என் மலர்
கடலூர்
- முழு அடைப்புபோராட்டம் நடைபெறும் என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்து இருந்தார்.
- வர்த்தக சங்கமுகர்களைஅழைத்துப் பேசிகுறைகள் கேட்டார்.
கடலூர்:
நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நிலக்கரிசுரங்க விரிவாக்பணிக்காக விளை நிலங்களை கையகப்ப டுத்து வதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்டம் முழுவதும் முழு அடைப்புபோராட்டம் நடைபெறும் என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து பண்ருட்டியில்வடக்கு மண்டல ஐஜி கண்ணன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நேரில்ஆய்வு செய்தார். வேலூர்டி.ஐ.ஜி. பகலவன், செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா,இன்ஸ்பெக்டர்கள்கண்ணன்,நந்தகுமார்,ராஜதாமரைபாண்டியன்,ரவிச்சந்திரன்ஆகியோரிடம்ஆலோசனை நடத்தினார்.வர்த்தக சங்கமுகர்களைஅழைத்துப் பேசிகுறைகள் கேட்டார்.போலீசார் மற்றும் வியாபாரி களுடன் நான்கு முனை சந்திப்பில் உள்ள டீக்கடையில் டீ குடித்தார். ஐ.ஜி. கண்ணன் செயல்பாட்டால் வியாபாரி கள் நிகழ்ச்சி அடைந்தனர்.
- கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன் தலைமையில் சுமார் 7 ஆயிரம் போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- பந்த் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ம.க.வினர் 56 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி. நிர்வாகம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்கு விவசாயிகளிடமிருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். என்.எல்.சி., கடலூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் போராட்டங்கள் நடத்தினர்.
மேலும், ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும். வீட்டிற்கு ஒருவருக்கு என்.எல்.சி.யில் நிரந்தர வேலை வேண்டும். மாற்று இடம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, ஆணைவாரி, எரும்பூர், கத்தாழை கிராம மக்கள் வலியுறுத்தினர்.
இக்கிராம மக்களுக்கு ஆதரவாக பா.ம.க., கட்சி களம் இறங்கியது. அதில் குறிப்பாக என்.எல்.சி. நிறுவனம் கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டார்.
இதனையடுத்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் கடலூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் என்.எல்.சி. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது. அதன்படி உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கும் பணி 90 சதவீதம் முடிந்துள்ளது.
இந்நிலையில் என்.எல்.சி. நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தும் பணியை நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதற்கட்டமாக எல்லைகளில் வாய்க்கால் வெட்டும் பணிகள் நடந்தது. இதனை அறிந்து அங்கு திரண்ட பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பணிகள் நடைபெற்றன.
இதையடுத்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து இன்று கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்தார். இதனையொட்டி பா.ம.க.வினர் வணிக நிறுவனங்கள், கடைகளின் உரிமையாளர்களிடம் நோட்டீஸ் வழங்கி முழு அடைப்பு போராட்டத்திற்கு கடலூர் மாவட்டம் முழுவதும் ஆதரவு திரட்டினர்.
அதன்படி இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஆனால், கடலூரில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தது. ஒரு சில கடைகள் மட்டுமே மூடப்பட்டிருந்தது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல இயங்கியது. 5 பஸ்களை ஒன்றிணைத்து போலீஸ் பாதுகாப்புடன் இயக்கினார்கள்.
புதுவையிலிருந்து கடலூருக்கு வரும் பஸ்கள் மாநில எல்லையான முள்ளோடையில் நிறுத்தப்பட்டது. அங்கு இறக்கிவிடப்பட்ட பயணிகள் ஆட்டோக்கள் மூலம் கடலூருக்கு வந்தனர். கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு, புவனகிரி, மந்தாரக்குப்பம், நெய்வேலி, முத்தாண்டிக்குப்பம் பகுதிகளில் 90 சதவீத கடைகள் மூடப்பட்டிருந்தது.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன் தலைமையில் சுமார் 7 ஆயிரம் போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், ரோந்து பணியும் தீவிரபடுத்தப்பட்டு இருந்தது.
பந்த் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ம.க.வினர் 56 பேர் கைது செய்யப்பட்டனர். மந்தாரக்குப்பத்தில் கடைகளை அடைக்கும்படி கூறிய பா.ம.க. முன்னாள் மாவட்ட தலைவர் தர்மலிங்கம் உட்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர். பா.ம.க. முழு அடைப்பு போராட்டம் அறிவித்திருந்தாலும், கடலூரில் வழக்கமான இயல்பு வாழ்க்கை நிலவியது. பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை.
- கடலூரில் 100 சதவீதம் அரசு பேருந்துகளும் 50 சதவீதம் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
- கடையை மூட வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி தெரிவித்துள்ளார்.
வடலூர்:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்துக்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்து இருந்தார்.
ஆனால் கடலூர் மாவட்டத்தில் வழக்கம் போல் பஸ்கள் ஓடும், அனைத்து கடைகளும் திறந்து இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று தொடங்கியது.
கடலூரில் 100 சதவீதம் அரசு பேருந்துகளும் 50 சதவீதம் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அப்பகுதியில் இயல்பு நிலை காணப்பட்டது. கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. கடைகள், சந்தையில் வியாபாரிகள் வணிகத்தில் ஈடுபடுகின்றனர்.
கடலூரில் கடைகள் திறக்கலாம், வாகனங்களை இயக்கலாம் என்று ஏற்கெனவே மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ள நிலையில், இன்று வியாபாரிகள் அச்சமின்றி கடையை திறக்கலாம்; கடையை மூட வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி தெரிவித்துள்ளார்.
மேலும் கடலூரில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக பாமகவினர் 55 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- காலை மருந்து கடையை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டை உடைத்து கடையில் கொள்ளை போனதுதெரிய வந்தது.
- டிராயரில் வைக்கப்பட்டு இருந்த பணம் ரூ.4.5லட்சம்கொள்ளை போனது தெரியவந்தது.
கடலூர்:
பண்ருட்டி எல்.என்.புரத்தைசேர்ந்தவர்வி.எம்.சுந்தர் (50).இவர்பண்ருட்டி 5 முனை சந்திப்பில் நகராட்சிக்கு சொந்தமான காந்தி பூங்கா காம்ப்ளக்சில் பூச்சி மருந்துகடை நடத்தி வருகிறார். இவர்வழக்கம் போல நேற்று இரவு 9.30 மணிக்கு கடையை பூட்டி சென்று விட்டு இன்று காலை8.30மணிஅளவில் மருந்து கடையை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டை உடைத்து கடையில் கொள்ளை போனதுதெரிய வந்தது.உள்ளே டிராயரில் வைக்கப்பட்டு இருந்த பணம் ரூ.4.5லட்சம்கொள்ளை போனது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சி யடைந்த சுந்தர் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கண்ணன் சப்.இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு, சரண்யா, புஷ்பராஜ் மற்றும் குற்றப்பி ரிவு போலீ சார்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னார்கள்.
கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக் கப்பட்டது. போலீஸ் மோப்பநாய் கொள்ளை நடந்த கடையிலிருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.கடலூரில் இருந்துகைரேகை நிபுணர்கள்,தடய அறிவியல் நிபுணர்கள் விரைந்து சென்று மர்ம ஆசாமிகளின்கை ரேகைகளின்தடயங்களை பதிவு செய்தனர். கொள்ளை யர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடு தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் 2-வது சுரங்க விரிவாக்க பணி தொடங்கப்பட்டது.
- உழவர் சந்தை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் 2-வது சுரங்க விரிவாக்க பணி நேற்று தொடங்கப்பட்டது. இதனை கண்டித்து மாவட்ட செயலாளர்கள் சண்.முத்துகிருஷ்ணன், வடக்குத்து ஜெகன், செல்வ.மகேஷ், கார்த்திகேயன் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை கைது செய்ததை கண்டித்தும், என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்தும் கடலூரில் மாவட்ட தலைவர் தடா.தட்சிணாமூர்த்தி தலைமையில் மாணவர் அணி கோபிநாத், இளைஞர் அணி சந்திரசேகரன், மாநகராட்சி கவுன்சிலர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. மாவட்ட தலைவர் தடா. தட்சிணாமூர்த்தி உட்பட 25 பேரை கைது செய்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சம்பவத்தால் கடலூர் மாவட்டத்தில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டு வருகின்றது.
- பெற்றோர்கள் திருமண ஏற்பாடு குறித்து பேசி உள்ளனர்.
- மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:
சிதம்பரம் கலியபெருமாள் நகர் பகுதியில் வசித்து வருபவர் வேல்முருகன் .இவரது மகள் கிருத்திகா (23) பி.எஸ்.சி. படித்து முடித்தநிலையில் இவரது வீட்டில் பெற்றோர்கள் திருமண ஏற்பாடு குறித்து பேசி உள்ளனர். அதற்கு கிருத்திகா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேற்று கிருத்திகா தனது வீட்டில் உள்ள அறையின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
- அனைத்து கோரிக்கைகளின் மீது உரிய ஆணைகள் வழங்க வேண்டும்
கடலூர்:
தமிழ்நாடு வருவா ய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை கலெக்டர் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். துணை தாசில்தார் உள்ளிட்ட பதவி உயர்வு பட்டியல் திருத்தத்தின் காரணமாக பதவி இறக்கம் பெரும் அலுவலர்களின் பதவி உயர்வு பாதுகாப்பிற்கான ஆணைகள் விரைவில் வழங்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி பெயர் மாற்ற அரசாணையை வெளியிட வேண்டும். அரசு டன்பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளின் மீது உரிய ஆணைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை கடலூர் மாவட்டத் தலைவர் மகேஷ் தலைமையில் ஒரு மணி நேரம் தாசில்தார் முதல் அலுவலக உதவியாளர் வரை பணிகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் மகேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் பூபாலச்சந்திரன் வரவே ற்றார். ஆர்ப்பாட்டத்தில் தாசில்தார் ஸ்ரீதரன், துணை தலைவர் ராஜேஷ் பாபு, மத்திய செயற்குழு உறுப்பினர் ரத்தினகுமரன் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினார்கள். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 23-ந் தேதி (வியாழக்கிழமை) ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முடிவில் வட்ட தலைவர் பார்த்திபன் நன்றி கூறினார்.
- கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் நாளை பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.
- உரிய பாதுகாப்புடன் நாளை வணிக நிறுவனங்களும், பஸ்களும் இயங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி. நிர்வாகம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்கு விவசாயிகளிடமிருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். என்.எல்.சி., கடலூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் போராட்டங்கள் நடத்தினர்.
மேலும், ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும். வீட்டிற்கு ஒருவருக்கு என்.எல்.சி.யில் நிரந்தர வேலை வேண்டும். மாற்று இடம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, ஆணைவாரி, எரும்பூர், கத்தாழை கிராம மக்கள் வலியுறுத்தினர்.
இக்கிராம மக்களுக்கு ஆதரவாக பா.ம.க., த.வா.க. போன்ற கட்சிகளும் களம் இறங்கின. அதில் குறிப்பாக என்.எல்.சி. நிறுவனம் கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டார்.
இதனையடுத்து வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் கடலூர் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் என்.எல்.சி. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது. அதன்படி உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கும் பணி 90 சதவீதம் முடிந்துள்ளது.
இந்நிலையில் என்.எல்.சி. நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தும் பணியை நேற்று தொடங்கியது. இதில் முதற்கட்டமாக எல்லைகளில் வாய்க்கால் வெட்டும் பணிகள் நடந்தது. இதனை அறிந்து அங்கு திரண்ட பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பணிகள் நடைபெற்றன.
இதையடுத்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து நாளை (வெள்ளிக்கிழமை) கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்தார். இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள பா.ம.க.வினர் கடைகளை மூடச் சொல்லி உரிமையாளர்களிடம் கூறினர். இதனால் கடலூர் மாவட்டத்தில் நாளை கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்படுமா? பஸ்கள் ஓடுமா? என்ற கேள்விகள் பொதுமக்களிடம் எழுந்தது.
இதுகுறித்து டெல்லியில் முகாமிட்டுள்ள கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் நாளை பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வழக்கம்போல் பஸ்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கும். கடைகளும் திறக்கப்படும். இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியினருடன் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இது மட்டுமின்றி என்.எல்.சி. நிர்வாகத்திடம் கூடுதல் இழப்பீடு பெற்று ஒப்புக்கொண்டவர்களின் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படுகிறது. அனைவரின் நிலமும் கையகப்படுத்தப்படவில்லை. ஆகையால் உரிய பாதுகாப்புடன் நாளை வணிக நிறுவனங்களும், பஸ்களும் இயங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- என்.எல்.சி. நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தும் பணியை நேற்று தொடங்கியது.
- புவனகிரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்மொழித்தேவன் இன்று வளையமாதேவி கிராமத்திற்கு வந்தார்.
சேத்தியாத்தோப்பு:
என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நெய்வேலி அருகேயுள்ள ஆணைவாரி, எரும்பூர், காரிவெட்டி, வளையமாதேவி, கத்தாழை போன்ற பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்தது. இதற்கு அங்கு வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கிராமத்திற்குள் விடாமல் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில் என்.எல்.சி. நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தும் பணியை நேற்று தொடங்கியது. இதில் முதற்கட்டமாக வளையமாதேவி கிராமத்தில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களின் எல்லைகளில் வாய்க்கால் வெட்டும் பணிகள் நடைபெற்றது. இதற்கு பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து மறியல் நடத்தினர். மேலும், நாளை பந்த் போராட்டம் அறிவித்தனர்.
இந்நிலையில் புவனகிரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்மொழித்தேவன் இன்று வளையமாதேவி கிராமத்திற்கு வந்தார். அங்கு நிலங்களை கொடுத்த விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் பேசினார்.
அப்போது அங்கு வந்த போலீசார் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ.வை திடீரென கைது செய்தனர். அப்போது அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் பொதுமக்களை சந்திக்க தான் வந்தேன். போராட்டம் நடத்த வரவில்லை. என்னை ஏன் கைது செய்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். இதற்கு போலீசார் சரியான பதிலளிக்கவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- வாலிபரிடம் இருந்து வாங்கிய செல்போன் மூலம் வீட்டிற்கு மாணவி போன் செய்தார்.
- புத்தகத்தை எடுத்து வந்து தருவதற்கு வீட்டில் யாரும் இல்லை என்று பெற்றோர் கூறியுள்ளனர்.
வேப்பூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி, கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தார். விடுமுறை முடித்து பள்ளிக்கு சென்ற அந்த மாணவி முக்கியமான புத்தகங்களை மறதியாக வீட்டிலேயே வைத்து விட்டு சென்று விட்டார்.
அந்த புத்தகம் கடந்த 7-ந்தேதியன்று தேவைப்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்கு போன் செய்து யாரையாவது எடுத்து வரச் சொல்லலாம் என்று மாணவிக்கு யோசனை தோன்றியுள்ளது. இதற்கு போன் செய்ய செல்போன் தேவைப்பட்டது. இதற்காக பள்ளி அருகே உள்ள சாலையில் சென்ற ஒரு வாலிபரிடம் செல்போன் கேட்டுள்ளார்.
வாலிபரிடம் இருந்து வாங்கிய செல்போன் மூலம் வீட்டிற்கு மாணவி போன் செய்தார். புத்தகத்தை எடுத்து வந்து தருவதற்கு வீட்டில் யாரும் இல்லை என்று பெற்றோர் கூறியுள்ளனர். இதையடுத்து செல்போனை வாலிபரிடம் திருப்பி கொடுத்த மாணவி, அழுதுள்ளார்.
வாலிபர் ஏன் அழுகிறாய்? என்று கேட்டபோது, நடந்த விஷயங்களை மாணவி கூறினார். நான் ஜெயங்கொண்டம் பகுதிக்கு தான் செல்கிறேன். என்னுடன் வா, உனது வீட்டிற்கு அழைத்து செல்கிறேன். புத்தகத்தை எடுத்துக் கொண்டு திரும்பி வரலாம் என கூறினார்.
இதனை நம்பிய அந்த மாணவி, வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் ஏறி சென்றார். அப்போது ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் செல்லாமல் விருத்தாசலம் சாலையில் சென்றார். அங்கிருந்த சவுக்கு தோப்பிற்கு மாணவியை அழைத்து சென்ற வாலிபர் பாலியல் சீண்டல் செய்தார். இதனை எதிர்பாராத மாணவி, வாலிபரிடம் இருந்து தப்பியோட முயற்சி செய்தார். ஆனால் தப்பமுடியவில்லை.
இதனைத் தொடர்ந்து 7-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது அதனை தான் மறைத்து வைத்திருந்த செல்போனில் பதிவு செய்தார். இதுகுறித்து வெளியில் சொன்னால் வீடியோவை சமூக வலைதளத்தில் பரவ விடுவேன் என்று மாணவியை மிரட்டினார். இதனால் பயந்து போன மாணவி அங்கிருந்து பஸ் ஏறி வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் நடந்ததை கூறினார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர். அவர் இது குறித்து விசாரணை நடத்த வேப்பூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் மாணவியை பலாத்காரம் செய்தது ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்த சிவமூர்த்தி என்பவரது மகன் ஜீவா (வயது 24) என்பது தெரியவந்தது. இவர் கேட்டரிங் முடித்து விட்டு தற்போது சேலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். அவரை போலீசார் கைது செய்து போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
- சேத்தியாத்தோப்பை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- கலவரம் ஏதேனும் நடந்தால் அதனைக் கட்டுப்படுத்த வஜ்ரா, வருண் போன்ற வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
சேத்தியாத்தோப்பு:
என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நெய்வேலி அருகேயுள்ள ஆணைவாரி, எரும்பூர், காரிவெட்டி, வளையமாதேவி, கத்தாழை போன்ற பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்தது. இதற்கு அங்கு வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கிராமத்திற்குள் விடாமல் தடுத்து நிறுத்தினர்.
மேலும், இக்கிராம மக்களுக்கு ஆதரவாக பா.ம.க., த.வா.க. போன்ற கட்சிகளும் களம் இறங்கின. அதில் குறிப்பாக என்.எல்.சி. நிறுவனம் கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் பா.ம.க. தலைவர் அண்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டார்.
இதனையடுத்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் கடலூர் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் என்.எல்.சி. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது. அதன்படி உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கும் பணி 90 சதவீதம் முடிந்துள்ளது.
இந்நிலையில் என்.எல்.சி. நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தும் பணியை இன்று தொடங்கியது. இதில் முதற்கட்டமாக எல்லைகளில் வாய்க்கால் வெட்டும் பணிகள் நடக்கிறது. ஒவ்வொரு முறையும் பணிகளை தொடங்கும் போது கிராம மக்களின் போராட்டம், பா.ம.க. போன்ற கட்சிகளின் போராட்டம் நடைபெறும். அது போல இந்த முறை போராட்டம் நடைபெற்றால் அதனை தடுக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
இவர்கள் சேத்தியாத்தோப்பை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
என்.எல்.சி. சுரங்க விரிவாக்கப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க.வினர் மாவட்ட செயலாளர்கள் கார்த்திகேயன், சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டிலும், வடக்குத்து ஜெகன், செல்வமகேஷ் தலைமையில் வளையமாதேவியிலும் மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன், துணை சூப்பிரண்டு ரூபன்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். அங்கு மறியலில் ஈடுபட்டிருந்த பா.ம.க.வினரை கைது செய்தனர்.
மேலும், கலவரம் ஏதேனும் நடந்தால் அதனைக் கட்டுப்படுத்த வஜ்ரா, வருண் போன்ற வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சேத்தியாத்தோப்பு பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.
- தாழ்த்தப்பட்ட மக்கள் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்து தாக்குதல் நடத்திய கும்பலை கண்டித்தும், குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்தது.
- அழைப்பாளராக கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்
கடலூர்:
புவனகிரியை அடுத்த சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்து தாக்குதல் நடத்திய கும்பலை கண்டித்தும், குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் கடலூர் அம்பேத்கர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். இதில் அமைப்பு செயலாளர் திருமார்பன், மாவட்ட செயலாளர் மருதமுத்து, மாவட்ட துணை செயலாளர் திருமேனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செந்தில் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பழனிவேல்,கிட்டு, ஸ்ரீதர், ஜவகர், சுபாஷ், பாலமுருகன், ராமச்சந்திரன், கலைஞர், வெங்கடசாமி, புலிக்கொடியன், திருமாறன், காட்டுராஜா, ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






