என் மலர்
கடலூர்
- பாவாடை மகள் நிஷா மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மனு ஒன்றை அளித்தார்.
- 3முறைவிண்ணப்பித்தும் எனக்கு ஜாதி சான்றிதழ் அளிக்காமல் நிராகரித்து, எங்களை எங்களை அலைக்கழிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் கிராமத்தைச் சேர்ந்த பாவாடை மகள் நிஷா மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியுள்ளதாவது:-
எனது அம்மா ஆசனூர் கிராமத்தை சேர்ந்தவர். எனது தந்தை கள்ளக்குறிச்சி அருகே உள்ள விளம்பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர். எனது தந்தை, தாய் 2 பேரும் நான் கருவில் இருக்கும்போது பிரிந்து விட்டதால், எனது தாயார் ஆசனூர் கிராமத்திற்கே வந்து விட்டார். நாங்கள் மலைக்குறவன் சமுதாயத்தை சார்ந்தவர்கள். எங்களின் தொழில் பன்றி வளர்ப்பு மற்றும் கூடை பின்னுதல், வேட்டை ஆடுதல் ஆகும். தற்போது நான் ஜாதி சான்றிதழ் வேண்டி ஆன்லைனில் விண்ணப்பிக்க, தந்தையின் ஜாதி சான்றிதழ் அளிக்குமாறு தெரிவிக்கிறார்கள். எனது தந்தை பள்ளிக்கு சென்றதில்லை. அவரிடம் எந்த ஆவணமும் இல்லை.
எனது தந்தையின் உடன் பிறந்த தம்பி பழனிவேல் என்பவரின் மகன் அனிஷ் ஜாதி சான்றிதழ் உள்ளது. அதனை வைத்து 3 முறை விண்ணப்பித்தும் எனக்கு ஜாதி சான்றிதழ் அளிக்காமல் நிராகரித்து, எங்களை அலைக்கழிக்கின்றனர். இதனால் பள்ளி படிப்பை தொடர்வதிலும், கல்லூரி படிப்பை படிக்க முடியாமல் போகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. தாங்கள் தயவுகூர்ந்து இதன் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, உடனே எனக்கு ஜாதி சான்றிதழ் வழங்கி பிளஸ் -1 படிப்பினை தொடர வழிவகை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. கூடுதலாக குறிப்பு என எழுதி தங்களிடம் மனு அளிப்பது இது 3-வது முறை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் இவரது அண்ணன் ஈஸ்வரர் தனது கல்லூரி படிப்பை தொடர ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேணடும் என மற்றொரு மனுவை கலெக்டரிடம் வழங்கினார். இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
- கமலம் (வயது 80). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்
- நேற்று இரவு வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அதன் அருகாமையில் உட்கார்ந்திருந்தார்
கடலூர்:
புவனகிரி அடுத்த வடக்குத்திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கமலம் (வயது 80). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அதன் அருகாமையில் உட்கார்ந்திருந்தார். அப்பொழுது சேலை தீப்பற்றியது. இதனை மூதாட்டி கவனிக்காததால், தீ மள மளவென பரவி உடல், கை, கால்கள் முற்றிலும் எரிந்தது.
இவரின் அலரல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். இவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இதற்கு, தி.மு.க. நகர துணைச் செயலாளர் வக்கீல் பாரி இப்ராஹிம் முன்னிலை வகித்தார்.
- வழக்கறிஞர் இள.புகழேந்தி இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
கடலூர்:
கடலூர் மேற்கு மாவட்டம், விருத்தாசலம் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் சிறப்பு முகாம், விருத்தாசலம் ஒன்றியச் செயலாளர் வேல்முருகன் தலைமையில், விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை தேரடி வீதியில் நடந்தது இதற்கு, தி.மு.க. நகர துணைச் செயலாளர் வக்கீல் பாரி இப்ராஹிம் முன்னிலை வகித்தார். முன்னதாக, நகர செயலாளர் செல்வம் வரவேற்றார். கடலூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. தேர்தல் பொறுப்பாளருமான வழக்கறிஞர் இள.புகழேந்தி இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் சிறப்பு முகாமினை தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வெங்கடாஜலபதி, ஒன்றிய துணை செயலாளர் முத்துவேல், நகர அவைத் தலைவர் முஹம்மது யூசுப், பொருளாளர் சேட்டு, ஒன்றிய பிரதிநிதி கோ.மணி, சோழப்பிரகாஷ், டைலர் நடராஜன், டைலர் கணேசன், ஜெயசக்தி, கண்ணன், இளைஞரணி விக்ரம், ராஜேஷ் உள்ளிட்ட வார்டு கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் குரு தலைமையில் குள்ளஞ்சாவடி கருமாச்சிபாளையத்தில் நடைபெற்றது.
- சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் கடலூர் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்
கடலூர்:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் குறிஞ்சிப்பாடி மைய ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் குரு தலைமையில் குள்ளஞ்சாவடி கருமாச்சிபாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் கடலூர் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் நகர செயலாளர் அம்பேத் வரவேற்றார். இதில் நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, பாலமுருகன், வீரபாபு, வரதராஜன், சேகர், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஜான்சன், முரளி, சுந்தர், கௌசல்யா, நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஏப்ரல் 14-ந்தேதி கடலூரில் நடைபெறும் ஜனநாயகம் காப்போம் பேரணியில் பெருந்திரளாக பங்கேற்பது குறிஞ்சிப்பாடி பகுதியில் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்கள் மீது 110-ன் கீழ் வழக்குபதிவு செய்வதை போலீசார் நிறுத்த வேண்டும். சிப்காட் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மணமகன் தமிழ்முறைப்படி பட்டு வேஷ்டி, சட்டை அணிந்திருந்தார்.
- மணமகள் பட்டு புடவை, தங்க அணிகலன் அணிந்து இருந்தார்.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர். இவருக்கும் சீன நாட்டை சேர்ந்த யீஜியோ என்ற பெண்ணுக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இது நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு இரு குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி இன்று காலை கடலூர் முதுநகரில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சம்மதத்துடன், இந்திய கலாச்சாரத்துடன் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. மணமகன் பாலச்சந்தர் மணமகள் சீன நாட்டைச் சேர்ந்த யீஜியோவிற்கு தாலி கட்டினார்.
மணமகன் தமிழ்முறைப்படி பட்டு வேஷ்டி, சட்டை அணிந்திருந்தார். மணமகள் பட்டு புடவை, தங்க அணிகலன் அணிந்து இருந்தார். யாக குண்டம் அமைத்து மந்திரம் முழங்க மங்கள இசையுடன் திருமாங்கல்யம் கட்டி திருமணம் நடைபெற்றது. இதனை மணமகளின் உறவினர்கள், மணமகனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆனந்தமாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இது குறித்து மணமகன் பாலச்சந்தர் கூறியதாவது:-
சீனா மற்றும் பாங்காங்கில் தொழில் முனைவராக இருந்து வருகின்றேன். அப்போது எனக்கும் சீனா நாட்டை சேர்ந்த யீஜியோவிற்கும் சமூக வலைத்தளங்கள் (ஆப்) மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இந்த தொடர்பு நாளடைவில் நல்ல நட்பாக மாறி பின்னர் காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து 2பேரும் மனதளவில் காதல் ஏற்பட்டு இந்திய கலாச்சாரம் மற்றும் தமிழ் முறைப்படி பெற்றோர்கள் சம்மதத்துடன் முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எண்ணியதால் இன்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு முன்பு இருந்த காதலுடன் எங்களது வாழ்க்கை பயணத்தை ஆனந்தமாக கடப்போம் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவர்களது திருமணத்தை தொடர்ந்து பாலச்சந்தர் சகோதரர் பாலமுருகனுக்கும் திருமணம் நடைபெற்றது. சினிமா படத்தில் காண்பது போல் ஒரே மேடையில் ஒரே நாளில் அண்ணன் மற்றும் தம்பிக்கு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். கடல் கடந்து காதல் மலர்ந்து பெற்றோர்கள் சம்மதத்துடன் சீன நாட்டைச் சேர்ந்த பெண்ணை கடலூரை சேர்ந்த பாலச்சந்தர் இந்திய கலாச்சார படியும் தமிழ் முறைப்படியும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மது போதை உச்சத்திற்கு சென்ற சேத்தியாத்தோப்பு டாஸ்மாக் ஊழியர் வீடு திரும்ப முடிவு செய்தார்.
- அந்த பஸ்சில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகளிடமும் போதையில் இருந்த சேத்தியாத்தோப்பு டாஸ்மாக் ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கடலூர்:
சேத்தியாத்தோப்பு டாஸ்மாக்கில் விற்பனை யாளராக பணிசெய்யும் வாலிபரும், சிதம்பரம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணி செய்யும் வாலிபரும் சேர்ந்து சிதம்பரம் பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று இரவு மது அருந்தினர். இதில் மது போதை உச்சத்திற்கு சென்ற சேத்தியாத்தோப்பு டாஸ்மாக் ஊழியர் வீடு திரும்ப முடிவு செய்தார். சிதம்பரம் பஸ் நிலையத்தினுள் சென்ற அவர், வேலூரில் இருந்து கடலூர் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். அங்கு பணியில் இருந்த கண்டக்டரிடம், வடலூருக்கு டிக்கெட் கேட்டார். அப்போது இந்த பஸ் கடலூருக்கு செல்கிறது. வடலூருக்கு செல்லாது என்று கண்டக்டர் கூறினார். அப்புறம் எதற்கு வடலூர் என பஸ்சில் எழுதப்பட்டுள்ளது என சேத்தியாத்தோப்பு டாஸ்மாக் ஊழியர் கண்டக்டரிடம் கேட்டுள்ளார். இதற்கு கடலூரில் இருந்து வேலூருக்கு செல்லும் போது வடலூர் வழியாக செல்லும், வேலூரில் இருந்து கடலூர் வரும் போது வடலூருக்கு போகாது என கண்டக்டர் போதையில் இருந்த டாஸ்மாக் ஊழியருக்கு விளக்கமளித்தார்.
இதனை ஏற்காத டாஸ்மாக் ஊழியர், தவறான வழித்தடத்தில் பஸ் இயக்குகிறாயா, வடலூர் வழியாக சென்று என்னை இறக்கிவிட வேண்டும் என்று கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அந்த பஸ்சில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகளிடமும் போதையில் இருந்த சேத்தியாத்தோப்பு டாஸ்மாக் ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதில் செய்வதறியாது திகைத்த பஸ் டிரைவர், பஸ்சினை சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு பஸ்சை நிறுத்திய டிரைவர், கண்டக்டர் பணியில் இருந்த போலீசாரிடம் நடந்த விஷயங்களை கூறினர்.
இதையறிந்த போதையில் இருந்த டாஸ்மாக் ஊழியர் பஸ்சில் இருந்து இறங்கி தப்பியோட முயற்சித்தார். இதில் நிலைதடுமாறிய அவர், கீழே விழுந்தார். அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த வெளியில் வந்த போலீசாரிடம், தன்னை டிரைவர், கண்டக்டர் இருவரும் சேர்ந்து தாக்கி விட்டதாக புகார் அளித்தார் அப்போது திடீரென சேத்தியாத்தோப்பு டாஸ்மாக் விற்பனையாளர் பஸ்சின் முன்பாக சாலையில் படுத்து, பஸ்சினை எடுக்க முடியாமல் வழிமறித்தார். அப்போது அங்கு வந்த சிதம்பரம் டாஸ்மாக் விற்பனையாளர், இவருடன் சேர்ந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் எரிச்சலடைந்த போலீசார், 2 பேரையும் குண்டு கட்டாக தூக்கி சாலையில் இருந்து அப்புறப்படுத்தி, அரசு பஸ்சினை போதை டாஸ்மாக் ஊழியர்களிடம் இருந்து விடுவித்தனர். மேலும், அவர்களை போலீஸ் நிலையத்தில் அமரவைத்து, 2 பேருக்கும் போதை தெளிந்தவுடன் அவர்களிடம் கடிதம் வாங்கி கொண்டு விடுவித்தனர். இந்த வீடியோ சிதம்பரம் பகுதியில் சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- சுப்பு ராயலு (வயது 80). விவசாயி. தனது நிலத்தில் மூங்கில் மர குப்பைகளை எரித்துகொண்டு இருந்தார்.
- அப்போது மயங்கிய அவர் தீயில் விழுந்தார். இதனால் அவருக்கு முதுகில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
கடலூர்:
பண்ருட்டி ஒன்றியம் கீழக்குப்பம் நாச்சியார் தெருவை சேர்ந்தவர் சுப்பு ராயலு (வயது 80). விவசாயி. கடந்த 4-ந்தேதி தனது நிலத்தில் மூங்கில் மர குப்பைகளை எரித்துகொண்டு இருந்தார். அப்போது மயங்கிய அவர் தீயில் விழுந்தார். இதனால் அவருக்கு முதுகில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இது குறித்து முத்தாண்டிக் குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் கம்மியம்பேட்டை பகுதியில் ெரயில்வே கேட் உள்ளது.
- திடீரென்று ெரயில்வே கேட்டில் பழுது ஏற்பட்டதால் சரியான முறையில் ெரயில்வே கேட் மூடவில்லை.
கடலூர்:
கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் கம்மியம்பேட்டை பகுதியில் ெரயில்வே கேட் உள்ளது. இதன் அருகில் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையம் உள்ளன. ெரயில்கள் வந்து செல்லும் நேரத்தில் கம்பியம் பேட்டை ெரயில்வே கேட் மூடப்படும். ெரயில்வே கேட் மூடும் சமயத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பது வழக்கம். மேலும் கம்மியம்பேட்டை ெரயில்வே கேட் அடிக்கடி பழுது ஏற்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை மன்னார்குடி - திருப்பதி எக்ஸ்பிரஸ் கடலூர் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது கடலூர் கம்மியம் பேட்டையில் ெரயில்வே கேட்டை மூடும் பணியில் ஊழியர் ஈடுபட்டு வந்தார். திடீரென்று ெரயில்வே கேட்டில் பழுது ஏற்பட்டதால் சரியான முறையில் ெரயில்வே கேட் மூடவில்லை. இதன் காரணமாக தண்ட வாளத்தில் சிக்னல் கிடைக்க வில்லை. சிக்னல் கிடைக்காத தால்ரெயில் டிரைவர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் ெரயிலை நிறுத்தினார். இதனை தொடர்ந்து ெரயில்வே கேட் கீப்பர் ெரயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில் ஊழி யர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ெரயில்வே கேட்டில் ஏற்பட்ட பழுதை நீண்ட போராட்டத்திற்கு பிறகு சரி செய்தனர். அதன் பின்னர் மன்னார்குடி- திருப்பதி எக்ஸ்பிரஸ் ெரயில் சுமார் அரை மண நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது ரெயில்வே கேட் பழுதானதால் கடலூர் கம்மியம்பேட்டை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும் சென்னை மற்றும் சிதம்பரத்தி லிருந்து வரக்கூடிய அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் வெளியூருக்கு செல்லக்கூடிய வாகனங்கள் ஜவான் பவன் சாலை, கம்மியம்பேட்டை பாலம், செம்மண்டலம் வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது
- மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
கடலூர்:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். தொகுதி அமைப்பாளர் பன்னீர் அனைவரையும் வரவேற்றார். ஒன்றிய பொரு ளாளர் சம்பத், ஒன்றிய துணை செயலாளர்கள் கண்ணன், ஜானகிராமன், செல்வம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் நிர்வாகிகள் குணத்தொகையண், பால முருகன், தமிழரசன், அம்பேத், சக்திமுருகன், மாரிமுத்து, லிங்கேஷ், சிவசக்தி, பிரகாஷ், பழனி நாதன் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வருகிற ஏப்ரல் 14 -ந் தேதி கடலூரில் நடைபெறும் ஜனநாயகம் காப்போம் பேரணியில் பெருந்திரளாக கலந்து கொள்வது. கடலூர் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் அனைத்து வாக னங்களையும் புதுச்சேரி போலீசார் ஒரு தலை பட்சமாக பிடித்து அபராதம் விதிப்பதை கண்டித்து முள்ளோடையில் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
- கடந்த 2019-ம் ஆண்டு கூட்டுறவு துறை அமைச்சர் அலுவலகத்தில் 6 மாதம் பணி செய்யும் வாய்ப்பு ரகுவிற்கு கிடைத்தது.
- சம்பவம் நடந்த சில மணிநேரங்களில் தப்பிச் சென்ற 2 பேரும் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் பகுதியில் நடமாடியதை கண்டுபிடித்தனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் லால்கான் தெருவில் வசித்து வருபவர் ஜெயசந்திரராஜா (வயது 56). சிதம்பரத்தை அடுத்த மேல் அனுவம்பட்டு கிராமத்தை சொந்த ஊராக கொண்ட இவர் சிதம்பரத்தில் தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இவர் ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார்.
இவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோவிலை சேர்ந்த ரகு என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்தது. இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணி செய்து, அங்கிருந்து சென்னையில் உள்ள கூட்டுறவுத் துறைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அப்போது கடந்த 2019-ம் ஆண்டு கூட்டுறவு துறை அமைச்சர் அலுவலகத்தில் 6 மாதம் பணி செய்யும் வாய்ப்பு ரகுவிற்கு கிடைத்தது. இதனால் அங்குள்ள அமைச்சரின் உதவியாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் பழகும் வாய்ப்பு ரகுவிற்கு கிடைத்தது.
இதையடுத்து உங்கள் பகுதியை சேர்ந்த இளைஞர்களை கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் பல இடங்களில் பணியில் சேர்த்து விடலாம். இதற்கு பணம் பெற்று நாம் இருவரும் பிரித்துக் கொள்ளலாம் என்று ஜெயமூர்த்திராஜாவிடம் ரகு கூறியுள்ளார்.
இதனை நம்பிய ஜெய மூர்த்திராஜா, சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பல இளைஞர்களிடம் பணம் பெற்று ரகுவிடம் கொடுத் துள்ளார். வருடங்கள் ஓடின. ஆட்சி மாற்றமும் வந்தது. இதனால் பணம் கொடுத்த இளைஞர்கள் ஜெயமூர்த்திராஜாவிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். இவரும் ரகுவிடம் கேட்டுள்ளார். இதனால் செய்வதறியாது திகைத்த ரகு 150 நாட்கள் விடுமுறையில் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து கூட்டுறவுத் துறையில் இருந்து ரகு, தூத்துக்குடிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.
இதனை அறிந்த ஜெயமூர்த்திராஜா, பணம் கொடுத்த இளைஞர்களை அழைத்துக் கொண்டு தூத்துக்குடிக்கு சென்றார். விரைவில் பணத்தை திருப்பித் தருவதாக கூறிய ரகு, அனைவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ரகு, பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரவின்குமார் (35) என்ப வரிடம் அனைத்து விஷயங்களையும் கூறியுள்ளார். பிரவின்குமாரின் மனைவி வக்கீல் என்பதால், அவர் உதவியுடன் திருவிடை மருதூர் முகமது யாசின் (28) என்ற குற்றவாளியை பிரவின்குமார் அடையாளம் கண்டார்.
அவர் உதவியுடன் கூலிப்படையை வைத்து ஜெயமூர்த்திராஜாவை கொலை செய்ய ரகு திட்டமிட்டார். இதையடுத்து கடந்த மார்ச் 20-ந்தேதி பிரவின்குமார், முகமது யாசின் ஆகியோர் சிதம்பரம் வந்து ஜெயமூர்த்திராஜாவை கண்காணித்தனர். தொடர்ந்து கும்பகோணத்தைச் சேர்ந்த பாலு என்ற டாடி பாலு, மணிகண்டன், கட்ட பொம்மன் என்ற கலக்கி, ஆறுமுகம் ஆகியோார் மார்ச் 21-ந்தேதி சிதம்பரம் வந்தனர்.
இவர்கள் 6 பேரும் 3 மோட்டார்சைக்கிளில் ஜெயமூர்த்தி ராஜாவை பின்தொடர்ந்தனர். காலை முதல் மாலை வரை இவரை பின்தொடர்ந்ததில் மார்ச் 21-ந்தேதி மாலை 6.30 மணியளவில் சிதம்பரம் மானாசந்தில் பீர் பாட்டிலால் தாக்கி கொல்ல முயற்சித்தனர். அப்போது ஜெயமூர்த்திராஜாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவரவே, பயந்த போன 6 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டனர்.
இதில் ஜெயமூர்த்திராஜா கொல்லப்படவில்லை என்பதை அறிந்த ரகு, பிரவின் குமார், முகமது யாசின் ஆகியோர் மீது கோபமடைந்து திட்டியுள்ளார். விரைவில் தீர்த்து கட்டி விடுவதாக ரகுவிடம் உறுதியளித்த 2 பேரும் மாற்று திட்டம் திட்டினர்.
அதன்படி அரியலூர் மாவட்ட வக்கீல் ஒருவர் மூலமாக முகமது யூனுஸ் என்ற அப்பாஸ் (20) என்ப வருடன் தொடர்பு ஏற்பட்டது. அவரை அழைத்துக் கொண்டு மார்ச் 30-ந்தேதி சிதம்பரம் வந்தனர். அங்கு தங்கி ஜெயமூர்த்தி ராஜாவை 2 நாட்கள் கண்காணித்து, 3 இடங்களை தேர்வு செய்து, கொலை செய்ய திட்டம் வகுத்தனர்.
அதன்படி கடந்த 4-ந்தேதி முதல் ஜெயமூர்த்தி ராஜாவை கொலை செய்ய பின் தொடர்ந்தனர். அனைத்து இடங்களிலும் பொது மக்களின் நடமாட்டம் இருக்கவே, கொலை செய்ய முடியாமல் திணறினர். இதையடுத்து இரவு நேரத்தில் வெளியில் வந்தால் கொலை செய்ய திட்டமிட்டு தனியார் விடுதி வாசலில் காத்திருந்தனர். இரவு முழுவதும் ஜெய மூர்த்திராஜா வெளியில் வரதாதால் கூலிப்படையினர் ஏமாற்றத்துடன் வெளியில் காத்திருந்தனர்.
ஏப்ரல் 5-தேதி காலை விடுதியை விட்டு வெளியில் வந்தவர், காலை 10.30 மணியளவில் சிதம்பரம் அடுத்த மானாசந்து பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அவரை பின்தொடர்ந்த முகமது யூனுஸ், குருமூர்த்தி ஆகியோர் வழிமறித்து கத்தியால் வெட்டினர். இதில் தலையில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து கத்தியால் வெட்ட முயற்சித்த போது அவரது கை விரல் துண்டானது. மேலும், இதில் ஜெயமூர்த்திராஜா ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்தார். அவர் இறந்து விட்டதாக நினைத்து, கூலிப்படையினர் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
இது தொடர்பாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்பேரில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கூலிப் படையினரை தேடும் பணி நடைபெற்றது. குறிப்பாக அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி.க்களை ஆய்வு செய்த போலீசார், அதில் கிடைத்த வீடியோவை வைத்து குற்றவாளிகள் அங்கிருந்து வெளியேறும் அனைத்து சாலைகளில் உள்ள சி.சி.டி.வி.க்களை ஆய்வு செய்தனர். குறிப்பாக 7 மாவட்ட போலீசாரின் உதவியுடன் சி.சி.டி.வி.க்கள் ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது சம்பவம் நடந்த சில மணிநேரங்களில் தப்பிச் சென்ற 2 பேரும் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் பகுதியில் நடமாடியதை கண்டு பிடித்தனர். உடனடியாக சிறிது நேரத்தில் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் வேறு உடையுடன், வேறு மோட்டார் சைக்கிளில் சென்றதை தனிப்படை போலீசார் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கூலிப்படையினரை ஒவ்வொருவராக கடலூர் மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- வடலூர் நகராட்சியில் “என்குப்பை எனது பொறுப்பு” விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- தூய்மையான இந்தியாவை உருவாக்குக்வோம், விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
கடலூர்:
வடலூர் நகராட்சியில் என் குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. நகரமன்றதலைவர் சிவக்குமார் விழிப்புணர்வு பேரணியை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.நகராட்சி ஆணையாளர் பானுமதி முன்னிலை வகித்தார்.எனது குப்பை எனது பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.தூய்மையான இந்தியாவை உருவாக்குக்வோம், விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
இப்பேரணி வடலூர்நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி வள்ளலார்சபை பஸ்நிறுத்தம் வரை சென்று, வடலூர் நான்கு முனைசந்திப்பு வழியாக சென்று மீண்டும் அலுவலகத்தை வந்தடைந்தது.பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் முழக்கங்களுடன் கையில் பதாகை ஏந்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். இதில் மேலாளர் (பொறுப்பு) முத்துராமன், துப்புரவு ஆய்வாளர் பாக்கியநாதன், துப்புரவு மேற்பார்வையாளர் ஆறுமுகம், தூய்மை பாரத இயக்க மேற்பார்வையாளர் திவ்யா, பரப்புரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- குற்ற செயல்களை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- சாலைகளில் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அறிவுறுத்திலின் பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணிகள் மற்றும் வாகன சோதனைகள், விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் முதுநகரில் குற்ற செயல்களை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் குற்ற பிரிவு சப் -இன்ஸ்பெக்டர்கள் ரகுராமன், ரவி மற்றும் போலீசார் வெளியூருக்கு செல்லும் மக்கள் பாதுகாப்பாக வீடுகளை பூட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
கோடை காலம் என்பதால் கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைப்பதை தவிர்க்க வேண்டும். சந்தேகப்படும் படியாக யாரையாவது பார்த்தால் வாகன பதிவு எண்களை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வீடு கடை மற்றும் அலுவலகங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும். வங்கிகளில் பணம் எடுக்க செல்லும் போது அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஏ.டி.எம். கார்டு மற்றும் குறியீடு எண்களை தெரிவிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் வாகனங்கள் மூலமும் முக்கிய சாலைகளில் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.






