தை போலீசார் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நிலையில் நேற்று நள்ளிரவு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட்டில் ஒரு மளிகை கடையில் பூட்டை உடைத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மளிகை பொருட்களை கொள்யைடித்து சென்ற சம்பவம் நடைபெற்றுள்ள. மேலும் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு மளிகை கடையிலும் திருட முற்சித்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் அருகில் இருந்த 2 மளிகை கடையில் பூட்டை உடைத்து திருடும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து கடலூர் வண்டி பாளையத்தில் மற்றொரு மளிகை கடை பூட்டை உடைத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர். மேலும் கடலூர் வசந்தரராயன் பாளையம் பகுதியில் மற்றொரு மளிகை கடையில் பூட்டை உடைத்து 30 ஆயிரம் பணம் திருடி சென்று உள்ளனர்.
இன்று காலை வழக்கம் போல் கடை உரிமையாளர்கள் கடையை திறப்பதற்கு வந்த போது கடும் அதிர்ச்சி காத்திருந்தது. கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய சம்பவம், 2 கடை பூட்டி உடைத்து திருட முயற்சி செய்த சம்பவமும் வணிகர்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.
இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மளிகை கடையில் மர்ம நபர்கள் திருடிய சி.சி.டி.வி வீடியோ காட்சி பதிவாகி இருந்தது இதில் இரண்டு பேர் முகமூடி அணிந்து கொண்டு எந்தவித பயமும் இன்றி பணத்தையும் பொருட்களையும் திருடி சென்றது தெரியவந்துள்ளது.
அதிக மக்கள் நடமாட்டம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடும் இடங்களில் முகமூடி கொள்ளையர்கள் தொடர்ந்து கொள்ளையடித்து வரும் சம்பவம் நடை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் வீட்டில் தனியாக உள்ள பெண்கள் முதியவர்கள் இதன் காரணமாக பதற்றத்துடன் காணப்படுகின்றனர்.
போலீசார் தொடர் திருட்டை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு முகமூடி கொள்ளையர்களை பிடித்து மேலும திருட்டு சம்பவம் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
- சில்வர் பீச்சில் தீர்த்தவாரி நடக்கிறது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் விநாயகர், சந்திரசேகர், மனோன்மணி அம்மன், அஸ்த்ரதேவர் ஆகிய உற்சவ மூர்த்திகள் வருகிற 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியளவில் கோவிலில் இருந்து புறப்பட்டு புதுப்பாளையம் மெயின்ரோடு வழியாக தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சுக்கு செல்கிறது.
பின்னர் அங்கு கடற்கரையில் காலை 8 மணியளவில் தீர்த்தவாரி நடக்கிறது. தீர்த்தவாரி முடிந்ததும், உற்சவ மூர்த்திகள் அங்கிருந்து புறப்பட்டு கோவிலுக்கு சொந்தமான புதுப்பாளையம் பகுதியில் உள்ள மாசிமக மண்டகப்படி கட்டிடத்தில் எழுந்தருளியதும், சேவார்த்திகளுக்கு அருள்பாலிக்கின்றனர்.
இதையடுத்து மாலை 4 மணியளவில் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு புதுப்பாளையம் பகுதியில் சாமி வீதிஉலா நடக்கிறது. பின்னர் இரவு 8 மணியளவில் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் ராஜவீதி உலா முடிந்ததும், இரவு 9.30 மணியளவில் மீண்டும் கோவிலை வந்தடைய உள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- மேல்அழிஞ்சிப்பட்டு பகுதியில் நின்ற கொண்டிருந்த 3வாலிபர்களை பார்த்து, ஷாம் கோஷ் (வயது 37) ஏன் இங்கு நிற்கிறீர்கள் என கேட்டுள்ளார்.
- 3பேரும் சேர்ந்து கையில் வைத்திருந்த இரும்பு ராடால் ஷாம் கோஷை தாக்கினார்கள்.
கடலூர்:
கடலூர் அடுத்த மேல்அழிஞ்சிப்பட்டு பகுதியில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்ற வருகின்றது. அங்கு 3 நபர்கள் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த அங்கு வேலை செய்து கொண்டிருந்த மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்து ஷாம் கோஷ் (வயது 37) ஏன் இங்கு நிற்கிறீர்கள் என கேட்டுள்ளார் .அப்போது அங்கு இருந்த 3 நபர்களும், நாங்கள் இரும்பு திருடுவதை நீ மொபைல் போனில் போட்டோ எடுக்கின்றாயா என கேட்டு, கையில் வைத்திருந்த இரும்பு ராடால் ஷாம் கோஷை தாக்கினார்கள் ஷாம் கோஷ்யுடன் இருந்த 2 பணியாளர்கள், 3 பேரை தடுக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த 3 நபர்களில் ஒருவர், அவரது நண்பர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். இதையடுத்து மேலும், 3 நபர்கள் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு வந்தனர். இவர்கள் 6 பேரும் சேர்ந்து 3 தொழிலாளர்களை சரமாரியாக தாக்கினார்கள் இதில் ஷாம் கோஷை தாக்கி கொலைமுயற்சியில் ஈடுபட்டதாகவும், மற்ற நபர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. பலத்த காயம் அடைந்த ஷாம் கோஷ், சதன் கோஷ், பிஸ்வாஜ்பால் ஆகிய 3 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து கடலூர் புதுக்கடை காலனியை சேர்ந்தவர்கள் சிந்தனைச்செல்வன் (வயது 23), சதீஷ்குமார் (21), தர்மராஜ் (28), மணிகண்டன் (27) ஆகிய 4 வாலிபர்களை கைது செய்தனர். மேலும், ஒரு சிலர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
- காத்தவ ராயனை (60) நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவரது இடுப்பில் துணிப்பையில் ஏராளமான புதுவை சாராய பாக்கெட்கள் மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது.
- அவரிடமிருந்து ஏராளமான சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருத்து றையூர் கிராமத்தில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் -இன்ஸ்பெக்டர் ராம சாமி ஆகியோர் தீவிர சாராயம் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போதுஅந்த வழியாக வந்த திருத்துறையூர் கிராமத்தைச் சேர்ந்த காத்தவ ராயனை (60) நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவரது இடுப்பில் துணிப்பையில் ஏராளமான புதுவை சாராய பாக்கெட்கள் மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து ஏராளமான சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
- ப்பிரமணியன் (வயது 57). விவசாயக் கூலி தொழிலாளர். இவர் விளைநிலத்தை சுற்றி வரும் போது நிலை தடுமாறி மின்வேலியில் சிக்கினார்
- மின்சாரம் தாக்கி துடிதுடித்து பரிதாபமாக சம்பவ இடத்திலேேய இறந்து போனார்,
கடலூர்:
காட்டுமன்னார்கோயில் அருகே கொண்ட சமுத்திரம் வீராகுடி தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 57). விவசாயக் கூலி தொழிலாளர். இவர் பணிசெய்யும் விளை நிலத்திற்கு இன்று காலை சென்றார். அங்கு விளைநிலத்தைச் சுற்றி மின்வேலி அமைக்கப் பட்டிருந்தது. இவர் விளைநிலத்தை சுற்றி வரும் போது நிலை தடுமாறி மின்வேலியில் சிக்கினார். இதில் மின்சாரம் தாக்கி துடிதுடித்து பரிதாபமாக சம்பவ இடத்திலேேய இறந்து கிடந்தார்.
அவ்வழியே சென்ற விவசாயிகள் இதனை பார்த்து நில உரிமையாளருக்கும் சோழவரம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் மின்வேலிக்கு செல்லும் மின்சாரத்தை நிறுத்திவிட்டு சுப்பிரமணி யனின் உடலை கைப்பற்றி னர். பிரேத பரிசோ தனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையில் இருந்த கேமிரா மற்றும் ஹார்டிஸ்க்குகளை மர்மநபர்கள் யாரோ திருடியுள்ளனர்
- சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கடலூர்:
சிதம்பரம் அடுத்த கோவிலாம்பூண்டி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (50). இவர் வண்டிகேட் அருகே ஸ்டூடியோ நடத்தி வருகிறார். கடந்த 23-ந்தேதி இரவு கடையை பூட்டிச் சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையில் இருந்த கேமிரா மற்றும் ஹார்டிஸ்க்குகளை மர்மநபர்கள் யாரோ திருடியுள்ளனர். இதனையடுத்து சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் சிசிடிவி கேமிரா மற்றும் கைரேகை தடயவியல் நிபுணர்களை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வடலூர் ராஜராஜேஸ்வரி திருமண நிலையத்தில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடந்து வருகிறது,
- பயிற்சியின் இடையில் அவர் பிரட் சாப்பிட்டார். இதையடுத்து அவருக்கு விக்கல் வந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூர் ராஜராஜேஸ்வரி திருமண நிலையத்தில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடந்து வருகிறது. வடலூரில் உள்ள பிசிகோ பிட்னஸ் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழகம் முழுவதுமிருந்து 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சேலம் பெரிய கொல்லப்பட்டி, மாரியம்மன் கோயில் தெரு மாதையன் மகன் ஹரிஹரன் (வயது 21) என்பவர் பங்கேற்பதற்காக வந்திருந்தார். இவர் மண்டபத்தில் தீவிர பயிற்சியில் நேற்று இரவு ஈடுபட்டார். பயிற்சியின் இடையில் அவர் பிரட் சாப்பிட்டார். இதையடுத்து அவருக்கு விக்கல் வந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவரை உடனடியாக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு விழாக்குழுவினர் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டார் என்று கூறினார்கள். மேலும், அவர் சாப்பிட்ட பிரட் உணவுக்குழாயில் அடைத்துக் கொண்டு, மாரடைப்பு அல்லது மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறினார்கள்.
இந்த சம்பவம் ஆணழகன் போட்டியில் பங்கேற்ற பிற வீரர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
- ரமேஷ் (47). இவர் கூலி வேலை செய்து வருகிறார். உடல்நிலை சரியில்லை என்று ஆஸ்பத்திரக்கு சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை.
- அவரதுமனைவி பிரபாவதி அளித்த புகாரின் பேரில் புதுசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை தேடி வருகின்றனர்..
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த வில்லியநல்லூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரபாவதியின் கணவர் ரமேஷ் (47). இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 23-ந்தேதி அன்று உடல்நிலை சரியில்லை என்று கூறி ஆஸ்பத்திரக்கு சென்றுள்ளார். இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் விசாரித்த போது இவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து பிரபாவதி அளித்த புகாரின் பேரில் புதுசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை தேடி வருகின்றனர்.
- ஏழுமலை. இவரது 15 வயது மகளும், அதே ஊரை சேர்ந்த ஞானகுரு (வயது 18) காதலித்து வந்தனர்.
- காதல் ஜோடியை தீவிரமாக தேடிய போலீசார், காதலனிடம் இருந்து சிறுமியை மீட்டனர்,
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பேர்பெரியான் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது 15 வயது மகளும், அதே ஊரை சேர்ந்த ஞானகுரு (வயது 18) காதலித்து வந்தனர். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே கடந்த 22-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, கோவிலில் திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து கடலூர் மாவட்ட குழந்தைகள் நல காப்பக நல அலுவலர் தனபாக்கியம், சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். சிறுமியை கடலூர் காப்பக அலுவலகத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சிறுமியின் பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையம் முன்பு தனது மகளை கண்டுப்பிடித்து தரக்கோரி பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தார். அப்போது அங்கு இருந்த போலீசார் பொதுமக்கள், உறவினர்கள் அவரை மீட்டனர். இதையடுத்து காதல் ஜோடியை தீவிரமாக தேடிய போலீசார், காதலனிடம் இருந்து சிறுமியை மீட்டு முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். தற்போது சிறுமியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அண்ணாதுரை (44) அ.தி.மு.க.பிரமுகர். இவர், டீக்கடை நடத்தி வந்தார் .இவரது டீக்கடையை காலி செய்ய கோரி நோட்டீஸ் வந்ததாக கூறப்படுகிறது.இதனால் விரக்தி அடைந்த அண்ணாதுரை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- அண்ணாதுரை உறவினர்கள், அவரது உடலுடன் பண்ருட்டி- சிதத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே அ.தி.மு.க. பிரமுகர் தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எஸ்.ஏரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை (44) அ.தி.மு.க.பிரமுகர். இவர், அதே பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார்.இவரது டீக்கடையை காலி செய்ய கோரி நோட்டீஸ் வந்ததாக கூறப்படுகிறது.இதனால் விரக்தி அடைந்த அண்ணாதுரை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்குமனைவி 2 மகள்கள் உள்ளனர். இதனால் அண்ணாதுரை உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அண்ணாதுரை உடலுடன்பண்ருட்டி- சிதத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது..இது பற்றிதகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுசாலை மறியலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.






