search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Motor Vehicle"

    • ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்தியா, போக்குவரத்து செயலாக்கம் அலுவலர் சரவணன் மற்றும் அலுவலர்கள் ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர். இதில் 20-க்கும் மேற்பட்ட பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்கள் மற்றும் பம்பர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்தியா, போக்குவரத்து செயலாக்கம் அலுவலர் சரவணன் மற்றும் அலுவலர்கள் ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது தடையை மீறி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர். இதில் 20-க்கும் மேற்பட்ட பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்கள் மற்றும் பம்பர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் சொந்த பயன்பாட்டுக்கு வாங்கிய கார்களை வாடகைக்கு பயன்படுத்தியதாக 4 கார்களை பிடித்து விசாரணை நடத்திய மோட்டார் வாகன ஆய்வாளர் 2 கார்களுக்கு அபராதம் விதித்தனர். கண்ணை கூசும் ஒளிபட்டைகள் பொருத்தியது உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு ரூ.83 ஆயிரத்து 500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தார். 

    • அந்தியூர் பகுதிக்கு பகுதி நேர மோட்டார் வாகன அலுவலகம் அமைத்து தர வேண்டும்.
    • வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர், பர்கூர், சின்னத்தம்பி பாளையம், வெள்ளையம்பாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், செல்லம் பாளையம், நால்ரோடு, செம்புளிசாம்பாளையம், புதுமேட்டூர், முனியப்பம்பாளையம், நகலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பவானி மோட்டார் வாகன அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான வாகனங்கள் வாகன புதுப்பிப்பதற்கும், புதிய வாகனங்கள் பதிவு செய்வதற்கும் மற்றும் விபத்து ஏற்படும் வாகனங்களை கொண்டு சென்று காண்பிப்பதற்கும் ஏராளமான வண்டிகள் செல்கின்றது.

    மேலும் வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கும் செல்ல வேண்டி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தியூர் பகுதிக்கு கோபியில் மோட்டார் வாகன அலுவலகம் செயல்பட்டு வந்தது. அங்கிருந்து பவானிக்கு அலுவலகம் பிரிக்கப்பட்டு அங்கு வாகனங்கள் அனைத்தும் பவானியில் காண்பிக்கப்பட்டு வருகிறது.

    இதில் பர்கூர் மலைப்பகுதியில் இருந்து பவானிக்கு வண்டிகளை புதுப்பிக்க செல்ல வேண்டுமென்றால் 70 கிலோ மீட்டருக்கு மேல் ஆகிறது.மேலும் தற்போது அந்தியூர் தாலுகாவாக பிரிக்கப்பட்டதையடுத்து அந்தியூர் பகுதிக்கு மோட்டார் வாகன அலுவலகம் கொண்டு வர வேண்டும் என்றும்,

    மேலும் அந்தியூர் பகுதியில் இருந்து தான் இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவில் பவானிக்கு சென்று வருகிறது இங்கு வாடகை கார்,இன்ப சுற்றுலா செல்ல தேவைப்படும் டிராவல்ஸ் டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் உள்ளது.

    அதே போல் அந்தியூரை சுற்றி செங்கல் சூளைகள் இருப்பதினால் லாரிகளும் அதிக அளவில் இயங்கி வருகிறது .இருசக்கர வாகனங்களும் அதிக அளவில் புதியதாக வாங்குபவர்கள் பதிவு செய்வதற்கு பவானி செல்ல வேண்டி உள்ளது .

    இதனை கருத்தில் கொண்டு அந்தியூர் பகுதிக்கு பகுதி நேர மோட்டார் வாகன அலுவலகம் அமைத்து தர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • புதுவை சோழிய செட்டியார் சமுதாய நலக்கூடத்தில் நடைப்பெற்றது.
    • இருசக்கர வாகனங்களின் தொழில் நுட்பம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    இருசக்கர மோட்டார் வாகனம் பழுது நீக்குவோர் மற்றும் உதவியாளர்கள் நலச்சங்கத்தின் சிறப்பு பொதுக்கூட்டம் புதுவை சோழிய செட்டியார் சமுதாய நலக்கூடத்தில் நடைப்பெற்றது.

    நிகழ்ச்சியில் புதுச்சேரி கலாம் பசுமை பாதுகாப்பு இயக்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கினர்.

    மேலும் இருசக்கர வாகனங்களின் தொழில் நுட்பம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • நாகை நாகூர் ரோட்டில் வாகன தணிக்கை நடத்தப்பட்டது.
    • இதில் 25 வாகனங்கள்சிறை பிடிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ ஆணைப்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வழிகாட்டுதலிலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் நாகை மாவட்டத்தில் எல்லைக்கு உட்பட்ட நாகை நாகூர் ரோட்டில் இருசக்கர வாகனங்களின் சிறப்பு தணிக்கை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கே.பிரபு மற்றும் நாகூர் காவல் உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் நாகை போக்குவரத்து பிரிவு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் ஜார்ஜ் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் அடங்கிய குழுவில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

    தணிக்கையின் போது கல்லூரியின் பயிலும் மாணவர்கள் தலைக்கவசம் இல்லாமல் செல்போன் பேசிக் கொண்டும் வாக னத்தின் ஆவணங்கள் இன்றியும் 18 வயதுக்கு குறைவானவர்கள் இயக்கப்பட இயக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் குற்றங்களின் அடிப்படையில் 25 வாகனங்கள்சிறை பிடிக்கப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மீண்டும் சோதனை நடத்தப்படும் எனவும் என்பதை வட்டார போக்கு–வரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மத்திய மோட்டார் வாகனங்கள் சட்டத்தை திருத்தியிருக்கிறது. #vehicles #RoadSafety



    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989இல் திருத்தங்களை மேற்கொண்டு இருக்கிறது. புதிய திருத்தங்களின் படி ஏப்ரல் 1, 2019ம் தேதியில் இருந்து விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களிலும், உயர்-பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் (நம்பர் பிளேட்) பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.

    வாகனங்களை தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் சார்பில் உயர்-பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் வாகன விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும். இது வாகனத்தில் தனியே பொருத்தப்படும் மூன்றாவது பதிவு குறியீடாக இருக்கும். தற்போதைய வாகனங்களுக்கும் புது பாதுகாப்பு பதிவு எண் பலகைகளை பெற முடியும். 

    எனினும், புதிய பதிவு எண் பலகைகளை பெறும் போது தற்சமயம் பயன்படுத்தப்படும் பதிவு எண் பலகைகளை திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் அல்லது அழிக்கப்பட வேண்டும். உயர்-பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் காணாமல் போகும் அல்லது களவாடப்படும் வாகனங்களை டிராக் செய்து கண்டறிய பயன்படுத்தலாம்.



    உயர்-பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் 15 ஆண்டு கியாரண்டியுடன் வழங்கப்படுகிறது. இதனிடையே உயர்-பாதுகாப்பு பதிவு எண் பலகை உடைந்து போகும் பட்சத்தில் பதிவு எண் பலகையை வழங்குவோர் அதனை மாற்றிக்கொடுக்க வேண்டும். அனைத்து உயர்-பாதுகாப்பு பதிவு எண் பலகைகளும் குரோமியம் சார்ந்த ஹோலோகிராமில் அசோக சக்கரம் பொறிக்கப்பட்டு இருக்கும்.

    அசோக சக்கரம் பதிவு எண் பலகைகளின் இடதுபுறமாக பொறிக்கப்பட்டு இருக்கும். இதனுடன் பத்து இலக்கு பிரத்யேக பதிவு எண் லேசர் பிரான்டு செய்யப்பட்டு இடதுபுறமாக பொறிக்கப்பட்டு இருக்கும். பதிவு எண்களின் மேல் இந்தியா (India) என்ற வார்த்தை அச்சிடப்பட்டு இருக்கும்.

    பதிவு எண்களைத் தவிர கூடுதலாக குரோமியம் ஹோலோகிராம் ஸ்டிக்கர் ஒன்று பதிவு எண் பலகையின் கீழ் இடதுபுறமாக அச்சிடப்பட்டு இருக்கும். இந்த ஸ்டிக்கரில் பதிவு எண், பதிவு செய்யும் அதிகாரி மற்றும் பிரத்யேக குறியீட்டு எண் மற்றும் என்ஜின் சேசிஸ் எண் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கும். #vehicles #RoadSafety
    ×