search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2023-2024-ம் ஆண்டுக்கான  சிறப்பு  விளையாட்டு  விடுதி மாணவர்களுக்கான  சேர்க்கை: கடலூர் கலெக்டர் தகவல்
    X

    2023-2024-ம் ஆண்டுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான சேர்க்கை: கடலூர் கலெக்டர் தகவல்

    • இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்துகொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
    • மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் 3.5.2023 காலை 7 மணியளவில் நடத்தப்பட இருப்பதால் தவறாது கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத்துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் உணவுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்காக சென்னை நேரு விளையாட்டு அரங்கில் சிறப்பு விளையாட்டு விடுதி, தூத்துக்குடி மாவட்டம்கோவில்பட்டி, வேலூர் காட்பாடியில் மாணவ மாணவிர்ளுக்கு சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு 01-01-2023 அன்று 17 வயது நிரம்பிய 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற கல்லூரியில் இளநிலை மற்றும் முதுகலை பயிலும் மாணவ , மாணவிர்ள் தகுதியுடையவர்கள் ஆவர்.

    தனி நபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில அளவில் குடியரசு , பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல்3 இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் , இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்துகொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

    விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள், சிறப்பு விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தினை 19.4.2023 முதல் இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 2.5.2023 மாலை 5 மணி ஆகும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் 3.5.2023 காலை 7 மணியளவில் நடத்தப்பட இருப்பதால் தவறாது கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திறமையான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மேற்படி சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர்ந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×