search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடலூரில் ஆணழகன் போட்டி:  பயிற்சியில் ஈடுபட்ட வீரர் மூச்சுத் திணறி பலி
    X

    வடலூரில் ஆணழகன் போட்டி: பயிற்சியில் ஈடுபட்ட வீரர் மூச்சுத் திணறி பலி

    • வடலூர் ராஜராஜேஸ்வரி திருமண நிலையத்தில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடந்து வருகிறது,
    • பயிற்சியின் இடையில் அவர் பிரட் சாப்பிட்டார். இதையடுத்து அவருக்கு விக்கல் வந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் ராஜராஜேஸ்வரி திருமண நிலையத்தில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடந்து வருகிறது. வடலூரில் உள்ள பிசிகோ பிட்னஸ் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழகம் முழுவதுமிருந்து 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் சேலம் பெரிய கொல்லப்பட்டி, மாரியம்மன் கோயில் தெரு மாதையன் மகன் ஹரிஹரன் (வயது 21) என்பவர் பங்கேற்பதற்காக வந்திருந்தார். இவர் மண்டபத்தில் தீவிர பயிற்சியில் நேற்று இரவு ஈடுபட்டார். பயிற்சியின் இடையில் அவர் பிரட் சாப்பிட்டார். இதையடுத்து அவருக்கு விக்கல் வந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவரை உடனடியாக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு விழாக்குழுவினர் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டார் என்று கூறினார்கள். மேலும், அவர் சாப்பிட்ட பிரட் உணவுக்குழாயில் அடைத்துக் கொண்டு, மாரடைப்பு அல்லது மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

    இந்த சம்பவம் ஆணழகன் போட்டியில் பங்கேற்ற பிற வீரர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×