என் மலர்
கடலூர்
- மதினா பள்ளி வாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நோன்பு திறப்பு மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
- கடலூர் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
கடலூர்:
கடலூர் துறைமுகம் மாலுமியார்பேட்டை மதினா பள்ளி வாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நோன்பு திறப்பு மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கடலூர் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாநகர அவைத்தலைவர் பழனிவேல், பொருளாளர் ராஜேந்திரன், மாநகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, மண்டல குழு தலைவர்கள் இளையராஜா, பிரசன்னா, மாநகராட்சி கவுன்சிலர்கள் பாலசுந்தர் மற்றும், விஜயலட்சுமி செந்தில், வட்ட செயலாளர்கள் நவ்ஷத் அலி, வெங்கடேஷ், ராஜேஷ், பகுதி அவைத் தலைவர் சண்முகம், மனோகர், தகவல் தொழில்நுட்ப அணி பிரவின், கோபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அந்த லாரி பாலக்கரை நோக்கி சென்ற போது போது, பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத நபர் மீது லாரி மோதியது.
- , சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
கடலூர்:
விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் லோடு ஏற்றி கொண்டு லாரி வந்தது. அப்போது அந்த லாரி பாலக்கரை நோக்கி சென்ற போது போது, பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத நபர் மீது லாரி மோதியது.இதில் கீழே விழுந்த நபர் மீது லாரியின் பின் சக்கரத்தில் மாட்டி, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். அங்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்த விருத்தாசலம் போலீசார், உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
- மாநில அளவிலான கையுந்து பந்து போட்டி சென்னையில் நடந்தது.
- இதற்கு துணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
கடலூர்:
மாநில அளவிலான கையுந்து பந்து போட்டி சென்னையில் நடந்தது. இப்போட்டியில் கடலூர் செம்மண்டலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். மேலும் கடந்த 18 ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது.
இதற்கு துணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். விழாவில் மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவர்களுக்கும், அவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியா ளர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டி பேசினார். அவர் பேசியதாவது, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர்கள் உலக அளவில் சாதனை படைக்க பல்வேறு திட்டங்களை வழிவகுத்து ஊக்கப்படுத்தி வருகிறார். ஆகையால் நீங்கள் உரிய முறையில் பயிற்சி பெற்று தற்போது செய்துள்ள சாதனைகளை தாண்டி பல்வேறு சாதனைகளை பெற வேண்டும். இவ்வாறு பேசினார். மண்டல பயிற்சி இணை இயக்குனர் ஜான் போஸ்கோ, நிர்வாக அலு வலர் ஞானவேல், பயிற்சி அலுவலர் வேணுகோபால், ராமலிங்கம், விஜயகுமார், முருகன், அஷ்ரப் அலி, சதிஷ், செந்தில், சிலம்பு மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்பயிற்சி அலுவலர் வெங்கடாஜலபதி நன்றி கூறினார்.
- நகராட்சி மீன் மார்க்கெட்டில் ரசாயணம் தடவிய பழைய மீன்கள் மற்றும் நண்டுகள் விற்பனை செய்யப்ப டுவதாக தகவல் வந்தது
- உணவு பாதுகாப்பு அலுவலர் அருண்மொழி ஆய்வு மேற்கொண்டனர்
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்குமெயின் ரோட்டில் உள்ள நகராட்சி மீன் மார்க்கெட்டில் ரசாயணம் தடவிய பழைய மீன்கள் மற்றும் நண்டுகள் விற்பனை செய்யப்ப டுவதாக தகவல் வந்தது. இதையடுத்து சிதம்பரம் உணவு பாதுகாப்பு அலுவலர் அருண்மொழி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மீன் மார்க்கெட்டில் விற்பனை க்காக வைக்கப்பட்டிருந்த 2 நாட்களுக்கு முன் பிடிக்கப்பட்ட மீன்க ளை அப்புறப்படுத்தினர். மேலும் தொடர்ந்து புகார் வந்தால், மீன்களை கைப்பற்றி சோதனைக்கு அனுப்பப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர், மீன் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
- கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு எம்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022-2023 அரவைப் பருவம் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது
- கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு எம்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022-2023 அரவைப் பருவம் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது
கடலூர்:
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு எம்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022-2023 அரவைப் பருவம் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 2500 டன் வீதம் அரவை நடைபெற்று வருகிறது. தற்போது வரை 2 லட்சத்து 45 ஆயிரம் டன் கரும்பு அரைக்கப்பட்டு உள்ளது. மேலும் சர்க்கரை ஆலையில் கூடுதல் மின் உற்பத்தி திட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக வேளாண் துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் .ஆர். கே பன்னீர்செல்வம் அவர்களின் உத்தரவின் படி சென்னை சர்க்கரை துறை ஆணையத்தில் இருந்து தலைமை பொறியாளர் பிரபாகரன் தலைமை ரசாயனார் ரவிச்சந்திரன். தலைமை கரும்பு அலுவலர் மாமுன்டி மற்றும் அதிகாரிகள் சர்க்கரை ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது வரும் 2023-2024 அரவை பருவத்தில் கூடுதல் மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இந்த ஆண்டிற்கு பதிவு செய்யப்பட்ட கரும்புகள் முழுவதும் அரவை செய்த பின்பு அரவை நிறுத்தப்படும் எனவும் இதனால் கரும்பு விவசாயிகள் தங்கள் கரும்புகளை விரைந்து வெட்டி அனுப்பி ஒத்துழைப்பு தர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சர்க்கரை ஆலையில் தலைமை ரசாயனார் செல்வேந்திரன் தலைமை பொறியாளர் ராம்குமார் தலைமை கரும்பு அலுவலர் ரவி கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடனே இருந்தனர்.
- கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மருங்கூரை சேர்ந்தவர் பவுனம்மாள் (வயது 85).
- இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மருங்கூரை சேர்ந்தவர் பவுனம்மாள் (வயது 85). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த இவரை கொலை செய்து. இவர் அணிந்திருந்த 3 பவுன் தோடு, செயின் ஆகியவைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளை யடித்து சென்றனர். இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை, கொள்ளை வழக்கில் கடந்த 3 ஆண்டு காலமாக துப்பு ஏதும் கிடைக்காமல் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ராஜாராம் பொறுப்பேற்ற பிறகு, நிலுவையில் உள்ள வழக்குகளை துப்பு துலக்கிவதில் தீவிரம் காட்டினார். அதன்படி இந்த வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா நியமிக்கப்பட்டார். பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்திய போலீசார், இந்த கொலை வழக்கில் முக்கிய குற்ற வாளிகளாக மனப்பாக் கத்தை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 32), மேல் அருங்கு ணத்தை சேர்ந்த வேலாயுதம் ஆகிய 2 பேரையும் அடை யாளம் கண்டனர். இதையடுத்து அந்த 2 வாலிபர்களையும் போலீ சார் அதிரடியாக கைது செய்து விசாரித்தனர். விசார ணையில், மூதாட்டி யை கொலை செய்து கொள்ளையடித்ததை 2 வாலிபர்களும் ஒத்துக் கொண்டனர்.
மூதாட்டியை கொலை செய்து நகையை கொள்ளை யடித்த 2 நபர்களையும் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மூன்று ஆண்டு களுக்கு முன்பு நடந்த கொலை, கொள்ளை வழக்கில் துப்பு துலக்கிய பண்ருட்டி போலீசாரை கடலூர் சூப்பிரண்டு ராஜா ராம் வெகுவாக பாராட்டி னார்.
- கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தில் ரங்கநாதன் என்பவருக்கு சொந்தமான முந்திரி தோப்பு உள்ளது,
- இதனை அறியாத 4 பேரும் முந்திரி தோப்பில் கீழே விழுந்து கிடந்த முந்திரிகளை பொறுக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தில் ரங்கநாதன் என்பவருக்கு சொந்தமான முந்திரி தோப்பு உள்ளது இங்கு அதே கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (வயது 60), இளையகுமார் (30), மதுரை பாண்டியன் (21), சிறுவன் ரகு (13) உள்ளிட்ட 4 பேரும் முந்திரிக் கொட்டை பொறுக்கும் வேலைக்கு சென்றனர்.
இந்த முந்திரி தோப்பில் காட்டுப்பன்றி மற்றும் நரி போன்ற விலங்குகளை பிடிப்பதற்காக சில மர்ம நபர்கள் மண்ணில் அங்காங்கே கண்ணி வெடிகளை புதைத்து வைத்திருந்தனர். இதனை அறியாத 4 பேரும் முந்திரி தோப்பில் கீழே விழுந்து கிடந்த முந்திரிகளை பொறுக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். மக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் 4 பேரும் காலை வைத்தனர். இதில் கண்ணிவெடி வெடித்து 4 பேரும் தனித்தனியே தூக்கி வீசப்பட்டனர். இதில் முகம், கை, கால், மார்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ரங்கநாதனுக்கு ஒரு கால் துண்டானது. பலத்த சத்தத்தை கேட்டு அங்கு சென்ற பிற தொழி லாளர்கள் 4 பேரையும் மீட்டு 108 ஆம்பு லன்ஸ் மூலம் விருத்தா சலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ரங்க நாதன் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கும், மதுரை பாண்டியன் விருத்தாசலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
போலீசார் விசாரணைதகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் தலைமை யிலான போலீசார் விசார ணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் விவசாய நிலத்தின் உரிமை யாளருக்கு தெரியாமல் முந்திரிதோப்பில் கண்ணி வெடி புதைத்து வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றது.முந்திரி தோப்பில் கண்ணிவெடி வெடித்து ஒரு சிறுவன் உள்பட 4 பேர் பலத்த காயமடைந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பதட்டத்தை உருவாக்கி உள்ளது.
- வாகன விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை தீயணைப்பு
- கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு துறை வீரர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மேலும் தீயணைப்பு துறை சார்பில் தீ கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு துறை வீரர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் தீயணைப்புத் துறை சார்பில் தீ தொண்டு வார விழாவை முன்னிட்டு தீ விபத்து ஏற்படாத வகையிலும், தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் வாகன விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை தீயணைப்பு துறை சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டி கடலூர் டவுன் ஹாலில் இருந்து புறப்பட்டு தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரை வரை நடைபெற்றன.
இப்போட்டியில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு துறை வீரர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மேலும் தீயணைப்பு துறை சார்பில் தீ விபத்து நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற தீயணைப்பு வீரர்களுக்கு மாவட்ட தியணைப்பு அதிகாரி குமார் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். அப்போது தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் ஆறுமுகம், நிலைய அலுவலர்கள் விஜயகுமார், கொளஞ்சிநாதன், கொளஞ்சிநாதன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
- மனுதாரர்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- புதிய செயலியை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுராஜாராம் தொடங்கிவைத்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் மனுதாரர்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியும், போலீஸ் உயர் அதிகாரிகள் உடனுக்குடன் தகவல் தெரிந்து கொள்ளும் வகையிலும் உருவாக்கப் பட்ட புதிய செயலியை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுராஜாராம் தொடங்கிவைத்தார்.
இதனை தொடர்ந்து புதிய செயலி மூலம் காவல்துறை உயர் அதிகாரிகள் புதிய செயல்களை அவ்வப்போது கண்காணித்து காவல் நிலையங்களில் புகார் மனு சம்பந்தமாக விவரம் தெரிந்து கொள்ள முடியும். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனியாக கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டு காவல் ஆளுநர்கள் புதிய செயலியை தொடர்ந்து கண்காணித்து முதல் தகவல் அறிக்கை மனு ,ரசீது பதிவு செய்த விவரம் மருத்துவ மனைகளில் இருந்து கிடைக்கப் பெற்ற தகவல் களின்படி சட்டபடியான உரிய நடவடிக்கைகள், விசாரணை அதிகாரிகள் மனுதாரர்களிடம் நடந்துகொள்ளும் விதம் குறித்தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். இப்புதிய செயலி மூலம் காவல் நிலையத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது தாமதமின்றி, குறித்த காலத்திற்குள் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அப்போது இந்நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பி ரண்டு அசோக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு கள் சபியுல்லா, கரிகால் பாரி சங்கர், அசோகன், தேவராஜ், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம், இன்ஸ்பெக்டர் குரு மூர்த்தி மற்றும் போலீ சார் கலந்து கொண்டனர்.
- லிங்கமூர்த்தி- சினேகா தம்பதியருக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.
- வீட்டில் இருந்த சினேகா திடீரென குழந்தையுடன் காணாமல்போய்விட்டார்
கடலூர்:
பண்ருட்டி அடுத்த மருங்கூர் தோப்பு கொல்லை ஏரிமேட்டு தெருவை சேந்தவர் லிங்கமூர்த்தி. இவரது மனைவி சினேகா (24). இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. நேற்று (19ம் தேதி) மாலை வீட்டில் இருந்த சினேகா திடீரென குழந்தையுடன் காணாமல்போய்விட்டார்.பல இடங்களில் தேடி எங்கும் கிடைக்காததால் அவரது கணவர் லிங்க மூர்த்தி முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரில் லிங்கமூர்த்தியின் தம்பி சபாபதி என்பவர் தனது மனைவி சினேகாவை குழந்தையுடன் கடத்தி சென்றதாக கூறியுள்ளார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைபாண்டியன், வழக்கு பதிவு செய்து குழந்தையுடன் காணாமல் போன சினேகாவை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்.
- ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர் .
- பணத்தை அவரிடம் ஒப்படைத்த ராஜாராமுக்கு பொதுமக்களும் சக ஊழியர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கரும்பூரை சேர்ந்தவர் தயாளன்.
இவர் தற்போது நெய்வேலி இந்திரா நகரில் வசித்து வருகிறார். பண்ருட்டி லிங்க் ரோட்டில் உள்ள டாஸ்மாக்கில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும் இவர் நேற்றிரவு வேலை முடிந்து தனதுமோட்டார் சைக்கிளில்வீடு திரும்பினார். மேல்மாம்பட்டு பகுதியில் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டு இருந்தபோது திடீரென மயங்கி கீழேவிழுந்தார்.
அப்போது வேப்பூரில் இருந்துபணி முடிந்து மோட்டார் சைக்கிளில் பண்ருட்டிக்கு வந்து கொண்டிருந்த ராஜா ராம் என்ற மற்றொரு டாஸ்மாக் ஊழியர் தயாளன் மயங்கிய நிலையில் சாலை ஓரத்தில்கிடந்ததை பார்த்தார்.
உடனடியாக 108 ஆம்புலன்சை அழைத்தார். ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர் .
அவரிடம் இருந்த ரூபாய் 3லட்சத்து 50 ஆயிரம் கீழே விழுந்து கிடந்தது. அந்த பணத்தையும் பத்திரமாக அவரிடம் ஒப்படைத்தார். சக ஊழியர் ஒருவரை காப்பாற்றி அவர் எடுத்து வந்த பணத்தை அவரிடம் ஒப்படைத்த ராஜாராமுக்கு பொதுமக்களும் சக ஊழியர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
- கடந்த 7 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். அவருடைய மகள் மற்றும் 2 பெண் பேத்திகளுடன் கூலி வேலை செய்து வசித்து வருகிறார்.
- புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
கடலூர்:
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி ஜே. ஜே. நகர் பகுதியில் வசித்து வருபவர் பானுமதி. இவர் கணவர் காந்தி. கடந்த 7 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். அவருடைய மகள் மற்றும் 2 பெண் பேத்திகளுடன் கூலி வேலை செய்து வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பானுமதியின் கணவரின் பூர்வீக இடமான 8 சென்ட் வீட்டுமனையை, வேறொரு நபர் பட்டா மாறுதல் செய்து கொண்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுத்து பூர்வீக இடத்தை மீட்டு தர போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பானுமதி அவருடைய மகள் பாக்கியலட்சுமி மற்றும் 2 பேத்திகளுடன் விருத்தாசலம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்து முறையிட்டார் புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும், புகார் அளிக்க வந்த அப்பெண்மணியின் ஆதரவற்ற ஏழ்மை நிலையை கண்டு மனம் கலங்கிய போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், அக்குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி, ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், பானுமதி அவருடைய மகள் மற்றும் 2 பேத்திகளுக்கு புதிய ஆடைகள் வாங்கித் தந்து, 2 பேத்திகளையும் பள்ளியில் சேர்த்து நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும் எனவும் அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறேன் என உறுதி அளித்தார். மேலும், ஒரு ஆட்டோவை வரவழைத்து அக்குடும்பத்தினரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். புகார் அளிக்க வந்த பெண்மணியின் ஆதரவற்ற வறுமை நிலையை கண்டு உடனடியாக உணர்ந்து, அரிசி மற்றும் மளிகை பொருட்கள், ஆடைகள் வாங்கித் தந்து ஆட்டோவில் வழியனுப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது பற்றி அறிந்த சமூக ஆர்வலர்கள் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.






