search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறிஞ்சிப்பாடியில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு,  எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு
    X

    குறிஞ்சிப்பாடியில் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகளை அமைச்சர்கள் கே. என்.நேரு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தனர்.

    குறிஞ்சிப்பாடியில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு

    • குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் பஸ் நிலையம் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டது
    • புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் மும்பரமாக நடைபெற்று வருகின்றது.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் பஸ் நிலையம் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் முயற்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4 கோடி 82 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் மும்பரமாக நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகி யோர் குறிஞ்சிப்பாடியில் புதிதாக கட்டுமான பணி களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பேரூராட்சி இயக்குனர் கிரண் குராலா, திருச்சி மண்டல செயற்பொறியாளர் கருப்பையா, உதவி இயக்குனர் வெங்கடேசன், உதவி செயற்பொறியாளர் சண்முகம், மாவட்ட கல்வி குழு தலைவர் பொறியாளர் சிவகுமார், பேரூராட்சி தலைவர் கோகிலா குமார், செயல் அலுவலர் கிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சிப்பாடி பாலமுருகன், பேரூராட்சி துணைத் தலைவர் ராமர், நகர செயலாளர் ஜெய்சங்கர் கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×