என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில்களில் சிறப்பு பூஜை"

    • குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு நேற்று இரவு 11.26 மணிக்கு பெயர்ச்சி ஆனார்.
    • நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன.

    கடலூர்:

    குரு பகவான் மீன ராசி யில் இருந்து மேஷ ராசிக்கு நேற்று இரவு 11.26 மணிக்கு பெயர்ச்சி ஆனார். இதனை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று இரவு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    கடலூர் மஞ்சக்குப்பம் வில்வநாதேஸ்வரர் கோவி லில் நேற்றிரவு குருவுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடை பெற்றன. பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜையும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.

    இதேபோல நெல்லிக் குப்பம் பூலோகநாதர் கோவில், வரசித்தி விநா யகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாரதனை காண்பிக் கப்பட்டன. தொடர்ந்து பக்தர்கள் விளக்கேற்றி குருவுக்கு மஞ்சள் ஆடை மற்றும் கொண்டைக்கடலை மாலை அணிவித்தும் வழிபட்டனர்.

    மேலும் குரு பெயர்ச்சி ஆவதால் பல்வேறு ராசிக் காரர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

    ×