என் மலர்tooltip icon

    கடலூர்

    • முந்திரி தோப்பில் காட்டுப்பன்றி மற்றும் நரி போன்ற விலங்குகளை பிடிப்பதற்காக சில மர்ம நபர்கள் மண்ணில் அங்காங்கே கண்ணிவெடிகளை புதைத்து வைத்திருந்தனர்.
    • மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் 4 பேரும் காலை வைத்தனர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தில் ரங்கநாதன் என்பவருக்கு சொந்தமான முந்திரிதோப்பு உள்ளது.

    இங்கு அதே கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (வயது 60), இளையகுமார் (30), மதுரை பாண்டியன் (21), சிறுவன் ரகு (13) உள்ளிட்ட 4 பேரும் முந்திரிக்கொட்டை பொறுக்கும் வேலைக்கு சென்றனர்.

    இந்த முந்திரி தோப்பில் காட்டுப்பன்றி மற்றும் நரி போன்ற விலங்குகளை பிடிப்பதற்காக சில மர்ம நபர்கள் மண்ணில் அங்காங்கே கண்ணிவெடிகளை புதைத்து வைத்திருந்தனர். இதனை அறியாத 4 பேரும் முந்திரி தோப்பில் கீழே விழுந்து கிடந்த முந்திரிகளை பொறுக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் 4 பேரும் காலை வைத்தனர். இதில் கண்ணிவெடி வெடித்து 4 பேரும் தனித்தனியே தூக்கி வீசப்பட்டனர். இதில் முகம், கை, கால், மார்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ரங்கநாதனுக்கு ஒரு கால் துண்டானது.

    பலத்த சத்தத்தை கேட்டு அங்கு சென்ற பிற தொழிலாளர்கள் 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ரங்கநாதன் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கும், மதுரை பாண்டியன் விருத்தாசலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் விவசாய நிலத்தின் உரிமையாளருக்கு தெரியாமல் முந்திரிதோப்பில் கண்ணி வெடி புதைத்து வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    முந்திரி தோப்பில் கண்ணிவெடி வெடித்து ஒரு சிறுவன் உள்பட 4 பேர் பலத்த காயமடைந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பதட்டத்தை உருவாக்கி உள்ளது.

    • கடலூர் மாநகராட்சி பகுதியில் துணை மேயர் தாமரைச்செல்வன் ஆய்வு மேற்கொண்டார்.
    • கழிவுநீர் செல்லாமல் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்ததை கண்டறிந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி பகுதியில் துணை மேயர் தாமரைச்செல்வன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடலூர் சிப்பாய் தெருவில் வடிகால் வாய்க்கால் உடைந்து சேதம் அடைந்து இருந்தது. இதன் கார ணமாக கால்வாயில் சரியான முறையில் கழிவுநீர் செல்லாமல் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்ததை கண்டறிந்தார். இதனை தொடர்ந்து கடலூர் மாந கராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கழிவுநீர் கால்வாய் உடனடி யாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    மேலும் அப்பகுதியில் சாலையோரமாக வசித்து வரும் மக்கள் துணை மேயர் தாமரைச்செ ல்வனிடம், இலவச மின் இணைப்பு வழங்குவதற்கு கோரிக்கை வைத்தனர். இது தொட ர்பாக அதிகாரி களிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அப்போது வி.சி.க நகர செயலாளர் செந்தில், நிர்வாகிகள் சம்பத், பிரேம், துரை, ராஜ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • நேற்று இரவு கடலூர் முதுநகர் சான்றோர் பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு நபர் தங்களது வீட்டில் பாம்பு இருப்பதாக நள்ளிரவு தகவல் தெரிவித்துள்ளார்.
    • அவர்கள் செல்லா மற்றும் அஜய்யை சரமாரியாக தாக்கியதோடு செல்லா வைத்திருந்த செல்போனை உடைத்து நொறுக்கினர்

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் செல்லா (வயது 30). வன ஆர்வலர். இவரது உதவியாளர் செல்லங்குப்பம் சேர்ந்த அஜய் (வயது 23). இவர்கள் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாம்பு பிடித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கடலூர் முதுநகர் சான்றோர் பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு நபர் தங்களது வீட்டில் பாம்பு இருப்பதாக நள்ளிரவு தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து செல்லா மற்றும் அவரது உதவியாளர் அஜய் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சான்றோர் பாளையம் பகுதியில் சென்றனர். பின்னர் பாம்பு இருப்பதாக தகவல் கொடுத்த நபருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு தெரிவித்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் செல்லா மற்றும் அஜய்யிடம் நீங்கள் யார்? எதற்காக நிற்கிறீர்கள்? என கேட்டார்.

    அப்போது பாம்பு பிடிப்பதற்காக இங்கு வந்துள்ளோம் என தெரிவித்தனர். இந்த நிலையில் அந்த வாலிபர் திடீரென்று செல்லா மற்றும் அஜய்யை சரமாரியாக தாக்கினார். மேலும் அதே பகுதியை சேர்ந்த தனது ஆதரவாளர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். இதனை தொடர்ந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட கும்பல் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அவர்கள் செல்லா மற்றும் அஜய்யை சரமாரியாக தாக்கியதோடு செல்லா வைத்திருந்த செல்போனை கீழே போட்டு உடைத்து நொறுக்கினர். மேலும் செல்லாவை தாக்கியபோது அவர் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி அறுந்து கீழே விழுந்த நிலையில் அதனை பத்திரமாக செல்ல எடுத்துக்கொண்டு அங்கிருந்து உயிர் பிழைத்து தப்பித்து வந்தனர். இதில் காயமடைந்த செல்லா மற்றும் அஜய் ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் அருகே வன ஆர்வலர் செல்லா மற்றும் அவரது உதவியாளரை ஒரு கும்பல் தாக்கி செல்போைன அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடலூர் பாதிரிக் குப்பத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 24). இவரது மாமா சுகுமார் மகள் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.
    • அப்போது சூர்யாவிற்கும் சுகுமாருக்கும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது

    கடலூர்:

    :கடலூர் பாதிரிக் குப்பத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 24). இவரது மாமா சுகுமார் மகள் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. அப்போது சூர்யாவிற்கும் சுகுமாருக்கும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சூர்யா, அவரது மனைவி அருளரசி மற்றும் உறவினர் செல்வகுமார் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் நெய்வேலிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது இவர்களை பின் தொடர்ந்து வந்த ஒரு கும்பல் கடலூர் அடுத்த கண்ணாரப்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வழி மறித்து பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.    மேலும் அருளரசியை மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் சூர்யா மற்றும் அவரது உறவினர் செல்வகுமார் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரண மாக அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் அருளரசி கொடுத்த புகாரின் பேரில் சுகுமார் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பரத் (28) குமரன் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    • கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்புராயன் தலைமையில் நடைபெற்றது.
    • மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்,:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் சிபிஎம் கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்புராயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, மாவட்ட செயலாளர் மாதவன், மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் பள்ளி, கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட பெண்கள் பணியாற்றும் இடங்களில் பாலியல் புகார் கமிட்டி உருவாக்க பட வேண்டும். அமைக்கப்படாத நிறுவனங்களில் உடனடியாக அமைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு, நிரந்தர வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    • கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திலும் இதே நிலை நீடித்து வருகின்றது.
    • சோதனை செய்தபோது கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டது.

    கடலூர்::

    இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திலும் இதே நிலை நீடித்து வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாக இருக்கவேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்து வருகின்றது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 6 நபருக்கு கொ ரோனா ஏற்பட்டு சிகிச்சை பெற்று வர இந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் வாலிபர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக சேர்ந்தார். 

    அப்போது அவரை சோதனை செய்தபோது கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டன. இதனைத் தொடர்ந்து உடனடியாக அந்த வாலி பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தன. ஆனால் இன்று அதிகாலை வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு மருத்துவமனை களிலும் தனியார் மருத்துவ மனைகள் மற்றும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டம் முழு வதும் தீவிர கண்காணிப்பு பணியிலும் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று கொரோனா அறிகுறி யுடன் அனுமதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் திடீரென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருந்தபோதிலும் இறந்த வாலிபர் கொரோனா தொற்று காரணமாக இறந்தாரா? என்பது குறித்து டாக்டர்கள் உரிய பரிசோ தனைக்கு அனுப்பி உள்ள னர். இது மட்டுமின்றி இறந்த வாலிபர் வசித்து வந்த பகுதிகளில் உள்ள பொது மக்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்களை தீவிர சோதனைக்கு உட்படுத்தி கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.


    • சந்தோஷ்குமார் (28), விவசாயி, இவர் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தார்.
    • அந்த வழியாக எதிரே வந்த அரசு பஸ்மோட்டார் சைக்கிள் மீது மோதியது.


    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த நடுக்குப்பம் கிழக்குத் தெரு சேர்ந்தவர்மாணிக்கவேல் இவரது மகன் சந்தோஷ்குமார் (28), விவசாயி,இவர்,நேற்று இரவு 7 மணிக்கு நடுக்குப்பம் 4 முனை ரோடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக எதிரே வந்த அரசு பஸ்மோட்டார் சைக்கிள் மீது மோதியதுங இதில் சந்தோஷ்குமாருக்கு நெற்றியில் பலத்த அடிபட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர்புதுவை பீம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்தாண்டி குப்பம்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குப்பன் (வயது 48). நரிக்குறவர். இவர் 17-ந்தேதி மாலை தனது 5 வயது பேரனுடன் டீ குடிப்ப தற்காக மங்கலம்பேட்டையில் உள்ள டீ கடைக்கு சென்றுள்ளார்.
    • நரிக்குறவர் எல்லாம் இங்கே வரக்கூடாது: என கூறி விரட்டியுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அடுத்த பள்ளிப்பட்டு சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் குப்பன் (வயது 48). நரிக்குறவர். இவர் 17-ந்தேதி மாலை தனது 5 வயது பேரனுடன் டீ குடிப்ப தற்காக மங்கலம்பேட்டையில் உள்ள டீ கடைக்கு சென்றுள்ளார். அப்போது சிறுவனுக்கு குடிநீர் தாகம் எடுத்ததால் அந்த கடையில் ஜக்கில் வைக்கப்பட்டிருந்த நீரை எடுத்து குடித்தார். அதனை கண்ட டீ கடை உரிமையாளர் அண்ணாதுரை (59) தண்ணீர் குடித்த சிறுவன் சித்தார்த்தை திட்டியுள்ளார். இதனை கேட்ட சிறுவனின் தாத்தா வையும் விரட்டியுள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் குப்பன், அவரது பேரன் சித்தார்த் ஆகியோர் டீக்கடைக்கு சென்று டீ கேட்டுள்ளனர்.  அப்பொழுது கடையின் உரிமையாளர் அண்ணாதுரை என்பவர் 'நேற்று தானே உங்களை விரட்டினேன் மீண்டும் ஏன் இங்கே வர்ரீங்க, நரிக்குறவர் எல்லாம் இங்கே வரக்கூடாது: என கூறி விரட்டியுள்ளார்,

    இதனைத் தொடர்ந்து மங்கலம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குப்பன், பின்னர் மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் பேரில் டீக்கடையின் உரிமையாளர் அண்ணாதுரை மீது வன்கொடுமை தடுப்புத் திட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • 12 பேர் மேல்மருவத்தூருக்கு செல்வதற்காக நேற்று இரவு புறப்பட்டு வேன் ஒன்றில் வந்தனர்.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவில் இருந்த சென்டர் மீடியன் கட்டையில் பயங்கர வேகத்தில் மோதியது

    கடலூர்:

    திருவாரூர் மாவட்டம் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் மேல்மருவத்தூருக்கு செல்வதற்காக நேற்று இரவு புறப்பட்டு வேன் ஒன்றில் வந்தனர். இந்த வேனை அதே ஊரை சேர்ந்த டிரைவர் கணேசமூர்த்தி (வயது 25) ஓட்டி வந்தார். இந்த வேன் இன்று அதிகாலை 5.30 மணிக்கு பண்ருட்டி-கும்பகோணம் சாலை அரசு ஆஸ்பத்திரி அருகே வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவில் இருந்த சென்டர் மீடியன் கட்டையில் பயங்கர வேகத்தில் மோதியது. மோதிய வேகத்தில் வேன் டயர் வெடித்து சிதறியது. இதனால் தாறுமாறாக சிறிது தூரம் ஓடிய வேன் மீண்டும் தடுப்பு கட்டையில் மோதி  இதில் வேனில் பயணம் செய்த செவ்வாடை பத்தர்கள் லேசான காயத்து டன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதனால் பண்ருட்டி -கும்பகோணம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. இது பற்றி தகவல் அறிந்த ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு சாலையில் இருந்த வேன் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இது குறித்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   பண்ருட்டி கும்பகோணம் சாலையிலுள்ள சென்டர் மீடியனில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  பண்ருட்டி போலீசார் பொக்லைன் எந்திரம் மூலம் வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்

    • சிதம்பரத்தை அடுத்த கண்டியாமேடு கிராமத்தில் வசிப்பவர்கள் அறிவுக்கண்ணன் லதா தம்பதியர்.
    • அந்த மர்ம நபர்கள் அறிவுக்கண்ணன் மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் இருந்த ரூ.3 லட்சம் பணத்தை பறித்து சென்றனர்..

    கடலூர்:

    சிதம்பரத்தை அடுத்த கண்டியாமேடு கிராமத்தில் வசிப்பவர்கள் அறிவுக்கண்ணன் லதா தம்பதியர். இவர்கள் தங்கள் குடும்ப செலவிற்காக சிதம்பரம் தெற்கு வீதியில் இயங்கி வரும் இந்தியன் வங்கியில் நகையை அடமானம் வைத்தனர். இந்நிலையில் அடமானம் வைத்த நகையை மீட்க ரூ.3 லட்சம் பணத்துடன் மோட்டார் சைக்கிளில் வங்கிக்கு வந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சில்லரை பணத்தை எடுத்து வீசினர். இதனை எடுத்து அவர்களிடம் ஓப்படைக்க அறிவுக்கண்ணன், லதா தம்பதியர் முயற்சித்தனர்.

    அப்போது அந்த மர்ம நபர்கள் அறிவுக்கண்ணன் மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் இருந்த ரூ.3 லட்சம் பணத்தை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி அறிவுக்கண்ணன், லதா தம்பதியிடம் விசாரணை நடத்தி வருகின்றார்.

    • கடலூரில் ஒரு தொழில்நுட்பப் பூங்கா உருவாக்கித் தர வேண்டும்.
    • கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய மேம்பாலம் அமைத்துத்தர வேண்டும்

    கடலூர்:

    தமிழக சட்ட சபையில் கடலூர் தொகுதி எம்.எல்.ஏ. அய்யப்பன் பேசியதாவது:-

    கடலூரில் ஒரு தொழில்நுட்பப் பூங்கா உருவாக்கித் தர வேண்டும். கடலூரில், தடைப்பட்ட கப்பல் போக்குவரத்து மீண்டும் நடைபெற ஆவண செய்ய வேண்டும். சென்னை-கடலூர் ெரயில் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும். ங்கனாங்குப்பம், உச்சிமேடு, முதல் குண்டு உப்பலவாடி இடையே பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய மேம்பாலம் அமைக்க வேண்டும். கடலூர் புதுப்பாளையம் - ஓட்டல் தேவி வரை போக்குவரத்துக் கழகத்தை இணைக்கும் விதமாக கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய மேம்பாலம் அமைத்துத்தர வேண்டும். பெண்ணையாறு - கெடிலம் மலட்டாறு போன்ற ஆறுகள் கடலில் கலக்கும் இடமாக கடலூர் உள்ளதால் குறைந்தது கடலிலிருந்து 10 கி.மீ. தூரத்திற்குள்ளாவது ஆற்றின் கரைகளை பலப்படுத்தி ,தேவைப்படும் இடங்களில் சிமெண்ட் சுவர் அமைத்துத் தர வேண்டும். கெடிலம் ஆற்றில் கடலூர் நகரப் பகுதி - கம்மியம்பேட்டை முதல் சாவடி வரை இரண்டு கரைகளையும் பலப்படுத்தி, சுமார் 2 கி.மீ. வரை சாலை அமைத்து, பஸ்பேக்குவத்தைக் தொடர்வசதி செய்து தர வேண்டும். கடலூர் சில்வர் கடற்கரையை சுற்றுலாத் தலமாக ஆக்கிட வேண்டும். செம்மண்டலம் மாதா கோயில் அருகே சுற்றுவட்ட மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும்.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட் பகுதியில், நவீன வசதிகளுடன் வணிக வளாகம் அமைத்துத் தர வேண்டும். பெண்ணையாற்றின் குறுக்கே - வெள்ளப்பாக்கம் - அழகியநத்தம் ஆகிய இடத்தில் தடுப்பணை அமைக்க வேண்டும். கடலூர் அரசு பெரியார் கல்லூரியில், புதிய பாடப்பிரிவுகள் எம்.எஸ்.சி (மைக்ரோ பயாலஜி), பி.எஸ்.சி (பயோ டெக்னாலஜி) (பயோ கெமிஸ்ட்ரி) போன்ற புதிய பாடப் பிரிவுகளில் பயிலும் வகையில் புதிய வகுப்புகள் தொடங்க வேண்டும். கடலூர் தேவனாம்பட்டினம் , துறைமுகம் பகுதியில் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்லும் வகையில் 17-ம் நூற்றாண்டில் சுரங்கப்பாதை இருந்ததாக தெரிய வருகிறது. சிதலமடைந்த மாளிகையை, கட்டிடங்களை அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தி புதுப்பித்து சீரமைத்து அழகுப்படுத்தி சுற்றுலாத்தலமாக அமைத்து தர வேண்டும்.கடலூர் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி ஆகியவற்றில் தூண்டில் வளைவு ஏற்படுத்தி, மீனவப் மக்களைப் பாதுகாத்திட ஆவண செய்ய வேண்டும். நாணமேடு, உச்சிமேடு, பகுதியில் குளிர்ப்பதனக் கிடங்கு அமைத்துத் தர வேண்டும். 2009- ம் ஆண்டு தொடங்கப்பட்ட, பாதாள சாக்கடைத் திட்டத்தை முடித்திட வேண்டும். கடலூர் தொகுதியில், மழைநீர் வடிகால் வாய்க்கால் புதைவட மின்சார பணிகள் முழுமையாக முடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலு வலர்களுடன் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலை மையில் நடைபெற்றது
    • மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலு வலர்களுக்கு உத்தரவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலு வலர்களுடன் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலை மையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிற னாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். குறைதீர்வு கூட்டத்தில் பட்டா தொடர்பான 47 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 26 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 19 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 32 மனுக்களும், மாற்றுதிறனாளி நல அலுவலகம் தொடர்பாக 22 மனுக்களும், இதர மனுக்கள் 147 ஆக மொத்தம் 293 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதார ருக்கு தீர்வு வழங்க வேண்டும்.

    மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலு வலர்களுக்கு உத்தரவிட்டார். குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக கடலூர் வட்டத்தை சேர்ந்த 4 மாற்று திறனாளி பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா விற்கான ஆணையை கலெக்டர் பாலசுப்ரமணியம் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன், தனித்துணை ஆட்சியர் கற்பகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×