என் மலர்tooltip icon

    கடலூர்

    • செல்வம் (வயது 54) சிறுமியிடம் தனக்கு பீடி வாங்கிக் கொண்டு வர பணம் கொடுத்துள்ளார்
    • செல்வம் அந்த மாணவிலை கையை பிடித்து இழுத்து வாயைப் பொத்தி அருகில் உள்ள கருவக்காட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது

    கடலூர்:

    பெண்ணாடம் பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பில் மாணவி படித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு மளிகை சாமான் வாங்குவதற்கு சென்றுள்ளார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த செல்வம் (வயது 54) சிறுமியிடம் தனக்கு பீடி வாங்கிக் கொண்டு வர பணம் கொடுத்துள்ளார். மாணவியும் கடைக்கு சென்று மளிகை பொருட்களையும், செல்வத்திற்கும் பீடியும் வாங்கி வந்துள்ளார். பீடியை செல்வத்திடம் கொடுத்துள்ளார். அது சமயம் செல்வம் அந்த மாணவிலை கையை பிடித்து இழுத்து வாயைப் பொத்தி அருகில் உள்ள கருவக்காட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.   நடந்த சம்பவத்தை மாணவி அவரது தங்கையிடம் கூறியுள்ளார். தங்கை தாயிடம் கூறவே, இது குறித்து அவரது தாய் ஆவனங்குடி போலீசாரிடம் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் செல்வத்தை போக்சோ பிரிவில் கைது செய்தனர். திட்டக்குடி அருகே 54 வயதான முதியவர் மாணவிலை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்.
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் அமர்நாத், சி.பி.ஐ. நகர செயலாளர் நாகராஜ் முன்னிலை வகித்தனர்

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேத்தியாத்தோப்பில் நிலக்கரி சுரங்கம் அமைக்க தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசை கண்டித்தும், கவர்னரின் பேச்சை கண்டித்தும்  இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் அமர்நாத், சி.பி.ஐ. நகர செயலாளர் நாகராஜ் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் இள. புகழேந்தி, துணை மேயர் தாமரைச்செல்வன், சி.பி.எம் மாவட்ட செயலாளர் மாதவன், காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகரன், மாவட்ட தலைவர் திலகர் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். இதை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். இதில் சி.பி.ஐ. மாவட்ட துணை செயலாளர் குளோப், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கம், த.வா.க நிர்வாகி அருள் ஒளி, தி.க. மாவட்ட செயலாளர் எழிலேந்தி, ம.ம.க மாவட்ட செயலாளர் ரஹீம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பக்கிரான் நன்றி கூறினார்.

    • மணிகண்டன் அதே பகுதியை சேர்ந்த கோமதி என்ற பெண்ணை காதலித்து வந்தார்
    • இதனால் 2 குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த தொரப்பாடி குமரக் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன்.இவரது மனைவி சின்னபொண்ணு (வயது 40). இவர்களது மகன் மணிகண்டன்.  மணிகண்டன் அதே பகுதியை சேர்ந்த கோமதி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இதனால் 2 குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இது குறித்து மகளிர் போலீசில் புகார் செய்து வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது. மேலும் மணிகண்டன் குடும்பத்தாரை வீட்டோடு தீ வைத்து கொளுத்தி விடுவதாக கோமதியின் தந்தை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு மணிகண்டன் வீட்டிற்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்தனர். இதில் வீட்டிலிருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருந்த போதும் வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகி நாசமாயின.

    இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் கோமதியின் தந்தை முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • தமிழரசன் (வயது 31). இவர் நேற்று தனது குழந்தையை அழைத்து வர மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • தன்ராஜ் அவரது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்துள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பனப்பாக்கம் பாட்டை தெரு கலியமூர்த்தி மகன் தமிழரசன் (வயது 31). இவர் நேற்று தனது மாமியார் வீட்டில் இருந்து தனது குழந்தையை அழைத்து வர பணப்பாக்கம் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே பனப்பாக்கம் காலணியை சேர்ந்த தன்ராஜ் அவரது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்துள்ளார். இரவு நேரத்தில் எதற்கு இவ்வளவு வேகமா போறீங்க என தமிழரசன் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குதம் தகராறாக மாறியது. இதில் தன்ராஜ், பாலமுருகன், சூர்யா ஆகியோர் தமிழரசன் மீது தாக்குதல் நடத்தினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த தமிழரசன் பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கடலூருக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிதம்பரத்தை அடுத்த மேல்அனுவம்பட்டு கிராமத்தை சொந்த ஊராக கொண்ட இவர் சிதம்பரத்தில் தனியார் விடுதியில் தங்கியுள்ளார்.
    • இவரை ஒரு மர்மக்கும்பல் கடந்த மார்ச் 21-ந்தேதி, ஏப்ரல் 5-ந்தேதி ஆகிய இரு தினங்களில் கொலை செய்ய முயற்சித்திது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் லால்கான் தெருவில் வசித்து வருபவர் ஜெயசந்திரராஜா (வயது 56). சிதம்பரத்தை அடுத்த மேல்அனுவம்பட்டு கிராமத்தை சொந்த ஊராக கொண்ட இவர் சிதம்பரத்தில் தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இவர் ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். இவரை ஒரு மர்மக்கும்பல் கடந்த மார்ச் 21-ந்தேதி, ஏப்ரல் 5-ந்தேதி ஆகிய இரு தினங்களில் கொலை செய்ய முயற்சித்திது. இதில் அதிர்ஷ்டவசமாக தப்பிய ஜெயசந்திர ராஜா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவரை கொல்ல முயற்சி செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி ரேஷன் ஊழியர்கள் கடைகளை மூடி போராட்டம் நடத்தினர். இதையடுத்து இது தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கூலிப்படையை சேர்ந்த 7 பேரை கைது செய்தனர். மேலும், கூலிப்படைத் தலைவன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் கூலிப்படைத் தலைவன் கும்பகோணம் தமூம் அன்சாரி (24) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர் மீது அரியலூர் மாவட்ட வழக்கறிஞர் கொலை உள்ளிட்ட 4 கொலை வழக்குகள் உள்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் லால்கான் தெருவில் வசித்து வருபவர் ஜெயசந்திரராஜா (வயது 56). சிதம்பரத்தை அடுத்த மேல்அனுவம்பட்டு கிராமத்தை சொந்த ஊராக கொண்ட இவர் சிதம்பரத்தில் தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இவர் ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். இவரை ஒரு மர்மக்கும்பல் கடந்த மார்ச் 21-ந்தேதி, ஏப்ரல் 5-ந்தேதி ஆகிய இரு தினங்களில் கொலை செய்ய முயற்சித்திது. இதில் அதிர்ஷ்டவசமாக தப்பிய ஜெயசந்திர ராஜா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் இவரை கொல்ல முயற்சி செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி ரேஷன் ஊழியர்கள் கடைகளை மூடி போராட்டம் நடத்தினர். இதையடுத்து இது தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கூலிப்படையை சேர்ந்த 7 பேரை கைது செய்தனர். மேலும், கூலிப்படைத் தலைவன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் தேடி வந்தனர்.  இந்நிலையில் கூலிப்படைத் தலைவன் கும்பகோணம் தமூம் அன்சாரி (24) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர் மீது அரியலூர் மாவட்ட வழக்கறிஞர் கொலை உள்ளிட்ட 4 கொலை வழக்குகள் உள்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சாலை விரிவாக்க பணிகள் நெல்லிக்குப்பம் பகுதியில் இப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
    • நேற்று நள்ளிரவு திடீரென்று வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது

    கடலூர்:

    கடலூர் கோண்டூரிலிருந்து மடப்பட்டு வரை 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நெல்லிக்குப்பம் பகுதியிலும் இப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. தற்போது நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக முதற்கட்டமாக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகின்றது. நேற்று மதியம் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சரியான முறையில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யாமல், ஒரு சிலருக்கு ஆதரவாக பணிகள் மேற்கொண்டு வருவதால் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கூறி தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ம.தி.மு.க.முன்னாள் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், விடுதலை சிறுதைகள் கட்சிமாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், நகர செயலாளர் திருமாறன்,  சமூக ஆர்வலர் குமரவேல், கவுன்சிலர்கள் முத்தமிழன், புனிதவதி மற்றும் பொதுமக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை பணிகளுக்காக அளவீடு செய்த அளவில் ஆக்கிரமிப்பை அகற்றாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இப்பணியை உடனடியாக நிறுத்தி, உரிய அளவீடு செய்த பின்னர் பணிகளை தொடங்க வேண்டும். மேலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து உரிய முறையில் விசாரணை நடத்தி பணிகள் நடைபெறாவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தனர்  இதனை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென்று வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதனை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், நகர செயலாளர் திருமாறன், சமூக ஆர்வலர் குமரவேல் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பணிகள் மேற்கொண்டு இருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணிகளை தடுத்து நிறுத்தினார்கள். மேலும் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்றால் பெரிய அளவிலான போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை செய்தனர். இதனை தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டு ஊழியர்கள் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. 

    • கலையரசி (வயது 35). இவருக்கும் இவரது கணவருக்கும் கடந்த சில மாதத்துக்கு முன்பு குடும்ப சண்டை ஏற்பட்டது.
    • சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் வந்த கலையரசி திடீரென்று காணவில்லை.

    கடலூர்:

    கடலூர் அடுத்த குண்டியமல்லூர் சேர்ந்தவர் கலையரசி (வயது 35). இவருக்கும் இவரது கணவருக்கும் கடந்த சில மாதத்துக்கு முன்பு குடும்ப சண்டை ஏற்பட்டது. இதன் காரணமாக கலையரசி அவரது தாய் வீட்டில் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் வந்த கலையரசி திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கலையரசியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டி போலீசார் இன்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • அரசினால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் தங்கம், விஷ்வா, நல்ல நேரம்-1396 சீட்டுகள் விற்பனைசெய்தது தெரியவந்தது

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும்போலீசார்இன்று தீவிரரோந்துபணியில்ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசினால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் தங்கம், விஷ்வா, நல்ல நேரம்-1396 சீட்டுகள் விற்பனைசெய்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பண்ருட்டி அவுலியா நகர் நூர் முகமது (54),என்பவரை கைது செய்தனர்.

    • திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓரமாக இருந்த பள்ளத்தில் இறங்கி வீட்டின் சுவற்றில் மோதி நின்றது.
    • 2 பேர் மீது விழுந்து தலையில் படுகாயம் அடைந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தச்சூர் கிராமத்தில் திட்டக்குடியிலிருந்து சின்னசேலம் நோக்கி சென்ற அரசு பஸ் இன்று காலை குறைந்த அளவிலான பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. தச்சூர் கிராமத்தின் உள்ளே செல்லும் பொழுது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓரமாக இருந்த பள்ளத்தில் இறங்கி வீட்டின் சுவற்றில் மோதி நின்றது.

    மோதிய வேகத்தில் பஸ்சின் கண்ணாடி உடைந்து வீட்டின் முன்பு தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த தச்சூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் (வயது 59), அவரது மனைவி லட்சுமி (52) ஆகிய 2 பேர் மீது விழுந்து தலையில் படுகாயம் அடைந்தனர். 2 பேரையும் கிராம மக்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் செல்வகுமார் தலையில் பலத்த காயமிருந்ததால் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ் வீட்டின் சுவற்றில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    • சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொழில் தட சாலை திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன
    • கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர்

    கடலூர்:

    சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொழில் தட சாலை திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு அங்கமாக விருத்தாசலம் நகரப் பகுதிகளிலும் இப்பணிகள் நடைபெறுகின்றன. விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் பணிகள் தொடங்கப்பட்ட நாள் முதலே சாலை பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் மற்றும் அப்பகுதி கவுன்சிலர் உள்ளிட்டோர் குற்றம்சாட்டி வந்தனர். சாலைப்பணிகள் தொடங்கி ஒரு வருடம் கடந்த நிலையிலும் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த பணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர்

    இந்நிலையில் சாலை விரிவாக்க பணிகளில் ஒரு பகுதியாக சாலையின் இரு புறங்களிலும் கால்வாய் ஆழமாக தோண்டப்பட்டு அதனை கான்கிரீட் பலகை மூலம் மூடும் பணி நடைபெற்று வந்தது.

    ஆனால் கால்வாயை மூடும் கான்கிரீட் மெலிதாக இருப்பதாகவும் இதனால் அந்த பகுதியில் இருக்கும் கியாஸ்குடோன், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களுக்கு லோடு வாகனங்கள் செல்லும்போது, விபத்தில் சிக்கிக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் ஒப்பந்ததாரர் மற்றும் பொது ப்பணித்து றையினரிடம் தெரிவித்து வந்தனர். அதனால் மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மெலிதான கான்கிரீட் பலகை மூலம் கால்வாயை மூடும்பணி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு கான்கிரீட் கற்களை ஏற்றி வந்த லாரி அந்த பகுதியில் சாலையை கடக்கும் போது, பெரும் சப்தத்துடன் திடீரென கான்கிரீட் மூடி உடைந்து லாரி டயர் கால்வாயில் சிக்கிக்கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் லாரியை பள்ளத்திலிருந்து வெளியேற்ற முயற்சி செய்தார். ஆனால் 1 மணி நேரம் போராடியும் லாரியை வெளிய எடுக்க முடியவில்லை. பின்னர் அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் பொதுப்பணி துறையினர் கிரேன் மூலம் லாரியை எடுத்து சாலையில் விட்டனர். இது பற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், நள்ளிரவில் இந்த சம்பவம் ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது .இதுவே காலை நேரத்திலோ அல்லது சிலிண்டர்கள் ஏற்றி ச்செல்லும் லாரி விபத்தில் சிக்கி கொண்டிருந்தால் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டிருக்கும் என வேதனை தெரிவித்தனர்.

    இனியாவது தரமான வகையில் சாலை பணிகள் நடக்குமா என்பதே பொது மக்களின் கேள்வியாக உள்ளது.

    • .சிதம்பரம் நகர போலீசார் நேற்று சிதம்பரத்தில் உள்ள முக்கிய வீதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • பிரபல ரவுடி சிவா என்ற சிவராஜிடம் இருந்த சுமார் 1.550 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் நகர போலீசார் நேற்று சிதம்பரத்தில் உள்ள முக்கிய வீதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிதம்பரம் எம்.எம் தெரு அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது சிதம்பரத்தை அடுத்த ஆடூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சிவா என்கிற சிவராஜ் (வயது 26) என்பதும், அவரிடம் இருந்த சுமார் 1.550 கிலோ கஞ்சாவை சிதம்பரம் நகர போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
    • கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் பக்கிரிசாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக துரை முருகன் தெரிவித்துள்ளார்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவர் சக்தி நகரில் நர்சரி பள்ளி நடத்தி வருகிறார். மேலும் விருத்தாசலம் நகராட்சி 30-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராகவும் இருந்து வருகிறார்.

    பக்கிரிசாமி தனது பள்ளியில் படித்து வரும் 6-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து பக்கிரிசாமியை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட பக்கிரிசாமி தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டு உள்ளார்.

    கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பக்கிரிசாமி செயல்பட்டதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக துரை முருகன் தெரிவித்துள்ளார். 6-வயது சிறுமியை பலாத்காரம் செய்த தி.மு.க. கவுன்சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×