என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில்  பூச்சி மருந்து கடையில்  ரூ 5 லட்சம் கொள்ளை: போலீசார்  தீவிர விசாரணை
    X

    பண்ருட்டியில் பூச்சி மருந்து கடையில் ரூ 5 லட்சம் கொள்ளை: போலீசார் தீவிர விசாரணை

    • காலை மருந்து கடையை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டை உடைத்து கடையில் கொள்ளை போனதுதெரிய வந்தது.
    • டிராயரில் வைக்கப்பட்டு இருந்த பணம் ரூ.4.5லட்சம்கொள்ளை போனது தெரியவந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி எல்.என்.புரத்தைசேர்ந்தவர்வி.எம்.சுந்தர் (50).இவர்பண்ருட்டி 5 முனை சந்திப்பில் நகராட்சிக்கு சொந்தமான காந்தி பூங்கா காம்ப்ளக்சில் பூச்சி மருந்துகடை நடத்தி வருகிறார். இவர்வழக்கம் போல நேற்று இரவு 9.30 மணிக்கு கடையை பூட்டி சென்று விட்டு இன்று காலை8.30மணிஅளவில் மருந்து கடையை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டை உடைத்து கடையில் கொள்ளை போனதுதெரிய வந்தது.உள்ளே டிராயரில் வைக்கப்பட்டு இருந்த பணம் ரூ.4.5லட்சம்கொள்ளை போனது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சி யடைந்த சுந்தர் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கண்ணன் சப்.இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு, சரண்யா, புஷ்பராஜ் மற்றும் குற்றப்பி ரிவு போலீ சார்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னார்கள்.

    கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக் கப்பட்டது. போலீஸ் மோப்பநாய் கொள்ளை நடந்த கடையிலிருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.கடலூரில் இருந்துகைரேகை நிபுணர்கள்,தடய அறிவியல் நிபுணர்கள் விரைந்து சென்று மர்ம ஆசாமிகளின்கை ரேகைகளின்தடயங்களை பதிவு செய்தனர். கொள்ளை யர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடு தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×