என் மலர்tooltip icon

    கடலூர்

    • ராஜி (வயது 45), விவசாயி. இவர் நேற்று புதிதாக மோட்டார சைக்கிள் வாங்க மனைவியிடம் பணம் கேட்டார். அவர் மனைவி பணமில்லை என வாங்கிதர மறுத்திருக்கிறார்,
    • அப்போது ராஜி தன் நிலத்திற்கு சென்று அங்கிருந்த பூச்சிமருந்தை குடித்தார்,

    கடலூர்:

    பண்ருட்டி திருவதிகை திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜி (வயது 45), விவசாயி. இவர் நேற்று புதிதாக மோட்டார சைக்கிள் வாங்க மனைவியிடம் பணம் கேட்டார். அதற்கு தற்பொ ழுது பணம் இல்லை பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று அவரது மனைவி கூறியுள்ளார்.

    அப்போது ராஜி தன் நிலத்திற்கு சென்று அங்கிருந்த பூச்சிமருந்தை குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு செல்லப் பட்டார். அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் நள்ளிரவு ராஜி உயிரிழந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டி அடுத்த பெரிய காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பாலாஜி . இவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மேல்மாம்பட்டு அருள்செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து பாலாஜியை தாக்கியுள்ளனர்.
    • இதனால் காயம் அடைந்த பாலாஜி பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பெரிய காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இவர் கடந்த 6-ந்தேதி பண்ருட்டியில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மேல்மாம்பட்டு அருள்செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து பாலாஜியை தாக்கியுள்ளனர். இதனால் காயம் அடைந்த பாலாஜி பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடலுார் மாவட்டத்தில் வருகிற 11-ந்தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கீழ்க்கண்ட வட்டங்களில் பொதுவிநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
    • பொது விநியோகத்திட்டத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களையும் அளிக்கலாம்

    கடலூர்:

    கடலுார் மாவட்டத்தில் வருகிற 11-ந்தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கீழ்க்கண்ட வட்டங்களில் பொதுவிநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, விருத்தாச்சலம், திட்டக்குடி, வேப்பூர், திருமுட்டம் ஆகிய வட்டா ட்சியர் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்களின் மீது உடனடியாக தீர்வு காணப்படும். இம் முகாமில்கைரேகை யினை பதிவு செய்ய இயலாத 65 வயதிற்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் 60 சதவீதம் ஊனத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நியாயவிலைக்கடைகளுக்கு சென்று பொது விநியோத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியா வசியப் பொருட்களை பெறுவதற்குரிய அங்கீகாரச் சான்று கோரி மனுக்களை அளிக்கலாம்.

    கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம். 3-ம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டு இருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்கு மனுக்கள் அளிக்கலாம். பொது விநியோகத்திட்டத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களையும் அளிக்கலாம். தனியார் சந்தைகளில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை குறித்து நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை முகாமில் அளிக்கலாம்.

    • பா.ம.க. ஒன்றிய செயலாளர் கணேஷ் காரில் சென்று கொண்டிருந்த போது, நெய்வேலி 13-வது வட்டத்தில் உள்ள வீட்டின் சுற்றுச்சுவரில் மோதியது.நெய்வேலி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
    • நுாற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு நெய்வேலி டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நெய்வேலி டி

    கடலூர்:

    பா.ம.க. ஒன்றிய செயலாளர் கணேஷ் காரில் சென்று கொண்டிருந்த போது, நெய்வேலி 13-வது வட்டத்தில் உள்ள வீட்டின் சுற்றுச்சுவரில் மோதியது. இது தொடர்பாக வீட்டு உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் ஒன்றிய செயலாளர் கணேஷ், நெய்வேலி நகர செயலாளர் சார்லஸ் ஆகியோர் மீது நெய்வேலி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  இதனால் ஆத்திரமடைந்த பா.ம.க.வினர் நேற்றிரவு மாநில அமைப்புச் தலைவர் பழ.தாமரைக்கண்ணன், மாநில அமைப்புச் செயலாளர் சண்முகம், மாவட்ட செயலாளர்கள் வடக்குத்து ஜெகன், கடலுார் சண்.முத்துகிருஷ்ணன், விருத்தாசலம் கார்த்திகேயன், மாணவரணி வழக்கறிஞர் கோபிநாத், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு நெய்வேலி டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நெய்வேலி டி.எஸ்.பி. ராஜேந்திரன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இருதரப்பிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ள விவரத்தை பா.ம.க.வினரிடம் தெரிவித்தார்.

    இருப்பினும் போலீசார், தொடர்ந்து பா.ம.க.வினர் மீது வெறுப்புடன் நடந்து கொள்வதாக கூறி, கடந்த 20 தினங்களாக மாவட்டத்தில் நிகழ்ந்த சில சம்பவங்களை மேற்கோள் காட்டினர். இச்சம்பவத்தால், மேலும் பிரச்சினைகள் ஏதும் நிகழாதவாறு போலீஸ் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிர்வாகிகள் வலியுறுத்தினர். விபத்து எவ்வித உள்நோக்கமும் இல்லாமல், எதிர்பாராத விதமாக நடந்தது எனவும், இதில் போலீசார் சரிவர நடவடிக்கை மேற்கொள்ளாமல், புகாரின் அடிப்படையில் மட்டுமே வழக்குப்பதிந்து உள்ளதால் ஏற்பட்ட பிரச்சினை என பா.ம.க.வினர் தெரிவித்தனர்.   தற்போது நடந்து வரும் விசாரணையை துரிதப்படுத்தி, யாரும் பாதிக்காத, சட்டரீதியிலான பாதுகாப்பு முறையில் நடவடிக்கை மேற்கொள்வதாக டி.எஸ்.பி. ராஜேந்திரன் உறுதி அளித்தார். அதன் பின்னர் பா.ம.க.வினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • மணமகன் நயீமின் நண்பர்கள் மணமக்களுக்கு அளித்த பரிசு பொருட்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
    • கியாஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டும் வகையில் மணமக்களுக்கு மண் அடுப்பு, சாணி வறட்டி, விறகு ஆகியவற்றை அலங்கரித்து அன்பளிப்பாக நண்பர்கள் அளித்தனர்.

    கடலூர்:

    கடலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி நயீம் என்ற மணமகனுக்கும், சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த முஸ்கான் என்ற எம்.பி.ஏ. பட்டதாரி மணமகளுக்கும் நேற்று திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.

    இதில் உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழச்சியில் மணமக்களுக்கு பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

    இதில் மணமகன் நயீமின் நண்பர்கள் மணமக்களுக்கு அளித்த பரிசு பொருட்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    தற்போது கியாஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டும் வகையில் மணமக்களுக்கு மண் அடுப்பு, சாணி வறட்டி, விறகு ஆகியவற்றை அலங்கரித்து அன்பளிப்பாக நண்பர்கள் அளித்தனர்.

    நண்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க மேடையிலே அன்பளிப்பை திறந்து பார்த்த மணமக்கள் இந்த பாரம்பரிய பழமையான பொருட்களை கண்டு வியப்படைந்தனர்.

    • கடந்த 2 நாட்களில் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் மட்டும் சுமார் 10 டன் குப்பைகள் மலை போல் குவிந்திருந்தது.
    • 50 துப்புரவு பணியாளர்கள் மூலம் கடந்த 2 நாட்களாக குப்பைகள் அகற்றும் பணி களில் ஈடுபட்டு வந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக் குட்பட்டு 45 வார்டுகள் உள்ளன. இங்கு தினந்தோறும் சேரக்கூடிய குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் பொதுமக்கள் வழங்கி வருகின்றனர். துப்புரவு பணியாளர்கள் குப்பை களை வாங்கி மக்கும் குப்பையை உரம் தயாரிப்பதற்கும், மக்காத குப்பைகளை பாது காப்பாக அகற்று வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது இந்நிலையில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் மேற்பார்வையில், நகர் நல அலுவலர் (பொறுப்பு) அப்துல் ஜாஃபர் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.    இதில் கடந்த 2 நாட்களாக மாசி மக திருவிழா கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நூற்றுக்கணக்கான சாமிகள் கடற்கரைக்கு திரண்டு விமர்சையாக தீர்த்தவாரி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடற்கரையில் நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.   இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களில் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் மட்டும் சுமார் 10 டன் குப்பைகள் மலை போல் குவிந்திருந்தது. கடலூர் மாநகராட்சியின் 50 துப்புரவு பணியாளர்கள் மூலம் கடந்த 2 நாட்களாக குப்பைகள் அகற்றும் பணி களில் ஈடுபட்டு வந்தனர்.  மேலும் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் பெரும்பாலான பகுதிகளில் அன்றைய தினம் குவிந்த குப்பை களையும் துப்புரவு ஊழியர்கள் தீவிரமாக அகற்றி வருகின்றனர். இதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்தனர்.

    இதனை மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் தலைமையில், நகர் நல அலுவலர் (பொறுப்பு) அப்துல் ஜாஃபர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். கடலூர் மாநகராட்சி பகுதியில் குப்பைகள் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என துப்புரவு ஊழியர் களிடம் அறிவுறுத்தி னார்கள்.

    • கடலூர், மார்ச்.8- கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மந்தாரக்குப்பம் ஓம் சக்தி நகர் பகுதியை சேர்ந்த மலைக்குறவர் இன மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் நேரில் வந்தனர்.
    • திடீரென்று கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர் .

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மந்தாரக்குப்பம் ஓம் சக்தி நகர் பகுதியை சேர்ந்த மலைக்குறவர் இன மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் நேரில் வந்தனர்.  பின்னர் திடீரென்று கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர் . இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் சப் -இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், எங்களை 2வருடங்களுக்கு முன்பு என்.எல்.சி நிர்வாகம் விரிவாக்க பணிக்காக காலி செய்தததை தொடர்ந்து எங்களுக்கு சிதம்பரம் தாலுக்கா காட்டுமன்னார்கோவில் வட்டம் கூடுவெளிச்சாவடி பகுதியில் இலவச பட்டா வழங்கினார்கள்.                                          

    பட்டா வழங்கிய இடத்திற்கு நாங்கள் சென்றபோது அந்த ஊர் மக்கள் தடுத்து உள்ளே வரக்கூடாது எனக்கூறி தாக்க வந்தனர். இது குறித்து வருவாய் துறையினரிடம் புகார் அளித்த போது வருவாய்த் துறையினர் அதற்கு பதில் மாற்று இடம் தருவதாக உறுதியளித்ததால் மேற்படி பட்டாவை நீக்குவதற்கு அறிவுறுத்தப்பட்டது. அதன் பிறகு எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்கள் இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே மாரியம்மன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த கோவில்களின் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    • திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கலக்கி கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் அதிரடியாக பிடித்து விசாரணை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே மாரியம்மன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த கோவில்களின் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இவர்களை பிடிப்பது போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது. மேலும், கொள்குளை சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே வலுப்பெற்றது  இந்நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் துணை போலிஸ் சூப்பரண்டு கரிகால் பாரிசங்கர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.  கோவில்களின் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்கள் வேளாங்கண்ணி பகுதியில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் போலீசார் வேளாங்கண்ணிக்கு விரைந்து சென்றனர். அங்கு 2 வாலிபர்களை போலீசார் பிடித்து அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர்  கடலூர் சிங்காரத்தோப்பு சேர்ந்த விக்னேஷ் (வயது 23), கடலூர் முதுநகர் சேர்ந்த பிரகாஷ் (வயது 22) என்பது தெரியவந்தது. இவர்கள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே மாரியம்மன் கோவிலில் சி.சி.டி.வி. கேமராவை சேதப்படுத்தி உண்டியலை உடைத்து பணம் திருடியதும் தெரியவந்தது. பண்ருட்டி, நெல்லிக்குப்பம், விருதாச்சலம், புதுச்சேரி மாநிலம் முள்ளோடை, காரைக்கால், நாகப்பட்டினம், பழனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்களில் புகுந்து பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றதும் போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் 2 வாலிபர்களும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரிந்தது                                 .

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே 2 வாலிபர்கள் கோவில் பூட்டை உடைத்து திருடுவதற்கு வந்தபோது, அங்கு நாய்கள் தொல்லை அதிகமாக இருந்ததால் பயத்தில் அதிகாலை 3 மணி அளவில் சாலை ஓரத்தில் இளம் பெண் நின்று கொண்டிருந்தார். அப்போது இவர்கள் திருடுவதற்கு குறிக்கீடாக இருப்பதால் சாலை ஓரத்தில் இருந்த இளம்பெண்ணை தங்களது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று சாலையில் இறக்கி விட்டு, மீண்டும் கோவிலுக்கு வந்து திருடி சென்ற சுவாரசிய சம்பவம் தெரியவந்துள்ளது. எங்கெங்கு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கலக்கி கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் அதிரடியாக பிடித்து விசாரணை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடலூர் அடுத்த வெள்ளப்பாக்கத்தில் முத்துமாரியம்மன் கோவிலுக்கு வரி வசூல் செய்து சாமி ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் சிறிய தெருவாக இருந்து வந்ததால் சாமி ஊர்வலம் செல்லவில்லை.
    • இதில் இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது‌.

    கடலூர்:

    கடலூர் அடுத்த வெள்ளப்பாக்கத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில் கோவிலுக்கு வரி வசூல் செய்து சாமி ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் சிறிய தெருவாக இருந்து வந்ததால் சாமி ஊர்வலம் செல்லவில்லை. இது குறித்து மணி உள்ளிட்ட நான்கு பேர் கோவில் நிர்வாகி மோகனை கேட்டனர். இதில் மணி தரப்பினருக்கும், மோகன் தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில்கோவில் நிர்வாகி மோகன், ராமசாமி ஆகியோர் காயம் அடைந்தனர்.                                                                                                                                                                                                                                                                                                                     இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த மணி, மோகன்தாஸ், பரசுராமன், ராஜ் ஆகியோர் மீதும், ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் இளையராஜா, ரமேஷ், முருகன், பாலகிருஷ்ணன் ஆகிய 8 பேர் மீது தனித்தனியாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சாமுவேல் (வயது 59). இவரது சகோதரி அபூர்வம் (65)சாமுவேல் மகன் நிச்சய தார்த்தம் நடை பெற்றது. அங்கு சென்ற அபூர்வம் அதன் பின்னர் மாயமாகி விட்டார்
    • உறவினர்கள் வீடுகள் மற்றும் அப்பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அடுத்த முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் (வயது 59). இவரது சகோதரி அபூர்வம் (65) கடந்த 3-ந் தேதி சிதம்பரம் அடுத்த கிள்ளை பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் சாமுவேல் மகன் நிச்சய தார்த்தம் நடை பெற்றது. அங்கு சென்ற அபூர்வம் அதன் பின்னர் மாயமாகி விட்டார்.

    உறவினர்கள் வீடுகள் மற்றும் அப்பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சாமுவேல் அளித்த புகாரின் அடிப்படை யில் கிள்ளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த பெண்ணை போலீசார், சோதனை செய்தனர். அந்த பெண்ணிடம் இருந்த ஒரு பையில் பூச்சி மருந்து பாட்டில் இருந்தது தெரிய வந்தது.
    • 2முறை புகார் அளித்தோம். இது குறித்து போலீசார் எந்த விசாரணையும் நடத்தாமல் உள்ளனர். என்றார்,

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு இன்று பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் நேரில் வந்தார். அப்போது அங்கிருந்த போலீசார் அந்த பெண்ணை சோதனை செய்தனர். அந்த பெண்ணிடம் இருந்த ஒரு பையில் பூச்சி மருந்து பாட்டில் இருந்தது தெரிய வந்தது. அதிகாரிகள் உடனடியாக அந்த பெண்ணிடம் இருந்து பூச்சி மருந்து பாட்டிலை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பெண்ணிடம் விசாரித்த போது குறிஞ்சிப்பாடி வட்டம் தம்பிப்பேட்டை சேர்ந்த கலைச்செல்வி (வயது 33).என்பது தெரிய வந்தது. அவரிடம் விசாரித்த போது கூறியதாவது:-  எனக்கும் தணிகாச்சலம் என்பவருக்கும் திருமணமானது. தற்போது எனது கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளதால் என்னையும் எனது குழந்தைகளையும் வெளியில் அனுப்பி விட்டார். திருமணத்தின் போது 7 பவுன் நகை, 10ஆயிரம் பணம் மற்றும் 2பசு மாடுகள் சீர்வரிசையாக கொடுத்தனர். எனது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை போன்றவற்றையும் எடுத்துக்கொண்டு தராமல் உள்ளார். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் 2முறை புகார் அளித்தோம். இது குறித்து போலீசார் எந்த விசாரணையும் நடத்தாமல் உள்ளனர். இதன் காரணமாக நானும் எனது 3 குழந்தைகளும் நடுத்தெருவில் வசித்து வருகின்றோம். ஆகையால் இது தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்தி எனது பொருட்களை மீட்டு தர வேண்டும் என கூறினார்.  

    . இதனை தொடர்ந்து கலைச்செல்வியை போலீசார் கடும் எச்சரிக்கை செய்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பொது இடங்களில், போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனபோலீசார் அறிவித்துள்ளனர். .
    • தமிழக முழுவதும் நகரப் பகுதி யில் விதிகளை மீறி பொது இடங்களில், போஸ்டர் ஒட்டி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது


    கடலூர்:

    பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி பொது இடங்களில், போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனபோலீசார் அறிவித்துள்ளனர்.  இது குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் கூறியிருப்பதாவது:-  சென்னை உள்ளிட்ட தமிழக முழுவதும் நகரப் பகுதி யில் விதிகளை மீறி பொது இடங்களில், போஸ்டர் ஒட்டி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.

    எனவே பண்ருட்டி நகர பகுதியில் விதி களை மீறி யாரும் போஸ்டர், டிஜிட்டல் பேனர் ஆகியவை வைக்க கூடாது. இவ்வாறு அவர் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.

    ×