கடலூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

வீரலட்சுமி அங்குள்ள ஸ்விட்ச் போடும் போது மின் கசிவு ஏற்பட்டதில் வீரலட்சுமி தூக்கி வீசப்பட்டார்.மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வீரலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர் அருகே  மின்சாரம் தாக்கி பெண் பலி
Published on

கடலூர்:

கடலூர் ஓட்டேரி சேர்ந்தவர் மதன் (வயது 36). இவரது மனைவி வீரலட்சுமி (35). இவர்கள் 2 பேரும் ஓட்டேரி பகுதியில் உள்ள மாட்டு பண்ணையில் கூலி வேலை செய்து வந்தனர். இன்று காலை வீரலட்சுமி அங்குள்ள ஸ்விட்ச் போடும் போது மின் கசிவு ஏற்பட்டதில் வீரலட்சுமி தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் வீரலட்சுமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் வீரலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com