என் மலர்
கடலூர்
- வீட்டில் இருந்த 5 வயது சிறுமிக்கு மகேஷ்ராவ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
- ஆத்திரமடைந்த மகேஷ்ராவின் தங்கை சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார்.
சிதம்பரம்:
சிதம்பரம் முத்து மாணிக்க தெருவைச் சேர்ந்தவர் மகேஷ்ராவ் (வயது 40). பெயிண்டர் வேலை செய்யும் இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தங்கைக்கு திருமணமாகி 5 வயது பெண் குழந்தை உள்ளது. இவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சிதம்பரத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் வீட்டில் இருந்த 5 வயது சிறுமிக்கு மகேஷ்ராவ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த அவரது தங்கை, மகேஷ்ராவை கண்டித்துள்ளார். இதனை பொருட்படுத்தாத மகேஷ்ராவ், தொடர்ந்து 5 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மகேஷ்ராவின் தங்கை சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் வனஜா, மகேஷ்ராவை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தார்.
தங்கையின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய்மாமன் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் சிதம்பரம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்புதல், வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
- டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்துவரி செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடலூர்:
நெல்லிக்குப்பம் நகர்மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் மற்றும் கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நெல்லிக்குப்பம் நகராட்சியில் சொத்து உரிமையாளர்கள் தங்களது 2023 - 24 ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 30ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை செலுத்துவதற்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்புதல், வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் சொத்து உரிமையாளர்கள் சொத்து வரிகளில் தங்களது இல்லம் தேடிவரும் வரி வசூலிப்பாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலகம் மூலம் அமைந்துள்ள வசூல் மையங்கள் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரவோலை மூலமாகவும் டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்துவரி செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆகையால் சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை ஏப்ரல் 30 -ந் தேதிக்குள் செலுத்தி ஊக்கத்தொகை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பதுப்பேட்டை அருகே உள்ள திருத்துறையூரில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ சிஸ்ட குருநாதர் சுவாமி கோவில் உள்ளது.
- புதியதாக கோவில் கட்ட ஊராட்சி மன்ற தலைவர் ராஜா தலைமையில் முடிவு செய்யப்பட்டு பிடாரி அம்மன் கோவில் இடித்து அகற்றி உள்ளனர்.
கடலூர்:
புதுப்பேட்டை அருகே உள்ள திருத்துறையூரில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ சிஸ்ட குருநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோ விலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஸ்ரீ பிடாரி அம்மன் கோவிலை இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் புதியதாக கோவில் கட்ட ஊராட்சி மன்ற தலைவர் ராஜா தலைமையில் முடிவு செய்யப்பட்டு பிடாரி அம்மன் கோவில் இடித்து அகற்றி உள்ளனர்.
மேலும் அப்பகுதியில் இருந்த புளிய மரங்களும் வெட்டி அகற்றப்பட்டது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் இடித்து அகற்றப்பட்டதாக அறநிலையத்துறை செயல் அலுவலர் ராமலிங்கம் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை யில் முடிவு எட்டாத நிலையில் தாசில்தார் பேச்சு வார்த்தைக்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்து சமய அறநிலை யத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த கோவிலை அனுமதியின்றி இடித்து அகற்றப்பட்டதாக தெரி வித்து செயல் அலுவலர் கொடுத்த புகாரின் அடிப் படையில் புதுப்பேட்டை போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, பெரிய கள்ளிப்பட்டு பத்மநாபன் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- சப்-கலெக்டர் சுவேதா சுமன், உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் ஆய்வு செய்தனர்.
- சாலை விபத்துக்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் விதமாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அடிக்கடி சாலை விபத்து விபத்து நடக்கும் இடங்களை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுடன் இணைந்து சாலை விபத்துக்கள் நடக்கும் காரணங்களை கண்டறிந்து, சாலை விபத்துக்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிறப்பித்த அறிவுரையின்பேரில் இன்று சிதம்பரம் - கடலூர் சாலை, சிதம்பரம் வண்டிகேட் அருகில் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுவதனால் அப்பகுதியில் ஏற்படும் வாகன விபத்துக்களை தடுக்க சிதம்பரம் சப்- கலெக்டர் சுவேதா சுமன், சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி மற்றும் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் ஆகியோர் விபத்து ஏற்படக்கூடிய பகுதியை கூட்டு ஆய்வு செய்து வாகன விபத்துக்களை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வாகன விபத்துக்களை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
- கூடைப்பந்து அணிக்கு 13 வயதுக்குட்பட்டோருக்கான மாணவ- மாணவிகள் அணி தேர்வு வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7:30 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.
- இந்த அணி தேர்வில் வரும் மாணவ - மாணவிகள் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் நகலுடன் நேரில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு 13 வயதுக்குட்பட்டோருக்கான மாணவ- மாணவிகள் அணி தேர்வு வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7:30 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. இந்த அணி தேர்வுக்கு 1.1.2010 தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த அணி தேர்வில் வரும் மாணவ - மாணவிகள் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் நகலுடன் நேரில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விருதுநகரில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு இந்த மாவட்ட வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு நடக்கிறது. மேற்கண்ட தகவல்களை மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் விஜயசுந்தரம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
- லூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.
- பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். இன்று நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் பட்டா தொடர்பான 78 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 54 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 23 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 33 மனுக்களும், மாற்றுதிறனாளி நல அலுவலகம் தொடர்பாக 16 மனுக்களும், இதர மனுக்கள் 101 ஆக மொத்தம் 305 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். அவ்வாறு அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன், தனித்துணை ஆட்சியர் கற்பகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் அருகே வெள்ளக்கரை கிராமத்தில் 60 அடி உயர கொடியேற்று விழா நடைபெற்றது.
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் அருகே வெள்ளக்கரை கிராமத்தில் 60 அடி உயர கொடியேற்று விழா நடைபெற்றது.
கடலூர்:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் அருகே வெள்ளக்கரை கிராமத்தில் 60 அடி உயர கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமை ஏற்று கட்சி கொடி ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் செந்தில், நிர்வாகிகள் கார்முகில், அஞ்சாபுலி, விஜி, சரத், ராஜன், சதா, ரஞ்சித், அருள், சுந்தரமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த நபரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து அவரை பிடித்து விசாரணை செய்தனர்.
- சம்பவத்தால் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பொது மக்கள் கோரிக்கை மனு அளித்து வருகின்றனர். கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வரக்கூடிய மக்களை முகப்பு பகுதியில் போலீசார் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை வாலிபர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். பின்னர் திடீரென்று இந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த நபரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து அவரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் பண்ருட்டி மருங்கூர் கிராமத்தை சேர்ந்த லிங்கமூர்த்தி (வயது 27) என்பதும், இவருடைய மனைவி மற்றும் 6 மாத குழந்தையை அவரது சகோதரர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் தெரியவந்தது. இவர்களை மீட்டு தர வலியுறுத்தி தீக்குளிக்க முயற்சித்தது போலீசாருக்கு தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் அந்த நபரிடம் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தீர்வு காண வேண்டும், இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரிக்கை செய்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- வேளாண் உட்கட்டமைப்பு நிதியில் வாங்கப்பட்ட 2 லாரிகள் மற்றும் 3 சிறிய சரக்குந்து வாகனங்களை பார்வையிட்டார்.
- மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கடனுதவி காசோலைகளை வழங்கினார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வேளாண் உட்கட்டமைப்பு நிதியில் வாங்கப்பட்ட 2 லாரிகள் மற்றும் 3 சிறிய சரக்குந்து வாகனங்களை பார்வையிட்டார். கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நடமாடும் தானியங்கி பண பரிவர்த்தனை எந்திரத்தை பார்வையிட்டார். பின்னர் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கடனுதவி காசோலைகளை வழங்கினார்.
கூட்டுறவு துறையின் செயல்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண் டார். இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதி வாளர் நந்தகுமார், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் திலீப்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், கூட்டுறவு துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
- புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன்மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்
- அதே ஊரை சேர்ந்தவீரமுத்துைவ (60)கைது செய்து அவரிடமிருந்து5 மது பாட்டில்களை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன்மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுப்பேட்டை அடுத்த ரெட்டிக்குப்பம் கிராமத்தில் திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட அதே ஊரை சேர்ந்தவீரமுத்துைவ (60)கைது செய்து அவரிடமிருந்து5 மது பாட்டில்களை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை அடுத்த போவினப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்தீப் (வயது 30), சாய்பிரபு (35), வினியலட்சுமி (45) ஷோபா (50) ஆகியோர் காரில் வந்தனர்.
- இதில் காரில் இருந்த டிரை வர் உள்ளிட்ட 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
கடலூர்:
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை அடுத்த போவினப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்தீப் (வயது 30), சாய்பிரபு (35), வினியலட்சுமி (45) ஷோபா (50) ஆகியோர் காரில் வந்தனர். இந்த காரை அதே பகுதியைச் சேர்ந்த சினுவாச்சாரி (30) என்பவர் ஓட்டி வந்தார். இந்த கார் இன்று அதி காலை சிதம்பரம் வண்டி கேட் பகுதிக்கு வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்த தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக் குள்ளானது. இதில் காரில் இருந்த டிரை வர் உள்ளிட்ட 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்த வர்கள் காரில் இருந்தவர் களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வருகின்றனர்.
- பள்ளி மாணவி தந்தை மீது புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது.
கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் சிதம்பரம் அக்ரமங்கலம் சிறுகாலூரை சேர்ந்த நிரஞ்சனா என்ற மாணவி பள்ளி சீருடையுடன் தனது தாயுடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். பின்னர் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது தந்தை மற்றும் தாய் ஆகியோருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக நான் எனது பாட்டி வீட்டில் வசித்து வருகின்றன. தற்போது 12-ம் வகுப்பு முடித்து பட்டப்படிப்பு மேற்கொள்ள உள்ளேன். இந்த நிலையில் எனது தந்தை மற்றும் தாய்க்கு ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தாய் மற்றும் எனது பெயரை ரேஷன் கார்டில் இருந்து தந்தை நீக்கிவிட்டார். இதன் காரணமாக மேற்படிப்பு படிக்க வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ் மற்றும் இருப்பிட சான்றிதழ் பெற முடியவில்லை .ஆகையால் அடிப்படை தேவைகளை பெறுவதற்கு ரேஷன் கார்டில் எனது பெயரை சேர்த்து சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
பள்ளி மாணவி தந்தை மீது புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






