என் மலர்tooltip icon

    கடலூர்

    • தென்பெண்ணை ஆற்றில் மீனவர்கள் படகு மூலமாக மீன் பிடித்து வருகின்றனர். தங்கள் .3 படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு வழக்கம்போல் வீட்டிற்கு சென்றனர்.
    • காலை ஆற்றில் ஒரு சில மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, படகுகள் மற்றும் வலைகள் எரிந்த நிலையில் இருந்தது‌.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணை ஆறு உள்ளது . தென்பெண்ணை ஆற்றில் மீனவர்கள் படகு மூலமாக மீன் பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் தாழங்குடா பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி, ராஜவேல், விஜயகுமார் ஆகிய 3 மீனவர்கள் தினந்தோறும் தென்பெண்ணையாற்றில் வலைகள் மூலம் மீன்பிடித்து செல்வது வழக்கம்.நேற்று வழக்கம் போல் தென்பெண்ணை ஆறு கரையோரம் தங்கள் 3 படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு வழக்கம்போல் வீட்டிற்கு சென்றனர்.இன்று காலை ஆற்றில் ஒரு சில மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, படகுகள் மற்றும் வலைகள் எரிந்த நிலையில் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் சம்பந்தப்பட்ட தாழங்குடா மீனவர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் தாழங்குடா மீனவர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்து பார்வையிட்டனர்.அப்போது படகு மற்றும் வலைகளுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து சென்றதால் படகுகள் மற்றும் வலைகள் முழுவதும் எரிந்து சேதமாகி இருந்தது. தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த தீ விபத்தில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான படகுகள் மற்றும் வலைகள் எரிந்து நாசமானது தெரிய வந்தது  இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து படகுகள் மற்றும் வலைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தென்பெண்ணை ஆறு கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • கடலூர் மஞ்சக்குப்பம் பத்மாபதி நகரை சேர்ந்தவர் ரகமதுன்னிசா (55). இவரது கணவர் அப்துல் மஜீத் (60). சவுதி அரேபியா நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
    • மர்ம நபர்கள் 3 ேபர் கையில் பொருட்களுடன் வெளியில் வந்தனர். பின்னர் தங்களிடம் இருந்த கத்தியை காண்பித்து சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்,

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் பத்மாபதி நகரை சேர்ந்தவர் ரகமதுன்னிசா (55). இவரது கணவர் அப்துல் மஜீத் (60). சவுதி அரேபியா நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் மகன் அஸ்லாம் துபாய் நாட்டில் வேலை செய்து வருகிறார்.


    மூத்த மகள் ஷப்பாவுக்கு திருமணமாகி தனது கணவருடன் துபாயில் வசித்து வருகிறார். அகமது நிஷா தனது இளைய மகள் அசினாவுடன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் துபாயில் இருக்கும் மூத்த மகள் ஷப்பாவின் பிரசவத்திற்காக இருவரும் நேற்று இரவு விமானம் மூலம துபாய் சென்றுள்ளனர்.இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று ஒரு அறையில் இருந்த பொருட்களை திருடி உள்ளனர். மேலும் மற்றொரு அறையில் இருந்த பூட்டை உடைக்கும் போது அதனுடைய சத்தம் வெளியில் கேட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தை சேர்ந்த 2 பெண்கள் ரகமதுன்னிசா வீட்டுக்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. இதில் முன்பக்க கதவு உடைத்து மர்ம நபர்கள் உள்ளே இருந்தது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் திருடன் திருடன் என கூச்சலிட்டனர். அப்போது உள்ளே இருந்த மர்ம நபர்கள் 3 ேபர் கையில் பொருட்களுடன் வெளியில் வந்தனர். பின்னர் தங்களிடம் இருந்த கத்தியை காண்பித்து சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் சத்தம் போடாமல் அமைதியாக இருந்தனர். இதனை தொடர்ந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் பொருட்களை திருடிக் கொண்டு எந்த வித பயமும் இன்றி ஹாயாக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டிலிருந்த அனைவரும் வெளிநாட்டில் உள்ளதால் திருடு போன பொருட்கள் எத்தனை லட்சம் மதிப்பிலானது, என்னென்ன பொருட்கள் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் கொள்ளைகள் நடைபெற்று வரும் நிலையில் இதற்கு என்னதான் தீர்வு என பொதுமக்கள் பீதியுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இதற்கு நிரந்தரமாக தற்போது தீர்வு இல்லை என வெட்ட வெளிச்சமாக தெரிய வருகின்றது. மேலும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் வராமலும், வெளியூருக்கு செல்லும் பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பான இடங்களில் வைத்து சென்றால் மட்டுமே கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் வாழ முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    முன்பெல்லாம் ஒரு பகுதியில் ஒரு திருட்டு ஏற்பட்டால் போலீசார் பழைய குற்றவாளி மற்றும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு குறைந்தபட்ச நாட்களில் குற்றவாளிகளை பிடித்து உரிய முறையில் விசாரணை நடத்தி குற்றங்களை தடுத்து நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். தற்போது குற்றவாளிகளை பிடித்தவுடன் விசாரணை செய்வதற்கு போதுமான கால அவகாசம் வழங்காமல் குற்றவாளிகளிடம் உரிய முறையில் விசாரணை நடத்த முடியாததால் போலீசாரால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கின்றனர். பின்னர் எப்படி குற்றவாளிகளை விசாரித்து பொருட்களை கைப்பற்றி இனி வருங்காலங்களில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் எப்படி தடுப்பது?மேலும் இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிந்தும் கண்டும் காணாமல் உள்ளதால் ஒவ்வொரு போலீசாரும் மிகுந்த அவதியுடன் இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கு போலீஸ் உயர் அதிகாரிகள் ஒத்துழைத்தால் மட்டுமே உரிய முறையில் குற்ற செயல்களை கட்டுப்படுத்த முடியும். இதனை உயர் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்றால் திருடர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் பெரும்பாலான வீடு, கடைகள், கோவில்கள் போன்றவற்றில் கொள்ளை சம்பவம் நடந்து அனைவரும் வீதியில் நிற்கக்கூடிய நிலை ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆகையால் போலீஸ் உயர் அதிகாரிகள் இதற்கு தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் நிம்மதியாக வெளியில் சென்று வருவதற்கும் தயக்கம் இன்றி வாழ்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தமிழகமெங்கும் பேனர் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே பண்ருட்டி பகுதியில் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
    • பண்ருட்டியில் டிஜிட்டல் பேனர் வைக்க போலீசாதடை விதித்துள்ளனர்.

    க்டலூர்:

    பண்ருட்டியில் டிஜிட்டல் பேனர் வைக்க போலீசாதடை விதித்துள்ளனர்இ து குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கண்ணன்வெளியிட்டுள்ள   செய்தி குறிப்பில்கூறியிருப்பதாவது:-   தமிழகமெங்கும் பேனர் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே பண்ருட்டி பகுதியில் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளிலோ விழா நடைபெறும்

    மண்டபங்களிலோ விழாவிற்கு முதல் நாளில் மிகச் சிறிய அளவிலான பேனர்களை வைத்து விழா முடிவடைந்ததும் அகற்றி விடலாம். உங்கள் நகரை சிங்கார நகரமாக மாற்ற போலீசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுங்கள். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான படகுகள் மற்றும் வலைகள் எரிந்து நாசமானது தெரிய வந்தது.
    • தீ வைத்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணை ஆறு உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் மீனவர்கள் படகு மூலமாக மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் தாழங்குடா பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி, ராஜவேல், விஜயகுமார் ஆகிய 3 மீனவர்கள் தினந்தோறும் தென்பெண்ணையாற்றில் வலைகள் மூலம் மீன்பிடித்து செல்வது வழக்கம்.

    நேற்று வழக்கம் போல் தென்பெண்ணை ஆறு கரையோரம் தங்கள் 3 படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு வழக்கம்போல் வீட்டிற்கு சென்றனர்.

    இன்று காலை ஆற்றில் ஒரு சில மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, படகுகள் மற்றும் வலைகள் எரிந்த நிலையில் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் சம்பந்தப்பட்ட தாழங்குடா மீனவர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தாழங்குடா மீனவர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்து பார்வையிட்டனர்.

    அப்போது படகு மற்றும் வலைகளுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து சென்றதால் படகுகள் மற்றும் வலைகள் முழுவதும் எரிந்து சேதமாகி இருந்தது. தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த தீ விபத்தில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான படகுகள் மற்றும் வலைகள் எரிந்து நாசமானது தெரிய வந்தது.

    இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து படகுகள் மற்றும் வலைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தென்பெண்ணை ஆற்று கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • கடந்த 13-ந்தேதி நடக்க இருந்த சிலம்பம் போட்டிகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது.
    • போட்டி நடத்துவதற்கான விதிமுறைகள் மாறுபட்டு இருப்பதாக கூறி ஒரு பிரிவினர் போட்டியை நடத்தக்கூடாது என கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    மாநில அளவிலான தமிழ்நாடு முதல் அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த 12-ந் தேதி தொடங்கி 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் கைப்பந்து, கிரிக்கெட், சிலம்பம் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 13-ந்தேதி நடக்க இருந்த சிலம்பம் போட்டிகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த போட்டிகள் மீண்டும் இன்று நடத்தப்படும் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவித்திருந்தார். அதன்படி இன்று சிலம்பம் போட்டி தொடங்க இருந்த நிலையில் போட்டி நடத்துவதற்கான விதிமுறைகள் மாறுபட்டு இருப்பதாக கூறி ஒரு பிரிவினர் போட்டியை நடத்தக்கூடாது என கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸ் துறையினர், மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் படுத்தினர். பின்னர் போட்டி தொடர்ந்து நடைபெற்றது.

    • கடலூர் கே.என். பேட்டை குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுப்பதை கண்டித்து லாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினார்கள்,
    • இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    விக்கிரவாண்டி முதல் நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் 4 வழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலை கடலூர் அருகே உள்ள கே.என்.பேட்டை வழியாக செல்கிறது. இதற்காக கே.என். பேட்டையில் உள்ள செம்மண் குவாரிகளிலிருந்து தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு அனுமதித்த அளவைவிட அந்தப் பகுதியில் இருந்து கூடுதலாக செம்மண் எடுக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து அவர்கள் குவாரி நிர்வாகிகளிடம் சென்று கேட்டபோது, அவர்கள் சரியான பதில் அளிக்காமல் அலட்சியமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் திருவந்திபுரம் ஒன்றிய குழு துணை தலைவர் அய்யனார் தலைமையில் இன்று காலை ஏராளமான பொதுமக்கள் அந்த மணல் குவாரிக்கு சென்றனர். அங்கு செம்மண் எடுத்த லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், இந்த செம்மண் குவாரியில் இருந்து அரசு அனுமதித்த அளவை விட அதிக அளவில் மண் எடுப்பதால் இந்த பகுதியின் நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது  மேலும், இவ்வாறு தொடர்ந்து மண் எடுப்பதால் மண்வளமும் பாதிக்கப்பட்டு இங்கு உள்ள ஏரிகள் துர்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இங்கிருந்து செம்மண் எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறினர்  தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்த கோவில்வளாகத்தில் சமூகவிரோத செயல் நடைபெறுவதாக கூறிஅதனை தடுப்பதற்காகதடுப்புவேலிஅமைத்திருந்தனர்.
    • .இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம்நடுக்கா ட்டுபாளையத்தில் மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவில்வளாகத்தில் சமூகவிரோத செயல் நடைபெறுவதாக கூறிஅதனை தடுப்பதற்காகதடுப்புவேலிஅமைத்திருந்தனர். இதனால் அதே ஊராட்சியைசேர்ந்த மேல்காட்டுபாளையத்திற்கு எளிதில் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் பேசினர். இதில்உடன்பாடு ஏற்பட்டு மேல் காட்டுபாளையத்திற்கு

    செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது . இந்த வழி மட்டும் போதாது கோவிலை சுற்றி அமைக்கப்பட்டு ள்ள தடுப்பு வேலிகளை முழுமை யாக அகற்ற வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரி வந்தனர்  இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனை தொடர்ந்து இன்று காலை நடுக்காட்டு பாளையத்தை சேர்ந்த கிராம மக்கள் பெண்கள், இளைஞர்கள், பண்ருட்டி வருவாய் தாசில்தார் அலுவலகம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தாலுகா அலுவலகத்திற்கு விரைந்து சென்றனர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பின்னர் பொதுமக்கள் பண்ருட்டிதலைமை இடத்து துணை தாசில்தார் கிருஷ்ணாவிடம் மனு கொடுத்தனர். தாசில்தார் அவசர வேலையாக வெளியில்சென்றுள்ளார். அவர்வந்தவுடன் 5 பேர் மட்டும் வாருங்கள் பேசிக்கொள்ளலாம் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து நடுக்காட்டு பாளையம் கிராம மக்கள் கலைந்து சென்றனர் .இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது

    • அண்ணாதுரை (வயது 44). அ.தி.மு.க. பிரமுகர். அய்யனார் என்ற வாலிபர் கடையின் வேலியை பிரித்து போட்டு, அண்ணா துரையை அசிங்கமாக திட்டியுள்ளார்
    • மன உளைச்சல் அடைந்த அண்ணாதுரை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எஸ். ஏரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 44). அ.தி.மு.க. பிரமுகர். இவர் அதேபகுதியில் நெடுஞ்சாலை ஓரத்தில் டீக்கடை நடத்தி வந்தார். இவரது டீக்கடையை காலி செய்யகோரி அதே பகுதியை சேர்ந்த அய்யனார் என்ற வாலிபர் இவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். இந்நிலையில் அய்யனார் கடையின் வேலியை பிரித்து போட்டு, அண்ணா துரையை அசிங்கமாக திட்டியுள்ளார்.இதனால் மன உளைச்சல் அடைந்த அண்ணாதுரை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இதையடுத்து இவரது உறவினர்கள் அண்ணாதுரையின் உடலை பண்ருட்டி சித்தூர் சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

    அங்கு விரைந்து சென்ற புதுப்பேட்டை சாலை மறியலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து அவரது மனைவி, போலீசாரிடம் இன்று கொடுத்த புகாரின் பேரில் அய்யனாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பரமேஸ்வரி (வயது 20). திருமணமான 7 மாதத்தில் இறந்து விட்டார்.இவர் திடீரென்று காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காவில்லை
    • இவரின் தாய் போலீசில் புகார் கொடுத்தார்,

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த அன்னகாரன்குப்பத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மகள் பரமேஸ்வரி (வயது 20). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சேந்தநாட்டைச் சேர்ந்த கணேசனுக்கும் இவருக்கும் திருமணம் நடைபெற்றது. பரமேஸ்வரிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது பரமேஸ்வரியின் கணவர் திருமணமான 7 மாதத்தில் இறந்து விட்டார். இதனால் பரமேஸ்வரி தாய் வீட்டில் தங்கியிருந்தார்.

    கடந்த 27ம் தேதி 6 மணிக்கு வீட்டில் இருந்தர் காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால்ப ரமேஸ்வரியின் தாய் விஜயலட்சுமி முத்தாண்டிகுப்பம் போலீசில் புகார் கொடுத்தார். இதில் விசூர், மேற்கு தெரு முத்துவேல் (25) ஆசை வார்த்தை கூறி தனது மகளை கடத்தியதாக கூறியுள்ளார். இது பற்றி முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து பரமேஸ்வரியை தேடி வருகின்றனர்.

    • செல்வகுமார் (வயது 42). மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் . போது 2 பேர் செல்வகுமாரை வழிமறித்து தாக்கினர். மேலும், மோட்டார் சைக்கிளை பறித்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 42). இவர் சிதம்பரத்தில் உள்ள டிபன் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல வேலை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

    அப்போது ஓமக்குளம் சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்தபோது சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்த முகேஷ் கண்ணன் (23), வைப்புசாவடி சபாநாயகர் தெருவை சேர்ந்த ஆகாஷ் (18) ஆகிய 2 பேரும் செல்வகுமாரை வழிமறித்து தாக்கினர். மேலும், மோட்டார் சைக்கிளை பறித்து கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.

    • லோகநாதன் கார் டிரைவர் மேம்பாலம் அருகே சென்ற போது சென்டர் மீடியன் அருகி 2 மாடுகள் சாலையை கடந்தன டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மாடுகள் மீது மோதியது.
    • விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு மாடு இறந்துவிட்டது.

    கள்ளக்குறிச்சி:

    திருவண்ணாமலை சேர்ந்த லோகநாதன் கார் டிரைவர். இவர் ஈரோட்டில் இருந்து செங்கல்பட்டுக்கு காரில் சென்றார். மாம்பாக்கம் ெரயில்வே மேம்பாலம் அருகே சென்ற போது சென்டர் மீடியன் அருகி 2 மாடுகள் சாலையை கடந்தன. அப்போது டிரைவரில் கட்டுப்பாட்டை இழந்த கார், மாடுகள் மீது மோதியது. இதில் கார் பள்ளத்தில் கவிழ்ந்தது.

    மேலும், விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு மாடு இறந்துவிட்டது. இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

    • காட்டுச் செல்லூரை கடந்த போது பின்னால் வந்த லாரி மோதி மோட்டார் சைக்கிளுடன் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
    • மரிய பிரகாசம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டை அருகே உள்ள இறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மரிய பிரகாசம். இவரும் காட்டுசெல்லூர் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் எலவனாசூர்கோட்டையில் இருந்து திருக்கோவிலூர் சென்று கொண்டிருந்தனர். அப்போது காட்டுச் செல்லூரை கடந்த போது பின்னால் வந்த லாரி மோதி மோட்டார் சைக்கிளுடன் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மரிய பிரகாசம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    படுகாயம் அடைந்து சாலை ஓரத்தில் இருந்த சரத்குமாரை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மரிய பிரகாசம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×