search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது: கடலூர் துறைமுகத்தில் ஓய்வெடுக்கும் படகுகள்: மீன் வாங்க திரண்ட பொதுமக்கள்
    X

     நேற்று இரவு கரை திரும்பிய மீனவர்களின் வலையில் சிக்கிய மீன்களை கடலூர் முதுநகர் துறைமுகம் பகுதியில் இன்று காலை வாங்க வந்த மக்களை படத்தில் காணலாம்.

    61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது: கடலூர் துறைமுகத்தில் ஓய்வெடுக்கும் படகுகள்: மீன் வாங்க திரண்ட பொதுமக்கள்

    • 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தை அரசு வருடந்தோறும் அறிவித்து அதற்கான உத்தரவுகளை வெளியிட்டது.
    • மீனவர்கள் நேற்று நள்ளிரவு முதல் கடலூர் துறைமுகம் மற்றும் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி உள்ளனர்,

    கடலூர்:

    கடலூர்கடலில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகரிக்க வேண்டி ஏப்ரல் 15 -ந்தேதி முதல் ஜூன் 14 -ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தை அரசு வருடந்தோறும் அறிவித்து அதற்கான உத்தரவுகளை வெளியிட்டது. இந்த நிலையில் இன்று அகாலை முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் நேற்று நள்ளிரவு முதல் கடலூர் துறைமுகம் மற்றும் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி உள்ளனர. இதற்கிடையே நேற்று நள்ளிரவு வந்த மீனவர்கள் ஏராளமான மீன்களை பிடித்து வந்தனர். இதன் காரணமாக இன்று காலை முதல் கடலூர் துறைமுகம் மற்றும் மீன் மார்க்கெட் களில் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் மீன்களை வாங்குவதற்கு திரண்டு வந்தனர். மேலும் தங்களுக்கு தேவையான மீன்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில்

    மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைக்கும் பணிகளிலும், வர்ணம் பூசும் பணிகளிலும், தங்களிடம் உள்ள மீன் பிடிக்கும் வலைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட தொடங்கி உள்ளனர் . இந்த நிலையில் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் தடையை மீறி மீன் பிடிக்க செல்லாமல் இருக்க மீன்வளத்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 2023 -ம் ஆண்டு மீன்பிடி தடைகாலத்தில் தமிழக கடலோர பகுதிகளிலுள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மீன்பிடி துறைமுகம் , தங்குதளத்திலிருந்து கடலில் மீன்பிடிக்க செல்லாமல் இருக்க வேண்டும். இத்தடையை மீறி மீன்பிடிப்பில் ஈடுபட்டு அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட மீனவர் சங்கங்கள், கிராமங்கள் பொறுப்பேற்க நேரிடும். அவ்வாறு தவறும் படகுகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மீனவளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதன் காரணமாக கடலூர் துறைமுகம் மற்றும் கடற்கரை ஓரமாக பெரும்பாலான படகுகள் ஓய்வெடுப்பதை காண முடிந்தது.

    Next Story
    ×