search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெய்வேலி போலீஸ் நிலையத்தில் கைதி மரணம்:  போலீசாரை கைது செய்ய வலியுறுத்தி  மார்க்சிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்:ஊர்வலத்தை தடுத்ததால் பரபரப்பு
    X

    ஊர்வலமாக வந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெய்வேலி போலீஸ் நிலையத்தில் கைதி மரணம்: போலீசாரை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்:ஊர்வலத்தை தடுத்ததால் பரபரப்பு

    • பட்டாம்பாக்கத்தை சேர்ந்த சுப்ரமணி என்பவர் சிறையில் மரணமடைந்தார் அவர்களை பணி இடைநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும், வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும்
    • பேரணியாக சென்றவர்கள் செல்லாத வகையில் அதிரடியாக தடுத்து நிறுத்தினர்.

    கடலூர்:

    நெய்வேலி போலீஸ் நிலையத்தில் கடந்த 2015-ம் ஆண்டு பட்டாம்பாக்கத்தை சேர்ந்த சுப்ரமணி என்பவர் சிறையில் மரணமடைந்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல், போலீசார் சவுமியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களை பணி இடைநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும், வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று காலை போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்ட்டிருந்தது. அதன்படி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் மாநகர செயலாளர் அமர்நாத், நிர்வாகிகள் பஞ்சாட்சரம், சிவானந்தம், பாலமுருகன், ஜெய பாண்டியன் ஆகியோர் முன்னிலையில், மத்திய குழு உறுப்பினர் வாசுகி, மாநில குழு உறுப்பினர்கள் ரமேஷ்பாபு, செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், சிறுபான்மை குழு மாநில துணைத்தலைவர் மூசா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் திரண்டனர் .இவர்கள் கடலூர் டவுன் ஹாலில் இருந்து பேரணியாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பழைய கலெக்டர் அலுவலகம் சாலை வழியாக கோஷங்கள் எழுப்பிக்கொண்டு சென்றனர். அப்போது கடலூர் அண்ணா விளையாட்டு மைதானம் அருகே ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும், சாலையின் குறுக்கே இரும்பு தடுப்பு கட்டை அமைக்கப்பட்டு பேரணியாக சென்றவர்கள் செல்லாத வகையில் அதிரடியாக தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து பேரணியாக வந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். மேலும் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக கடலூர் கலெக்டர் அலுவலகம் சாலை வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×