உளுந்தூர்பேட்டை அருகே மோட்டர் சைக்கிள் மீது லாரி மோதி ஒருவர் பலி

காட்டுச் செல்லூரை கடந்த போது பின்னால் வந்த லாரி மோதி மோட்டார் சைக்கிளுடன் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். மரிய பிரகாசம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
உளுந்தூர்பேட்டை அருகே  மோட்டர் சைக்கிள் மீது லாரி மோதி ஒருவர் பலி
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டை அருகே உள்ள இறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மரிய பிரகாசம். இவரும் காட்டுசெல்லூர் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் எலவனாசூர்கோட்டையில் இருந்து திருக்கோவிலூர் சென்று கொண்டிருந்தனர். அப்போது காட்டுச் செல்லூரை கடந்த போது பின்னால் வந்த லாரி மோதி மோட்டார் சைக்கிளுடன் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மரிய பிரகாசம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

படுகாயம் அடைந்து சாலை ஓரத்தில் இருந்த சரத்குமாரை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மரிய பிரகாசம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com