என் மலர்tooltip icon

    கடலூர்

    • குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் பஸ் நிலையம் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டது
    • புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் மும்பரமாக நடைபெற்று வருகின்றது.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் பஸ் நிலையம் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் முயற்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4 கோடி 82 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் மும்பரமாக நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகி யோர் குறிஞ்சிப்பாடியில் புதிதாக கட்டுமான பணி களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பேரூராட்சி இயக்குனர் கிரண் குராலா, திருச்சி மண்டல செயற்பொறியாளர் கருப்பையா, உதவி இயக்குனர் வெங்கடேசன், உதவி செயற்பொறியாளர் சண்முகம், மாவட்ட கல்வி குழு தலைவர் பொறியாளர் சிவகுமார், பேரூராட்சி தலைவர் கோகிலா குமார், செயல் அலுவலர் கிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சிப்பாடி பாலமுருகன், பேரூராட்சி துணைத் தலைவர் ராமர், நகர செயலாளர் ஜெய்சங்கர் கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றி வழங்க வேண்டும்,
    • இதற்கு பாலமுருகன் தலைமை தாங்கினார். பொருளாளர் கோபாலன் முன்னிலை வகித்தார்.

    கடலூர்:

    தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கம் சார்பில் ஜாக்டோ ஜியோ மற்றும் 3 அமைச்சர்கள் பேச்சு வார்த்தையில் ஏற்றுக் கொண்ட வாக்குறுதி களை நிறைவேற்ற வலியுறுத்தியும், அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்டவற்றை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றி வழங்க வேண்டும். அரசு துறையில் உள்ள காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு பாலமுருகன் தலைமை தாங்கினார். பொருளாளர் கோபாலன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட துணை தலைவர் (ஓய்வுதியர் சங்கம்) கருணாகரன், கூட்டு றவுத்துறை மாநில பொரு ளாளர் பாலகிருஷ்ணன் மாநிலத் துணைத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    • மோகன் (வயது 40). மீனவர். இவரது மனைவி மீனா (வயது 37). அதே பகுதியை சேர்ந்தவர் பூவராகவன். இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோத தகராறு இருந்து வந்தது.
    • இதில் பலத்த காயமடைந்த மோகன், புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் சேர்ந்தவர் மோகன் (வயது 40). மீனவர். இவரது மனைவி மீனா (வயது 37). அதே பகுதியை சேர்ந்தவர் பூவராகவன். இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோத தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று மோகன் அந்த பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று பூவராகவன், ராமதாஸ் ஆகியோர் மோகனை வழிமறித்து இரும்பு கம்பி யால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் பலத்த காயமடைந்த மோகன், புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கடலூர் முது நகர் போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • இங்கு, பஸ் நிலையம் பழுதடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
    • புதிய பஸ் நிலையம் அமைக்க, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நடவடிக்கை மேற்கொண்டார்,

    கடலூர்:

    வடலூர் நகராட்சியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில் தற்போது பழுதடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி திட்டத்தின் கீழ் 5 கோடியே 85 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கி புதிய பஸ் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். இதில் நகராட்சி நிர்வாக இயக்குனர் சசிகலா, வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார், ஆணையர் பானுமதி, நகர மன்ற துணைத் தலைவர் சுப்புராயலு, மற்றும் நிர்வாகிகள் கவுன்சிலர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • காட்டுக்கூடலூர் ரோட்டில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட பணியைதிறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பார்வையிட்டார்.
    • பெரியார் நகரில் கட்டப்பட்டு வரும் குழந்தைகள் பூங்கா மற்றும் பூதாமூர் பகுதி சுடுகாடு பகுதியையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.


    கடலூர்:

    விருத்தாசலம் நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆய்வு மேற்கொண்டார். பெரிய வடவாடியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காட்டுக்கூடலூர் ரோட்டில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட பணியை பார்வையிட்டார். வடக்கு பெரியார் நகரில் கட்டப்பட்டு வரும் குழந்தைகள் பூங்கா மற்றும் பூதாமூர் பகுதி சுடுகாடு பகுதியையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.    ஆய்வின்போது தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, நகராட்சி சேர்மன் டாக்டர் சங்கவி முருகதாஸ், நகராட்சி ஆணையாளர் சேகர், நகராட்சி பொறியாளர் சிவசங்கரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பண்ருட்டி பஸ் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • பொதுசெயலாளர் ஜீவா வினோத்குமார் கலந்து கொண்டு சுமை தூக்குவோர் சங்கத் தலைவரிடம் சீருடைகளை வழங்கினார்.

    கடலூர்:

    உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பண்ருட்டி பஸ் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  இதில் கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொது செயலாளர் ஜீவா வினோத்குமார் கலந்து கொண்டு சுமை தூக்குவோர் சங்கத் தலைவரிடம் சீருடைகளை வழங்கினார். இதில் கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வர்த்தக பிரிவு தலைவர் அசோக் ராஜ், மாவட்ட தொழில் பிரிவு தலைவர் அழகு முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • திட்டக்குடி அடுத்துள்ள கொரக்கை கிராமத்தில் 3 பசு மாடுகள் நேற்று வீட்டின் அருகே உள்ள வயல் வெளியில் மேய்ந்து வந்தன.
    • வயலில் மின்கம்பி அறுந்து கிடந்து அதில் 3 மாடுகளும் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானது. மேலும், அதன் அருகே 2 குரங்குகளும் சிக்கி பலியாகி இருந்தது.

    திட்டக்குடி, ஏப்.26-

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கொரக்கை கிராமத்தைச் சேர்ந்த அங்கம்மாள், ஈஸ்வரி, வள்ளி ஆகியோரின் 3 பசு மாடுகள் நேற்று வீட்டின் அருகே உள்ள வயல் வெளியில் மேய்ந்து வந்தன. இரவு வெகுநேரமாகியும் பசுமாடு மீண்டும் வீட்டுக்கு வராததால் பல இடங்களில் தேடினர். ஆனால், மாடுகள் கிடைக்கவில்லை

    இந்நிலையில் இன்று அதிகாலை கொரக்கையிலிருந்து ஆலம்பாடி கிராமத்திற்கு செல்லும் சாலை ஒரமாக உள்ள வயல்வெளியில் தேடிப்பார்த்த போது வாகையூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் வயலில் மின்கம்பி அறுந்து கிடந்து அதில் 3 மாடுகளும் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானது. மேலும், அதன் அருகே 2 குரங்குகளும் சிக்கி பலியாகி இருந்தது.

    கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ராஜமாணிக்கம் தனது வயல்வெளிக்கு மின்சாரம் தேவையில்லை என எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. மின் வாரிய அதிகாரிகளின் அலட்சி யத்தால் 3 பசு மாடு மற்றும் 2 குரங்குகள் பலியாகி உள்ளன. இதுகுறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டி அடுத்த பனப்பாக்கம் சேர்ந்த 17 வயது சிறுமி, பிளஸ்-2 படித்து முடித்து விட்டு கடலூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்ததார்.
    • பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கா ததால் சிறுமியின் தாயார் புதுப்பே ட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பனப்பாக்கம் சேர்ந்த 17 வயது சிறுமி, பிளஸ்-2 படித்து முடித்து விட்டு கடலூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்ததார். இவர் கடந்த 24-ந்தேதி வேலைக்கு சென்றவர் நள்ளிரவு வரை வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கா ததால் சிறுமியின் தாயார் புதுப்பே ட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.   புகாரில், அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அருணா ச்சலம் (24) என்பவர் கடத்தி சென்று விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெ க்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தேடி வருகிறார்.

    • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார்.
    • மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார்.

    அப்போது வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் கலெக்டர் பாலசுப்ரமணியம், எம்.எல்.ஏ க்கள் அய்யப்பன், சபா. ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்  இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சியில் கறையேறவிட்டகுப்பத்தில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் திட்டம், வண்டிப்பாளையம் சுப்பிரமணியர் கோவில் பகுதியில் குளங்கள் அமைத்தல், கடற்கரை சாலையில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் அமைக்கும் பணிக்கான கட்டிடம் ஆகியவற்றை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அரசு நிர்ணயித்த காலத்திற்குள் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்கள்.  அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (நகராட்சி நிர்வாக துறை) ஷிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக துறை வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி,அய்யப்பன் எம்.எல். ஏ, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, மாநகராட்சி பொறியாளர் மகாதேவன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, சங்கீதா செந்தில் முருகன், சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் ஹேமலதா சுந்தரமூர்த்தி, பார்வதி, சக்திவேல், சசிகலா ஜெயசீலன், சாய்துனிஷா சலீம், விஜயலட்சுமி செந்தில், சுபாஷினி ராஜா, சுதா அரங்கநாதன், ஆராமுது, கவிதா ரகு, பாலசுந்தர், செந்தில் குமாரி, மாநகர அவை தலைவர் பழனிவேல், துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, பகுதி துணை செயலாளர்கள் கார் வெங்கடேசன், ஜெயசீலன், லெனின் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த வெங்கடாம்பேட்டையை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 65). இவர் தனது வீட்டின் அருகே சிறிய கோவில் கட்டி வருகிறார்.அப்போது இவரது தம்பி கண்ணன், பொது பாதையில் ஏன் கோவில் கட்டுகிறார்கள் என கேட்டபோது, 2 தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஜெயபால், செல்வமூர்த்தி, சிவமூர்த்தி, சுந்தரமூர்த்தி, கண்ணன், கருணாமூர்த்தி, கார்த்தி, நந்தகோபால் ஆகிய 8 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில் கண்ணன், நந்தகோபால், கிருஷ்ணமூர்த்தி, கார்த்தி, ஆகியோர் மீதும், கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் ஜெயபால், செல்வமூர்த்தி, ஜெயமூர்த்தி, சுந்தரமூர்த்தி, சிவமூர்த்தி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • அரிகிருஷ்ணன் மற்றும் வைத்தியநாதன் ஆகியோருக்கிடையே நிலப்பிரச்சனையில் முன்விரோதம் இருந்து வந்தது.
    • வைத்தியநாதன் மனைவி மற்றும் மகளை பீர் பாட்டிலை உடைத்து சரமாரியாக குத்தினார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த ஆத்திரிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அரிகிருஷ்ணன்.  சொக்கலிங்கம் மகன் வைத்தியநாதன். இருவரும் உறவினர்கள். இவர்களுக்குள் நிலப் பிரச்சனையில் முன்விரோதம் இருந்து வருகிறது.நேற்று இரவு அரிகிருஷ்ணன் குடிபோதையில் வைத்தியநாதன் வீட்டில் இல்லாதபோது அவரைப்பற்றி அசிங்கமாக திட்டிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதை தட்டிக்கேட்ட வைத்தியநாதன் மனைவி மற்றும் மகளை பீர் பாட்டிலை உடைத்து சரமாரியாக குத்தினார்.   

    இதில் வைத்தியநாதன் மனைவி சண்முகவள்ளிக்கு முதுகு, தலை, இடுப்பு ஆகிய இடங்களில் பாட்டில் குத்து விழுந்தது. வைத்தியநாதன் மகள் சண்முகப்பிரியாவின் முதுகில் சரமாரியாக பாட்டிலால் குத்தினார்.

    படுகாயம் அடைந்த இருவரும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், முத்தாண்டிக்குப்பம் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அன்னகாரன்குப்பம் அரிகிருஷ்ணனை (36) கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தற்போது சித்திரை மாதம் என்பதால் கடும் வெயிலால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.
    • இன்று காலை கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரலுடன் தொடங்கி மழை பெய்து வந்தது

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் சுட்டெரிக்கும் வெயில் தொடங்கி தற்போது சித்திரை மாதம் என்பதால் கடும் வெயிலால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் 101 டிகிரி வெயில் பதிவானது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சாலை ஓரங்களில் உள்ள தர்பூசணி கிருனிப்பழம் நுங்கு பழ வகைகள் பழச்சா றுகள் குளிர்பானங்கள் கரும்பு சாறுகள் போன்றவற்றை வாங்கி குடித்து வெயிலின் தாக்கத்தை குறைத்து வந்ததை காண முடிந்தது. மேலும் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக இரவு நேரங்களில் அதிக அளவில் புழுக்கம் ஏற்பட்டு வருவதால் தூக்கம் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருவதையும் காணமுடிந்தது இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடும் வெயிலை தணிக்கும் விதமாக மழை பெய்யாதா? என பொதுமக்கள் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் ஏங்கி க் கொண்டிருந்தனர்,

    இந்த நிலையில் கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று காலை கடலூர் மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது வழக்கமான வெயிலின் தாக்கம் அதிகளவில் இல்லாமல் குளிர்ந்த காற்றும் வீசி வந்தன இந்த நிலையில் காலை கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரலுடன் தொடங்கி மழை பெய்து வந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் குடைபிடி த்தபடி சென்றதையும் காண முடிந்தது மேலும் ஒரு சில மக்கள் மழையை அனுபவிக்கும் விதமாக நனைந்தபடி சென்றதையும் காணமுடிந்தது மேலும் திடீர் மழை காரணமாக பொதுமக்கள் ஆனந்தத்தில் மிதந்ததையும் அவர்களது மகிழ்ச்சியில் காண முடிந்தது மேலும் சாலை வியாபாரிகள் திடீர் மழை காரணமாக சற்று பாதிப்படைந்தனர். ஆனால் கோடை வெயில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் திடீர் மழை பெய்த காரண த்தினால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்ததை காண முடிந்தது.

    ×