என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லிக்குப்பத்தில்  குழந்தை இல்லாததால் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
    X

    நெல்லிக்குப்பத்தில் குழந்தை இல்லாததால் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

    • செல்வராஜ் மகள் ஸ்ரீமதி. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வீரப்பன் என்பவரை காதலித்து திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார.
    • இவர்களுக்கு குழந்தை இல்லாததால் சண்டை ஏற்பட்டது.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் திருக்குளம் செல்வராஜ் மகள் ஸ்ரீமதி. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வீரப்பன் என்பவரை காதலித்து திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் சில தினங்களுக்கு முன்பு வீரப்பனுக்கும் ஸ்ரீமதிக்கும் சண்டை ஏற்பட்டது.

    இதன் காரணமாக ஸ்ரீமதி மன வருத்தத்தில் இருந்து வந்தார். சம்பவத்தன்று ஸ்ரீமதி தனது வீட்டில் தூக்கு மாட்டி இறந்த நிலையில் இருந்தார். இத்தகவல் அறிந்து நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×