search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில்  பெட்ரோல் பங்க் அருகே  கழிவு நீர் கால்வாயில் திடீர் தப்பிழம்பு: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
    X

    கழிவு நீர் கால்வாயில் தீப்பிடித்து எரியும் காட்சி.

    கடலூரில் பெட்ரோல் பங்க் அருகே கழிவு நீர் கால்வாயில் திடீர் தப்பிழம்பு: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

    • கழிவு நீர் கால்வாயில் இரு வழிகள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் அடைப்புகள் சரி செய்யப்பட்டு வந்தது.
    • பொதுமக்கள் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அங்கிருந்து அலறிடித்து ஓடினார்கள்.

    கடலூர்:

    கடலூரில் பாரதி சாலை உள்ளது. இந்த சாலை பிரதான சாலையாக உள்ளதால் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்தும் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. மேலும் இந்த சாலையில் போலீஸ் நிலைய, உணவகம், மருத்துவமனை, வணிக வளாகங்கள், மாநகராட்சி அலுவலகம் இயங்கி வருவதால் ஆயிரக்க ணக்கான பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்காக இந்த சாலையில் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் சாலையின் இரு புறமும் பொது கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால் இங்கு இயங்கி வரும் பெட்ரோல் பங்க் அருகில் இந்த கழிவு நீர் கால்வாயில் இரு வழிகள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் அடைப்புகள் சரி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலையில் கழிவுநீர் கால்வாயில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் தீயின் வேகம் அதிகரித்து கொழுந்துவிட்டு பல அடி உயரத்திற்கு தீ பிழம்பாக காட்சியளித்தது.

    இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அங்கிருந்து அலறிடித்து ஓடினார்கள். இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீப்பிழம்பாக எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர். இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் மீண்டும் எரிய தொடங்கியது. இதனைப் பார்த்த தீயணைப்பு வீரர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததை அகற்றி, அதன் பிறகு தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்ட லமாக காட்சியளித்தது. கால்வாயில் எப்படி தீ எரிய தொடங்கியது என தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொது மக்கள் ஆச்சரி யத்துடன், பதற்றத்துடன் பார்த்தனர்.

    இதில் கழிவுநீர் கால்வாய் சரியான முறையில் அடைப்புகளை அகற்றாத தால் ஒரு விதமான வாய்வு ஏற்பட்டு அதன் மூலம் தீ ஏற்பட்டிருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்ற னர். இந்த நிலையில் கடலூர் பிரதான கிழக்கு கடற்கரை சாலையான பாரதி சாலையில் பெட்ரோல் பங்க் அருகே திடீரென்று கால்வாயில் தீ விபத்து ஏற்பட்டு தீ பிழம்பாக மாறிய சம்ப வத்தால் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.இது போன்ற சம்பவங்கள் வருங்காலங்க ளில் ஏற்படாத வகையில் சம்பந்தப்பட்ட துறை அதி காரிகள் உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×