சிதம்பரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை

பெற்றோர்கள் திருமண ஏற்பாடு குறித்து பேசி உள்ளனர். மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிதம்பரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை
Published on

கடலூர்:

சிதம்பரம் கலியபெருமாள் நகர் பகுதியில் வசித்து வருபவர் வேல்முருகன் .இவரது மகள் கிருத்திகா (23) பி.எஸ்.சி. படித்து முடித்தநிலையில் இவரது வீட்டில் பெற்றோர்கள் திருமண ஏற்பாடு குறித்து பேசி உள்ளனர். அதற்கு கிருத்திகா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேற்று கிருத்திகா தனது வீட்டில் உள்ள அறையின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com