என் மலர்
கடலூர்
- அண்ணாதுரை (வயது 44). அ.தி.மு.க. பிரமுகர். அய்யனார் என்ற வாலிபர் கடையின் வேலியை பிரித்து போட்டு, அண்ணா துரையை அசிங்கமாக திட்டியுள்ளார்
- மன உளைச்சல் அடைந்த அண்ணாதுரை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எஸ். ஏரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 44). அ.தி.மு.க. பிரமுகர். இவர் அதேபகுதியில் நெடுஞ்சாலை ஓரத்தில் டீக்கடை நடத்தி வந்தார். இவரது டீக்கடையை காலி செய்யகோரி அதே பகுதியை சேர்ந்த அய்யனார் என்ற வாலிபர் இவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். இந்நிலையில் அய்யனார் கடையின் வேலியை பிரித்து போட்டு, அண்ணா துரையை அசிங்கமாக திட்டியுள்ளார்.இதனால் மன உளைச்சல் அடைந்த அண்ணாதுரை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இதையடுத்து இவரது உறவினர்கள் அண்ணாதுரையின் உடலை பண்ருட்டி சித்தூர் சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு விரைந்து சென்ற புதுப்பேட்டை சாலை மறியலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து அவரது மனைவி, போலீசாரிடம் இன்று கொடுத்த புகாரின் பேரில் அய்யனாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பரமேஸ்வரி (வயது 20). திருமணமான 7 மாதத்தில் இறந்து விட்டார்.இவர் திடீரென்று காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காவில்லை
- இவரின் தாய் போலீசில் புகார் கொடுத்தார்,
கடலூர்:
பண்ருட்டி அடுத்த அன்னகாரன்குப்பத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மகள் பரமேஸ்வரி (வயது 20). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சேந்தநாட்டைச் சேர்ந்த கணேசனுக்கும் இவருக்கும் திருமணம் நடைபெற்றது. பரமேஸ்வரிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது பரமேஸ்வரியின் கணவர் திருமணமான 7 மாதத்தில் இறந்து விட்டார். இதனால் பரமேஸ்வரி தாய் வீட்டில் தங்கியிருந்தார்.
கடந்த 27ம் தேதி 6 மணிக்கு வீட்டில் இருந்தர் காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால்ப ரமேஸ்வரியின் தாய் விஜயலட்சுமி முத்தாண்டிகுப்பம் போலீசில் புகார் கொடுத்தார். இதில் விசூர், மேற்கு தெரு முத்துவேல் (25) ஆசை வார்த்தை கூறி தனது மகளை கடத்தியதாக கூறியுள்ளார். இது பற்றி முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து பரமேஸ்வரியை தேடி வருகின்றனர்.
- செல்வகுமார் (வயது 42). மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் . போது 2 பேர் செல்வகுமாரை வழிமறித்து தாக்கினர். மேலும், மோட்டார் சைக்கிளை பறித்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 42). இவர் சிதம்பரத்தில் உள்ள டிபன் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல வேலை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
அப்போது ஓமக்குளம் சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்தபோது சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்த முகேஷ் கண்ணன் (23), வைப்புசாவடி சபாநாயகர் தெருவை சேர்ந்த ஆகாஷ் (18) ஆகிய 2 பேரும் செல்வகுமாரை வழிமறித்து தாக்கினர். மேலும், மோட்டார் சைக்கிளை பறித்து கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.
- லோகநாதன் கார் டிரைவர் மேம்பாலம் அருகே சென்ற போது சென்டர் மீடியன் அருகி 2 மாடுகள் சாலையை கடந்தன டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மாடுகள் மீது மோதியது.
- விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு மாடு இறந்துவிட்டது.
கள்ளக்குறிச்சி:
திருவண்ணாமலை சேர்ந்த லோகநாதன் கார் டிரைவர். இவர் ஈரோட்டில் இருந்து செங்கல்பட்டுக்கு காரில் சென்றார். மாம்பாக்கம் ெரயில்வே மேம்பாலம் அருகே சென்ற போது சென்டர் மீடியன் அருகி 2 மாடுகள் சாலையை கடந்தன. அப்போது டிரைவரில் கட்டுப்பாட்டை இழந்த கார், மாடுகள் மீது மோதியது. இதில் கார் பள்ளத்தில் கவிழ்ந்தது.
மேலும், விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு மாடு இறந்துவிட்டது. இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
- காட்டுச் செல்லூரை கடந்த போது பின்னால் வந்த லாரி மோதி மோட்டார் சைக்கிளுடன் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
- மரிய பிரகாசம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டை அருகே உள்ள இறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மரிய பிரகாசம். இவரும் காட்டுசெல்லூர் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் எலவனாசூர்கோட்டையில் இருந்து திருக்கோவிலூர் சென்று கொண்டிருந்தனர். அப்போது காட்டுச் செல்லூரை கடந்த போது பின்னால் வந்த லாரி மோதி மோட்டார் சைக்கிளுடன் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மரிய பிரகாசம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
படுகாயம் அடைந்து சாலை ஓரத்தில் இருந்த சரத்குமாரை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மரிய பிரகாசம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மல்யுத்த மாணவர்கள்சென்ற போது, சாலையில் ஒரு மணி பர்ஸ் கிடந்தது. அவர்கள் அந்த பர்சை எடுத்து பார்த்தபோது அரசு ஆவணங்கள் மற்றும் பணம் இருந்தது.
- போலீஸ் துணை சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கரிடம் சம்பவத்தை கூறி பணத்துடன் கூடிய பர்சை ஒப்படைத்தார்.
கடலூர்:
கடலூர் அடுத்த கன்னியக் கோயில் பகுதியில் மல்யுத்த மாணவர்கள் ஹரிகரன், அரிய புத்திரன் ,அரவிந்தன் சூர்யா ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர் .
அப்போது சாலையில் ஒரு மணி பர்ஸ் கிடந்தது. அவர்கள் அந்த பர்சை எடுத்து பார்த்தபோது அரசு ஆவணங்கள் மற்றும் பணம் இருந்தது. இதனை தொடர்ந்து மல்யுத்த பயிற்சியாளர் ராஜேஷ் கடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கரிடம் சம்பவத்தை கூறி பணத்துடன் கூடிய பர்சை ஒப்படைத்தார். பின்னர் போலீசார் பர்ஸ் யாருடையது என விசாரணை நடத்தியதில் சென்னையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பதும், என்பவருக்கு சொந்தமானது என்பதும், திருநள்ளாறுக்கு செல்லும் போது தனது பர்ஸ் தொலைந்து விட்டதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர் சார்பாக ராஜ ஜெயசீலனிடம் துணைப் போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் முன்னிலையில் பணத்துடன் கூடிய பர்சை ஒப்படைத்தனர். மணி பர்சை கண்டெடுத்து போலீசில் ஒப்படைத்த மாணவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார். அப்போது இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி உடன் இருந்தார்.
- ஏ.டிஎம் எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போலீசார் கைது செய்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.
கடலூர்:
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்வேறு மாவட்டங்களில் ஏ.டிஎம் எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து வட மாநிலத்தை சேர்ந்த ஒரு சிலரை போலீசார் கைது செய்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் தமிழக முழுவதும் ஏ.டி.எம். மையங்களில் குற்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம் நெய்வேலி ,சேத்தியாதோப்பு ,பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய 7உட்கோட்டங்களில் உள்ள 533 ஏ.டி.எம். மையங்களில் போலீசார் சோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதன்படி அந்தந்த உட்கோட்டத்திற்குட்பட்ட போலீசார் ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பு தன்மையை நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பு காவலர்கள் உள்ளாரா? எச்சரிக்கை அலாரம் சரியாக இயங்குகிறதா? கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதா? மின்விளக்கு வெளிச்சம்ஏ.டி.எம். மையங்களில் உள்ளே மற்றும் வெளியில் இருக்கிறதா? என்பதனை அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். மேலும் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஏ.டி.எம். மையம் பாதுகாப்பு குறித்து தற்போது உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதையும் வங்கி மேலாளர்களுக்கு காவல்துறை சார்பில் அறிவுறுத்தி கடிதம் வழங்கப்பட்டது,,இதன் மூலம் வருங்காலங்களில்ஏ.டி.எம். மையங்களில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க இந்த நடவடிக்கை ஏதுவாக அமைந்துள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- கடலூர் மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்..
- எரிவாயு தகன மேடை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் ரவி, சட்ட ஆலோசகர் திருமார்பன், இணை ஒருங்கிணைப்பாளர்கள் குரு ராமலிங்கம், சுப்புராயன், மன்சூர், சிவாஜி கணேசன் மற்றும் நிர்வாகிகள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:கடலூர் மாநகராட்சியில் மஞ்சக்குப்பம் மற்றும் கம்மியம்பேட்டையில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த எரிவாயு தகன மேடை சரியான முறையில் இயங்காமல் உள்ளது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக கடலூர் மாநகர மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.
கடலூர் மாநகராட்சியாக உள்ளதால் நவீன எரிவாயு மின் தகன மேடை 4 திசைகளிலும், நகரின் மையப் பகுதிகளிலும் அமைக்கப்பட வேண்டும். இது அனைத்து தர மக்களுக்கும் பொதுப் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.இதிலும் தற்போது உள்ள எரிவாயு தகன மேடை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால் மார்ச் 7-ந்தேதி எரிவாயு தகன மேடையில் பாடை கட்டி ஒப்பாரி போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
- செல்வராஜ் மகள் ஸ்ரீமதி. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வீரப்பன் என்பவரை காதலித்து திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார.
- இவர்களுக்கு குழந்தை இல்லாததால் சண்டை ஏற்பட்டது.
கடலூர்:
நெல்லிக்குப்பம் திருக்குளம் செல்வராஜ் மகள் ஸ்ரீமதி. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வீரப்பன் என்பவரை காதலித்து திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் சில தினங்களுக்கு முன்பு வீரப்பனுக்கும் ஸ்ரீமதிக்கும் சண்டை ஏற்பட்டது.
இதன் காரணமாக ஸ்ரீமதி மன வருத்தத்தில் இருந்து வந்தார். சம்பவத்தன்று ஸ்ரீமதி தனது வீட்டில் தூக்கு மாட்டி இறந்த நிலையில் இருந்தார். இத்தகவல் அறிந்து நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி நேற்று இரவு பயணிகளை ஏற்றிக் கொண்டு பஸ்சினை அய்யனார் ஓட்டி சென்றார்.மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென்று தனியார் பஸ்சை வழிமறித்து நிறுத்தினர்.
- 2 நபர்கள் வழி விடாமல் ஏன் சென்றாய் என கேள்வி எழுப்பி டிரைவர் அய்யனாரை சராமாறியாக தாக்கினார்கள்.
கடலூர்:
புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி நேற்று இரவு பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பஸ் சென்றது. பஸ்சினை அய்யனார் ஓட்டி சென்றார். தனசேகர் கண்டக்டர் பணிபுரிகிறார். தனியார் பஸ் சென்று கொண்டிருந்தபோது ரெட்டிச்சாவடி அடுத்த பெரிய காட்டு பாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென்று தனியார் பஸ்சை வழிமறித்து நிறுத்தினர் .பின்னர் 2 நபர்கள் வழி விடாமல் ஏன் சென்றாய் என கேள்வி எழுப்பி டிரைவர் அய்யனாரை சராமாறியாக தாக்கினார்கள். மேலும் இது போன்ற நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டால் பஸ்சுடன் சேர்த்து கொளுத்தி விடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த டிரைவர் அய்யனார் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ரெட்டிச்சாவடி நிலையத்தில் கண்டக்டர் தனசேகர் கொடுத்த புகாரின் பேரில், புதுச்சேரி அரியாங்குப்பம் அரவிந்தராஜ் (வயது 23), நோனாங்குப்பம் நீலப்பிரியன் (18) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- ஓட்டலில் ஊழியராக வேலை செய்துவந்தார். இவர் திடீரென மாயமானார். இவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
- சிவகுமார் மனைவி கீதா பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். .
க்டலூர்:
பண்ருட்டி அப்பாளுபத்தர் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (57) இவர், பண்ருட்டி- சென்னை சாலையில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை செய்துவந்தார். இவர் திடீரென மாயமானார்.
இவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து சிவகுமார் மனைவி கீதா பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காணாமல் போன ஓட்டல் ஊழியர் சிவகுமாரை தேடி வருகிறார்.
- கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில மாதங்களாக கோவில்கள் கடைகள் மற்றும் வீடுகளில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் ஆகிவற்றை தொடர்ந்து மர்ம நபர்கள் திருடி வருகின்றனர்.
- முகமூடி கொள்ளை யர்கள் தொடர்ந்து கொள்ளை யடித்து வரும் சம்பவம் நடை பெற்றுள்ளது .
கடலூர்:
கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில மாதங்களாக கோவில்கள் கடைகள் மற்றும் வீடுகளில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் ஆகிவற்றை தொடர்ந்து மர்ம நபர்கள் திருடி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகிலும் பெண் போலீஸ் வீட்டிலும் லட்சக்கணக்கான மதிப்பில் நகை மற்றும் பணத்தை திருடி சென்றனர் கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டு சம்பவத்தை போலீசார் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நிலையில் நேற்று நள்ளிரவு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட்டில் ஒரு மளிகை கடையில் பூட்டை உடைத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மளிகை பொருட்களை கொள்யைடித்து சென்ற சம்பவம் நடைபெற்றுள்ள. மேலும் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு மளிகை கடையிலும் திருட முற்சித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அருகில் இருந்த2 மளிகை கடையில் பூட்டை உடைத்து திருடும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து கடலூர் வண்டி பாளையத்தில் மற்றொரு மளிகை கடை பூட்டை உடைத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர்.
மேலும் கடலூர் வசந்தரராயன் பாளையம் பகுதியில் மற்றொரு மளிகை கடையில் பூட்டை உடைத்து 30 ஆயிரம் பணம் திருடி சென்று உள்ளனர். இன்று காலை வழக்கம் போல் கடை உரிமையாளர்கள் கடையை திறப்பதற்கு வந்த போது கடும் அதிர்ச்சி காத்திருந்தது. கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய சம்பவம், 2 கடை பூட்டி உடைத்து திருட முயற்சி செய்த சம்பவமும் வணிகர்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மளிகை கடையில் மர்ம நபர்கள் திருடிய சி.சி.டி.வி வீடியோ காட்சி பதிவாகி இருந்தது இதில் இரண்டு பேர் முகமூடி அணிந்து கொண்டு எந்தவித பயமும் இன்றி பணத்தையும் பொருட்களையும் திருடி சென்றது தெரியவந்துள்ளது. அதிக மக்கள் நடமாட்டம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடு படும் இடங்களில் முகமூடி கொள்ளை யர்கள் தொடர்ந்து கொள்ளை யடித்து வரும் சம்பவம் நடை பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கதாகும். கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் வீட்டில் தனியாக உள்ள பெண்கள் முதிய வர்கள் இதன் காரண மாக பதற்றத்துடன் காணப்படு கின்றனர். போலீசார் தொடர் திருட்டை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.போலீசார் அதிரடி சோத னையில் ஈடுபட்டு முகமூடி கொள்ளையர்கைள பிடித்து ேமலும திருட்டு சம்பவம் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






