search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாநகராட்சியில்  குப்பைகள் அகற்றப்படுகிறதா? குடிநீர் தரமாக வழங்கப்படுகிறதா? மேயர் சுந்தரி ராஜா திடீர் ஆய்வு
    X

    கடலூர் மாநகராட்சியில் குப்பைகள் அகற்றப்படுகிறதா? குடிநீர் தரமாக வழங்கப்படுகிறதா? மேயர் சுந்தரி ராஜா திடீர் ஆய்வு

    • தரம் பிரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தினர்.
    • நடவடிக்கையில் ஈடுபடாததால் பல்வேறு குறைபாடுகள் இருந்து வந்தது.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட துறைமுகம் பகுதியில் இருந்து வரும் துப்புரவு ஊழியர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா துறைமுகம் பகுதியில் குப்பைகள் சரியான முறையில் அகற்றப்படுகிறதா? கால்வாய் சுத்தம் செய்யும் பணி நடைபெறுகிறதா? பொதுமக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் கிடைக்கிறதா? என்பதனை திடீரென்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது துப்புரவு ஊழியர்கள் குப்பை களை அகற்றியபோது அதனை பாதுகாப்பாக எடுத்துச் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வண்டி பாளையம் சாலை, தங்கராஜ் நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் பொதுக் குழாயில் குடிநீர் வருகிறதா? என்பதனை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீரை குடித்து ஆய்வு செய்தார். இதில் பொதுமக்கள் குடிப்பதற்கு ஏதுவாக குடிநீர் இருந்தது தெரிய வந்தது.

    மேலும் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா பொதுமக்களிடம் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் படி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின் பேரில் தற்போது ஒரு கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் அயன் பில்டர் பெட் என்பதனை பொருத்தி பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டுள்ளது. மேலும் 10 ஆண்டு கால ஆட்சி காலத்தில் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடாததால் பல்வேறு குறைபாடுகள் இருந்து வந்தது. தற்போது அந்த குறைபாடுகளை நீக்கி பொது மக்களுக்கு தரமான குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் குடிநீர் கிடைக்க பெறாத பகுதிகளில் அந்தந்த கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் மூலமாக வாகனங்கள் மூலம் இலவச குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. ஆகையால் பொதுமக்கள் இந்த குடிநீரை முறையாக பயன்படுத்த வேண்டும். காசு கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பாடாது என தெரிவித்தார். அப்போது மாநகர திமுக செயலாளர் ராஜா, மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, மாநகராட்சி கவுன்சிலர்கள் பாலசுந்தர், விஜயலட்சுமி செந்தில், கவிதா ரகுராம், மாநகராட்சி அலுவலர்கள் நாகராஜன், தாமோதரன், கார்த்திக் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×