என் மலர்
நீங்கள் தேடியது "upper treatment"
- ரமேஷ் கடந்த 6 மாத காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
- ரமேஷை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நல்லூர் பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (38),டெய்லர். இவர்திருமணம்ஆனவர். மனைவி, மற்றும் மகள் உள்ளனர். இவர் கடந்த 6 மாத காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இவர் கடந்த 26-ந் தேதிவயிற்று வலி தாங்காமல் வீட்டில் புடவை துணியால் தூக்கு போட்டுக் கொண்டார்.
இவரது அலறல்சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை ரமேஷ் இறந்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் -இன்ஸ்பெக்டர் கனகராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் சதீஷ் மரம் ஏறும் தொழிலாளி.
- தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தபோது மரத்திலிருந்து கீழே விழுந்தார்.
விழுப்புரம்:
புதுவை மாநிலம் முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் சதீஷ் (வயது 23). இவர் மரம் ஏறும் தொழிலாளி. இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக கோட்டக்குப்பம் கறிக்கடை வீதியில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துள்ளார்.
அப்போது மரத்திலிருந்து கீழே விழுந்தார். இவரை மீட்ட அப்பகுதி மக்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்துவிட்டார். இது தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






