என் மலர்
கடலூர்
- குற்ற செயல்களை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- சாலைகளில் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அறிவுறுத்திலின் பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணிகள் மற்றும் வாகன சோதனைகள், விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் முதுநகரில் குற்ற செயல்களை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் குற்ற பிரிவு சப் -இன்ஸ்பெக்டர்கள் ரகுராமன், ரவி மற்றும் போலீசார் வெளியூருக்கு செல்லும் மக்கள் பாதுகாப்பாக வீடுகளை பூட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
கோடை காலம் என்பதால் கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைப்பதை தவிர்க்க வேண்டும். சந்தேகப்படும் படியாக யாரையாவது பார்த்தால் வாகன பதிவு எண்களை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வீடு கடை மற்றும் அலுவலகங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும். வங்கிகளில் பணம் எடுக்க செல்லும் போது அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஏ.டி.எம். கார்டு மற்றும் குறியீடு எண்களை தெரிவிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் வாகனங்கள் மூலமும் முக்கிய சாலைகளில் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டவரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த பக்கிரிபாளையம் புறவழிச் சாலைஅருகில் உள்ள தூங்கு மூஞ்சி மரத்தில் அடையாளம் தெரியாத ஆண் தூக்கில் பிணமாக தொங்கினார். இது பற்றி தகவல் அறிந்த பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தூக்கில் பிணமாக தூங்கியவர் யார்? எதற்காக இங்கு வந்தார்? இவரை யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டவரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- குட்கா மற்றும் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்
- போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் குட்கா மற்றும் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் முதுநகர், புதுநகர், திருப்பாதிரிப்புலியூர், நெல்லிக்குப்பம், நெய்வேலி தெர்மல் ஆகிய பகுதிகளில் இருந்த கடைகளில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் கஞ்சா ஆகியவற்றை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நெல்லிக்குப்பம் சுகுமார், நெய்வேலி சாவித்திரி, முதுநகர் தினேஷ், சாலக்கரை மாரியப்பன், திருவந்திபுரம் சிவன்ராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
- இதில் பஸ்சிற்குள் ஷேர் ஆட்டோ புகுந்து பலத்த சேதம் ஏற்பட்டது.
- இந்த விபத்து ஏற்பட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கடலூர்:
விழுப்புரத்தில் இருந்து கடலூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த அரசு பஸ் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக ஷேர் ஆட்டோ பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தபோது திடீரென்று அரசு பஸ் பலத்த சத்தத்துடன் மோதியது. இதில் பஸ்சிற்குள் ஷேர் ஆட்டோ புகுந்து பலத்த சேதம் ஏற்பட்டது. அப்போது ஷேர் ஆட்டோவில் இருந்த டிரைவர் உள்பட 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து ஷேர் ஆட்டோவில் இருந்த 2பேரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடலூரில் முக்கியசாலையில் இந்த விபத்து ஏற்பட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பஸ்சிற்குள் சிக்கி இருந்த ஷேர் ஆட்டோவை பாதுகாப்பாக மீட்டு சாலை ஓரத்தில் நிறுத்தினர். பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டன. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரவு 11.40 மணிக்கு ஆலயத்தின் வெளியே பிரமாண்ட பாஸ்கா மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது.
- உணவு பொருட்களை வழங்கி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடினர்.
கடலூர்:
ஈஸ்டர் தினத்தை யொட்டி கடலூரில் உள்ள தேவால யங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இயேசு கிறிஸ்து சிலுவை யில் அறையப்பட்டு 3-ம் நாள்உயிர்த்தெழுந்தார். அந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் தினமாக கொண்டாடுகின்றனர். இதைமுன்னிட்டு, கடலூர் கார்மேல் அன்னை ஆலயத்தில் நள்ளிரவு அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன. இரவு 11.40 மணிக்கு ஆலயத்தின் வெளியே பிரமாண்ட பாஸ்கா மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்திகளில் புதிய தீபத்தை ஏந்திக்கொண்டு தேவலாயத்துக்குள் சென்றனர். 12 மணிக்கு இயேசு உயிர்த்தெழுந்ததை நினைவு கூர்ந்ததை விளக்கும் விதமாக தேவலாயத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டு ஜொலித்தன.
பின்னர் பங்கு தந்தை தலைமையில் கிறிஸ்தவர்கள் கைகளில் புதிய தீபத்தை ஏந்தி சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தினர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து காலையில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. புதிய மெழுகு தீபத்தை அணையாமல் வீட்டுக்கு கொண்டு சென்றனர். 40 நாட்கள் தவக்காலம் முடிந்து புத்தாடைகள் அணிந்து இனிப்பு, உணவு பொருட்களை வழங்கி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடினர். இதேபோன்று கடலூர் சப்- ஜெயில் சாலையில் உள்ள தூய எபிபெனி ஆலயம், பாரதி சாலையில் உள்ள ஆற்காடு லூத்தரன் திருச்சபை, செம்மண்டலம் பாவநாசர் ஆலயம் உள்ளிட்ட பல தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
- மாநில செயலாளர்கள் சித்தார்த்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
- மாவட்ட செயலாளர் சின்ராஜ் நன்றி கூறினார்
கடலூர்:
சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை விடுதலை செய்யக்கோரி சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான தில்லை மக்கின் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி ராதா, மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜா. சம்பத்குமார் சம்பந்த மூர்த்தி, இளைஞர் அணி மாவட்ட தலைவர் அன்பு என்கின்ற அன்பரசன், நகர செயல் தலைவர் தில்லை. குமார், மாவட்ட செயலாளர் சின்ராஜ் நெல்சன், மாவட்ட ஓ.பி.சி. குமரவேல் ஆகியோர் முன்னிலை வைத்தனர். பரங்கிப்பேட்டை வட்டார தலைவர் சுந்தர்ராஜன் வரவேற்றார். மாநில செயலாளர்கள் சித்தார்த்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரங்கநாதன், மாவட்டத் துணைத்தலைவர்கள் குமார், வெங்கடேசன், சண்முகசுந்தரம், மாவட்ட பிரதிநிதி வேளாங்கண்ணி, மாவட்ட செயலாளர் சசிகுமார், நகர பொருளாளர் மிஸ்கின் பாய், அண்ணாமலை நகர் நகர தலைவர் சக்திவேல், பிரதிநிதி மீதிகுடி ராஜவேல், சிதம்பரம் சட்டமன்ற தொகுதி இளைஞரணி தலைவர் அபு சையத், கலை பிரிவு தலைவர்கள் பொன். மாதவ ஷர்மா நாராயணசாமி, இளைஞர் அணி ராஜ்குமார், பாலகிருஷ்ணன், லாரன்ஸ், தில்லை. சித்தார்த்தன், கலியபெருமாள், சக்திவேல், சஞ்சய், ஆனந்தராஜ், மகளிர் அணி மாவட்ட செயலாளர்கள் அஞ்சம்மாள், ருக்மணி, ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் சின்ராஜ் நன்றி கூறினார்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அமர்நாத்,இந்திய கம்யூனிஸ்டு கட்சி நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடலூர்:-
கடலூரில் மதச்சார்பற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தி.மு.க.மாநகர செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்றது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் மாதவன், காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமேனி, ஸ்ரீதர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் குளோப்,ம.தி.மு.க. சேகர், தி.க எழிலேந்தி, ம.ம.க ரஹிம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அமர்நாத்,இந்திய கம்யூனிஸ்டு கட்சி நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2 முறை நிறைவேற்றியும், கவர்னர் ஒப்புதல் அளிக்காமலும், தமிழ்நாட்டுக்கு வந்தது முதல்கவர்னர் ரவியின் பேச்சுகள் தமிழ்நாட்டில் சமூக சலசலப்பையும் தேவையற்ற பதற்றங்களையும் உருவாக்கு ம் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பொதுவெ ளியில் பேசி வருவதை கண்டித்தும் அனைத்து கட்சிகள் சார்பில் கடலூரில் வருகிற 12- ந்தேதி மாலை 5 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- இந்த ஆண்டு மகோற்சவ விழா இன்று தொடங்கி வரும் 21-ந் தேதி வரை நடக்கிறது.
- அனைத்து பக்தர்களும் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபாடு நடத்தி பயன் அடையுமாறு விழாக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அருள்மிகு வீர ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் உள்ளது. இங்கு பங்குனி மாத இறுதியில் மகோற்சவ விழா நடைபெறும். இதில் முக்கிய நிகழ்வாக தமிழ் புத்தாண்டு தினத்தன்று லட்சதீப விழா நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு மகோற்சவ விழா இன்று தொடங்கி வரும் 21-ந் தேதி வரை நடக்கிறது. இதில் தினமும் காலையில் ஆஞ்சநேயர் சாமிக்கு திருமஞ்சனமும், இரவில் சாமி வீதியுலாவும் நடைபெற உள்ளது.
மேலும், வருகின்ற 14-ந்தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் லட்ச தீப விழா நடக்கிறது. அன்று மாலை 6 மணியளவில் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் லட்ச தீபம் ஏற்றி வழிபடும் நிகழ்வு நடக்கவுள்ளது. இதில் அனைத்து பக்தர்களும் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபாடு நடத்தி பயன் அடையுமாறு விழாக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், தொடர்ந்து அன்று மாலை 8 மணியளவில் சாமி வீதியுலாவும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தலைமையிலான விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.
- கோதண்டராமபுரம் கிரா மத்தில் அமைந்துள்ள சேடப் பள்ளமேரி நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
- ஆழ்துளை கிணறுகள் இதன் மூலம் பாசன வசதி பெரும் என தெரிவித்தார்.
கடலூர்:
கடலூரை அடுத்த கோதண்டராமபுரம் கிராமத்தில் சேடப்பள்ளம் ஏரியை தனியார் நிறுவனம் மூலம் கரைகள் பலப் படுத்தப்பட்டது. இதனை கலெக்டர் பாலசுப்ர மணியம் பார்வையிட்டு ஆய்வு செய்து பேசினார். அவர் பேசும் போது, கோதண்டராமபுரம் கிரா மத்தில் அமைந்துள்ள சேடப் பள்ளமேரி நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியை 18.67 லட்சம் மதிப்பீட்டில், 720 மீட்டர் நீளம் மண்கரை செப்பனி டப்பட்டுள்ளது. 1939 சதுர மீட்டர் அளவில் கரை சேதம் ஏற்படாத வகையில் அமைக்கப் பட்டுள்ளது. 360 மீட்டர் நீளமுள்ள நீர் வரத்து வாய்க்கால் செப்பனிடப் பட்டு ஏரிக்கு தண்ணீர் தடை இன்றி வர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சேடப்பள்ளம் ஏரியின் கீழ் 65 ஹெக்டர் நிலங்கள் மற்றும் பெரியகாட்டுசாகை, அனுக்கம்பட்டு கிராமங்க ளில் உள்ள சுமார் 18 திறந்த வெளி கிணறுகள் மற்றும் 42 ஆழ்துளை கிணறுகள் இதன் மூலம் பாசன வசதி பெரும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அலுவலர்கள், மற்றும் அப்பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி தவறுதலாக பேசியதாக கூறி 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உள்ளது.
- மக்கள் பிரச்சனைக்காக ராகுல் காந்தி தொடர்ந்து போராடி வருவதோடு ஊழலுக்கு அப்பாற்பட்டவராக இருக்கும் தலைவராவார்..
கடலூர்:
காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகரன் கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்ததாவது:-
பா.ஜ.க. அரசு அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் ராகுல் காந்தியை சீண்டி வருகிறார். மேலும் பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி தவறுதலாக பேசியதாக கூறி 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உள்ளது. வரலாற்றில் இல்லாதது ஒன்றாகும்.ஆனால் இதற்கு ராகுல் காந்தி பயப்படவில்லை. ஆனால் மக்கள் பிரச்சனைக்காக ராகுல் காந்தி தொடர்ந்து போராடி வருவதோடு ஊழலுக்கு அப்பாற்பட்டவராக இருக்கும் தலைவராவார். ஆனால் பிரதமர் மோடி ராகுல் காந்தியை பார்த்து பயப்படுகிறார். மேலும் ராகுல் காந்தி அதானி மக்கள் பணத்தில் ஊழல் செய்ததாக கூறியதை பிரதமர் மோடியால் ஏற்க முடியாததால். காங்கிரஸ் கட்சி மக்களை முறையாக அணுகி அதன் மூலம் ஆட்சியைப் பிடிக்க எண்ணுகிறார்கள்.
பா.ஜ.க அரசு ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை மக்கள் மத்தியில் திணித்து வருவதோடு, மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் பல்வேறு அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ராகுல் காந்தியை அழித்துவிடலாம் என பா.ஜ.க. நினைத்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி பக்கம் தான் மக்கள் இருந்து வருகின்றனர். ஆகையால் ராகுல் காந்திக்காக இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டம் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் வருகிற 15-ந்தேதி தீப்பந்தம் ஏந்தியும், 20-ந்தேதி சாலை மறியல் போராட்டம், 25-ந்தேதி ெரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு தெரிவித்தார். அப்போது நிர்வாகிகள் வக்கீல் கலையரசன் ராமராஜ், கடல் கார்த்திகேயன், அன்பழகன், கலைச்செல்வன், வசந்த ராணி, ஏழுமலை, ஆறுமுகம் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- இருபுறமும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியும், சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- நேற்று முன்தினம் நள்ளிரவு சாலை ஓரத்தில் இருந்த பயணியர் நிழற்குடையை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் பெரிய கங்கணாங்குப்பத்திலிருந்து மஞ்சகுப்பம் மணிகூண்டு வரை தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றது. இருபுறமும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியும், சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சாலை விரிவாக்க பணிக்காக 43 வீடுகளை இடிப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் ஆல்பேட்டை பாபு தலைமையில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து எங்களுக்கு மாற்ற இடம் வழங்கினால், நாங்கள் வீட்டை காலி செய்கிறோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர். தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிசை மாற்று வாரியம் மூலமாக வீடுகள் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான முழுமையான சான்று பொதுமக்களிடம் வழங்கவில்லை.
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் நள்ளிரவு சாலை ஓரத்தில் இருந்த பயணியர் நிழற்குடையை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 43 வீடுகளை இடிக்க பொக்லைன் எந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து வந்தனர். அப்போது அங்கு திரண்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் எந்திரத்தை சிறை பிடித்து வீடுகளை இடிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் எங்கள் வீடுகளை இடிக்க வேண்டுமானால் எங்களுக்கு மாற்ற இடம் வழங்கியதற்கான சான்று வழங்கிய பிறகு இடியுங்கள். அதுவரை வீடுகளை இடிக்க அனுமதிக்க மாட்டோம். எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விரைவில் முதலமைச்சரை நேரில் சந்தித்து எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்க உள்ளோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- நீட் தேர்வுக்கான பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சிக்கான தொடக்க விழா நடந்தது.
- என்.எல்.சி.நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் சத்திய பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கடலூர்:
நெய்வேலி புதுநகர் 11-வது வட்டம் என்.எல்.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நீட் தேர்வுக்கான பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சிக்கான தொடக்க விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் என்.எல்.சி.நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் சத்திய பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். என்.எல்.சி. கல்வித்துறையின் பொது மேலாளரும் கல்வி செயலாளருமான நாகராஜன் அனைவரையும் அறிமுகப்படுத்தினார். என்.எல்.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை செந்தாமரை வரவேற்றார். நிகழ்ச்சியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சிகள் தொட ங்கப்பட்டன.நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு பயிற்சி கல்வி சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.






