புவனகிரி அருகே வாலிபர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை

புவனகிரி அருகே வாலிபர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.அமிர்தவள்ளி கடந்த மாதம் 24-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி உறவினரை திருமணம் செய்து கொண்டார்.
புவனகிரி அருகே  வாலிபர்  பூச்சி மருந்து குடித்து தற்கொலை
Published on

கடலூர்:

புவனகிரி அருகே தம்பிக்கு நல்லாம்பட்டினம் மெயின் ரோட்டுத்தெருவைச் சேர்ந்தவர் செல்வமணி (விவசாயி) இவரது மகள் அமிர்தவல்லி (19) இவர் கடந்த மாதம் 24ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி உறவினரை திருமணம் செய்து கொண்டார். இதனால் குடும்பத்தில் அனைவரும் மன உளைச்சலில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது மகன் சந்திரசேகர், (23) வீட்டில் இருந்தவர் நேற்று முன்தினம் குரியமங்கலம் சாலையில் உள்ள மகராசன் தோப்பு வயலில் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

தகவல் அறிந்த செல்வமணி மற்றும் உறவினர்கள் சந்திரசேகரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் மாலையில் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com