search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரமங்கலம் ஏரியில் மூழ்கிய 2 சிறுவர்கள் மூச்சுத் திணறி பலி
    X

    குமாரமங்கலம் ஏரியில் மூழ்கிய 2 சிறுவர்கள் மூச்சுத் திணறி பலி

    • சிறுவர்கள் 2 பேரும் ஏரி நீரில் மூழ்கி மூச்சித் திணறி இறந்து கிடந்தனர்.
    • சிறுவர்களின் குடும்பத்திற்கும், கம்மாபுரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த குமாரமங்கலத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி முழுமையாக நிரம்பி உள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள், ஏரிக்கு சென்று தூண்டில் போட்டு மீன் பிடித்து வருகின்றனர்.

    மீன் பிடிப்பதை வேடிக்கை பார்க்க அதே கிராமத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் மகன் இன்பராஜ் (வயது 8), தெய்வமணி மகன் தினேஷ்குமார் (14) சென்றனர். அப்போது ஒரு சில சிறுவர்கள் ஏரியில் குளித்து கொண்டிருந்தனர். இதனைக் கண்ட 2 சிறுவர்களும் குளிப்பதற்காக ஏரியில் இறங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக 2 பேரும் நீரில் மூழ்கினர்.

    இதனைக் கண்ட மற்ற சிறுவர்கள் சத்தம் போட்டு பெரியவர்களை உதவிக்கு அழைத்தனர். அவர்கள் ஏரியில் மூழ்கி சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், சிறுவர்கள் 2 பேரும் ஏரி நீரில் மூழ்கி மூச்சித் திணறி இறந்து கிடந்தனர். அவர்களின் உடலை வாலிபர்கள் மீட்டு ஏரியின் கரையில் வைத்தனர்.

    இதையடுத்து சிறுவர்களின் குடும்பத்திற்கும், கம்மாபுரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், அங்கு வந்த சிறுவர்களின் குடும்பத்தார் கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது. இந்த சம்பவத்தால் குமாரமங்கலம் கிராமமே சோகத்தில் முழ்கியது.

    Next Story
    ×