என் மலர்
கடலூர்
- நேற்று பகல் 2 மணிக்கு ஏரிக்கரைக்கு சென்று வருவதாக சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
- இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியும் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அரசன். இவரது மகள் அனிதா (22). இவர் கடலூர் கே.என்.சி. கல்லூரியில் பி.ஏ. வரலாறு முடித்து விட்டு புதுச்சேரி லூகாஸ் டி.வி.எஸ். கம்பெனியில் வேலை செய்தார். கம்பெனி விடுமுறை என்பதால் நேற்று வீட்டில் இருந்தார். நேற்று பகல் 2 மணிக்கு ஏரிக்கரைக்கு சென்று வருவதாக சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
அவரை பற்றி அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் குடுமையான்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஞானவேல் என்பவரது மகன் தினேஷ் (24)என்பவர் 4 பேருடன் வந்து தனது மகளை கடத்தி சென்று விட்டதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியும் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட இளம் பெண்ணை தனி படை அமைத்து வலைவீசி தேடி வருகிறார்.
- விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கொடியேற்று விழா கடலூர் அடுத்த கிளிஞ்சிகுப்பத்தில் நடைபெற்றது
- கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கி கட்சி கொடியினை ஏற்றி வைத்தார்
கடலூர்:
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கொடியேற்று விழா கடலூர் அடுத்த கிளிஞ்சிகுப்பத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கி கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் சம்பத், பன்னீர், ராஜேஷ், சக்திமுருகன், ஏழுமலை, ராம்பிரகாஷ், லிங்கேஷ், சித்திரவேல், முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அண்ணாகிராம வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் கண்டரக்கோட்டையில் நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் நாகபூஷ்ணம் தலைமை தாங்கினார்.
கடலூர்:
அண்ணாகிராம வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் கண்டரக்கோட்டையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் நாகபூஷ்ணம் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கவுரி பாண்டியன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் எம்.சி.சம்மந்தம் முன்னிலை வகித்தனர். அண்ணாகிராம ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி மற்றும் கிளைக் கழகங்களில் அதிக அளவில் உறுப்பினர்கள் சேர்ப்பது, மேலும் அ.தி.மு.க. பொதுசெயலாளராக எடப்பாடியாரை அங்கீகரித்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவிப்பது எனவும், அ.தி.மு.க.வின் பொன்விழா மாநாட்டில் அதிகளவில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அனைத்து ஊராட்சி கிளைகளுக்கு உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் அவை தலைவர்கள் செல்வராஜ், பாண்டியன், மாவட்ட பிரதிநிதி விஸ்வநாதன், ஒன்றிய பொருளாளர் ஏழுமலை, ஒன்றிய துணை செயலாளர்கள் ரஜினி, உமா துரைராஜ் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயமூர்த்தி மற்றும் செயல் அலுவலர் சண்முகசுந்தரி ஆகியோர் அறிக்கை விடுத்தனர்.
- சொத்துவரி தொகையை வருகிற 30-ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற்றுக் கொள்ளவும்,இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ளவேண்டும்.
கடலூர்:
மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயமூர்த்தி மற்றும் செயல் அலுவலர் சண்முகசுந்தரி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- தமிழ்நாடு முதல்- அமைச்சர் உத்தரவின்படி நகர்புற உள்ளாட்சிகளில் ஒவ்வொரு அரையாண்டிலும் 30 நாட்களுக்குள் சொத்துவரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்க சட்டமன்றத்தில் அறிவிப்பு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மங்கலம்பேட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் 2023 - 24- ம் ஆண்டின் முதல் அரையாண்டு சொத்துவரி தொகையை வருகிற 30-ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற்றுக் கொள்ளவும். இந்த அறிய வாய்ப்பை மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி பகுதி மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
- நிர்வாக இயக்குனர் சசிகலா இன்று காலை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
- பணிகளை விரைந்து முடித்து பயன் பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தி னார்.
கடலூர்:
நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்வ தற்காக செங்கல்பட்டு மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் சசிகலா இன்று காலை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நெல்லிக் குப்பம் பகுதியில் 6 குளங்கள் தூர்வாரப்படும் பணிகள், ஜம்புலிங்க பூங்காவில் காலை சிற்றுண்டி செய்வதற்கு புதிய கட்டிடம் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வரு வதை நகராட்சி நிர்வாக இயக்குனர் சசிகலா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அனைத்து பணிகளும் அரசு விதிக்கப்பட்ட உத்தரவு படியும், அந்தந்த காலக்கட் டத்திற்குள் பணிகளை விரைந்து முடித்து பயன் பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தி னார். அப்போது நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி, பொறியாளர் பாண்டு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- கடலூர் முதுநகரில் இருந்து மீன் ஏற்றிக் கொண்டு லாரி கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.
- டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி நடு ரோட்டிலேயே பயங்கர சத்தத்துடன் கவிழ்ந்தது.
கடலூர்:
கடலூர் முதுநகரில் இருந்து மீன் ஏற்றிக் கொண்டு லாரி கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. கடலூர் முதுநகர் அருகே சின்னகாரைக்காடு பகுதியில் விருத்தாசலம்-கடலூர் சாலையில் இன்று அதிகாலை வந்தது. அப்போது திடீரென டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி நடு ரோட்டிலேயே பயங்கர சத்தத்துடன் கவிழ்ந்தது.
இதில் லாரியில் இருந்த மீன்கள் அனைத்தும் சாலையில் சிதறின. இது பற்றி அறிந்த கடலூர் முதுநகர் போலீ சார் விரைந்து சென்று நடுரோட்டில் கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப் படுத்தும் முயற்சியில் ஈடு பட்டனர். மேலும் மீன்களும் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்தில் லாரியின் முன்பகுதியும், மின்கம்பமும் சேதமடைந்தது. லாரி டிரைவர் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்ப வத்தால் கடலூர்-விருத்தா சலம் சாலையில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- ராஜாராமன் (வயது 45). தொழிலாளி. இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
- ராஜா ராமன், அங்கிருந்த கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
கடலூர்:
கடலூர் அடுத்த வழிசோதனைபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 45). தொழிலாளி. இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக ராஜாராமன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள வயலுக்கு சென்ற ராஜா ராமன், அங்கிருந்த கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் விரைந்து வந்து தூக்கில் பிணமாக கிடந்த ராஜாராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பள்ளிவாசலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஏழை, எளிய முஸ்லிம்களுக்கு வேட்டி-சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
- பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
கடலூர்:
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அஞ்சுமனே நூரே முஹம்மதியா ஜாமியா பள்ளிவாசலில் ஏழை, எளிய முஸ்லிம்களுக்கு வேட்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி 3-வது வார்டு கவுன்சிலர் பிரகாஷ் தலைமை தாங்கி பள்ளி வாசலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஏழை, எளிய முஸ்லிம்களுக்கு வேட்டி-சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதில் பள்ளிவாசல் முக்தவல்லி ரபீக், செயலாளர் நஜீர் அகமது, ராமலிங்கம், முருகன், அஷ்ரப் அலி, செந்தில், சிலம்பு, அப்துல் ரஷீத், சதிஷ், ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடபட்டு வருகிறது.
- நூர்முகமது ஷா அவுலியா தர்காவிலிருந்து முஸ்லிம்கள் ஊர்வலமாக வந்தனர்.
கடலூர்:
நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடபட்டு வருகிறது. பண்ருட்டியில் ரம்ஜானை முன்னிட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பண்ருட்டி கடலூர் ரோட்டிலுள்ள ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை இன்று காலை நடந்தது.இதனைமுன்னிட்டு பண்ருட்டி காந்திரோடு நூர்முகமது ஷா அவுலியா தர்காவிலிருந்து முஸ்லிம்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் சென்னை ஜேப்பியார் ஸ்டீல்ஸ் அதிபர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட ஏராளமானமுஸ்லிம்கள் திரளாக கலந்துகொண்டுவழிபாடு செய்தனர். பெரிய பள்ளிவாசல் இமாம் இஸ்மாயில் தொழுகை நடத்தினர் தொழுகை முடிந்து திரும்பிய முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டிதழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். ஏழை, எளியோருக்கு உதவி பொருள்களை வழங்கி உதவினர். ஈத்கா கமிட்டி தலைவர் அனீஸ் மற்றும் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
இதேபோல், திண்டிவனம் நகரில் உள்ள அனைத்து மசூதிகளிலிருந்து முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்று செஞ்சி ரோட்டில் உள்ள ஈக்தா மைதானத்தில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில் 3000-த்திற்க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.தொழுகையை நியாஸ் அஹமத் தொழ வைத்தார். தொழுகை முடிந்ததும் உலக நன்மை வேண்டியும் மழை பொழிய வேண்டும் என்று ( துஆ) பிரார்த்தனை செய்தனர். அதன் பிறகு ஒருவருக்கு ஒருவர் கட்டி அணைத்து தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர்.திண்டிவனம் டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- வாழைக்கொல்லை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றன
- இச்செயலை ஊர் பொதுமக்கள் வரவேற்றதுடன் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் வாழைக்கொல்லை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றன. தலைவர் புஷ்பராஜ் தலைமையில் ஆசிரியர்கள் கருணாகரன், அன்பகம், , வள்ளி, கீதா கிருத்திகா ஆகியோர் தமிழக அரசின் அறிவுரையின் படியும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் , தொடக்கக் கல்வி,மற்றும் வட்டார கல்வி அலுவலர்களின் வழிகாட்டுதலின்படி 2023-2024 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் பொருட்டு வாழைக்கொல்லை குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாக வீதி வீதியாக சென்று மாணவர்களின் இல்லங்களிலேயே மாணவர்கள் சேர்க்கையை செய்தனர். இச்செயலை ஊர் பொதுமக்கள் வரவேற்றதுடன் பாராட்டுகளையும் தெரிவித்தனர்
- இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான புனித ரமலான் பண்டிகை ஆண்டு தோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடபடுவது வழக்கம்
- ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் ரமலான் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடபடுகிறது.
கடலூர்:
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான புனித ரமலான் பண்டிகை ஆண்டு தோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடபடுவது வழக்கம் . ஈகையின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் ரமலான் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடபடுகிறது.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மிக உயர்வான கடமையான நோன்புடன் தொடங்கும் இந்த பண்டிகை நிறைவாக ரமலான் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இன்று விருத்தாசலம் ஆலடி ரோட்டில் அமைந்துள்ள நவாப் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்கு பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து உற்சாகத்துடன் ரமலான் திருநாள் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர் .
- அழகுபெருமாள் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் பண்ருட்டி தாசில்தார் ஆனந்தியை சந்தித்து மனு கொடுத்தார்.
- இந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி காணாமல்போனகுளம் வாய்க்கால்ஆகியவற்றை மீட்டுதருமாறுகேட்டுக்கொள்கிறோம்.
கடலூர்:
அண்ணா கிராமம் ஒன்றியம் அழகுபெருமாள் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் பண்ருட்டி தாசில்தார் ஆனந்தியை சந்தித்து மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டம்அண்ணாகிராமம் ஊராட்சிஒன்றியம் அழகுபெருமாள்குப்பம்ஊராட்சியில் ஊத்து குளம் உள்ளது இந்த குளம் மற்றும்குளத்திற்கு நீர் வரும் நீர்வரத்துவாய்க்கால் ஆகியவைஆக்கிரமிப்புசெய்யப்பட்டு உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி காணாமல்போனகுளம் வாய்க்கால்ஆகியவற்றை மீட்டுதருமாறுகேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.






