என் மலர்
கடலூர்
- இலவச நீர் மோர் பந்தல் திறப்பு விழா கடலூர் ஓம் சிவ சக்தி டைம்ஸ் கடை முன்பு நடைபெற்றது.
- விழாவில் மாவட்ட செயலாளர் ஓ.எல்.பெரியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் கோடை வெயிலை முன்னிட்டு இலவச நீர் மோர் பந்தல் திறப்பு விழா கடலூர் ஓம் சிவ சக்தி டைம்ஸ் கடை முன்பு நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட செயலாளர் ஓ.எல். பெரியசாமி, மாவட்ட இணை செயலாளர் ஆசை தாமஸ், இளைஞரணி செயலாளர் ஆர். எஸ்.ரஜினி விக்னேஷ் ஆகியோர் தலைமை தாங்கி பொது மக்களுக்கு இலவச நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கினர்.
இதில் மன்ற நிர்வாகிகள் ராஜேந்திரன், இனியன், முருகன்,வினோத், எழிலரசன், கோபால், ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தமிழரசன்(26) இவர் வன்னியர்தெரு விநாயகர் கோவில் அருகில் நின்றுகொண்டிருந்த போது முன்விரோதம் காரணமாக, அதேபகுதியிலுள்ள 3பேரும் அவரை அசிங்கமாக பேசினர்.
- தொடர்ந்து, அவர் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது.
கடலுார்:
வடலூர் கோட்டக்கரையை சேர்ந்தவர் தமிழரசன்(26) இவர் அதே பகுதியில் வன்னியர்தெரு விநாயகர் கோவில் அருகில் நின்றுகொண்டிருந்த போது முன்விரோதம் காரணமாக , பார்வதிபுரத்தை சேர்ந்த கலையரசன்(31) பரஞ்ஜோதி (22) ஜெயபிரகாஷ் (27) ஆகிய 3 பேர்களும் தமிழரசனை அசிங்கமாகபேசி, அவர் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது, இதுகுறித்து வடலூர் போலீசில்புகார் செய்யப்பட்டது. இைத தொடர்ந்து கலையரசன், பரஞ்ஜோதி, ஜெயப்பிரகாஷ் ஆகிய 3 பேர்களையும்வடலூர் புதுநகர் அரசு பள்ளி அருகில் ரோந்து சென்ற ேபாலீசார் கைது செய்தனர்.
- குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு நேற்று இரவு 11.26 மணிக்கு பெயர்ச்சி ஆனார்.
- நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன.
கடலூர்:
குரு பகவான் மீன ராசி யில் இருந்து மேஷ ராசிக்கு நேற்று இரவு 11.26 மணிக்கு பெயர்ச்சி ஆனார். இதனை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று இரவு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கடலூர் மஞ்சக்குப்பம் வில்வநாதேஸ்வரர் கோவி லில் நேற்றிரவு குருவுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடை பெற்றன. பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜையும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.
இதேபோல நெல்லிக் குப்பம் பூலோகநாதர் கோவில், வரசித்தி விநா யகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாரதனை காண்பிக் கப்பட்டன. தொடர்ந்து பக்தர்கள் விளக்கேற்றி குருவுக்கு மஞ்சள் ஆடை மற்றும் கொண்டைக்கடலை மாலை அணிவித்தும் வழிபட்டனர்.
மேலும் குரு பெயர்ச்சி ஆவதால் பல்வேறு ராசிக் காரர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
- கடலூர் அடுத்த சிங்கிரி குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரேஷன் கடை உள்ளது.
- ரேஷன் கடை கட்டிடங்களையும் ஆய்வு செய்தார்.
கடலூர்:
கடலூர் அடுத்த சிங்கிரி குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையை இன்று காலை கூட்டுறவுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் திடீரென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது ரேஷன் கடை களில் இருந்த பொருட்களும், அரசு பதிவேட்டில் குறிப் பிடப்பட்டிருந்த பொருட் களின் விபரமும் சரியாக உள்ளதா? என்பதை பார்வையிட்டார்.
பின்னர் பொது மக்களுக்கு எந்தவித குறை களும் இல்லாமல் அரசு நிர்ணயித்தபடி அனைத்து பொருட்களும் சரியான முறையில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் ரேஷன் கடை கட்டி டங்களை ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து விவ சாயிகளின் இடுபொருட்கள் மற்றும் டிராக்டர்களை பார்வையிட்டார். அப்போது கடலூர் மண்டல இணைப் பதிவாளர் நந்தகுமார், மேலாண்மை இயக்குனர் திலீப் குமார், துணை பதிவாளர்கள் ராஜேந்திரன், துரைசாமி, அலுவலர் உதய குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
படம்கடலூர் சிங்கிரிகுடி ரேஷன் கடையை கூட்டுறவு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
- கடலூர் புதுப்பாளையம் படவட்டம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.
- கோவில் விழா கடந்த 20-ந்தேதி கணபதி பூஜை யுடன் தொடங்கியது.
கடலூர்:
கடலூர் புதுப்பாளையத்தில் ஸ்ரீ படவட்டம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த 20-ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கி, மகா கணபதி ஹோமம், மகா லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தது. தொடர்ந்து 21-ந் தேதி முதல் கால யாக சாலை பூஜையும், 22-ந் தேதி காலை விசேஷ சந்தி, 2-ம் கால யாக சாலை பூஜையும், அன்று மாலை 3-ம் கால யாக சாலை பூஜை, காயத்ரி மந்திர ஹோமம், மூல மந்திர ஹோமமும் நடை பெற்றது.
கும்பாபிஷேக விழா இன்று காலை கோ பூஜையுடன் தொடங்கியது பின்னர் யாகத்தில் வைத்திருந்த புனித நீர் அடங்கிய கலசத்தை மங்கள வாத்தியத்துடன் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
பின்னர் வேத மந்திரம் முழுங்க கோவில் கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து படவட்டம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய வழிபடுவோர் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்துகொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
- மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் 3.5.2023 காலை 7 மணியளவில் நடத்தப்பட இருப்பதால் தவறாது கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-
கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத்துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் உணவுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்காக சென்னை நேரு விளையாட்டு அரங்கில் சிறப்பு விளையாட்டு விடுதி, தூத்துக்குடி மாவட்டம்கோவில்பட்டி, வேலூர் காட்பாடியில் மாணவ மாணவிர்ளுக்கு சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு 01-01-2023 அன்று 17 வயது நிரம்பிய 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற கல்லூரியில் இளநிலை மற்றும் முதுகலை பயிலும் மாணவ , மாணவிர்ள் தகுதியுடையவர்கள் ஆவர்.
தனி நபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில அளவில் குடியரசு , பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல்3 இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் , இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்துகொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள், சிறப்பு விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தினை 19.4.2023 முதல் இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 2.5.2023 மாலை 5 மணி ஆகும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் 3.5.2023 காலை 7 மணியளவில் நடத்தப்பட இருப்பதால் தவறாது கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திறமையான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மேற்படி சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர்ந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- சிறுவர்கள் 2 பேரும் ஏரி நீரில் மூழ்கி மூச்சித் திணறி இறந்து கிடந்தனர்.
- சிறுவர்களின் குடும்பத்திற்கும், கம்மாபுரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அடுத்த குமாரமங்கலத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி முழுமையாக நிரம்பி உள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள், ஏரிக்கு சென்று தூண்டில் போட்டு மீன் பிடித்து வருகின்றனர்.
மீன் பிடிப்பதை வேடிக்கை பார்க்க அதே கிராமத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் மகன் இன்பராஜ் (வயது 8), தெய்வமணி மகன் தினேஷ்குமார் (14) சென்றனர். அப்போது ஒரு சில சிறுவர்கள் ஏரியில் குளித்து கொண்டிருந்தனர். இதனைக் கண்ட 2 சிறுவர்களும் குளிப்பதற்காக ஏரியில் இறங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக 2 பேரும் நீரில் மூழ்கினர்.
இதனைக் கண்ட மற்ற சிறுவர்கள் சத்தம் போட்டு பெரியவர்களை உதவிக்கு அழைத்தனர். அவர்கள் ஏரியில் மூழ்கி சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், சிறுவர்கள் 2 பேரும் ஏரி நீரில் மூழ்கி மூச்சித் திணறி இறந்து கிடந்தனர். அவர்களின் உடலை வாலிபர்கள் மீட்டு ஏரியின் கரையில் வைத்தனர்.
இதையடுத்து சிறுவர்களின் குடும்பத்திற்கும், கம்மாபுரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அங்கு வந்த சிறுவர்களின் குடும்பத்தார் கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது. இந்த சம்பவத்தால் குமாரமங்கலம் கிராமமே சோகத்தில் முழ்கியது.
- யோகா ஆசிரியர்கள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிதம்பரம் கீழரத வீதி பதஞ்சலி யோகா மையத்தில் நடைபெற்றது.
- சுகாரார நிலையத்தில் யோகா பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும்.
கடலூர்:
தமிழ்நாடு யோகா ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு யோகா ஆசிரி யர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிதம்பரம் கீழரத வீதி பதஞ்சலி யோகா மையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச் செயாளர் காசிநாத துரை தலைமை வகித்தார். அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் சுந்தர வடிவேல், சுந்தரராஜன், கென்னடி, கடலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் ராதா, ஹெலன், மயிலாடு துறை மாவட்ட பொறுப் பாளர்கள் திருமுருகன், மீனாட்சி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். பின்னர் மாநில பொதுச் செயலாளர் காசிநாததுரை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு கல்லூரி. அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆகியவற்றில் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். விளையாட்டு துறையிலும் யோகா பயிற்சி யாளர்களை இந்த கல்வி ஆண்டிலேயே நியமிக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாரார நிலையத்தில் யோகா பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும். இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிறைவேற்றி தர வலியுறுத்தி வருகின்ற ஜூன் 20-ந்தேதி சென்னை யில் மாபெரும் பேரணி நடந்த திட்ட மிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்
- ஒரு சில டிரை வர்கள் இரவு நேரத்தில் குடி போதையில் வாகனத்தை ஓட்டி வருகின்றார்கள்.
- போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் தேசிய நெடுஞ்சா லையில் இரவு நேரங்களில் அதிக அளவில் கார் மற்றும் லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன. மேலும் ஒரு சில டிரை வர்கள் இரவு நேரத்தில் குடி போதையில் வாகனத்தை ஓட்டி வருகின்றார்கள். இதனால் வேப்பூர் பகுதியில் கோர விபத்துக்கள் நடந்து வருகின்றன. இதனை தடுப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வேப்பூர் கூட்ரோட்டில் வாகனங்க ளை ஆய்வு செய்தார். அப்போது அதிக பாரம் ஏற்றிச்சென்ற 16 லாரிகளை மடக்கிப்பிடித்து வழக்கு பதிவு செய்து அந்த வாகனங்களை வேப்பூர் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும் கார்களில் செல்பவர்களை நிறுத்தி மது போதையில் செல்கிறார் களா என்றும் காரின் ஆவ ணங்களை சரி பார்த்தும் வாகன ஓட்டிகளுக்கு மது போதையில் செல்லக் கூடாது என்றும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இந்த ஆய்வின் போது திட்டக்குடி துணை சூப்பி ரண்டு காவ்யா, இன்ஸ் பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக வந்து இரவு நேரங்களில் வாகன தணிக்கையில் ஈடு படுவதை அறிந்த பொது மக்கள், அவருக்கு பாராட்டு களை தெரிவித்து வருகின்ற னர்.
- உஷா சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் ஆசிரியையாக பணி யாற்றி வருகிறார்.
- வாக்குவாதத்தில் 3 பேரும் சேர்ந்து உஷாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த காட்டு வன்னஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் மனைவி உஷா (வயது 36). இவர் சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் ஆசிரியையாக பணி யாற்றி வருகிறார். இவருக்கும் சங்கராபுரத்தைச் சேர்ந்த பிரபு மனைவி கலைச்செல்வி (33) என்ப வருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத் தன்று உஷா பள்ளியில் வேலை பார்த்து கொண்டி ருந்த போது அங்கு வந்த கலைச்செல்வி, அவரது கணவர் பிரபு, கலைச் செல்வியின் தாயார் ஜெயக்கொடி ஆகியோர் உஷாவிடம் பணம் கேட்டு மிரட்டினர். இது தொடர் பான வாக்குவாதத்தில் 3 பேரும் சேர்ந்து உஷாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ஜெயக்கொடி உள்பட 3 பேர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு, கலைச்செல்வி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
- பண்ருட்டியில் தீராத வயிற்று வலியால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
- இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த பூண்டி குச்சிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). இவர் வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். சம்ப வத்தன்று தனக்கு சொந்த மான நிலத்தில் தீராத வயிற்று வலி காரணமாக பூச்சிக்கொல்லி மருந்து குடித்தார்.
மயங்கி கிடந்த அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர் மேல்சிகிச் சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பி னும் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது ெதாடர்பாக புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- சாலையில் கழிவு நீர் ஓடியதால் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும்அபாயம் ஏற்பட்டது.
- குப்பைகளை நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி காந்தி ரோட்டில் கழிவு நீர்வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் பெருக்கெடு த்து ஓடியது. இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும்அபாயம் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி , துப்புரவு அலுவலர் முருகேசன், சுகாதாரஆய்வாளர்ஜெயச்சந்திரன், பாக்கியநாதன் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராட்சச நீர்உறிஞ்சும் மோட்டார் வாகனத்தின் மூலம் சாக்கடை நீரை வெளியேற்றினர்.
திருமணமண்டபம்,வர்த்தகநிறுவனங் களில்சேரும் கழிவு நீர் மற்றும் குப்பைகளைதனியாக செப்டிக் டேங் அமைத்து வெளியேற்ற வேண்டும் என்றும் குப்பைகளை நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். கழிவுநீர் கால்வாயில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.






