காட்டுமன்னார்கோவில் அருகே விளைநில மின் வேலியில் சிக்கி முதியவர் பலி

ப்பிரமணியன் (வயது 57). விவசாயக் கூலி தொழிலாளர். இவர் விளைநிலத்தை சுற்றி வரும் போது நிலை தடுமாறி மின்வேலியில் சிக்கினார்மின்சாரம் தாக்கி துடிதுடித்து பரிதாபமாக சம்பவ இடத்திலேேய இறந்து போனார்,
காட்டுமன்னார்கோவில் அருகே விளைநில மின் வேலியில் சிக்கி முதியவர் பலி
Published on

கடலூர்:

காட்டுமன்னார்கோயில் அருகே கொண்ட சமுத்திரம் வீராகுடி தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 57). விவசாயக் கூலி தொழிலாளர். இவர் பணிசெய்யும் விளை நிலத்திற்கு இன்று காலை சென்றார். அங்கு விளைநிலத்தைச் சுற்றி மின்வேலி அமைக்கப் பட்டிருந்தது. இவர் விளைநிலத்தை சுற்றி வரும் போது நிலை தடுமாறி மின்வேலியில் சிக்கினார். இதில் மின்சாரம் தாக்கி துடிதுடித்து பரிதாபமாக சம்பவ இடத்திலேேய இறந்து கிடந்தார்.

அவ்வழியே சென்ற விவசாயிகள் இதனை பார்த்து நில உரிமையாளருக்கும் சோழவரம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் மின்வேலிக்கு செல்லும் மின்சாரத்தை நிறுத்திவிட்டு சுப்பிரமணி யனின் உடலை கைப்பற்றி னர். பிரேத பரிசோ தனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com