சிதம்பரம் அருகே ஓட்டல் ஊழியரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

செல்வகுமார் (வயது 42). மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் . போது 2 பேர் செல்வகுமாரை வழிமறித்து தாக்கினர். மேலும், மோட்டார் சைக்கிளை பறித்து கொலை மிரட்டல் விடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.
சிதம்பரம் அருகே  ஓட்டல் ஊழியரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 42). இவர் சிதம்பரத்தில் உள்ள டிபன் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல வேலை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

அப்போது ஓமக்குளம் சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்தபோது சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்த முகேஷ் கண்ணன் (23), வைப்புசாவடி சபாநாயகர் தெருவை சேர்ந்த ஆகாஷ் (18) ஆகிய 2 பேரும் செல்வகுமாரை வழிமறித்து தாக்கினர். மேலும், மோட்டார் சைக்கிளை பறித்து கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com