பண்ருட்டி அருகே மின்வாரிய இரும்புகளை திருடிய பலே திருடன் கைது

அரசுப்பள்ளி அருகே ஆசாமி ஒருவனை பிடித்து  தீவிரமாக விசாரணை நடத்தினர். அவன் மின்வாரிய அலுவலகத்தில் இருந்த இரும்பு திருடியது தெரிய வந்தது.
பண்ருட்டி அருகே மின்வாரிய இரும்புகளை  திருடிய பலே திருடன் கைது
Published on

கடலூர்:

பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா உத்தரவு படி, டி.எஸ்.பி. அணி போலீசார் நேற்று இரவு பண்ருட்டி,அண்ணா கிராமம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அண்ணா கிராமம் அரசுப்பள்ளி அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டி ருந்த  ஆசாமி ஒரு வனை பிடித்து  தீவிரமாக விசாரணை நடத்தினர். அவன் அந்தப் பகுதியில் இருந்த மின்வாரிய அலுவலகத்தில் இருந்த இரும்பு திருடியது தெரிய வந்தது.

அவனிடம்மேலும் விசாரணை நடத்தியதில் அவன் கீழ்கவரபட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த உத்திர வீரன் (வயது 30) என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவனை கைது செய்து அவனிடமிருந்து 50 கிலோ இரும்பு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து அவனை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில்  அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com