கடலூரில் லாரி மோதி கூலி தொழிலாளி தலை நசுங்கி பலி: லாரியை மடக்கி பிடித்த பொதுமக்கள்

விபத்து ஏற்படுத்திய லாரியின் டிரைவர், லாரியை நிறுத்தாமல் கடலூர் நோக்கி ஓட்டி சென்றார். இறந்து கிடந்த கிருஷ்ணா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூரில் லாரி மோதி கூலி தொழிலாளி தலை நசுங்கி பலி: லாரியை மடக்கி பிடித்த பொதுமக்கள்
Published on

கடலூர்:

கடலூர் செல்லங்குப்பத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா (வயது 55). இவர் இன்று காலை தனது வீட்டில் இருந்து கடலூர் நோக்கி சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற லாரி திடீரென்று மோதியதில் கிருஷ்ணா சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் லாரியின் சக்கரம் கிருஷ்ணாவின் தலை மீது ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் விபத்து ஏற்படுத்திய லாரியின் டிரைவர், லாரியை நிறுத்தாமல் கடலூர் நோக்கி ஓட்டி சென்றார். பொதுமக்கள் லாரியை பின் தொடர்ந்து வழிமறித்து லாரி டிரைவரை சரமாரியாக தாக்கினார்கள். இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலையில் இறந்து கிடந்த கிருஷ்ணா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூரில் பரபரப்பாக காணப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com