என் மலர்
கடலூர்
- மாவட்ட அளவிலான ஆய்வு பணிகளில் முதல்வர் ஈடுபட்டார்.
- குமார் ஜெயிந்த் ஆய்வின் போது பட்டா மாற்றம், இ-சேவை மையம், சர்டிபிகேட் வழங்கும் பணி ஆகியவைகளை ஆய்வு செய்து அதிகாரிகளை பாராட்டினார்.
கடலூர்:
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆய்வுக்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் நேற்று விழுப்புரத்திற்கு வருகை தந்தார். அவருடன் தலைமைச் செயலக கூடுதல் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் வந்திருந்தனர். மாவட்ட அளவிலான ஆய்வு பணிகளில் முதல்வர் ஈடுபட்டார். வட்ட அளவிலான ஆய்வு பணிகளில் தலைமைச் செயலக கூடுதல் செயலாளர்கள் மேற்கொண்டனர். பண்ருட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயிந்த் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது பட்டா மாற்றம், இ-சேவை மையம், சர்டிபிகேட் வழங்கும் பணி ஆகியவைகளை ஆய்வு செய்து அதிகாரிகளை பாராட்டினார். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன், கடலூர் கோட்டாச்சியர்அதியமான் கவியரசு, நில அளவை பதிவேடு துறை உதவி இயக்குனர் திருநாவுக்கரசு, தொடர்பு அலுவலர் தாசில்தார் பூபால சந்திரன், பண்ருட்டி தாசில்தார் ஆனந்தி, துணை தாசிலார்கள் சிவகுமார், கிருஷ்ணா கவுரி, தேவநாதன் ஆகியோர் இருந்தனர்.
- இந்திராவுக்கும் அதே ஊரை சேர்ந்த ஒருவருக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
- கடிதம் எழுதி வைத்துவிட்டு கோதண்டபாணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்தமுடப்பள்ளி சேர்ந்த வர் கோதண்டபாணி (55). விவசாயி இவரது மனைவி இந்திரா. இந்திராவுக்கும் அதே ஊரை சேர்ந்த ஒருவருக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கோதண்ட பாணி கண்டித்துள்ளார்.இதனால் கணவன் மனைவிக்குள் தகராறு இருந்து வந்தது. இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு அதே பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் கோதண்டபாணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் ராஜதாமரைபாண்டியன், முத்தாண்டிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியபாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- மேலிருப்பு முத்தாலம்மன் கோவில் செடல் திருவிழா வரும் 5-ந் தேதி வெள்ளிக்கிழமை சித்ராபவுர்ணமி அன்று நடக்கிறது.
- இன்று முதல் 10 நாட்கள் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை ஆகியவை நடைபெற உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மேலிருப்பு முத்தாலம்மன் கோவில் செடல் திருவிழா வரும் 5-ந்தேதி வெள்ளிக்கிழமை சித்ராபவுர்ணமி அன்று நடக்கிறது.இதனை முன்னிட்டு இன்று கொடியேற்று விழா நடந்தது. இன்று முதல் 10 நாட்கள் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை ஆகியவை நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பெண்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், விழா குழுவினர், இளைஞர் மன்றத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
- திருஞானம் 3.5 பவுன் நகையை வங்கியில் இருந்து மீட்டு வெளியில் வந்து சட்டையின் உள் பையில் வைக்கும் போது கீழே தவறவிட்டதாக தெரிகிறது.
- போலீசார்ர் சம்பவ நடந்த வங்கி பகுதிக்கு சென்று சுற்றியுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.
கடலூர்:
சிதம்பரத்தில் தவறவிட்ட நகையை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்டுபிடித்த போலீசார். அதனை உரியவரிடம் ஒப்படைத்தனர். சிதம்பரம் உசூப்பூர் சபாநகரைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் திருஞானம் (வயது 56). இவர் 3.5 பவுன் நகையை வங்கியில் இருந்து மீட்டு வெளியில் வந்து சட்டையின் உள் பையில் வைக்கும் போது கீழே தவறவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து திருஞானம் சிதம்பரம் நகர போலீசாரிடம் புகார் அளித்தார். சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி உத்தரவின்படி, சிதம்பரம் நகர போலீசார் மற்றும் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார்ர் சம்பவ நடந்த வங்கி பகுதிக்கு சென்று சுற்றியுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் அடையாளம் தெரியாத பெண் கீழே விழுந்த நகையை எடுத்து சென்றது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில், அவர் பின்னலூரைச் சேர்ந்த பெண் என்பது தெரிய வந்தது. அப்பெண் நகையை போலீசாரிடம் ஒப்படைத்தார். நகையை மீட்டு தவறவிட்ட திருஞானத்திடம் சிதம்பரம் நகர சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் நகையை ஒப்படைத்தனர்.
- அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டிட வியல் துறை மாணவர்கள் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது.
- கடந்த கால பசுமையான நிகழ்வுகளையும் மேலும் தற்போது தாங்கள் உயர்ந்த நிலையில் இருப்பதையும் எடுத்துக் கூறினர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே அங்கு செட்டிபாளையம் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டிட வியல் துறை மாணவர்கள் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது இதற்கு கல்லூரி செயலாளர் அருட்சகோதரி ஏசு தங்கம் தலைமை தாங்கினார். முதல்வர் சவரிராஜன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர் சங்க செயலாளர் திருமால் வரவேற்று பேசினார். இதில் கடந்த 1995-1998 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற அனைத்து துறை மாணவர்களும் கலந்து கொண்டு கடந்த கால பசுமையான நிகழ்வுகளையும் மேலும் தற்போது தாங்கள் உயர்ந்த நிலையில் இருப்பதையும் எடுத்துக் கூறினர்.
இதில் முன்னாள் முதல்வர் சுந்தர மூர்த்தி மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் மிக சிறப்பாக செய்தார்.
- விபத்து ஏற்படுத்திய லாரியின் டிரைவர், லாரியை நிறுத்தாமல் கடலூர் நோக்கி ஓட்டி சென்றார்.
- இறந்து கிடந்த கிருஷ்ணா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
கடலூர் செல்லங்குப்பத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா (வயது 55). இவர் இன்று காலை தனது வீட்டில் இருந்து கடலூர் நோக்கி சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற லாரி திடீரென்று மோதியதில் கிருஷ்ணா சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் லாரியின் சக்கரம் கிருஷ்ணாவின் தலை மீது ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் விபத்து ஏற்படுத்திய லாரியின் டிரைவர், லாரியை நிறுத்தாமல் கடலூர் நோக்கி ஓட்டி சென்றார். பொதுமக்கள் லாரியை பின் தொடர்ந்து வழிமறித்து லாரி டிரைவரை சரமாரியாக தாக்கினார்கள். இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலையில் இறந்து கிடந்த கிருஷ்ணா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூரில் பரபரப்பாக காணப்பட்டது.
- முகமூடி அணிந்து வந்த மர்நபர் உடல் முழுவதும் எண்ணெய் தடவி கொண்டு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டினுள் நுழைந்தார்.
- புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த சேமகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் அருள்பாண்டியன். இவர் வெளிநாட்டில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியா (23). இவர் நேற்று இரவு வீட்டில் தனியாக தூங்கி கொண்டு இருந்தார். அப்போது முகமூடி அணிந்து வந்த மர்நபர் உடல் முழுவதும் எண்ணெய் தடவி கொண்டு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டினுள் நுழைந்தார். பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு, உறங்கி கொண்டிருந்த சந்தியாவின் 2.5 பவுன் தாலி சரடை அறுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து சந்தியா அளித்த புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். கடலூரிலிருந்து மோப்ப நாய், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் சம்பவ இடத்திலிருந்து சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
- புவனகிரி அருகே வாலிபர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- அமிர்தவள்ளி கடந்த மாதம் 24-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி உறவினரை திருமணம் செய்து கொண்டார்.
கடலூர்:
புவனகிரி அருகே தம்பிக்கு நல்லாம்பட்டினம் மெயின் ரோட்டுத்தெருவைச் சேர்ந்தவர் செல்வமணி (விவசாயி) இவரது மகள் அமிர்தவல்லி (19) இவர் கடந்த மாதம் 24ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி உறவினரை திருமணம் செய்து கொண்டார். இதனால் குடும்பத்தில் அனைவரும் மன உளைச்சலில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது மகன் சந்திரசேகர், (23) வீட்டில் இருந்தவர் நேற்று முன்தினம் குரியமங்கலம் சாலையில் உள்ள மகராசன் தோப்பு வயலில் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
தகவல் அறிந்த செல்வமணி மற்றும் உறவினர்கள் சந்திரசேகரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் மாலையில் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பக்கிரிசாமியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- கைது நடவடிக்கையைத் தொடர்ந்து அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவர் சக்தி நகரில் நர்சரி பள்ளி நடத்தி வருகிறார். மேலும் விருத்தாசலம் நகராட்சி 30-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராகவும் இருந்தார்.
இவர் தனது பள்ளியில் படிக்கும் ஐந்து வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணைக்குப் பிறகு அவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் பள்ளி தாளாளர் பக்கிரிசாமி கடலை மிட்டாய் வாங்கிக் கொடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. கைது நடவடிக்கையைத் தொடர்ந்து அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், பள்ளி தாளாளர் பக்கிரிசாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கடலூர் மத்திய சிறையில் இருக்கும் பக்கிரிசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவு பிறப்பித்தார்.
- கோவையில் மாநில அளவிலான ஊசூ விளை யாட்டு போட்டி நடை பெற்றது.
- கடலூர் உள்ளிட்ட 32 மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு விளை யாடினார்கள்
கடலூர்:
கோவையில் மாநில அளவிலான ஊசூ விளை யாட்டு போட்டி நடை பெற்றது. இதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராமிடம் சாதனை படைத்த மாணவர்கள் நேரில் சென்று தங்கம் மற்றும் வெண்கல பதக்கத்தை காண்பித்தனர்.
அப்போது அவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ராஜாராம் பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார். அப்போது பயிற்சியாளர்கள் தேவதாஸ், வெற்றிச் செல்வன், பாரதிராஜா மற்றும் மாணவர்கள் உடன் இருந்தனர்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவ மற்றும் மாணவிகளுக்கு மத்திய அரசின் சுற்றுலா துறையின் கீழ் அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம்.
- 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,
கடலூர்:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவ மற்றும் மாணவிகளுக்கு சென்னை தரமணியிலுள்ள மத்திய அரசின் சுற்றுலா துறையின் கீழ் அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம்.மேலும் இந்நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது. 2022 - ன் படி உலகளாவிய மனித வள மேம்பாட்டு மையத்தில் 2-வது இடம் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தில் 12-ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு 3 வருட முழு நேர பட்டபடிப்பு ஒன்றறை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு பட்டயப் படிப்பு மேலும் 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு , ஒன்றறை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவிைனஞர் பட்டய படிப்பு மேற்கண்ட படிப்பில் சேர்ந்து படித்திடவும், படிப்பு முடிந்தவுடன், நட்சத்திர விடுதிகள், விமானம் நிறுவனங்கள், கப்பல் நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர் தர உணவகங்கள் போன்ற இடங்களில் வேலை வாய்ப்பும் பெற்று தரப்படும். இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தாவராக இருக்க வேண்டும். 10- வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 வருட முழு நேர பட்டபடிப்பு பயில தேர்வு நடத்தப்படும். மேலும் நிறுவனத்தில் தாட்கோ மூலம் இலவசமாக சென்னையில் வழங்கப்படும். தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி-27.04.2023 இப்படிப்பிற்கான செலவினம் தாட்கோவால் ஏற்கப்படும். ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற தாட்கோ இணையதளம் மூலமாக பதிவு செய்ய வேண்டும் என கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- கடலுார் பா.ம.க. வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் காடாம்புலியூரில் மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் ஜெயபால் வரவேற்றார்.
- ஒவ்வொரு பா.ம.க.வினரும் குறைந்தது 10 நபர்களை சந்தித்து, கடிதம் அனுப்ப வலியுறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
கடலூர்:
கடலுார் பா.ம.க. வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் காடாம்புலியூரில் மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் ஜெயபால் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முத்து, வைத்திலிங்கம், முருகவேல், வேங்கை சேகர், சக்திவேல், மாவட்டபொருளாளர் சத்திய ஜானகி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வன்னியர்க ளுக்கான உள் ஒதுக்கீட்டினை வரும் கல்வியாண்டிலே பெற பா.ம.க. வன்னியர் சங்கத்தினர் மற்றும் சார்பு அமைப்புகள் சார்பில் கிராமம், நகரம் தோறும் பிரச்சாரம் மேற்கொள்வது எனவும், உள்ஒதுக்கீடு விவகாரத்தில் பிற அரசியல் கட்சிகள், பொது நல, தன்னார்வ, தொண்டு அமைப்புகளைச் சார்ந்த வன்னியர்கள், வன்னியர் அல்லாதவர்கள் இட ஒதுக்கீட்டின் பயன் அறிந்த பட்டியலினத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடமும் ஆதரவு கோரி தமிழக முதல்வர், பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவருக்கும் வலியுறுத்தும் கடிதத்தை அனுப்ப வலியுறுத்த வேண்டும் எனவும், கடலுார் பா.ம.க. வடக்கு மாவட்டத்தின் சார்பில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் அனுப்புவது எனவும், வணிக நிறுவனங்களின் பெயர்களை துாய தமிழ்ப் பெயர்களை சூட்ட வேண்டும் எனவும், பா.ம.க.வின் இட ஒதுக்கீட்டின் கொள்கையால் வன்னியர் சமுதாயம் கல்வி, பொருளா தாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றால் அடையும் பயன்குறித்து, ஒவ்வொரு பா.ம.க.வினரும் குறைந்தது 10 நபர்களை சந்தித்து, கடிதம் அனுப்ப வலியுறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் எழிலரசன் நன்றி கூறினார். இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






