கோட்டக்குப்பம் அருகே தென்னை மரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலி

முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் சதீஷ் மரம் ஏறும் தொழிலாளி. தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தபோது மரத்திலிருந்து கீழே விழுந்தார்.
கோட்டக்குப்பம் அருகே தென்னை மரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலி
Published on

விழுப்புரம்:

புதுவை மாநிலம் முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் சதீஷ் (வயது 23). இவர் மரம் ஏறும் தொழிலாளி. இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக கோட்டக்குப்பம் கறிக்கடை வீதியில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துள்ளார்.

அப்போது மரத்திலிருந்து கீழே விழுந்தார். இவரை மீட்ட அப்பகுதி மக்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்துவிட்டார். இது தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com