search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில்  தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும்சட்டசபையில் அய்யப்பன் எம்.எல்.ஏ. பேச்சு
    X

    கடலூரில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும்சட்டசபையில் அய்யப்பன் எம்.எல்.ஏ. பேச்சு

    • கடலூரில் ஒரு தொழில்நுட்பப் பூங்கா உருவாக்கித் தர வேண்டும்.
    • கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய மேம்பாலம் அமைத்துத்தர வேண்டும்

    கடலூர்:

    தமிழக சட்ட சபையில் கடலூர் தொகுதி எம்.எல்.ஏ. அய்யப்பன் பேசியதாவது:-

    கடலூரில் ஒரு தொழில்நுட்பப் பூங்கா உருவாக்கித் தர வேண்டும். கடலூரில், தடைப்பட்ட கப்பல் போக்குவரத்து மீண்டும் நடைபெற ஆவண செய்ய வேண்டும். சென்னை-கடலூர் ெரயில் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும். ங்கனாங்குப்பம், உச்சிமேடு, முதல் குண்டு உப்பலவாடி இடையே பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய மேம்பாலம் அமைக்க வேண்டும். கடலூர் புதுப்பாளையம் - ஓட்டல் தேவி வரை போக்குவரத்துக் கழகத்தை இணைக்கும் விதமாக கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய மேம்பாலம் அமைத்துத்தர வேண்டும். பெண்ணையாறு - கெடிலம் மலட்டாறு போன்ற ஆறுகள் கடலில் கலக்கும் இடமாக கடலூர் உள்ளதால் குறைந்தது கடலிலிருந்து 10 கி.மீ. தூரத்திற்குள்ளாவது ஆற்றின் கரைகளை பலப்படுத்தி ,தேவைப்படும் இடங்களில் சிமெண்ட் சுவர் அமைத்துத் தர வேண்டும். கெடிலம் ஆற்றில் கடலூர் நகரப் பகுதி - கம்மியம்பேட்டை முதல் சாவடி வரை இரண்டு கரைகளையும் பலப்படுத்தி, சுமார் 2 கி.மீ. வரை சாலை அமைத்து, பஸ்பேக்குவத்தைக் தொடர்வசதி செய்து தர வேண்டும். கடலூர் சில்வர் கடற்கரையை சுற்றுலாத் தலமாக ஆக்கிட வேண்டும். செம்மண்டலம் மாதா கோயில் அருகே சுற்றுவட்ட மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும்.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட் பகுதியில், நவீன வசதிகளுடன் வணிக வளாகம் அமைத்துத் தர வேண்டும். பெண்ணையாற்றின் குறுக்கே - வெள்ளப்பாக்கம் - அழகியநத்தம் ஆகிய இடத்தில் தடுப்பணை அமைக்க வேண்டும். கடலூர் அரசு பெரியார் கல்லூரியில், புதிய பாடப்பிரிவுகள் எம்.எஸ்.சி (மைக்ரோ பயாலஜி), பி.எஸ்.சி (பயோ டெக்னாலஜி) (பயோ கெமிஸ்ட்ரி) போன்ற புதிய பாடப் பிரிவுகளில் பயிலும் வகையில் புதிய வகுப்புகள் தொடங்க வேண்டும். கடலூர் தேவனாம்பட்டினம் , துறைமுகம் பகுதியில் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்லும் வகையில் 17-ம் நூற்றாண்டில் சுரங்கப்பாதை இருந்ததாக தெரிய வருகிறது. சிதலமடைந்த மாளிகையை, கட்டிடங்களை அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தி புதுப்பித்து சீரமைத்து அழகுப்படுத்தி சுற்றுலாத்தலமாக அமைத்து தர வேண்டும்.கடலூர் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி ஆகியவற்றில் தூண்டில் வளைவு ஏற்படுத்தி, மீனவப் மக்களைப் பாதுகாத்திட ஆவண செய்ய வேண்டும். நாணமேடு, உச்சிமேடு, பகுதியில் குளிர்ப்பதனக் கிடங்கு அமைத்துத் தர வேண்டும். 2009- ம் ஆண்டு தொடங்கப்பட்ட, பாதாள சாக்கடைத் திட்டத்தை முடித்திட வேண்டும். கடலூர் தொகுதியில், மழைநீர் வடிகால் வாய்க்கால் புதைவட மின்சார பணிகள் முழுமையாக முடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×