என் மலர்
கடலூர்
- அகிலா (வயது 46). இவர் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவர் தனது வீட்டில் வளர்த்து வரும் நாயை ஏவி குறைக்க வைத்து வந்ததாக கூறப்படுகிறது.
- 2 பேருக்கும் பிரச்சனை ஏற்பட்டது
கடலூர்:
கடலூர் அடுத்த கோண்டூர் அகிலா (வயது 46). இவர் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவர் தனது வீட்டில் வளர்த்து வரும் நாயை ஏவி குறைக்க வைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 பேருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இது குறித்து அகிலா கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மகேஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- பாரதி (வயது 37). இவரது மனைவி இந்துமதி. இந்துமதியிடம் குடிப்பதற்கு பாரதி அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார். குடிக்க் பணம் தர மறுத்தார்,
- பாரதி பேனா கத்தியால் மனைவி இந்துமதியை கிழித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அடுத்த சித்திரப்பேட்டையை சேர்ந்தவர் பாரதி (வயது 37). இவரது மனைவி இந்துமதி. இந்துமதியிடம் குடிப்பதற்கு பாரதி அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார். அப்போது இந்துமதி கணவர் பாரதிக்கு மது குடிக்க பணம் தர மறுத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த பாரதி பேனா கத்தியால் மனைவி இந்துமதியை கிழித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த இந்துமதி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பரங்கிப்பேட்டை சேர்ந்த 19 வயது இளம்பெண் டிப்ளமோ நர்சிங் முடித்து வீட்டில் இருந்து வந்தார். திடீரென காணவில்லை.
- சிதம்பரத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு விடுதியில் படித்து வந்தார் மாணவி விடுதிக்கு வரவில்லை.
கடலூர்:
பரங்கிப்பேட்டை சேர்ந்த 19 வயது இளம்பெண் டிப்ளமோ நர்சிங் முடித்து வீட்டில் இருந்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தார். சம்பவத்தன்று இளம்பெண் திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் இளம்பெண்ணை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் இளம் பெண்ணுக்கும் தஞ்சாவூர் சேர்ந்த நபர் ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. அவரைக் காண சென்று விட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணாங்குப்பத்தில் தனியார் பெண்கள் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சிதம்பரத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு விடுதியில் படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி விடுதிக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி நிர்வாகம் மாணவியை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலூர் அருகே பச்சிளம் பெண் குழந்தை திடீரென இறந்தது.
- சம்பவத்தன்று வீட்டில் அக்குழந்தை மூச்சு இல்லாமல் இருந்து வந்தது
கடலூர்:
கடலூர் அருகே பச்சிளம் பெண் குழந்தை திடீரென இறந்தது. கடலூர் அடுத்த ரெட்டி ச்சாவடி செல்லஞ்சேரியை சேர்ந்தவர் சுமன் (வயது 30). இவரது மனைவி மலர். இவர்களுக்கு கடந்த 14 நாட்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. சம்பவத்தன்று வீட்டில் அக்குழந்தை மூச்சு இல்லாமல் இருந்து வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக பெண் குழந்தையை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய த்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த 14 நாளான பெண் குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பா.ம.க. ஒன்றிய செயலாளர் மணிவாசகம் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
- வாட்ஸ் அப்பில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜெகன் ஆகியோர் மீது அவதூறாக பேசி வருகிறார்.
கடலூர்:
பா.ம.க. ஒன்றிய செயலாளர் மணிவாசகம் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த புகாரில், குறிஞ்சிப்பாடி சின்ன காட்டுசாகை சேர்ந்தவர் சங்கர். வாட்ஸ் அப்பில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜெகன் ஆகியோர் மீது அவதூறாக தொடர்ந்து பேசி வருகிறார். இதனால் பொது அமைதி பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். அதன்படி குள்ளஞ்சாவடி போலீசார் சங்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேளாண்மை கணக்கெடுப்பு பணியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மாநிலத்தில் 2- வது இடம் பெற்றுள்ளது என மாவட்டகலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
- அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மாநிலத்திலேயே 2-வது இடம் பெற்றுள்ளது
கள்ளக்குறிச்சி:
வேளாண்மை கணக்கெடுப்பு பணியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மாநிலத்தில் 2- வது இடம் பெற்றுள்ளது என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
இந்தியா முழுவதும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் வழிகாட்டுதல்படி, வேளாண்மை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவ ட்டத்தில் வேளாண்மை கணக்கெடுப்பு பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை நடைபெற்றது. இப்பணியில் சேகரிக்கப்படும் விவரங்களி ன்அடிப்படையில் புதிய வேளாண்மை வளர்ச்சி திட்டங்கள் உருவாக்கப்படும். முதல் முறையாக இணையமுகப்பு மற்றும் கைபேசி செயலி மூலம் மாவட்டத்தில் உள்ள 596 வருவாய் கிராமங்களுக்கான நில பதிவேடுகளில் உள்ள விவரங்களிலிருந்து நில உபயோகம், பாசன ஆதாரம், பரப்பு விவரம் தொடர்பான விவரங்கள் இணையவழி வாயிலாக சேகரிக்கப்பட்டுமுதல் கட்ட பணிகள் முடிவடைந்தது. இப்பணியில் அனைத்து அலுவலர்களும் சிறப்பாக மேற்கொண்டு செயல்பட்டதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மாநிலத்திலேயே 2-வது இடம் பெற்றுள்ளது. மேலும் 2-ம் கட்ட பணியாக ஒவ்வொரு தாலுக்காவிலும் பயிர்முறை மற்றும் நீர்ப்பாசன ஆதாரங்கள் போன்ற விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.அதனை தொடர்ந்து 3-ம் கட்ட பணியாக ஒவ்வொரு தாலுக்காவிலும்உபயோகப்படுத்தப்பட்ட உள்ளீடுகள், விளைச்சல், உபயோகிக்கப்பட்ட வேளா ண்உபகரணங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யும் பணிமேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அய்யனார். இவர், ஒரு மாற்றுத்திறனாளி, கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பண்ருட்டி டி.எஸ்.பிர் ஆகியோரை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்துஇருந்தார்
- அதில் அதே ஊரை சேர்ந்த கிராம நிர்வாகஅதிகாரியின் உதவியாளர் ஒருவர் தன்னை தாக்கி தனது குடும்பத்தைபற்றி அவதூறு பேசி வருவதாகபுகார்தெரிவித்திருந்தார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டை அடுத்த பெரிய கள்ளிப்பட்டை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி அய்யனார். இவர், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பண்ருட்டி டி.எஸ்.பிர் ஆகியோரை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்துஇருந்தார். அதில் அதே ஊரை சேர்ந்த கிராம நிர்வாகஅதிகாரியின் உதவியாளர் ஒருவர் தன்னை தாக்கி தனது குடும்பத்தைபற்றி அவதூறு பேசி வருவதாகபுகார்தெரிவித்து இருந்தார். இதுசம்பந்தமாக பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லாசம்பவ இடத்தை நேரில் சென்று விசாரணை செய்து வழக்கு பதிவு செய்ய புதுப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு உத்தரவிட்டார் .
இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்.
- திட்டக்குடி அருகே ராமநத்தம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 54)நேற்று அவரது மோட்டார் சைக்கிளை நிறுத்திய இடத்தில் சென்று பார்த்தபோது காணவில்லை.
- மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் 2 பேர் திருடி செல்லும் காட்சிசி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ராமநத்தம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 54). இவர் நேற்று முன்தினம் அவரது மோட்டார் சைக்கிளை ராமநத்தம் கடைவீதியில் உள்ள மளிகை கடை முன் நிறுத்திவிட்டு வெளியில் சென்றுள்ளார். பின் நேற்று அவரது மோட்டார் சைக்கிளை நிறுத்திய இடத்தில் சென்று பார்த்தபோது காணவில்லை. இதுகுறித்து அந்தோணிசாமி ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது ராமநத்தத்தில் மளிகை கடை முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் 2 பேர் திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதனையடுத்து ராமநத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். நேற்று போலீசார் ராமநத்தம் மேம்பாலம் அடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்
. அப்போது சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் ராமநத்தத்தை அடுத்துள்ள ம.புடையூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் (20), பெரம்பலூர் மாவட்டம் ரெட்டிகுடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (19) எனவும். இவர்கள் இருவரும் ராமநத்தத்தில் மளிகை கடை முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடியவர்கள் என தெரிய வந்தது. இதனையடுத்து ராமநத்தம் போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, கைது செய்து 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஞாயிற்றுக்கிழமை பஞ்ச மூர்த்திகள் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
- 7-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசிமக பெருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜையும், இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலாவும் நடைபெற்று வந்தது.
6-ம் நாள் விழாவான நேற்று, விருத்தகிரீஸ்வரர் கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சி தரும் ஐதீக திருவிழா நடைபெற்றது. இதையொட்டி விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரிஸ்வரர், பாலாம்பிகை, சண்டிகேஸ்வரர் நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருள, விபசித்து முனிவர் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார்.
பின்னர் பஞ்சமூர்த்திகளுக்கும், விபசித்து முனிவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மகா தீபாராதனைகள் காட்ட திரை விலக்கப்பட்டு விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் நேர் எதிரே உற்சவ மண்டபத்தில் அமர்ந்திருந்த விபசித்து முனிவருக்கு காட்சி தந்தனர்.
அதைத்தொடர்ந்து பஞ்சமூர்த்திகளும் விபசித்து முனிவருக்கு காட்சி அளித்தபடி சன்னதி வீதி கோபுர வாசல் வழியாக வெளியே வந்தனர். அப்போது விபசித்து முனிவருக்கும், பஞ்சமூர்த்திகளுக்கும் பக்தர்கள் மலர் தூவி தரிசனம் செய்தனர். பின்னர் விபசித்து முனிவர் மற்றும் பஞ்சமூர்த்திகள் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.
இதில் திருக்கைலாய பரம்பரை தருமை ஆதீனம் 27-வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) பஞ்ச மூர்த்திகள் தேரோட்ட நிகழ்ச்சியும், 6-ந்தேதி மாசி மக தீர்த்தவாரி உற்சவமும், 7-ந் தேதி தெப்ப உற்சவமும், 8-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் கடலூர் போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. பணிமனை தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார்,
கடலூர்:
கடலூர் முதல் சென்னை வரை செல்லும் சொகுசு பஸ்களில் நடத்துனர் இல்லாமல் செல்வதை கண்டித்தும், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வலியுறுத்தியும் ,போக்குவரத்து துறையில் காலி பணியிடங்களை நிரப்பிட கோரியும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் கடலூர் போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. பணிமனை தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். இதில் சம்மேளன சிறப்பு தலைவர் பாஸ்கர், பணிமனை நிர்வாகி ராஜ், முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டன.
- கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் ஏ.பி. குப்பம் ஊராட்சி சுடுகாட்டில்ஆக்கிரமிப்புசெய்யப்பட்டு சுடுகாட்டுக்கு செல்ல வழி இல்லாமல் இருந்து வந்தது.
- .இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் விஜயலட்சுமி பிரகாஷ் பண்ருட்டி தாசில்தார் ஆனந்தியிடம் மனு கொடுத்தார்
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் ஏ.பி. குப்பம் ஊராட்சி சுடுகாட்டில்ஆக்கிரமிப்புசெய்யப்பட்டு சுடுகாட்டுக்கு செல்ல வழி இல்லாமல் இருந்து வந்தது.இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் விஜயலட்சுமி பிரகாஷ் பண்ருட்டி தாசில்தார் ஆனந்தியிடம் மனு கொடுத்தார். மனுவில் சுடுகாடு ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை விடுத்தார்.இதனை தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல், ஊராட்சி செயலாளர் பாலாஜி, நிலஅளவையர் சாந்தினி ஆகியோர் சுடுகாடு பகுதி முழுவதும் அளவீடு செய்தனர். அப்போது சுடுகாடு பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டது. உடனடியாக அங்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ், லட்சுமி ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டு கஸ்டம்ஸ் ரோட்டியில் தனியாருக்கு சொந்தமான விளை நிலத்தின் வேலி அருகில் இருந்து துர்நாற்றம் வீசியது.
- அங்கு சென்று பார்த்தபோது. அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்தார்
கடலூர்:
நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டு கஸ்டம்ஸ் ரோட்டியில் தனியாருக்கு சொந்தமான விளை நிலத்தின் வேலி அருகில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அவ்வழியே சென்றவர்கள் அங்கு சென்று பார்த்தபோது. அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்தார். இது குறித்து முள்ளிகிராம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு நெல்லிக்குப்பம் போலீசார் சென்றனர். அங்கு இறந்து கிடந்த 50 வயது மதிக்கத்தக்க நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்? எவ்வாறு இறந்தார்? போன்றவைகள் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






