என் மலர்
கடலூர்
- சூப்பர் பாஸ்பேட் உரப்பயன்பாடு விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
- கொரமண்டல் உர விற்பனையாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கத்தில் கொரமண்டல் உர நிறுவனம் மற்றும் இந்திய உர நிறுவனங்களின் கூட்டமைப்பு இணைந்து சூப்பர் பாஸ்பேட் உரப்பய ன்பாடு விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இக்கரு த்தரங்கில் நிறுவனத்தின் முதுநிலை உழவியலாளர் குருசாமி வரவேற்று பேசினார். நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் சிவசங்கரன் காய்கறி நெல் கரும்பு நிலக்கடலை போன்ற பயிர்களுக்கு சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் கொரமண்டல் உரநிறுவனத்தின் பல்வேறு விதமான சூப்பர் பாஸ்பேட் உற்பத்தி குறித்து விவரித்தார்.
எப்.ஏ.ஐவெங்கடேசன் டிஏபி உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஈஐடி பாரி சர்க்கரை ஆலை மேலாளர்கள் தேவராஜ், கொளஞ்சி கரும்பு சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விவரித்தனர். முடிவில் நிறுவனத்தின் வேலூர் மண்டல மேலாளர் சங்கர் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை விற்பனை அலுவலர் பெரியசாமி, நந்தகுமார், நடராஜன் ஆகியோர் செய்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் கொரமண்டல் உர விற்பனையாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
- போக்குவரத்து விதிமீறலுக்கு காவல்துறை விதிக்கும் அபராத கட்டணத்தையும் பாடலுடன் கூறி அசத்தி வருகிறார்.
- கடும் வெயிலில் பணிபுரிந்து வரும் போலீசாருக்கு பொதுமக்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
விருத்தாசலம்:
போக்குவரத்து போலீஸ்காரர்கள் என்றால் ரோட்டில் நின்று கொண்டு அந்த வழியாக வரும் வாகனங்களை போக்குவரத்து நெரில் இன்றி அனுப்புவது தான் வழக்கம். ஆனால் ஒரு போக்குவரத்து போலீஸ்காரர் பாட்டு பாடி சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரப் பகுதியில் சென்னை-கன்னியாகுமரி சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் காலை மற்றும் மாலை வேலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் அதிசிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் விருத்தாசலம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வரும் சிவபெருமாள் பணியில் ஈடுபட்டு இருக்கும்போது சாலை விழிப்புணர்வு பற்றி பாடல்கள் மூலம் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார். பஸ்நிலையம், பாலக்கரை, கடைவீதி ஆகிய பகுதிகளில் பணியில் ஈடுபட்டு இருக்கும்போது சிவபெருமாள் ஒலி பெருக்கி மூலம் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவது, இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணிக்க கூடாது. பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனம் ஓட்டகூடாது. இன்சூரன்ஸ், லைசன்ஸ் உள்ளிட்ட வாகன ஆவணங்களை வாகனங்களில் எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும், நகர பகுதியில் வாகனத்தில் அதிவேகமாக செல்லக் கூடாது உள்ளிட்ட சாலை விழிப்புணர்வு பாடல் மூலம் அறிவுறுத்தி வருகிறார்.
மேலும் போக்குவரத்து விதிமீறலுக்கு காவல்துறை விதிக்கும் அபராத கட்டணத்தையும் பாடலுடன் கூறி அசத்தி வருகிறார். அதோடு கடும் வெயிலில் பணிபுரிந்து வரும் போலீசாருக்கு பொதுமக்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறார்.
கோடைகாலத்தில் கடும் வெயிலிலும், வாகன ஓட்டிகளுக்கு பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் போலீஸ்காரர் சிவ பெருமாளை காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
- கொலை தொடர்பாக கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 21 பேரை கைது செய்தனர்.
- அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
கடலூர்:
கடலூரில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், துறைமுகம் சோனாங்குப்பம் பகுதி மீனவர்களுக்கும் இடையே கடந்த 15.5.2018 அன்று கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது மீனவர்கள் கத்தி, அரிவாள், சுளுக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் அ.தி.மு.க. பிரமுகரும், மீனவருமான பஞ்சநாதன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 21 பேரை கைது செய்தனர். கடலூர் முதலாவது மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவடையும் முன்பே ஒருவர் இறந்து விட்டார். இதையடுத்து 20 பேர் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 20 நபர்களில் 10 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்தது. அத்துடன் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
- இந்த தீ வீட்டுக்குள் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது.
- காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த சிறுதொண்டமாதேவி நடுத்தெருவை சேர்ந்தவர் தங்கராசு (வயது 60). இவரது கூரை வீடு மின்சார கசிவால் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ மேலும் பரவி அருகில் இருந்த மனவளப் பெருமாள்வீடும் எரிந்து சாம்பலானது. இந்த தீ வீட்டுக்குள் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது.
இது பற்றி தகவல் பண்ருட்டி தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தீயை தடுத்து அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- போலீஸ் சூப்பிரண்டு மாணவர்களிடம் பொது அறிவு சம்பந்தமான கேள்விகளை கேட்டு கலந்துரையாடினார்.
- படிக்கும் காலங்களில் ஏதேனும் தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக பெற்றோரிடம் கூற வேண்டும் எனஅறிவுரை கூறினார்.
கடலூர்:
விருத்தாச்சலம் கல்வி மாவட்டம் தீவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா சம்பந்தமாக கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வந்தனர்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மாணவர்களை வரவேற்று இருக்கையில் அமர வைத்தார். பின்னர் மாணவர்களிடம் பொது அறிவு சம்பந்தமான கேள்விகளை கேட்டு கலந்துரையாடினார்.
நானும் அரசு பள்ளியில்தான் படித்தேன். இப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றுகிறேன். நீங்களும் ஒழுக்கத்துடன் நன்றாக படித்து பெரிய பதவி வகிக்க வேண்டும் எனவும், ஒழுக்கம் குறித்தும், படிக்கும் காலங்களில் ஏதேனும் தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக பெற்றோரிடம் கூற வேண்டும் எனஅறிவுரை கூறினார். பள்ளி மாணவ மாணவியர்களுக்கு குளிர்பானம் கொடுத்தும், பேனா, பென்சில் ,ரப்பர் போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கி மகிழ்வித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், ஆசிரியர் ஜோஸ்பின் கீதாஞ்சலி, தன்னாலர்வலர்கள் சுகுணா ,சிந்தனை செல்வி, சமையலர் பார்வதி ஆகியோர் உடன் இருந்தனர்.
- கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், அரசு மதுபானக்கூடங்கள், பார்கள் மூடப்பட வேண்டும்.
- டாஸ்மாக் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -
மே தினத்தை முன்னிட்டு ஒரு நாள், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், அரசு மதுபானக்கூடங்கள், பார்கள் மூடப்பட வேண்டும். மே 1-ந் தேதி (திங்கட்கிழமை ) மதுபானக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்றாலோ, அரசு மதுபானக்கூடங்கள் மற்றும் மதுபானக்கூடங்களில் மதுபானங்கள் விற்றாலோ சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இரவு நேரங்களில் மணல் திருட்டு படுஜோராக நடந்து வருகிறது.
- மணல் கொள்ளை மாட்டுவண்டி, டிராக்டர் டிப்பர் மூலம் நடக்கிறது.
கடலூர்:
திட்டக்குடி வெள்ளா ற்றில் இரவு நேரங்க ளில் மணல் திருட்டு படுஜோராக நடந்து வருகிறது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி வெள்ளாற்றங்கரையோரத்தில் திட்டக்குடி, வதிஷ்ட்ட புரம், தரும குடிகாடு, இடைச்செருவாய் உள்ளிட்ட கிராமங்களில் மணல் கொள்ளை மாட்டுவண்டி, டிராக்டர் டிப்பர் மூலம் நடக்கிறது. இரவு முழுக்க மணல் திருடுவது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை . வெள்ளாற்றில் பரவலாக மணல் திருட்டு என்பது வாடிக்கையாக நடைபெறும். கொரோனா ஊரடங்கு காலத்தில் மணல் திருட்டு சிறிது குறைந்திருந்தது. ஆனால் சில நாட்களாக வெள்ளாற்றில் மணல் திருட்டு மீண்டும் அதிகரித்துள்ளது. தொடரும் மணல் திருட்டால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப் பட்டுள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் வெள்ளாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் சமூகவிரோத கும்பலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வா கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து வருவாய் துறை, காவல் துறை அதிகாரி களுக்கு தகவல் தெரி வித்தும், அவர்களை கட்டுப்படுத்த முடிய வில்லை. இதில் அரசியல் தலை யீடும் இருப்பதால் மணல் கொள்ளையர்களை கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இனி வெயில் காலம் என்பதால் நீர்மட்டம் குறையும் நிலையில் உள்ளது அரசு அதிகாரிகள் பொறுப்புடன் ஓரளவு செயல்பட் டால் இது போன்ற மணல் திருட்டை கனிமவளத் திருட்டை தடுக்க முடியும் என்பது சமூக ஆர்வலரின் கோரிக்கை.
- அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தனது சொந்த நிதியிலிருந்து பள்ளிக்கு 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.
- இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள், கல்வித்துறை அதிகாரிகள், மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த பூண்டியாங்குப்பத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் ராமகிருட்டிணன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் கலையரசி வரவேற்றார். விழாவில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நூற்றாண்டு வளைவை திறந்து வைத்து, மலர் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தனது சொந்த நிதியிலிருந்து பள்ளிக்கு 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.
இதில் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, முன்னாள் எம்.பி வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ. கணேசமூர்த்தி, மாவட்ட கல்வி குழு தலைவர் என்ஜினீயர் சிவகுமார், மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, நாராயணசாமி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுகப்பிரியா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள், கல்வித்துறை அதிகாரிகள், மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மணிகண்டன் சாலை ஓரம் கூரை வீட்டில் வசித்து வருகிறார்.
- எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய கார் மணி கண்டனின் கூரை வீட்டிற்குள் புகுந்தது.
கடலூர்:
புவனகிரி அருகே கூரை வீட்டிற்குள் கார் புகுந்து 3 பேர் காயம் அடைந்தனர். கடலூர் மாவட்டம் புவனகிரி அருேக உள்ள ஆதிவராக நத்தத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சாலை ஓரம் கூரை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று இரவு வடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி மணி கண்டனின் கூரை வீட்டிற்குள் புகுந்தது.
இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மணிகண்டன் மனைவி அமாவாசை (80), தில்காலைக்கரசி (31), பிரவினா (18) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சத்தம் போட்டனர். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். ,இதனை பார்த்ததும் கார் டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவர்கள் படுகாயம் அடைந்தவர்களை சிதம்பரம் ராஜா முத்தையாமருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மன உளைச்சலில் வீட்டிற்கு வந்த வேல் முருகன் வீட்டில் தனது கைலியால் தூக்கில் தொங்கினார்.
- மருதூர் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடலூர்:
புவனகிரி அருகே உள்ள முத்து கிருஷ்ணா புரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் வேல் முருகன் (28). டிரைவர். நேற்று இரவு வேலைக்கு சென்று விட்டு மன உளைச்சலில் வீட்டிற்கு வந்த வேல் முருகன் வீட்டில் தனது கைலியால் தூக்கில் தொங்கினார். அவரை அக்கம் பக்கத்தினர் இறக்கி புவனகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வேல் முருகனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மருதூர் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- அரசுப்பள்ளி அருகே ஆசாமி ஒருவனை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.
- அவன் மின்வாரிய அலுவலகத்தில் இருந்த இரும்பு திருடியது தெரிய வந்தது.
கடலூர்:
பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா உத்தரவு படி, டி.எஸ்.பி. அணி போலீசார் நேற்று இரவு பண்ருட்டி,அண்ணா கிராமம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அண்ணா கிராமம் அரசுப்பள்ளி அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டி ருந்த ஆசாமி ஒரு வனை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அவன் அந்தப் பகுதியில் இருந்த மின்வாரிய அலுவலகத்தில் இருந்த இரும்பு திருடியது தெரிய வந்தது.
அவனிடம்மேலும் விசாரணை நடத்தியதில் அவன் கீழ்கவரபட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த உத்திர வீரன் (வயது 30) என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவனை கைது செய்து அவனிடமிருந்து 50 கிலோ இரும்பு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து அவனை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மாநில எண்ணெய்வித்து பண்ணைநெய்வேலியில் உள்ளது.
- ஆய்வு செய்து விதை உற்பத்தியினை பெருக்குவதற்காக அறிவுரைகள் வழங்கினர்.
கடலூர்:
பண்ருட்டி வட்டார மாநில எண்ணெய்வித்து பண்ணைநெய்வேலியில் உள்ளது. இங்கு தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை இயக்குனர் அண்ணாதுரைஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாநில எண்ணை வித்து பண்ணையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை, எள் போன்ற விதைப்பண்ணைகளை ஆய்வு செய்து விதை உற்பத்தியினை பெருக்குவதற்காக அறிவுரைகள் வழங்கினார். நிலக்கடலை பயிரில் அமைக்கப்பட்டுள்ள வி.ஆர். 9, கோ 7 போன்ற ரகங்களின் விதை பண்ணைகளையும் எள் பயிரில் டி.எம்.வி. 7 மற்றும் வி.ஆர்.ஐ. 3 ரகங்களில் அமைக்கப்பட்டுள்ள விதைப் பணிகளையும் ஆய்வு செய்து உரமிடுதல் நுண் ஊட்டச்சத்து இடுதல் ஜிப்சம் இடுதல் மண் அணைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் இறுகிய மண் உள்ள வயல்களில் உளி கலப்பை கொண்டு உழவு மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா, துணை இயக்குனர்கள் கென்னடி ஜெபக்குமார், பிரேம் சாந்தி, வேளாண்மை உதவி இயக்குனர்கள் பார்த்தசாரதி, பிரேமலதா மற்றும் வேளாண்மை அலுவலர்கள் ஹரிஷ்குமார்,அனு ,உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.






