என் மலர்
கடலூர்
- சுரேஷ்குமார் (வயது 52). வார்டு உறுப்பினர், தி.மு.க. கிளைச் செயலாளர், இவரது தம்பி ரமேஷ் (50). பா.ஜ.க. பிரமுகர்.இவர்களுக்குள் சொத்து தகராறு அடிக்கடி ஏற்படும். .
- இவர்களுக்கு நடந்த தகராறில் நிலை தடுமாறிய ரமேஷ் அங்கேயே மயங்கி விழுந்தார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் சென்னை சாலையில் வ.வு.சி. நகர் உள்ளது. இங்கு சுரேஷ்குமார் (வயது 52). வார்டு உறுப்பினர், தி.மு.க. கிளைச் செயலாளர். வெட்கிரைண்டர் சர்வீஸ் செய்யும் பணி செய்கிறார். இவரது தம்பி ரமேஷ் (50). பா.ஜ.க. பிரமுகர். இவர் கட்டில், பீரோ செய்து விற்பனை செய்கிறார். இவர்கள் 2 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களது தந்தை மறைவிற்கு பின்னர், இவர்களுக்குள் சொத்து தகராறு அடிக்கடி ஏற்படும் இந்நிலையில், இன்று காலை சுரேஷ்குமார் மனைவிக்கும், ரமேஷின் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் 2 பேரும் ஈடுபட்டனர். அப்போது 4 பேருக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ரமேஷை, சுரேஷ்குமார் பிடித்து தள்ளினார். இதில் வீட்டின் சுவற்றில் ரமேஷின் தலை மோதியது.
இதனால் நிலை தடுமாறிய ரமேஷ் அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரமேஷ் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ரமேஷின் மனைவி அனு பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும், தள்ளுமுள்ளு நடந்த போது ரமேஷின் மகள் செல்போனில் வீடியோ எடுத்திருந்தார். இதனையும் போலீசாரிடம் காண்பித்து ரமேஷின் மனைவி அனு புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு, சரண்யா தலைமையிலான போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
- பட்டாசு குடோன் அனுமதியின்றி செயல்பட்டதா? என்று அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்தனர்.
- பட்டாசு குடோன் வெடித்து பெண் பலியான சம்பவம் தொடர்பாக குடோன் உரிமையாளர் கோசலை, அவரது கணவர் சேகர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
புதுவை மாநிலம் அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி கோசலை (வயது 50). இவர் கடலூர் அருகே ரெட்டிச்சாவடி சிவனார்புரத்தில் பட்டாசு குடோன் வைத்து நடத்தி வருகிறார். இங்கு நாட்டு வெடி, வாணவெடி உள்ளிட்ட வெடிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடலூர், புதுவை மாநில கடற்கரையோரங்களில் மாசிமக திருவிழா இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இந்த மாசிமகத்தில் கடற்கரையில் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடக்கும். இரவு தெப்ப உற்சவமும் நடக்கும். அப்போது நாட்டு வெடி, வாணவெடிகள் வெடிப்பது வழக்கம்.
இந்த திருவிழாவுக்காக நாட்டு வெடிகளை ஆர்டரின் பேரில், அங்கு வேலை செய்து வந்த தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக தயார் செய்து வந்தனர். அதன்படி நேற்றும் பட்டாசு தயாரிக்கும் வேலையில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது மாலை 4.15 மணி அளவில் திடீரென குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. பட்டாசுகள் ஒவ்வொன்றாக வெடித்ததால் குடோன் தரைமட்டமானது. இருப்பினும் வெடிகள் ஆங்காங்கே வெடித்த வண்ணம் இருந்தது. குடோனும் பற்றி எரிந்தது.
வெடிகுண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டதால், அப்பகுதி மக்கள் குடோன் இருந்த பகுதிக்கு ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்ததோடு, அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் பலத்த தீக்காயங்களுடன் வெளியே ஓடி வந்தனர். சிலர் பட்டாசு வெடித்ததில் தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் கிடந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
பின்னர் இது பற்றி கடலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். அப்போது அரியாங்குப்பம் மணவெளி பூபாலன் மனைவி மல்லிகா (60) சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பலியானார்.
அரியாங்குப்பம் மதன் மனைவி மேகலா (34), காசான் திட்டு ராஜ்குமார் மனைவி மலர்கொடி (35), சிவனார்புரம் சங்கர் மகன் சக்திதாசன் (25), பட்டாசு குடோன் உரிமையாளர் கோசலை, புதுவை அரியாங்குப்பம் ஓடெவளியை சேர்ந்த அய்யனார் மனைவி சுமதி (39), சிவனார்புரம் இளங்கோவன் மனைவி பிருந்தாதேவி (35), பாக்கம் கூட்டு ரோடு ராஜேந்திரன் மனைவி அம்பிகா (18), காசான்திட்டு செல்வம் மகள் செவ்வந்தி (19), லட்சுமி (25) ஆகிய 9 பேர் படுகாயமடைந்தனர்.
இதற்கிடையில் இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர், ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து படுகாயமடைந்த பிருந்தாதேவி, செவ்வந்தி, லட்சுமி, அம்பிகா, சுமதி ஆகிய 5 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியிலும், மலர் கொடி, சக்திதாசன், மேகலா, கோசலை ஆகிய 4 பேரும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து கடலூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த பட்டாசு குடோன் அனுமதியின்றி செயல்பட்டதா? என்று அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது வருகிற 31-ந் தேதி வரை அனுமதி பெற்றிருப்பது தெரிய வந்தது.
பட்டாசு குடோன் வெடித்து பெண் பலியான சம்பவம் தொடர்பாக குடோன் உரிமையாளர் கோசலை, அவரது கணவர் சேகர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- தமிழ்நாடு போலீசாருக்கு சமீப காலமாக சி.சி.டி.வி.-க்கள் கை கொடுக்கின்றன.
- குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ஒரு கோவிலில், அங்கு பணி செய்த அர்ச்சகரே உண்டியல் பணத்தை திருடுவதை போலீசார் கண்டறிந்தனர்.
மந்தாரக்குப்பம்:
குற்றவாளிகளை பிடிக்க ஒவ்வொரு காலக்கட்டத்திலும். ஒவ்வொரு வழிமுறையை தமிழ்நாடு போலீஸ் துறையினர் பின்பற்றி வருகின்றனர். 1980-களில் குற்றவாளிகள் விட்டுச் செல்லும் பொருட்களை வைத்து துப்பு துலக்கினர். பின்னர் 1990-களில் மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். அதனைத் தொடர்ந்து 2000-ம் ஆண்டுகளில் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
மொபைல் போன்களின் பயன்பாடு 2010-களில் அதிகரித்தது. குற்றச் சம்பவங்கள் நடந்த நேரத்தில் அந்த இடத்தில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடித்தனர்.
ஆனால், சமீப காலங்களில் இந்த முறைகள் ஏதும் போலீசாருக்கு பயன்படவில்லை. இதனால் கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு போலீசாருக்கு சமீப காலமாக சி.சி.டி.வி.-க்கள் கை கொடுக்கின்றன. குறிப்பாக 2020-க்கு பின்னர் முக்கிய சாலைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோவில்கள், திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்கள், வீடுகளின் வாசல்கள் போன்ற இடங்களில் சி.சி.டி.வி. அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு நடந்த குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் எளிதில் அடையாளம் காண்கின்றனர்.
அதன்படி, குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ஒரு கோவிலில், அங்கு பணி செய்த அர்ச்சகரே உண்டியல் பணத்தை திருடுவதை போலீசார் கண்டறிந்தனர். மேலும், சில தினங்களுக்கு முன்னர் ஸ்டூடியோ உரிமையாளர் குறிஞ்சிப்பாடியில் மர்மக் கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி. மூலமாகவே, கூலிப்படையை குறிஞ்சிப்பாடி போலீசார் கைது செய்தனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக குறிஞ்சிப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா, சி.சி.டி.வி.-க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும், அவர் கூறுகையில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே நான் இவ்வாறு செய்கிறேன். அனைவரும் அவரவர் வீடுகளின் வாசல்களில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த வேண்டும். இதன் மூலம் குற்றச் சம்பவங்களை தடுக்க முடியும். குற்றவாளிகளையும் எளிதில் கண்டறிய முடியும் என்றார்.
குறிஞ்சிப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சி.சி.டி.வி.-க்கு மாலை அணிவித்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடனும், ஆர்வமுடனும் பார்த்து சென்றனர்.
- 50 ஆண்டுகளுக்கு மேலாக பயணியர் நிழற்குடை இருந்து வந்தது.
- பொதுமக்கள் திரண்டு இந்த இடத்தில் இரும்பு கம்பி அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடலூர்:
நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையம் அருகே கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பயணியர் நிழற்குடை இருந்து வந்ததை சாலை விரிவாக்க பணியின் போது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அகற்றி குப்பையில் வீசினர். இதனைப் பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து, அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதால் கொட்டகை அமைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்தனர். இந்த நிலையில் சாலை விரிவாக்க பணி முடிந்து தற்போது இருபுறமும் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைத்து, நேற்று இரவு அதன் மேல் சிமெண்ட் கட்டை அமைப்பதற்கு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்ட செயலாளர் முல்லைவேந்தன் தலைமையில் சமூக ஆர்வலர் குமரவேல் மற்றும் பொதுமக்கள் திரண்டு இந்த இடத்தில் இரும்பு கம்பி அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது இரும்பு கம்பி வைத்ததோடு இல்லாமல் நிரந்தரமாக அகற்றாமல் இருக்க சிமெண்ட் கட்டைகள் அமைக்க யார் அனுமதி அளித்தார்கள்? என கேட்டனர். பின்னர் இன்று காலை இரும்பு கம்பியை முழுமையாக அகற்ற வேண்டும் என கூறினார்.
அப்போது ம.தி.மு.க.முன்னாள் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் சம்பவ இடத்திற்கு வந்து, பயணியர் நிழற்குடை அமைக்கும் இடத்தில் எப்படி இரும்பு கம்பி அமைத்தார்கள் என கேட்டு காண்டிரக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு இருந்தவர்கள் அனைவரும் இங்கு உள்ள இரும்பு கம்பியை உடனடியாக அகற்ற வேண்டும் என கூறி பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இரவோடு இரவாக அமைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பியை அகற்றினார்கள். மேலும் பொதுமக்கள் அனுமதி இல்லாமல் இந்த இடத்தில் மீண்டும் இரும்பு கம்பி வைத்தால் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கையும் விடுத்தனர். இது மட்டும் இன்றி புதிதாக பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம். இது சம்பந்தமாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் எங்களிடம் பேசி நாங்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் நெல்லிக்குப்பம் பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- முத்து மாரியம்மன் கோவில் நிர்வாகம் செய்வதிலும், ஊராட்சி மன்ற தேர்தலிலும் முன்விரோத தகராறு இருந்து வந்தது.
- கும்பல் மதியழகனை கத்தியால் குத்தியும், இரும்பு கம்பியால் அடித்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அடுத்த தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் (வயது 40). தி.மு.க. பிரமுகர். அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி. இவரது கணவர் ராமச்சந்திரன் அ.தி.மு.க.பிரமுகர். இவர்களுக்குள் அதே பகுதியில் உள்ள இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் நிர்வாகம் செய்வதிலும், ஊராட்சி மன்ற தேர்தலிலும் முன்விரோத தகராறு இருந்து வந்தது.இதன் காரணமாக இருத்தரப்பினருக்கும் அடிக்கடி வாய் தகராறு மற்றும் பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது . இது தொடர்பாக தூக்கணாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வழக்கு மற்றும் ஆர்.டி.ஓ தலைமையில் சமாதான பேச்சுவார்த்தைக்கு போலீசார் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு தி.மு.க. பிரமுகர் மதியழகன் தனது வீட்டில் இருந்து வந்தார்.
அப்போது ஒரு கும்பல் வீட்டின் கதவை தட்டியதால் மதியழகன் கதவை திறந்தார். இதில் ஒரு நபர் திடீரென்று முகத்தில் துணி கொண்டு மூடினார். பின்னர் அந்த கும்பல் மதியழகனை கத்தியால் குத்தியும், இரும்பு கம்பியால் அடித்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மதியழகன் கதறி துடித்தார். இதனை தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து மதியழகனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் திரண்டனர். போலீசார் பள்ளிப்பட்டு பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து மதியழகன் கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கணவர் புதுச்சேரியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 67), விஷ்ணு மூர்த்தி (வயது 57), பள்ளிப்பட்டை சேர்ந்த சீத்தா (வயது 58), பார்த்திபன் (வயது 42), அன்பழகன் (வயது 43), தினகரன் (வயது 48) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அனைவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் புதுச்சேரி ரவுடிகள் ஈடுபட்டு உள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காட்டுபன்றிகள்அழித்து சேதப்படுத்துவதால், அதனை தடுக்கமின்வேலி அமைத்திருந்தார்.
- மின்வேலியில் சிக்கி பரிதாபமாகஉயிரிழந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல் அருங்குணம்கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்புராயன். இவர்இவரதுநிலத்தில் மணிலா பயிரிட்டுள்ளார். மணிலா பயிர்களை காட்டுபன்றிகள்அழித்து சேதப்படுத்துவதால், அதனை தடுக்கமின்வேலி அமைத்திருந்தார். இந்த நிலத்தில்மணிலா அறுவடை பணிக்காக மணம்தவழ்ந்த புத்தூர்காலனியை சேர்ந்த சேட்டுமனைவி தனலட்சுமி (வயது 65) வந்தார்.அவர் அங்கிருந்த மின்வேலியில் சிக்கி பரிதாபமாகஉயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ்சூப்பிரண்டுசபியுல்லா,புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி விவசாயி சுப்புராயனை கைது செய்துகோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
- கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனங்குப்பம் மீனவர்களுக்கு முன் விரோத தகராறு இருந்து வந்தது.
- பஞ்சநாதனை பயங்கர ஆயுதங்களை கொண்டு குத்தியதில் பஞ்சநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்3 மீனவர்கள் காயமடைந்தனர்.
கடலூர்:
கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனங்குப்பம் மீனவர்களுக்கு முன் விரோத தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2018 -ம் ஆண்டு மே மாதம் 15 -ந் தேதி இவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டு கடலில் தாக்கிக் கொண்டனர். இதனை தொடர்ந்து கடலூர் தேவனாம்பட்டினத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சோனங்குப்பம் மீனவ கிராமத்திற்கு கடல் வழியாக சென்றனர். அப்போது சோனங்குப்பத்தை சேர்ந்த அ.தி.மு.க.பிரமுகர் பஞ்சநாதன் தேவனாம்பட்டினம் மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட சென்றார். இதில் ஆக்ரோஷமாக வந்த தேவனாம்பட்டினம் சேர்ந்த மீனவர்கள் பட்டப் பகலில் பஞ்சநாதனை பயங்கர ஆயுதங்களை கொண்டு குத்தியதில் பஞ்சநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்3 மீனவர்கள் காயமடைந்தனர். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்
. மேலும் இந்த வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட தினகரன் வழக்கு விசாரணையில் இருந்தபோது இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 16- ந்தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது மார்ச் 4 -ந் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர் நீதிமன்ற வளாகம், தேவனாம்பட்டினம், சோனாங் குப்பம் மற்றும் கடற்கரை பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர் இதனை தொடர்ந்து இன்று காலை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுபா அன்புமணி வருகிற 8 -ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும் எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் ஆங்காங்கே ரோந்து பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இது மட்டும் இன்றி அந்த பகுதிகளில் காரணமின்றி பொதுமக்கள் கூடாத வகையில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை முதல் கடலூர் மாவட்டம் முழுவதும் இந்த வழக்கு தொடர்பாக பெரும் பரபரப்பாக காணப்பட்டு வந்த நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்ட காரணத்தினால் பரபரப்பு அடங்கி அமைதி யான நிலை தொடர்ந்தது.
- எஸ். புதுக்குப்பம் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவரது மனைவி செல்வராணி (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது.
- சம்பவத்தன்று செல்வராணி வீட்டில் இருந்தவரை திடீரென்று காணவில்லை.
கடலூர்:
நடுவீரப்பட்டு அடுத்த எஸ். புதுக்குப்பம் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவரது மனைவி செல்வராணி (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. சம்பவத்தன்று செல்வராணி வீட்டில் இருந்தவரை திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் மணிகண்டன் செல்வராணியை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பண்ருட்டி அடுத்த மேல் அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராயன். இவரது நிலத்தில் மணிலா பயிரிட்டுள்ளார். இந்த நிலத்தில் மணிலா அறுவடை பணிக்காகதனலட்சுமி (வயது 65) இன்று காலை சென்றார்.
- காட்டுப் பன்றிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல் அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராயன். இவரது நிலத்தில் மணிலா பயிரிட்டுள்ளார். மணிலா பயிரை காட்டு பன்றிகள்அழித்து சேதப்படுத்துவதால், அதனை தடுக்க மின்வேலி அமைத்திருந்தார் இந்த நிலத்தில் மணிலா அறுவடை பணிக்காக பக்கத்து கிராமமான மணம் தவழ்ந்தபுத்தூர் காலணி சேர்ந்த சேட்டு என்பவரது மனைவி தனலட்சுமி (வயது 65) இன்று காலை சென்றார்
அப்போது காட்டுப் பன்றிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மின்சாரம் தாக்கி உயிர் இழந்த தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அரசிடம் அனுமதி பெறாமல் மின்வேலி அமைத்த விவசாயி சுப்புராயனை போலீசார் தேடி வருகின்றனர்.
- ஆண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் 10 ஏக்கருக்கு மேல் கரும்பு நடவு செய்திருந்தார்.
- தீ வைக்கப்பட்ட 10 ஏக்கர் கரும்பு வயல் முற்றிலும் எரிந்து சேதமானது
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஆண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் 10 ஏக்கருக்கு மேல் கரும்பு நடவு செய்திருந்தார். இவரைப் போலவே அருகில் உள்ள விவசாயிகள் பலரும் கரும்பு பயிரிட்டு தற்போது அறுவடை செய்து வருகின்றனர். இந்நிலையில் கருப்பையாவின் கரும்புஇன்னும் சில தினங்களில் அறுவடை செய்யவுள்ள நிலையில் அவரது கரும்பு வயலை அப்பகுதியை சேர்ந்தசிலர் முன்விரோதம் காரணமாக தீ வைத்ததாக கருப்பையா தெரிவித்து வருகிறார். தீ வைக்கப்பட்ட 10 ஏக்கர் கரும்பு வயல் முற்றிலும் எரிந்து சேதமானது.
மேலும் விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வைத்திருந்த நீர்மூழ்கி மோட்டார் மற்றும் போர்வெல்லும் சேர்ந்து தீயில் சேதம் ஆனது. இதனால் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது. கரும்பு வயல் தீ விபத்தில் எரிந்து சேதமான நிலையில் இதுகுறித்து கரும்பு வயலைஅதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து சென்றுள்ளனர்.மேலும் இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதால் புகாரின் அடிப்படையில் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளார். கரும்பு வெட்டி சர்க்கரை ஆலைக்கு அனுப்பும்போது தீயில் எரிந்த கரும்புவிற்கு அதிகாரிகள் சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனுமதி அளித்து கரும்புவைஎடுத்துக் கொண்டு முழு விலை தர வேண்டும் எனவும் கருப்பையா தெரிவித்துள்ளார்.
- விருத்தாசலம் அடுத்த ஊத்தங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவேல். விவசாயி. இவர் கடந்த 15 சென்ட் இடத்தை கிரயம் பெற்றார். இவர் தனது இடத்திற்கு பட்டா வேண்டி விருத்தாச்சலம் தாசில்தார் அலுவலகத்தில் முறையிட்டுள்ளார்.
- ஊழியர்கள் மனு மீது நடவடிக்கை எடுக்காமல் ,அவரை அலை கழித்ததாக கூறப்படுகிறது
கடலூர்:
விருத்தாசலம் அடுத்த ஊத்தங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவேல். விவசாயி. இவர் கடந்த 1968-ல் 15 சென்ட் இடத்தை கிரயம் பெற்றார். அந்த இடத்திற்கு பட்டா வேண்டி விருத்தாச்சலம் தாசில்தார் அலுவலகத்தில் முறையிட்டுள்ளார். விருத்தாசலம் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மனு மீது நடவடிக்கை எடுக்காமல் அவரை அலை கழித்ததாக கூறப்படுகிறது. தனது மனு மீது நடவடிக்கை எடுக்க துணை தாசில்தாரிடம் கோரியுள்ளளார். இதற்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும், அதில் ரூ3 ஆயிரம் பணத்தை ராஜவேல் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் தான் அளித்த மனு குறித்து ராஜவேல் கேட்டபோது, மேலும் ரூ.3 ஆயிரம் தொகையை கொடுத்தால்தான் பணி நிறைவடையும் என துணை தாசில்தார் கூறியுள்ளார்
இ்ந்நிலையில் விருத்தாசலம் சார் ஆட்சியரிடம் ராஜவேல் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் எனது இடத்தை அளவீடு செய் ல அளவை மேற்கொள்ள அங்கு சென்ற சர்வேயரிடம், சர்வே எடுக்க வேண்டாம் என துணை தாசில்தார் தடுத்து விட்டதாகவும், நத்தம் பட்டா கோரிய மனுவை நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்துள்ளதாகவும் சப் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த மனுவில் மண்டல துணை வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தனக்கு நத்தம் பட்டா வழங்க கோரியும் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென அமர்ந்து ராஜவேல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த சப் கலெக்டரி்ன் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் ராஜவேலிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் தர்ணா போராட்டத்தை கைவிட்ட ராஜவேல் அங்கிருந்து சென்றார். இதனால் சார் ஆட்சியர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- காட்டுப் பன்றிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
- அரசிடம் அனுமதி பெறாமல் மின்வேலி அமைத்த விவசாயி சுப்புராயனை போலீசார் தேடி வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல் அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராயன். இவரது நிலத்தில் மணிலா பயிரிட்டுள்ளார். மணிலா பயிரை காட்டு பன்றிகள்அழித்து சேதப்படுத்துவதால், அதனை தடுக்க மின்வேலி அமைத்திருந்தார்.
இந்த நிலத்தில் மணிலா அறுவடை பணிக்காக பக்கத்து கிராமமான மணம் தவழ்ந்தபுத்தூர் காலணி சேர்ந்த சேட்டு என்பவரது மனைவி தனலட்சுமி (வயது 65) இன்று காலை சென்றார்.
அப்போது காட்டுப் பன்றிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மின்சாரம் தாக்கி உயிர் இழந்த தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அரசிடம் அனுமதி பெறாமல் மின்வேலி அமைத்த விவசாயி சுப்புராயனை போலீசார் தேடி வருகின்றனர்.






