என் மலர்tooltip icon

    கடலூர்

    • பண்ருட்டி ஒன்றியம்பத்திரக்கோட்டைகாலனிஅம்பேத்கார் நகரை சேர்ந்தவர் சிவமணி(45)
    • இவரது கூரை வீட்டில் மின்சார கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி ஒன்றியம்பத்திரக்கோட்டைகாலனிஅம்பேத்கார் நகரை சேர்ந்தவர் 45) ,இவரது கூரை வீட்டில் மின்சார கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து வந்து அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளுக்கு மேலும் பரவாமல் தீஅணைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் அதிக திறன் கொண்ட மினி லாரி வாகனத்தை பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சபா.பாலமுருகன் வழங்கினார்.
    • மருங்கூர் ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன், எல்.என்.புரம் ஊராட்சி செயலாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்

    கடலூர்:

    பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மருங்கூர், எல்.என்.புரம் ஆகிய 2 ஊராட்சிகளுக்கு தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் அதிக திறன் கொண்ட மினி லாரி வாகனத்தை பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சபா.பாலமுருகன் வழங்கினார்.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீரா கோமதி, சக்தி, மேலாளர் பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் உதயகுமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் சசிகலா ஜெயசெழியன், மருங்கூர் ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன், எல்.என்.புரம் ஊராட்சி செயலாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய துணைச் செயலாளர் வீட்டில் பெட்டி பெட்டியாக விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புதுவை மாநில 1726 மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
    • வி.சி.க. பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே கரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய துணைச் செயலாளராக உள்ளார். தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள புதுவை மாநில மதுபான பாட்டில்களை இவர் பரங்கிப்பேட்டை பகுதியில் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது,

    அதன்படி நேற்று நள்ளிரவு நேரத்தில் கரிக்குப்பம் கிராமத்திற்கு சென்ற போலீசார், வி.சி.க. நிர்வாகி சத்தியமூர்த்தி வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 36 பெட்டிகளில் சுமார் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 1726 மது பாட்டில்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டனர். இவை அனைத்தும் புதுவையில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் என போலீசாருக்கு தெரிய வந்தது. உடனடியாக மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இதனை கடத்தி வர பயன்படுத்தபட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்ராஜாராம், சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆர்.ரகுபதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். புதுவையில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக வைத்திருந்த விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய துணை செயலாளர் சத்யமூர்த்தி மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், தப்பியோடிய சத்தியமூர்த்தியை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    • இவர்கள் 3 பேரும் கடலூர் திருவந்திபுரம் - பாலூர் சாலையில் பில்லாலி தொட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
    • ட்டார் சைக்கிளுக்கு பின்னால் வந்த டிராக்டர் திடீரென்று மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டை சேர்ந்தவர் இளவழகன் (வயது 25), கொங்கராயனூரை சேர்ந்தவர்கள் நிவேதா (20), நிரோஷா (17). இவர்கள் 3 பேரும் கடலூர் திருவந்திபுரம் - பாலூர் சாலையில் பில்லாலி தொட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் வந்த டிராக்டர் திடீரென்று மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமு (வயது 55). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் ரைஸ்மில்லில் வேலை பார்த்து வந்தார்
    • ரைஸ் மில் வளாகத்தில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டிருந்தார்.

    கடலூர்:

    கடலூர் புது வண்டிப் பாளையத்தை சேர்ந்தவர் ராமு (வயது 55). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் ரைஸ்மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று ராமு ரைஸ் மில் வளாகத்தில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டிருந்தார். இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து இறந்த ராமுவின் உறவினர் வாசுதேவன், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில், இறந்த ராமுவின் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் அளித்தார். அதன் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சாவில் மர்மம் உள்ளதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிதம்பரம் அருகே கவரப்பட்டு கிராமத்தில் அரசு மருத்துவமனை எதிரில் முதலை ஒன்று புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்தது
    • இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே கவரப்பட்டு கிராமத்தில் அரசு மருத்துவமனை எதிரில் முதலை ஒன்று புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சிதம்பரம் சரக வனவர் பிரபு தலைமையில், சிதம்பரம் வனக்காப்பாளர் அன்புமணி, புவனகிரி வனக்காப்பாளர் ஞானசேகர், வனக்காப்பாளர் அமுதபிரியன் மற்றும் ஊழியர்கள் இணைந்து இன்று அதிகாலையில் சிதம்பரம் வட்டம் கவரப்பட்டு கிராமம் அரசு மருத்துவமனை எதிரில் 5 அடி நீளமுள்ள முதலையை பிடித்து வக்கரமாரி நீர் தேக்க குளத்தில் பாதுகாப்பாக விட்டனர்.

    • ரக்ஷிதா என்கிற சரத்குமார். திருநங்கையான இவர் அண்ணாமலை பல்கலைகழத்தில் முனைவர் பட்டம் பயில் விண்ணப்பித்திருந்தார்
    • திருநங்கை ரக்க்ஷிதா தனது முனைவர் பட்ட படிப்பை வியாழக்கிழமையன்று தொடங்கினார்.

    கடலூர்:

    கடலூர் வட்டம், கோண்டூர் தாலுகா, மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் நாகப்பன் மகனான ரக்ஷிதா என்கிற சரத்குமார். திருநங்கையான இவர் அண்ணாமலை பல்கலைகழத்தில் முனைவர் பட்டம் பயில் விண்ணப்பித்திருந்தார்.

    திருநங்கை என்ற ஒரே காரணத்தால் இடம் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலகுழு உறுப்பினர் ரமேஷ்பாபு, முத்துக்குமரன் ஆகியோர் திருநங்கை ரக்ஷிதாவை அழைத்துக்கொண்டு பலகலைக் கழக துணை வேந்தரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவில், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளான, நீதியரசர்கள் ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் கடந்த 2014-ம் ஆண்டு திருநங்கை சமூகம் குறித்த வழக்கில் கொடுத்த தீர்ப்பின் படி முனைவர் பயில அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

    இதனை தொடர்ந்து பல்கலைக் கழக நிர்வாகம் திருநங்கை ரக்ஷிதாவுக்கு வேதியல்துறையில் முனைவர் பட்டம் பயில்வதற்கு அனுமதி அளித்துள்ளது.  இதனையடுத்து திருநங்கை ரக்க்ஷிதா தனது முனைவர் பட்ட படிப்பை வியாழக்கிழமையன்று தொடங்கினார். அவரது படிப்பிற்கு உதவி புரிந்த துறை தலைவர் ஜெயபாரதி, மார்க்சிஸ்ட் கட்சி மாநிலகுழு உறுப்பினர் ரமேஷ்பாபு, நகர செயலாளர் ராஜா ஆகியோருக்கு திருநங்கை ரக்க்ஷிதா கண்கலங்க நன்றி தெரிவித்தார். இந்த சம்பவம் பல்கலைக் கழக வளாகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • டலூர் அடுத்த பச்சையாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நூருல்லா சாகித் (வயது 35). சம்சா வியாபாரி.
    • இரண்டு பேர் நூருல்லா சாகித் மற்றும் அவரது தந்தை முகமது மொய்தீன் ஆகியோரை சரமாரியாக கத்தியால் வெட்டினார்கள்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த பச்சையாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நூருல்லா சாகித் (வயது 35). சம்சா வியாபாரி. இவரும் இவரது தந்தை முகமது மொய்தீன் ஆகியோர் இணைந்து சம்சா போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று இரண்டு பேர் நூருல்லா சாகித் மற்றும் அவரது தந்தை முகமது மொய்தீன் ஆகியோரை சரமாரியாக கத்தியால் வெட்டினார்கள். இதில் இரண்டு பேரும் கதறி துடித்தனர். இந்த சத்தம் கேட்ட அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சம்பவத்திற்கு வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் இரண்டு பேரும் இருந்தனர். இதனை தொடர்ந்து உடனடியாக இரண்டு பேரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது நூருல்லா சாகித்தை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார் மேலும் இவரது தந்தை முகமது மொய்தீனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் தற்போது தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். இத் தகவல் இருந்த கடலூர் துறைமுகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். 

    இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்யப்பட்ட நூருல்லா சாகித்துக்கும் , அவரது குடும்ப உறவினருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக நேற்று இரவு 2பேர் நூருல்லா சாகித் மற்றும் அவரது தந்தை முகமது மொய்தினை சரமாரியாக வெட்டியது தெரியவந்துள்ளது. மேலும் சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். . கடலூர் அருகே குடும்ப தகராறு காரணமாக சம்சா வியாபாரியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழ் புத்தாண்டு விழா நாளை 14-ந்தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது
    • பூ மார்க்கெட்டில் தற்போது பூக்கள் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன.

    கடலூர்:

    தமிழ் புத்தாண்டு விழா நாளை 14-ந்தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், கோவில்கள் போன்றவற்றில் பூஜை செய்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு விமர்சையாக விழா கொண்டாடப்பட்டது.       இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட்டில் தற்போது பூக்கள் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி செல்கின்றனர். இதில் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்திப்பூ 300 ரூபாய்க்கும், ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட குண்டு மல்லி 600 ரூபாய்க்கும், ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி பூ 300 ரூபாய்க்கும், ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட அரும்பு 500 ரூபாய்க்கும், ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட ரோஜா பூ தற்போது 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறைந்த அளவு பூக்கள் வாங்க சென்றனர். மேலும், தொடர்ச்சியாக விழாக்கள் உள்ளதால் பூக்கள் விலை உயர்ந்த நிலையில் இருந்தாலும் விற்பனையாகிவிடும் என்ற நம்பிக்கையில் பூ வியாபாரிகள் உள்ளனர்.

    • கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த ஆதிலட்சுமி என்கிற மாணவி 10-ம் வகுப்பு தேர்வு எழுதி வருகிறார்.
    • ஆதிலட்சுமியின் தந்தை ரவி காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

    கடலூர்:

    தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கி வருகிற 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. கடலூர் மாவட்டத்தில் 445 பள்ளிகளை சேர்ந்த 34 ஆயிரத்து 794 மாணவர்கள் 149 தேர்வு மையங்களில் தேர்வு எழுதி வருகின்றனர்.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த ஆதிலட்சுமி என்கிற மாணவி 10-ம் வகுப்பு தேர்வு எழுதி வருகிறார். இவரது தந்தை ரவி காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று ரவிக்கு உடல்நிலை பாதிக்கப்படடு, கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனை அறிந்த மாணவி ஆதிலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுது துடித்தனர். இன்று 10-ம் வகுப்பு கணித பாடத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஆதிலட்சுமி காலையில் தேர்வு எழுத பள்ளிக்கு வந்தார்.

    இத்தகவல் அறிந்த ஆதிலட்சுமியின் தோழிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறினர். இதனைத் தொடர்ந்து கண்கலங்கிய படி மாணவி ஆதிலட்சுமி தேர்வெழுதினார். இந்த சம்பவம் பள்ளி வளாகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • கடலூர் மஞ்சகுப்பம் ஆல்பேட்டை சோதனைசாவடி அருகே சோதனை செய்து கொண்டிருந்தனர்.
    • மதுபாட்டில்கள், சாராயத்தை பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா மற்றும் போலீசார் கடலூர் மஞ்சகுப்பம் ஆல்பேட்டை சோதனைசாவடி அருகே சோதனை செய்து கொண்டிருந்தனர்      அப்போது அவ்வழியாக வேன் வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்த போது, புதுவை மாநில 6108 மதுபாட்டில்கள், 50 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் சேர்ந்த வீரப்பன் (எ) பகலவன் (வயது 46) , கத்திரி, ஆகியோர் இதனை கடத்தி வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக மதுபாட்டில்கள், சாராயத்தை பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    இந்த நிலையில் வீரப்பன் (எ) பகலவன் மீது விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவில் 2 சாராய வழக்குகள், கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல் பிரிவில் 2 வழக்குகள் என மொத்தம் 5 வழக்குகள் உள்ளன.                                                      

    இதையடுத்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இராஜாராம் பரிந்துரையின் பேரில் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் வீரப்பன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • கார்த்திக் (33). இஅபிநயா (19) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடை பெற்றது.
    • அபிநயா மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நாலாங்காடி தெருவை சேர்ந்தவர் வைரக்கண்ணு மகன் கார்த்திக் (33). வெளிநாட்டில் பணி செய்து வருகிறார். இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பகுதியை சேர்ந்த அபிநயா (19) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடை பெற்றது. இவர்கள் இருவரும் கார்த்திக்கின் பெரியம்மா வெள்ளை யம்மாள் வீட்டில் வசித்து வந்தனர் இந்நிலையில் திருமணம் ஆகி 2 மாதத்தில் கார்த்திக் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார். அபிநயா அதே வீட்டில் வசித்து வந்தார். வெளிநாட்டில் இருந்து கார்த்திக், அபிநயா மற்றும் அபிநயா அம்மா 3 பேரும் கான்பரிரன்ஸ் காலில் தொலைபேசியில் நேற்று இரவு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அபிநயா திடீரென போனை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சி யடைந்த கார்த்திக், அபிநயாவை தொடர்பு கொள்ள மீண்டும் மீண்டும் முயற்சித்தும், அவரை தொடர்பு கொள்ள முடிய வில்லை. இதனை யடுத்து திட்டக்குடியில் உள்ள அவர்கள் உறவினர்களை தொடர்பு கொண்டு, வீட்டிற்கு சென்று அபி நயாவை பார்க்க கூறினார்  அங்கு சென்ற உறவினர்கள் வீட்டில் உள்ள அபிநயா உட்புறமாக பூட்டியிருந்ததை கண்டு கதவை தட்டினார்கள். நீண்ட நேரமாக கதவு திறக்கப்ப டாதால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அபிநயா மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.

    அவரை மீட்ட உறவினர்கள் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற திட்டக்குடி போலீசார், அபிநயா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திரும ணமான ஒரே ஆண்டில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் போலீசார் பரிந்துரைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×