என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருத்தாசலம்  நகராட்சி குப்பைக் கிடங்கில் அமைச்சர் சி.வெ. கணேசன் ஆய்வு
    X

    விருத்தாசலம் பகுதிகளில் நடந்து வரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சி.வெ.கணசேனிடம் அப்பகுதி மக்கள் தங்கள் கோரிக்கைகளை கூறியபோது எடுத்தபடம்.

    விருத்தாசலம் நகராட்சி குப்பைக் கிடங்கில் அமைச்சர் சி.வெ. கணேசன் ஆய்வு

    • காட்டுக்கூடலூர் ரோட்டில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட பணியைதிறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பார்வையிட்டார்.
    • பெரியார் நகரில் கட்டப்பட்டு வரும் குழந்தைகள் பூங்கா மற்றும் பூதாமூர் பகுதி சுடுகாடு பகுதியையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.


    கடலூர்:

    விருத்தாசலம் நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆய்வு மேற்கொண்டார். பெரிய வடவாடியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காட்டுக்கூடலூர் ரோட்டில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட பணியை பார்வையிட்டார். வடக்கு பெரியார் நகரில் கட்டப்பட்டு வரும் குழந்தைகள் பூங்கா மற்றும் பூதாமூர் பகுதி சுடுகாடு பகுதியையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, நகராட்சி சேர்மன் டாக்டர் சங்கவி முருகதாஸ், நகராட்சி ஆணையாளர் சேகர், நகராட்சி பொறியாளர் சிவசங்கரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×