search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Crimes"

    • பொதுவாக எல்லா தொழிலிலும் மோசடிகள் நடந்தாலும் இணையம் என்று வரும் போது பலருக்குப் புதிதாக இருப்பதாலும், நவீனத்தின் மீதுள்ள கவர்ச்சியாலும் எளிதில் ஏமாற்றப்படு கிறார்கள்.
    • ஆசைகாட்டி ஏமாற்றுதல், ஆபாசம் காட்டி மிரட்டுதல், போக்கு காட்டி திருடுதல் எனப் பல வழிகளில் குற்றங்கள் நடக்கின்றன.

    சேலம்:

    மாறி வரும் நவீன தொழில் நுட்ப யுகத்துக்கு ஏற்ப சமீப காலமாக இணையவழிக் குற்றங்களும் பெருகிக்கொண்டே வருகின்றன. பொதுவாக எல்லா தொழிலிலும் மோசடிகள் நடந்தாலும் இணையம் என்று வரும் போது பலருக்குப் புதிதாக இருப்பதாலும், நவீனத்தின் மீதுள்ள கவர்ச்சியாலும் எளிதில் ஏமாற்றப்படு கிறார்கள்.

    இணையத்தைப் பயன்படுத்துபவர்களிடம் நம்ப வைத்து பணம் பறித்தல், ஆசைகாட்டி ஏமாற்றுதல், ஆபாசம் காட்டி மிரட்டுதல், போக்கு காட்டி திருடுதல் எனப் பல வழிகளில் குற்றங்கள் நடக்கின்றன. இத்தகைய குற்றவாளிகள் மக்களை ஏமாற்ற மின்னஞ்சல், வாட்சப் என போலியான தகவல்களை அனுப்பு கின்றனர். இணையத்தைப் பயன்படுத்தாதவர்களுக்குக் எஸ்.எம்.எஸ்.அனுப்புகிறார்கள்.

    செல்போன் டவர் அமைத்துத் தருகிறோம், ஆஸ்திரேலியக் கப்பலில் வேலை வாங்கித் தருகிறோம், முத்ரா திட்டத்தில் மானிய மாகக் கடனளிக்கிறோம், வெளிநாட்டிலிருந்து சிறப்புப் பரிசு வந்திருக்கிறது அதைக் கொடுக்கிறோம், கொரோனா நிவாரணநிதி அளிக்கிறோம், வேலை வாய்ப்பு முகாம் நடத்துகிறோம் என்று நேரத்திற்கு ஏற்றவாறு பேசுவார்கள். நம்பிக்கையை அதிகரிக்க போலியான மின்னஞ்சல், போலியான இணையதளத்தைக் கூடக் கொடுப்பார்கள்.

    இவ்வாறாக பெரும் நம்பிக்கையை உருவாக்கி விட்டு முன்பணம் அல்லது சேவைக் கட்டணம் அல்லது சுங்கக் கட்டணம் என்று ஏதாவது சொல்லி, பணத்தைக் கட்டச் சொல் வார்கள். நமக்கும் ஆசை கண்ணை மறைப்பதால் கேள்வியே கேட்காமல் கேட்கும் தொகையை கட்டிவிடுவோம். அதன் பிறகே ஏமாற்றப்பட்டதை உணர்வோம்.

    சில நேரங்களில் பணமாகக் கேட்காமல் அறியாமையைப் பயன்படுத்த வங்கி அதிகாரியாக ஆதார் சரிபார்க்கிறோம், வருமான வரித்துறையினராக பான் சரிபார்க்கிறோம், ஆதார் - பான் அட்டை இணைக்கிறோம், தொலைத்தொடர்புத் துறையினராக கே.ஒய்.சி. சரிபார்ப்பு, கூரியர் வந்துள்ளது அடையாளத்தைச் சரி பார்க்கிறோம், கொரோனா தடுப்பூசி போடப் பதிவு செய்யச் சொல்லியோ கறாராகவும் பேசுவார்கள்.

    இவர்களை நம்பி பல தகவல்களைக் கொடுத்தால் ஏ.டி.எம்.கார்டின் எண், ரகசிய எண் என்று நேரடியாகக் கொடுத்து ஏமாறுபவர்கள் உண்டு. சில நேரம் ஓடிபி எண் மட்டும் கொடுத்து ஏமாறுபவர்களும் உண்டு. அட்டை என்னிடம் தானே இருக்கு எப்படி ஏமாற்ற முடியும் என நினைக்கலாம். ஆனால் அட்டை இல்லாமல் அட்டை எண்ணுடன் ரகசிய எண் மட்டும் கொடுத்து, பணத்தை எடுக்க முடியும். குறிப்பாக வெளிநாட்டு வங்கிகளில் பரிவர்த்தனை செய்தால் குறுஞ்செய்தி கூட இல்லாமல் பணம் மாற்றமுடியும்.

    வங்கியில் பணமில்லை என்றுகூட அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். உங்கள் ஓ.டி.பி. மூலம் கணக்கில் நுழைந்து, உங்கள் பெயரில் கடன் வாங்கி அந்தப் பணத்தைத் திருடிச் செல்லும் சம்பவங்களும் நடக்கின்றன. நீங்கள் கொடுக்காவிட்டால் கணக்கு முடக்கப்படும் என்று மெல்லிய மிரட்டல்கள் வந்தாலும் இத்தகைய தகவல்களைப் பகிரவேண்டாம். வங்கியைத் தொடர்பு கொண்டு நிலையறிந்து செயலாற்ற வேண்டும்.

    இதுபோன்ற இணையவழி குற்றங்களை தடுக்க அரசு சைபர் கிரைம் என்ற்ர பிரிவை ஏற்படுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது. போலீசார் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் அரசு பல்வேறு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது. வங்கிகளும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. எனினும் குற்றச்செயல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

    இந்த சூழலில் சேலத்தில் வேலை தருவதாக எஸ்.எம்.எஸ்.அனுப்பி மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.

    சேலம் மணியனூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி திவ்யா (வயது 36). இவரது செல்போனில் பகுதி நேர வேலை இருப்பதாக வந்த குறுந்தகவலை பார்த்து, அதில் வேலை கேட்டு மெயில் அனுப்பி உள்ளார்.

    அதை தொடர்ந்து இவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், சில நிபந்தனைகளை பணம் செலுத்தி செய்தால், பகுதி நேர வேலை கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

    இதை உண்மை என்று நம்பிய திவ்யா, அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.2 லட்சத்து 74 ஆயிரம் செலுத்தி அதன் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஆனால் அவர்கள் குறிப்பிட்டபடி எந்த ஒரு வேலையும் கொடுக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த திவ்யா, சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் சேலம் அழகாபுரம் ரெட்டியூர் பாலாஜி தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் வீரமணிகண்டன் (வயது 28). இவரது செல்போனுக்கு வந்த குறுந்தகவலை பார்த்து பகுதி நேர வேலைக்கு தொடர்பு கொண்டு உள்ளார். இவரும் அதே பாணியில் தொடர்பு கொண்ட மர்ம நபரின் பேச்சைக் கேட்டு ரூ.2 லட்சத்து 32 ஆயிரத்து 500 செலுத்தியுள்ளார்.

    ஆனால் இவருக்கும் எந்த ஒரு வேலையும் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வீர மணிகண்டன், சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் துண்டுப்பிரச்சாரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
    • வாட்ஸ் ஆப் முகப்பு பக்கத்தில் புகைப்படம் பதிவிடக்கூடாது,

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அறிவுரை யின்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (இணையவழி குற்றபிரிவு) சீனிவாசலு மேற்பார்வையில் இணையவழி குற்றபிரிவு போலீஸ் இனங கவிதா மற்றும் போலீசார் கடலுார் வெள்ளி கடற்கரையில் பொதுமக்களிடம் இணையவழி குற்றங்கள் தடுப்பது தொடர்பாக துண்டுப்பிரச்சாரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    ஆன்லைன் பணமோசடி, சமூக ஊடகங்களில் மேற்கொள்ளும் குற்றங்கள் குறித்தும், புதிய செயலிகளை அதன் உண்மை தன்மை அறியாமல் பயன்படுத்த கூடாது எனவும், தேவையற்ற எண்களில் இருந்து வரும் வீடியோ அழைப்பினை தவிர்த்தல், குறுச்செய்தியில் வரும் தேவையற்ற லிங்க் யை ஓபன் செய்ய கூடாது, வாட்ஸ் ஆப் முகப்பு பக்கத்தில் புகைப்படம் பதிவிடக்கூடாது, போலியான செயலி மூலம் பொருட்களை ஆர்டர் செய்ய வேண்டாம் ஆகிய இணையவழி குற்றங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இணையவழி குற்றம் தொடர்பாக இணையவழி இலவச உதவி எண் 1930 ம ற்றும் இணையதளத்திலும் புகார் பதிவு செய்யலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • குற்ற செயல்களை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சாலைகளில் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அறிவுறுத்திலின் பேரில்  மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணிகள் மற்றும் வாகன சோதனைகள், விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் முதுநகரில் குற்ற செயல்களை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் குற்ற பிரிவு சப் -இன்ஸ்பெக்டர்கள் ரகுராமன், ரவி மற்றும் போலீசார் வெளியூருக்கு செல்லும் மக்கள் பாதுகாப்பாக வீடுகளை பூட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    கோடை காலம் என்பதால் கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைப்பதை தவிர்க்க வேண்டும். சந்தேகப்படும் படியாக யாரையாவது பார்த்தால் வாகன பதிவு எண்களை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வீடு கடை மற்றும் அலுவலகங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும். வங்கிகளில் பணம் எடுக்க செல்லும் போது அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஏ.டி.எம். கார்டு மற்றும் குறியீடு எண்களை தெரிவிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் வாகனங்கள் மூலமும் முக்கிய சாலைகளில் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • நாகை நாகூர் ரோட்டில் வாகன தணிக்கை நடத்தப்பட்டது.
    • இதில் 25 வாகனங்கள்சிறை பிடிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ ஆணைப்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வழிகாட்டுதலிலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் நாகை மாவட்டத்தில் எல்லைக்கு உட்பட்ட நாகை நாகூர் ரோட்டில் இருசக்கர வாகனங்களின் சிறப்பு தணிக்கை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கே.பிரபு மற்றும் நாகூர் காவல் உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் நாகை போக்குவரத்து பிரிவு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் ஜார்ஜ் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் அடங்கிய குழுவில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

    தணிக்கையின் போது கல்லூரியின் பயிலும் மாணவர்கள் தலைக்கவசம் இல்லாமல் செல்போன் பேசிக் கொண்டும் வாக னத்தின் ஆவணங்கள் இன்றியும் 18 வயதுக்கு குறைவானவர்கள் இயக்கப்பட இயக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் குற்றங்களின் அடிப்படையில் 25 வாகனங்கள்சிறை பிடிக்கப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மீண்டும் சோதனை நடத்தப்படும் எனவும் என்பதை வட்டார போக்கு–வரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சைபர் குற்றவாளிகளால் பொதுமக்கள் பெரும் பணத்தை இழந்து வருகின்றனர்.
    • குற்றவாளிகளின் மொபைல் எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை சேமித்து வைத்துள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் சைபர்‌ குற்றவாளிகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

    விழுப்புரம் மாவட்ட‌ போலீஸ் அலுவலக வளாகத்தில், இணைய தள குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அறிமுகம் இல்லாத யாராவது ஒருவர் போனில் தொடர்பு கொண்டு பேசினால் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். தினம்தோறும் சைபர் குற்றவாளிகளால் பொதுமக்கள் பெரும் பணத்தை இழந்து வருகின்றனர். எவ்வளவோ விழிப்பு ணர்வு ஏற்படுத்தி னாலும் குற்றவாளிகள் எப்படியா வது ஏமாற்றி பொது மக்கள் வாழ்நாள் முழுதும் கஷ்டப்பட்டு சேமித்த மொத்த பணத்தையும் திருடி விடுகின்றனர். இதை தடுக்க 1930 என்ற ஹெல்ப் லைன் எண்ணை தொடர்பு கொண்டு உடனே புகார் செய்தால், இழந்த பணத்தை மீட்கலாம் என்ற விபரமும் பலருக்கு தெரிவதில்லை. தாமதமாக புகார் தந்தால் பணத்தை மீட்பது கடினம். மக்களின் விழிப்புணர்வுக்காக இந்திய அரசு வலைத் தளத்தில் இதுவரை பதிவான குற்றவாளிகளின் மொபைல் எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை சேமித்து வைத்துள்ளது. எனவே உங்களை தொடர்பு கொண்டவரின் மொபைல் எண், வங்கி எண் ஆகியவற்றை வலைத் தளத்தில் ஒருமுறை சோதித்து பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். குற்றங்கள் பற்றி புகார் அளிக்க சப்- இன்ஸ்பெக்டர் செல் எண்: 9498202106-ல் தகவல் தெரிவிக்கவும்.

    • காவல்துறை துணை கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி , 3 புதிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
    • குற்ற தடுப்பு நடவடிக்கைகளையும், போக்குவரத்து விதிமீறல்களையும் கண்காணிக்க மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

    பெருமாநல்லூர் : 

    பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் உள்ளது அய்யம்பாளையம். முக்கிய சந்திப்பு பகுதியான இங்கு திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அவிநாசி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி , 3 புதிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    இதன் மூலம் குற்ற தடுப்பு நடவடிக்கைகளையும், போக்குவரத்து விதிமீறல்களையும் கண்காணிக்க மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று பெருமாநல்லூர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் முருகன் தெரிவித்தார்.

    • பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு.
    • இறுதியாக மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    நீடாமங்கலம்:

    நாச்சியார் கோவில் அரசு மருத்துவமனை வளாகத்தில், திருநறையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, "பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள்" குறித்த விழிப்புணர்வு மற்றும் எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது? என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் நாச்சியார் கோவில் அரசு மருத்துவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் கலந்து கொண்டார்.

    மேலும் இந்நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் ஜெயந்தி, நாச்சியார் கோவில் இன்ஸ்பெக்டர் ரேகா ராணி, திருநறையூர் அரசு பெண்கள் பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்வின் இறுதியாக மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனையில் இருந்து தொடங்கி திருநறையூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேரணி முடிவுற்றது.

    • மாணவ-மாணவிகளுக்கு சைபர்கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    • குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு சமூகத்தில் நடக்கும் குற்றங்கள் குறித்து விளக்கமளித்தார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை, திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் ஏ.ஆர் .ஜெ. பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து நடத்திய விழிப்புணர்வு முகாம் ஏ.ஆர்.ஜெ பொறியியல் கல்லூரி அரங்கத்தில் நடை பெற்றது.

    இதில் ஏ.ஆர்.ஜெ. கல்வி குழுமத்தின் துணைத்த லைவரும் தாளாளருமான டாக்டர். ஜீவகன் அய்யநா தன் தலைமை தாங்கினார்.

    பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு பேசினார் .

    இதில் திருவாரூர் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ஸ்ரீபிரியா கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விளக்கி கூறினார் .

    மாவட்ட சமூக நலத்துறை சீப் கன்சஸ்டன்ட் மெர்லின் குழந்தைகளுக்கு மற்றும் இளைஞர்களுக்கு சமூகத்தில் நடக்கும் குற்றங்கள் குறித்து விளக்கி கூறினார்.

    நாம் நம்மில் மாற்றம் நிறுவனர் ஏ. ஆரோக்கியஜான் அமர்தாஸ் கலந்து கொண்டு பேசினார்.

    இதில் முனைவர் கே. செல்வராஜ் மேலாண்மை இயக்குனர் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு அடைந்தனர் .

    முன்னதாக துணை முதல்வர் முனைவர் ஜீ. மீனாட்சிசுந்தரம் வரவேற்புரையாற்றினார்.

    என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் சந்துரு நன்றி கூறினார்.

    • வடகரையை சேர்ந்த உமாமகேஸ்வரன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
    • குற்றசெயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை சேவப்ப நாயக்கன்வாரி வடகரையை சேர்ந்தவர் உமாமகேஸ்வரன் (வயது 24). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரின் குற்றசெயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் கலெக்டர் உத்தரவுப்படி உமாமகேஸ்வரை போலீசர் குண்டல் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

    இதேப்போல் சேவப்பநாயக்கன்வாரியை ேசர்ந்த அருண் (25), நடராஜன் (21), சக்தி (20), தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை நடராஜபுரத்தை சேர்ந்த அந்தோணிபிச்சை (35), சீனிவாசபுரம் செக்கடி ரோட்ட சேர்ந்த மணிகண்டன் (35), தினேஷ் (24), விஜய் (30), கார்த்திக் (20), அஜித் (24) ஆகிய 9 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி, கணினி வழி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
    • தன்னார்வ அமைப்புகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி, கணினி வழி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற குற்றங்களை கையாளும் வகையில் இந்திய அரசு சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதுபோன்ற குற்றங்கள் தொடர்பாக புகார் அளிக்க நிர்பயா நிதியின் கீழ் தேசிய இணைய வழி குற்றங்கள் முறையிடல் வலைதளமானwww.cybercrime.gov.inஎன்ற இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது. இணையவழி நிதி மோடிகள் தொடர்பாக புகார் அளிக்க தேசிய கட்டணமில்லா உதவி அழைப்பு எண்.1930 செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணைய வழி குற்றங்களை தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் அரசு அலுவலர்கள், தன்னார்வ அமைப்புகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் கூறியுள்ளார்.

    ×