என் மலர்tooltip icon

    கடலூர்

    • 3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிராக்டர் டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • டிராக்டர் டிரைவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வெள்ளப்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தனது 3 வயது பேத்தியை அழைத்துக் கொண்டு வானமாதேவி கரும்பு தோட்டத்தில் கூலிக்கு கரும்பு வெட்டுவதற்கு சென்றனர்.

    கரும்பு ஏற்றிச் செல்லும் டிராக்டர் அருகில் பேத்தியை விட்டு சென்று விட்டு கரும்பு வெட்டி முடித்த பிறகு வந்து பார்த்த போது தனது பேத்தியை டிராக்டர் டிரைவர் மதி பாலியல் தொந்தரவு செய்தது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பாட்டி கொடுத்த புகாரில் பண்ருட்டி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து டிராக்டர் டிரைவர் மதியை கைது செய்தார். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • ரோட்டரி சங்க தலைவர் ஐஸ்வர்யா ரவிசேகர்தலைமையில் மாபெரும் கண் சிகிச்சை முகாம் இன்று காலை நடந்தது.
    • மண்டல உதவி ஆளுநர் காமரா ஜ்முகாமை தொடங்கி வைத்தார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டையில்  பண்ருட்டி ரோட்டரி சங்க தலைவர் ஐஸ்வர்யா ரவிசேகர்தலைமையில் மாபெரும் கண் சிகிச்சை முகாம் இன்று காலை நடந்தது. ஊராட்சி மன்றதலைவர் ஆறுமுகம், தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.செயலாளர் சதாசிவம் வரவேற்றார்.மண்டல உதவி ஆளுநர் காமரா ஜ்முகாமை தொடங்கி வைத்தார்.பண்ருட்டி ஜெயம் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் புதுவை அரவிந்த் கண்மருத்துவமனை இணைந்துநடத்திய இந்த முகாமில் புதுவை அரவிந்த் கண் மருத்துவ மனை மருத்துவர்கள் கலந்துகொண்டு சிகிச்சைஅளித்தனர். இதில் எஸ்.வி. ஜூவல்லர்ஸ் அதிபர் அருள்,முந்திரி ஏற்றுமதியாளர் பாரதிதாசன் நளபாகம் ராஜா,பூக்கடை பாலமுருகன் காய்கனி சங்கம் சக்திவேல் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்

    • சந்திரசேகரன் (வயது 33) விவசாயி. இவருக்கும் பிரியங்கா (வயது 23) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
    • மன உளைச்சலில் இருந்த சந்திரசேகரன் ரெட்டிசாவடி அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள நிலத்தில் பூச்சி மருந்து குடித்து மயக்க நிலையில் கிடந்தார்

    கடலூர்:

    புதுச்சேரி மாநிலம் நோணாங்குப்பத்தை ம சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 33) விவசாயி. இவருக்கும் பிரியங்கா (வயது 23) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சந்திரசேகரனுக்கும் பிரியங்காவிற்கும் குடும்ப சண்டை ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த சந்திரசேகரன் ரெட்டிசாவடி அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள நிலத்தில் பூச்சி மருந்து குடித்து மயக்க நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் சந்திரசேகரனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    அப்போது சந்திரசேகரனை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் அருகே திருமணமான ஒரு வருடத்தில் கணவன் -மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக கணவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபர ப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • பண்ருட்டி நகர தி.மு.க. சார்பில் வார்டு செய லாளர்கள் ஆலோசணை கூட்டம்கட்சிஅலுவலகத்தில்நடந்தது.
    • கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமைவகித்தார்,

    கடலூர்:

    பண்ருட்டி நகர தி.மு.க. சார்பில் வார்டு செய லாளர்கள் ஆலோசணை கூட்டம்கட்சிஅலுவலகத்தில்நடந்தது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமைவகித்தார். அவை தலைவர் ராஜா, பொருளாளர் ராமலிங்கம் முன்னிலைவகித்தனர். கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள் பிரபு, துணை செயலாளர்கவுரி அன்பழகன், இளைஞரணி அமைப்பாளர் சம்பத், துணை அமைப்பாளர்கள் பாலசந்தர், பார்த்திபன், மதி, ராஜா, பாலமுருகன்மற்றும் தி.மு.க. நகர மன்ற உறுப்பி னர்கள் உள்ளிட்ட தி.மு.க. வினர் பலர்கலந்து கொண்டனர். கூட்டத்தில் பண்ருட்டி நகரத்தில் உள்ள 33 வார்டுகளில் புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிர படுத்த வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • 19 வயது கல்லூரி மாணவி சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை,
    • இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் அடுத்த கட்டியாங்குப்பத்தை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து திடீரென்று காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

    • 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தை அரசு வருடந்தோறும் அறிவித்து அதற்கான உத்தரவுகளை வெளியிட்டது.
    • மீனவர்கள் நேற்று நள்ளிரவு முதல் கடலூர் துறைமுகம் மற்றும் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி உள்ளனர்,

    கடலூர்:

    கடலூர்கடலில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகரிக்க வேண்டி ஏப்ரல் 15 -ந்தேதி முதல் ஜூன் 14 -ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தை அரசு வருடந்தோறும் அறிவித்து அதற்கான உத்தரவுகளை வெளியிட்டது. இந்த நிலையில் இன்று அகாலை முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் நேற்று நள்ளிரவு முதல் கடலூர் துறைமுகம் மற்றும் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி உள்ளனர. இதற்கிடையே நேற்று நள்ளிரவு வந்த மீனவர்கள் ஏராளமான மீன்களை பிடித்து வந்தனர். இதன் காரணமாக இன்று காலை முதல் கடலூர் துறைமுகம் மற்றும் மீன் மார்க்கெட் களில் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் மீன்களை வாங்குவதற்கு திரண்டு வந்தனர். மேலும் தங்களுக்கு தேவையான மீன்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில்

    மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைக்கும் பணிகளிலும், வர்ணம் பூசும் பணிகளிலும், தங்களிடம் உள்ள மீன் பிடிக்கும் வலைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட தொடங்கி உள்ளனர் .   இந்த நிலையில் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் தடையை மீறி மீன் பிடிக்க செல்லாமல் இருக்க மீன்வளத்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 2023 -ம் ஆண்டு மீன்பிடி தடைகாலத்தில் தமிழக கடலோர பகுதிகளிலுள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மீன்பிடி துறைமுகம் , தங்குதளத்திலிருந்து கடலில் மீன்பிடிக்க செல்லாமல் இருக்க வேண்டும். இத்தடையை மீறி மீன்பிடிப்பில் ஈடுபட்டு அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட மீனவர் சங்கங்கள், கிராமங்கள் பொறுப்பேற்க நேரிடும். அவ்வாறு தவறும் படகுகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மீனவளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதன் காரணமாக கடலூர் துறைமுகம் மற்றும் கடற்கரை ஓரமாக பெரும்பாலான படகுகள் ஓய்வெடுப்பதை காண முடிந்தது.

    • 45- வது வார்டில் 9.80 லட்சம் மதிப்பீட்டில் கல்வெட்டு அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • விழாவில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக் குட்பட்ட முதுநகர் பகுதிகளில் உள்ள 36, 37, 38, 39, 41, 42, 45 ஆகிய வார்டு களில் தமிழ்நாடு அரசின் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3.41 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் மற்றும் தார் சாலைகள் அமைப்பதற்கான பணிகள் மற்றும் 45- வது வார்டில் 9.80 லட்சம் மதிப்பீட்டில் கல்வெட்டு அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    விழாவில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, பொறியாளர் மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர் இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் விஜயலட்சுமி செந்தில், பாலசுந்தர், கவிதா ரகு ராமன், தகவல் தொழில்நுட்ப அணி பிரவீன் மற்றும் வெங்கடேசன், செந்தில், ரகுராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடலுார் முதுநகர் ஜூம்மா பள்ளி வாசலில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அய்யப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்,

    கடலூர்:

    கடலுார் முதுநகர் ஜூம்மா பள்ளி வாசலில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அய்யப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

    நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட பொருளாளர் குணசேகரன், டாக்டர் பிரவீன் அய்யப்பன், மாநகராட்சி கவுன்சிலர்கள் பிரகாஷ், கீதா குணசேகரன், தமிழரசன், சரத் தினகரன், பாரூக் அலி, சுமதி ரங்கநாதன், மகேஸ்வரி விஜயகுமார், கீர்த்தனா ஆறுமுகம், ராதிகா பிரேதட குமார், கர்ணன், வக்கீல் சிவராஜ், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜ சேகர், பள்ளி வாசல் நிர்வாகிகள் காசிம் மான்பஈ, இமாம் பேஷிம்மா, இப்ராகிம் மரைக்காயர், காதர் மொய்தீன், முகமது காசிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 100 படுக்கை வசதி கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டும் பணி.
    • அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

    கடலூர்:

    கடலூர் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- 

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில்கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 100 படுக்கை வசதி கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டும் பணிக்காக 34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று( 15- ந்தேதி) மாலை கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது. விழாவிற்கு வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். இதில் கலெக்டர் பாலசுப்ரமணியம், அய்யப்பன் எம்.எல். ஏ, அரசு மருத்துவமனை இணை இயக்குனர், சுகாதார துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், மண்டல குழு தலைவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ள

    • தமிழ் புத்தாண்டை ஒட்டி பஸ் பயணிகளுக்கு நீர், மோர், பழசாறு ஆகியவை டி.எஸ்.பி. சபியுல்லா வழங்கி னார்.
    • இதற்கான ஏற்பாடுகளை பிஸ்மில்லா ஷீ மார்ட் மற்றும் விகேசி நிறுவனத்தினர் இணைந்து நடத்தினர்.

    கடலூர்:

    பண்ருட்டி, ஏப்.15-பண்ருட்டி பஸ் நிலையத்தில் உள்ள புறகாவல் நிலை யத்தில் தமிழ் புத்தாண்டை ஒட்டி பஸ் பயணிகளுக்கு நீர், மோர், பழசாறு ஆகியவை டி.எஸ்.பி. சபியுல்லா வழங்கி னார். இதில்இன்ஸ்பெக்டர்கள் பண்ருட்டி கண்ணன், புதுப்பேட்டை நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், புஷ்பராஜ், வீராசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை பிஸ்மில்லா ஷீ மார்ட் மற்றும் விகேசி நிறுவனத்தினர் இணைந்து நடத்தினர்.

    • சிதம்பரத்திற்கு வருகை தந்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார்.
    • தற்போது பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்த போது, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வரவில்லை

    கடலூர்:

    சிதம்பரத்திற்கு வருகை தந்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அடிப்படை ஆதாரம் இல்லாமல், அரசியலுக்காக ஊழல் குற்றச்சாட்டு கூறுகிறார். 10 ஆண்டுகளாக இருந்த அ.தி.மு.க. அமைச்சர்களின் பட்டியலை ஏன் வெளியிடவில்லை. பா.ஜ.க கட்சியினரே அண்ணாமலை ஊழல் பற்றி தெரிவிக்கின்றனர். அண்ணாமலை மீது தி.மு.க. கட்சி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளது. தி.மு.க. அமைப்பு செயலாளர் வழக்கு தொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். அண்ணாமலை பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். தமிழ்நாட்டில் அவர் அரசியல் நாகரீகத்தை பின்பற்றவில்லை. மிகப்பெரிய பதவியான ஐ.பி.எஸ் ஆகி ஊதியம் வாங்கியவர், அதை விட்டு எந்த நோக்கத்தில் அரசியல் கட்சியில் இணைந்துள்ளார். எந்த கனவோடு அரசியல் கட்சியில் இணைந்தாரோ? அதை ஆருத்ரா கோல்டு பைனான்ஸில் அந்த கனவை நிறைவேற்றி விட்டார். தற்போது பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்த போது, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வரவில்லை. தன்னை பதவியை விட்டு எடுத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் உள்ளார் என்பதை காட்டுகிறது . இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழ்நாடு பலா பழம் கமிஷன் மண்டி உரிமையாளர்கள் நல சங்கம் தொடக்க விழா நடந்தது
    • சங்க தலைவர் சி. ஆர். மாயவேல் விழாவிற்கு தலைமை வகித்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தமிழ்நாடு பலா பழம் கமிஷன் மண்டி உரிமையாளர்கள் நல சங்கம் தொடக்க விழா நடந்தது சங்க தலைவர்சி. ஆர். மாயவேல் விழாவிற்கு தலைமை வகித்தார். துணைத்தலைவர் கே.பாலமுருகன்மு ன்னிலை வகித்தார். செயலாளர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றார். கவுரவ தலைவர் சூசைமரி சங்கப் பெயர் பலகையை திறந்து வைத்தார் துணைச் செயலாளர் கே .ஆர். விஜயகுமார், பொருளாளர்ஏ.டி. சுந்தரமூர்த்தி, தியாகி டிரான்ஸ்போர்ட் அதிபர் காமராஜ் மற்றும் புதிய நிர்வாகிகள் பலா கமிஷன் மண்டி அதிபர்கள் திரளாக கலந்து கொண்டனர் .

    கூட்டத்தில் பலா உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும். விவசாயிகள் பலா காய்களை பலா மார்க்கெட்டில் பலா கமிஷன் மண்டி மூலம் மட்டுமே விற்பனை செய்யவேண்டும்.சங்கத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள கூலி,மாமுல்,மேஸ்திரி மற்றும் சுமை தூக்கும் தொழிலாளிகள் பெற்றுக் கொள்ள வேண்டும். கூலி, மாமூல் ஆகியவைகளை வியாபாரிகளிடம் கேட்கக் கூடாது. பலா கமிஷன் மண்டிஉரிமையாளர்க ளிடம் மட்டும் கேட்டுவாங்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள்நி றைவேற்றப்பட்டது. முடிவில்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்குசங்க அடையாள அட்டைவழங்கப்பட்டது.

    ×