என் மலர்
கடலூர்
- கடலூர் சாவடியை சேர்ந்தவர் பரணி. இவர் வீடு கட்டுவதற்கு கடலூர் மாநகராட்சியில் அனுமதி கேட்டு விண்ணப்பித்தார்.
- அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆறுமுகத்தை கையும், களவுமாக பிடித்தனர்.
கடலூர்:
கடலூர் சாவடியை சேர்ந்தவர் பரணி. இவர் வீடு கட்டுவதற்கு கடலூர் மாநகராட்சியில் அனுமதி கேட்டு ண்ணப்பித்தார். இது தொடர்பாக அனுமதி வழங்கும் அதிகாரிகள் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகதெரிகிதறது .இதனால் மன உளைச்சலடைந்த பரணி கடலூர் லஞ்ச ஓழிப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்தார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார் ரசாயணம் கலந்த ரூபாய் நோட்டுகளை பரணியிடம் வழங்கி அதிகாரிளிடம் வழங்க கூறினார்கள். இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி அலுவலகத்திற்கு பணத்துடன் வந்த பரணி, ஊழியர் ரகோத்தமனிடம் பணத்தை கொடுத்தார். இதனை வாங்க மறுத்த ஊழியர், அருகில் உள்ள தனியார் கட்டுமான அலுவலக உரிமையாளரை பார்த்து அவரிடம் பணம் கொடுக்க கூறினார்.
தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் ஆறுமுகத்திடம் சென்ற பரணி, ரூ.20 ஆயிரத்தை வழங்கினார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆறுமுகத்தை கையும், களவுமாக பிடித்தனர். தொடர்ந்து மாநகராட்சி ஊழியர் ரகோத்தமனையும் பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார், மாநகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்து மேலும், யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் பயணிகளை இறக்கிவிட்டு செல்வது வழக்கம்.
- உணவு பொருட்கள் மற்றும் தேநீர், குடிநீர் போன்ற எந்த வசதிகளும் இல்லாததால் பயணிகள் அவதி அடைந்தனர்.
கடலூர்:
திருச்செந்தூரிலிருந்து கடலூர் வழியாக செந்தூர் எக்ஸ்பிரஸ் தினந்தோறும் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னைக்கு சென்று வருகின்றது. காலை 6.20 மணி அளவில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் பயணிகளை இறக்கிவிட்டு செல்வது வழக்கம். இதேபோல் மயிலாடு துறையில் இருந்து கடலூர் வழியாக விழுப்புரத்திற்கு தினந்தோறும் காலையில் பயணிகள் ெரயில் சென்று வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் செந்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ெரயில் சிதம்பரம் வழியாக கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் ெரயில் நிலையத்தில் காலை 6.45 மணியளவில் திடீரென்று 2 ெரயில்களும் நிறுத்தப்பட்டன. காலை நேரம் என்பதால் பயணிகள் தேநீர் மற்றும் காலை உணவு உண்பதற்காக புதுச்சத்திரம் ெரயில் நிலையத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு உணவு பொருட்கள் மற்றும் தேநீர், குடிநீர் போன்ற எந்த வசதிகளும் இல்லாததால் பயணிகள் அவதி அடைந்தனர்.
காலை 7.45 மணி அளவில் செந்தூர் எக்ஸ்பிரஸ் அங்கிருந்து புறப்பட்டது. அப்போது ெரயிலில் குழந்தைகள் வைத்திருந்த பயணிகள், வயதானவர்கள் பெருமூச்சு விட்டபடி மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர். ஆனால், இந்த மகிழ்ச்சி சிறிது நேரத்தில் தவிடு பொடியானது. கடலூர் அடுத்த ஆலப்பாக்கம் ெரயில் நிலையத்தில் மீண்டும் செந்தூர் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் மீண்டும் அதிர்ச்சி அடைந்தனர். ெரயிலில் வந்த பயணிகள் எதற்காக சிக்னல் கிடைக்கவில்லை? ஏதேனும் பெரிய அளவிலான பிரச்சனையா? என்பதை ெரயில் நிலையத்தில் இறங்கி விசாரித்துக் கொண்டிருந்தனர். மேலும், பயணிகள் அனைவரும் ெரயில் நிலையத்தில் உணவு இல்லாமல் மிகுந்த வேதனையுடன் அலைந்து கொண்டிருந்தனர். சீரமைக்கும் பணி இந்த நிலையில் கடலூர் ஆலப்பாக்கம் ெரயில்வே தண்டவாளத்தை சீரமைக்கும் பணி நேற்று இரவு 10 மணிக்கு ெரயில்வே துறை ஊழியர்க ளால் தொடங்கப்பட்டது. இந்த பணி இன்று காலை வரை நடைபெற்றதால் செந்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள்ெரயில் சுமார் 1 1/2 மணி நேரமாக புதுச்சத்திரம் மற்றும் ஆலப்பாக்கம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆலப்பாக்கத்தில் இருந்து காலை 8.10 மணி அளவில் கடலூர் நோக்கி செந்தூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்திற்கு காலை 8. 25 மணிக்கு வந்தடைந்தது. சுமார் 2 மணி நேரம் காலதாமதமாக வந்தது குறிப்பிடத்தக்க தாகும்.
- ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் காந்தி சிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- 70 வயது ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத உயர்த்தி ஓய்வூதியம் வழங்க வேண்டும்,
கடலூர்:
கடலூர் மாவட்டம் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் காந்தி சிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
70 வயது ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத உயர்த்தி ஓய்வூதியம் வழங்க வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை உடன் அமல் படுத்த வேண்டும், அகவிலைப்படி உயர்வை மத்தியஅரசு வழங்கிய நாளிலிருந்து வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வை உடன் வழங்க வேண்டும், ஓய்வூதியர் குடும்ப நல நிதியை ரூ.1 லட்சமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் நல்லாசிரியர் வரதராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கண்ணன் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் அம்பேத்கர் விருதாளர் பாண்டுரங்கன், மாவட்ட நிர்வாகிகள் மகாராஜன், வை.சிற்றரசு, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், ஜீவானந்தம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் பழனி, வட்டத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். ஜெயபாலு நன்றி கூறினார்.
- ஆரோக்கியதாஸ் (வயது 56). விவசாயி. இவர் கடந்த 9-ந்தேதி வெளி யூருக்கு சென்று விட்டு தனது மோட்டார் சைக்கி ளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
- வீட்டின் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த இருளங்குப்பத்தை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (வயது 56). விவசாயி. இவர் கடந்த 9-ந்தேதி வெளி யூருக்கு சென்று விட்டு தனது மோட்டார் சைக்கி ளில வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
அப்போது வீட்டின் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் இவரை மீண்டும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மரில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செயது விசாரித்து வருகின்றனர்.
- கடலூர் அடுத்த தோட்டப்பட்டு பகுதியில் புதிதாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது.
- இங்கு ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஷேர் அலி என்பவர் வேலை செய்து வந்தார்.
கடலூர்:
கடலூர் அடுத்த தோட்டப்பட்டு பகுதியில் புதிதாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. இங்கு ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஷேர் அலி என்பவர் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று 2 நபர்கள் திடீரென்று ஷேர் அலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த ஷேர் அலி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் தோட்டப்பட்டு சேர்ந்த வெங்கடாஜலபதி உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தி.மு.க. கவுன்சிலர் பக்கிரிசாமி நடத்தும் நர்சரி பள்ளியில் படித்த 6 வயது சிறுமி, பள்ளி தாளாளர் பக்கிரிசாமியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
- அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்
கடலூர்:
விருத்தாசலத்தில் கடந்த 11-ந்தேதி தி.மு.க. கவுன்சிலர் பக்கிரிசாமி நடத்தும் நர்சரி பள்ளியில் படித்த 6 வயது சிறுமி, பள்ளி தாளாளர் பக்கிரிசாமியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பாதிக்கப் பட்ட சிறுமிக்கு நீதிகேட்டு பா.ஜ.க. மாநில செயலாளரும், விழுப்புரம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான வினோஜ். பி. செல்வம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருத்தாசலம் பாலக்கரையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப் பட்ட சிறுமிக்கு மருத்துவ மனையில் உரிய சிகிச்சை வழங்கப்பட வேண்டும், பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும், முதல் தகவல் அறிக்கையில் உண்மை தகவலை பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களிட்டு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பா.ஜ.க. கடலூர் மாவட்ட தலைவர் மணி கண்டன், விருத்தாசலம் நகர செயலாளர் மணியழகன் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- பண்ருட்டியில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவமாகி அழகான பெண் குழந்தை பிறந்தது.
- ஆம்புலன்சில் பணியில் இருந்த அவசர கால நுட்புணர் சதிஷ் பிரசவம் பார்த்தார்,
கடலூர்:
பண்ருட்டியில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவமாகி அழகான பெண் குழந்தை பிறந்தது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முடப்பள்ளியை சேர்ந்தவர் தமிழ்அரசன் மனைவி அனிதா (வயது 35). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆம்புலன்ஸ் விருத்தாச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது திடீரென அனிதாவிற்கு பிரசவ வலி அதிகமானதால், டிரைவர் தவபாலன் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்தினார்.
அதிகாலை 5.45 மணி அளவில் ஆம்புலன்சில் பணியில் இருந்த அவசர கால நுட்புணர் சதிஷ் பிரசவம் பார்த்தார். இதில் அனிதாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், சேயும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 2 பேரையும் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
- நீர் மோர் பந்தல் திறப்பு விழாவை முன்னிட்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது
- அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களை மர்ம நபர்கள் கிழித்து சென்றது தெரியவந்தது.
கடலூர்:
கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழாவை முன்னிட்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது.
பேனர் கிழிப்புஇதனை தொடர்ந்து இன்று காலை விழா நடைபெறும் இடத்திற்கு அ.தி.மு.க.நிர்வாகிகள் வந்தபோது அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களை மர்ம நபர்கள் கிழித்து சென்றது தெரியவந்தது. இத்தகவல் அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர் . பேனரை கிழித்த மர்ம நபர்கள் யார் ? எதற்காக கிழித்தார்கள் என தெரியவில்லை. தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் விசாரணை நடத்தினர். மேலும் யார் பேனரை கிழித்து சென்றார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரெட்டிச்சா வடி போலீஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பேனர்களை மர்ம நபர்கள் கிழித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- .கன்வென்ஷன் சென்டரில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
- தொழில் அதிபருமான ஜாகிர்உசேன் தொடங்கிவைத்து நோன்பின் மாண்பு பற்றி பேசினார்.
கடலூர்:
பண்ருட்டி இஸ்லாமிக் பைத்துல்மால்டிரஸ்ட் சார்பில் பண்ருட்டி, எல்.என்.புரம் சென்னை சாலை ஆர்.கே.எம்.கன்வென்ஷன் சென்டரில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில் இஸ்லாமிக் பைத்துல்மால் டிரஸ்ட் செயலாளரும், தொழில் அதிபருமான ஜாகிர்உசேன் தொடங்கிவைத்து நோன்பின் மாண்பு பற்றி பேசினார். மதார்ஷா பள்ளி மாணவர்கள் கிராத் ஓதினர்.
விழாவில் சிறப்பு அழைப் பாளர்களாக பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, வர்த்தக சங்க தலைவர் சண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றினார். இதில் இந்து, முஸ்லீம், கிருஷ்த்துவ சமுதாய தலைவர்கள், அரசுதுறை அதிகாரிகள், நூர் முகமது ஷா அவுலியா தர்கா கமிட்டி தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், முஸ்லிம் ஜமாத்தார்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதி நிதிகள், ரோட்டரி, அரிமா, எக்ஸ்னோரா, செந்தமிழ், முத்தமிழ் சங்கம், வர்த்தக சங்க நிர்வாகிகள், பள்ளி வாசல் பொறுப் பாளர்கள் திரளாக கலந்து கொண்ட னர். முன்னதாக அனைவரை யும் பண்ருட்டி இஸ்லாமிக் பைத்துல் மால் டிரஸ்ட் தலைவர் வக்கீல் இதயத்துல்லா வரவேற்றார். முடிவில் பைத்துல்மால் டிரஸ்ட் பி.எம்.டி.இ. நவாஸ் நன்றி கூறினார். தொடர்ந்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சிறப்பு தொழுகை நடந்தது.
- ஏரியின் சுற்றுபுறங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை வளாகமாக உருவாக்கப்படும்.
- பெருமாள் ஏரி பாசன விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதி நிதிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி பெருமாள் ஏரி தூர் வாரும் பணி நீர் வளத்துறையின் சார்பில் ரூ.112.42 கோடி மதிப்பீட்டில் நடைபெறுவதை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் பெருமாள் ஏரி பாசன விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதி நிதிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
பெருமாள் ஏரியின் இயல்பான கொள்ளவு 574 மில்லியன் கன அடியாகும். தற்போது 228.86 மில்லியன் கன அடியாக உள்ளது. தற்போது தூர் வாரும் பணியின் மூலம் சுமார் 1.40 கோடி கனமீட்டர் அளவிளான மண் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மண் எடுக்கப்பட்டு முடியும் தருவாயில் ஏரியின் கொள்ளவு அதன் தற்போதைய கொள்ளவான 228.86 மில்லியன் கன அடியில் இருந்து 723.27 மில்லியன் கன அடியாக உயரும், எனவே இதன் மூலம் ஏரியின் இயல்பான கொள்ளவை விட கூடுதலாக 149.27 மில்லியன் கன அடி நீர் சேமிக்க இயலும்.
பொருமாள் ஏரியின் மூலம் 6,503 ஏக்கர் விலை நிலங்கள் தற்போது வரை 1 போக சாகுபடிக்கு பாசன நீர் பெற்று வந்தது. இப்பணி முடிவுற்றதும் சுற்றியுள்ள விளைநிலங்கள் இருபோக சாகுபடிக்கு பாசன நீர்பெறும் வகையில் அமையும். இதுவரை சுமார் 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் அடுத்த 3 மாதங்களில் முடிவடையும். ஏரியின் சுற்றுபுறங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை வளாகமாக உருவாக்கப்படும்.
மேலும் விவசாயிகள் வைத்த கோரிக்கையினை ஏற்று இந்த ஏரியில் இருந்து பிரியும் 11 பிரதான பாசன வாய்க்கால்களை தூர்வாரி சிறப்பான முறையில் பாசன வசதி ஏற்படுத்தி தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பாலசுப்ரமணியம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், நீர் வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், செயற்பொறியாளர் காந்தரூபன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- ஆறு, ஏரி மற்றும் குளம் மீன்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
- மட்டன் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் இந்த மீன்களை வாங்கி செல்வதாக மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.
கடலூர்:
கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் மீன் பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும். அதன்படி நேற்று முதல் வருகிற ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன் பிடி தடைக்காலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் எதிரொலியாக கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் மற்றும் துறைமுகம் பகுதிகளில் உள்ள மீன் மார்க்கெட்டுகளுக்கு வரும் கடல் மீன்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
இதன் காரணமாக கடல் மீன்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஆறு, ஏரி மற்றும் குளம் மீன்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் கடலூர் செம்மண்டலம், சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை ஓரத்தில் கெண்டை மற்றும் வவ்வால் மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. அப்போது ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றதை காண முடிந்தது.
மேலும் கடல் மீன்களின் விலை உயர்ந்த காரணத்தினால் இந்த மீன்களை பொதுமக்கள் வாங்கி சென்றதோடு, தற்போது வெயில் காலம் என்பதால் சிக்கன் அதிகளவில் வாங்க விருப்பம் இல்லாத நிலையிலும், மட்டன் விலை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் இந்த மீன்களை வாங்கி செல்வதாக மீன் வியாபாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக காலையிலிருந்து மீன்கள் வாங்குவதற்கு மக்கள் குவிந்திருந்ததை காணமுடிந்தது.
- காலிப்பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
- மிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு 2023 தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் பி மற்றும் குரூப் சி நிலையில் 7,500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது. இத்தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்தவேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக வழங்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் மே 3-ந்தேதி மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் மே 4-ந்தேதி ஆகும்.
தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு ஜூலையில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் ஒரு மையத்திலும், தமிழ்நாட்டில் 7 மையங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் 3 மையங்களிலும் ஆக மொத்தம் 21 மையங்கள் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன. இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, இத்தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






