மேல்பட்டாம்பாக்கத்தில் கொரமண்டல் உரநிறுவனத்தின்சார்பில் விவசாய கருத்தரங்கு

சூப்பர் பாஸ்பேட் உரப்பயன்பாடு விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் நடைபெற்றது. கொரமண்டல் உர விற்பனையாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
விவசாயிகள் கருத்தங்கில் கொரமண்டல் உரநிறுவனத்தின் உதவி பொதுமேலாளர் சிவசங்கரன் பேசினார்.
விவசாயிகள் கருத்தங்கில் கொரமண்டல் உரநிறுவனத்தின் உதவி பொதுமேலாளர் சிவசங்கரன் பேசினார்.
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கத்தில் கொரமண்டல் உர நிறுவனம் மற்றும் இந்திய உர நிறுவனங்களின் கூட்டமைப்பு இணைந்து சூப்பர் பாஸ்பேட் உரப்பய ன்பாடு விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இக்கரு த்தரங்கில் நிறுவனத்தின் முதுநிலை உழவியலாளர் குருசாமி வரவேற்று பேசினார். நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் சிவசங்கரன் காய்கறி நெல் கரும்பு நிலக்கடலை போன்ற பயிர்களுக்கு சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் கொரமண்டல் உரநிறுவனத்தின் பல்வேறு விதமான சூப்பர் பாஸ்பேட் உற்பத்தி குறித்து விவரித்தார்.

எப்.ஏ.ஐவெங்கடேசன் டிஏபி உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஈஐடி பாரி சர்க்கரை ஆலை மேலாளர்கள் தேவராஜ், கொளஞ்சி கரும்பு சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விவரித்தனர். முடிவில் நிறுவனத்தின் வேலூர் மண்டல மேலாளர் சங்கர் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை விற்பனை அலுவலர் பெரியசாமி, நந்தகுமார், நடராஜன் ஆகியோர் செய்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் கொரமண்டல் உர விற்பனையாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com